முந்தைய பதிவுகள்:1) பொறுத்துக்கொள்ளுங்கள்...., 2) ”முடிஞ்சா வாழு, இல்லாட்டி செத்துப்போ”
நாட்டின் உணவுப் பணவீக்க விகிதம் 12.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக உணவுப் பணவீக்க விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த பணவீக்க உயர்வை கண்காணித்து வருவதாக நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறியுள்ளார்.
காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் உழைக்கும் ஏழை மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அனைத்து பொருட்களின் விலையும் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வதென்று வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நமது பிரதமரும், நிதி அமைச்சரும் இந்திய நாட் டின் பொருளாதார வளர்ச்சியை கூடிய சீக்கிரத்தில் இரட்டை இலக்கத்தை எட்ட வைத்து விடு வோம் என ஆருடம் கூறி வருகின்றனர்.
போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் ஒட்டு மொத்த பணவீக்க விகிதமும் இன்னும் உயரும் என பொருளாதார அறிஞர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர். வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் விலை உயர்வு என ஒவ்வொரு பொருளும் தனித்தனியே அவ்வப்போது ரெக்கை கட்டி பறக்கிறது. கேஸ் விலை எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிய லாம் என்ற நிலையே நீடிக்கிறது. ஆனால் பொருட்களின் விலையேற்ற அளவிற்கு உழைப் பிற்கான கூலி உயர்த்தப்படுவதில்லை. அது எப்போதும் போல் அதலபாதாளத்திலேயே இருக்கிறது. இதனால் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே மக்க ளுக்கு இன்று மிகப்பெரும் சவாலாக மாறி யுள்ளது. சர்க்கரை விலை உயர்ந்த போது அத் துறையின் அமைச்சர் சரத்பவார், சர்க்கரையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு இலவச ஆலோசனை வழங்கினார். இதுதான் நம் மத்திய அமைச்சர்கள் மக்களை காக்கும் லட்சணம். (நல்ல வேளையாக அவர் ஜவுளித்துறைக்கு அமைச்சராகவில்லை)
ஒருபுறம் இப்படியென்ன்றால், மறுபுறம் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் முன்பேர வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முன்பேர வர்த்தகத்தின் மதிப்பு ரூபாய் 95 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது சென்ற நிதி ஆண்டோடு இதே காலத்தை ஒப்பிடும் போது 53.4 சதவிகிதம் அதிகமாகும். சென்ற நிதி ஆண் டில் ஒட்டுமொத்த முன்பேர வர்த்தகத்தின் மதிப்பு ரூ.77.50 லட்சம் கோடி ஆகும். நடப்பு முழு நிதி ஆண்டில் சுமார் ரூ.110 லட்சம் கோடியை எட்டும் என்பது முன்பேர வர்த்தகக் கொள்ளையர் களின் கணக்காகும். அப்படியென்றால் இன்னும் உணவுப்பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் என்பதையே சொல்லாமல் சொல்கின்றனர்.
இப்படி யூகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து, ஒரு பெருங் கூட்டம் எல்லையின்றி கொள்ளை லாபம் அடித்துவருகிறது. இவர்கள் நிர்ணயிக்கும் விலையை அப்படியே நம் உள்ளூர் மார்க்கெட்டில் நிர்ணயிக்கும் பணியை மத்திய ஐமுகூ அரசு இம்மி கூட பிசகாமல் செய்கிறது. இதன் மூலம் யூகபேர கொள்ளை கும்பலுக்கும் பேரா தரவு அளிக்கிறது. இந்த யூகபேர வணிகத்தால் விண்ணை முட்டி நிற்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கண்ஜாடை கூட காட்டுவதில்லை. இந்த விலையேற்றம் நாளுக்குநாள் அப்பாவி ஏழை, எளியவர்களின் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது.
மக்களின் மன நிலையை கணக்கில் கொள்ளாமல் வார்த்தை ஜாலத்தால் ரொம்ப நாளைக்கு மத்திய அரசு காலம் தள்ள முடியாது. அத்தியா வசிய உணவுப் பொருட்களை யூகபேர வாணிபத் திற்கு உட்படுத்துவதில் இருந்து தடை செய்திட வேண்டும். பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற்று விலை உயர்வை கட்டுப்படுத்திட முன்வர வேண்டும். இந்தச் சாதாரண விசயங்களைக் கூட செய்யாவிட்டால், ஆட்சியாளர்கள் தங்களை “பொருளாதார மேதைகள்” என்று அழைத்துக்கொள்வது, கொலைவெறி பிடித்த பைத்தியக்காரனின் பிதற்றலாகத்தான் போகும் !.
// மக்களின் மன நிலையை கணக்கில் கொள்ளாமல் வார்த்தை ஜாலத்தால் ரொம்ப நாளைக்கு மத்திய அரசு காலம் தள்ள முடியாது. அத்தியா வசிய உணவுப் பொருட்களை யூகபேர வாணிபத் திற்கு உட்படுத்துவதில் இருந்து தடை செய்திட வேண்டும். பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற்று விலை உயர்வை கட்டுப்படுத்திட முன்வர வேண்டும். இந்தச் சாதாரண விசயங்களைக் கூட செய்யாவிட்டால், ஆட்சியாளர்கள் தங்களை “பொருளாதார மேதைகள்” என்று அழைத்துக்கொள்வது, கொலைவெறி பிடித்த பைத்தியக்காரனின் பிதற்றலாகத்தான் போகும் ! //
ReplyDeleteHats off, carry on!
பெட்ரோல் விலையுர்வு அரசிடமில்லை என் கைவிரிக்கிறது. காய்கறிவிலைகள் இருமடங்காக ஆகிவிட்டது. மூன்று வாரங்களுக்கு விலையிரங்க சாத்தியமில்லை என்கிறார் உணவு அமைச்சர்.
ReplyDeleteஅவருக்கு கிரிக்கட் வாரியமும், பருத்தி பஞ்சு மர்க்கட்டும், லவாசா கட்டுடங்கள் பற்றிய கவலைகள் அதிகம். வேலைப்பளு அதிகம் என்று எப்போதோ சொல்லிவிட்டார். பிரதமரின் வேலைப் பளுவால் அவருக்குப் பதிலாய் வேறு மந்திரியை பார்க்கமுடியவில்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மக்கள் இருக்க அரசு ஏன் மக்கள் நலன் பற்றி இப்போது கவலைப் படவேண்டும். தேர்தல் வரும் போது இலவசம் கொடுத்து ஏழைகள் ஓட்டை வங்கி விடலாம். இந்த ஓட்டைவாய் மத்திய வர்க்கம் லொட, லொடவென பேசிவிட்டு ஓட்டுப் போடக்கூட போகமாட்டார்கள். பெரும் நிறுவனங்கிலமிருந்து பணம், சிறுபான்மை, அடித்தட்டு மக்களிடமிருந்து ஓட்டு, இப்படியே ஓடுகிறது ஆள்பவர்க்ளின் வாழ்க்கை. அடிமாடாகிறது இந்திய காமதேனுக்கள்.