நேற்று இரவு பெட்ரோல் விலை லிட்டருக்கு முன்று ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதற்கான விலையை நிர்ணயம் செய்யலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்பின் தொடர் அதிர்வு இப்போதுதான் மக்களுக்குத் தெரியத் துவங்கி உள்ளது.
இந்த ஆண்டில் நேற்று இரவு உயர்த்தியதுடன் ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்கள் கடுமையான இழப்புகளை சந்திக்கின்றன, மானியம் அதிகம் வழங்குவதால் அரசுக்கு கடுமையான நட்டம் ஏற்படுகிறது இதனால் தவிர்க்கமுடியாமல் கொஞ்சம் விலை உயர்வு ஏற்படுகிறது என்று காரணம் கூறப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் விலையை குறைப்பது கிடையாது. விலையை ஏற்றுவதைத் தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நட்டம் காரணமாக விலையேற்றம் என்கிறார்களே உண்மை என்ன?
நட்டம் என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கூறுவது உண்மையா என்று பார்த்தால் அதில் கொஞ்சமும் உண்மை கிடையாது. லாப வருவாய் இழப்புதான் இவர்களால் நட்டம் என காட்டப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இயங்குகின்றன. 2009_2010 ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10,200 கோடியும், பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியையும், ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியையும், ஓ.என்.ஜி.சி 16,700 கோடியையும், கைல் 3,140 கோடியையும் லாபமாக ஈட்டியுள்ளனர் இவை அறிவிக்கப்பட்டதால் எவ்வளவு லாபம் வெளியில் தெரிகிறது. ஆனால் அம்பானி மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் அடித்த கொள்ளை லாபம் எவ்வளவு என்று வெளியில் தெரியாது. வருமானம் இப்படி இருக்க எண்ணெய் நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன, அரசுக்கு கடுமையான இழப்பு என்று ஏமாற்றுவது அரசுக்கு மக்கள் குறித்த கேவலமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
மற்றொரு கணக்கும் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர் என்று வைத்துக்கொண்டால். அதாவது 160 லிட்டர் கச்சா எண்ணெய் விலை 3619 ரூபாய். அப்படி எனில் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 22 ரூபாய் அறுபதுகாசு. இந்த கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் பாரபின் மெழுகும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது சாலை போட தாராக பயன்படுகிறது. அதாவது இதில் கழிவு என்பதே கிடையாது. 23 ரூபாயில் இத்துனை பொருட்களை தயாரித்து பிறகு நட்டம் எனில் அது எத்துனை பித்தலாட்டம். தர்போது கிட்டதட்ட 60 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனை செய்வது எவ்வளவு பெரிய பகல் கொள்ளை.
இதனால் அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபவிகிதம் ஆண்டுக்காண்டு பெருகிவருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி, பங்குத்தொகை, காப்புரிமை தொகை என 2002 _03 இல் 64,595 கோடி அரசுக்கு வருமானம். இது 2004_05 இல் 77,692 கோடியாக உயர்ந்து 2009_10 ஆண்டில் 1,00,000 (ஒரு லட்சம்) கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய அரசின் ஒட்டு மொத்த வரிவசூலில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு மடங்காகும். இந்த சூழலில்தான் நட்டம் என்று கதையளக்கின்றனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய பெரு நிறுவனங்களுக்கு கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்த சலுகை 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தமாக 4,19,786 கோடியாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் கோடியை பெரு முதலாளிகளுக்கு சலுகை யாகக் கொடுக்கும் நமது அரசாங்கம், மக்களிடம் கொள்ளையடித்து எங்கு கொடுக்கிறது பாருங்கள்.
தற்போது கிரிட் பாரிக் பரிந்துறை என்ற பெயரில் இந்த விலை நிர்ணயத்திலிருந்து அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப விலையை தீர்மானிக்கலாம். அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் மாறும் விலைக்கு ஏற்ப இவர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். “விலைவாசி ஏறும் போது சாமான்யர்கள், ஏழை மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்’’ என பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பேசி முதலைக் கண்ணீர் வடித்தது நினைவு இருக்கிறதா? இத்துனை அக்கரை கொண்டவர், ஆட்டோ, பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு 14.78 சதம் டீசலுக்கு 4.75 சதம் விலையை உயர்த்தியவர் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானங்களுக்கு இதைவிட வரியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விமானங்களுக்கான பெட்ரோலுக்கு 3.60 ரூபாய் மட்டுமே உயர்த்தினார்.கடந்த ஆட்சிகாலத்தில் இடதுசாரிகள் இவர்களை கொஞ்சமேனும் கட்டுப்படுத்தினர் ஆனால் அவர்களது பலம் குறைந்தது இந்திய நாட்டின் முதலாளிகளுக்கு மிகவும் வசதியாக மாறிவிட்டது.
ஏன் இந்த திடீர் விலை உயர்வு? இப்படி ஒரு முடிவை நமது மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கம்பெனி, இந்தோ பர்மா பெட்ரோலியம் கம்பெனி ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. அப்போது, சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தையோ, லாபத்தில் குறைவு ஏற்பட்டாலோ, பணக்காரர்கள் மீது சுமத்தப்படும் வரிகள் மூலம் ஈடுகட்ட முடிந்தது.
மேலும், அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், என்ஜின் எண்ணெய் போன்ற ஏனைய பொருள்களின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தால் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்டி வந்தன. இப்போது, ரிலையன்ஸ், எஸ்ஸôர் போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோலிய விநியோகத்திலும், எண்ணெய் சுத்திகரிப்பிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தங்களது நஷ்டத்தை ஈடுகட்ட, அல்ல அல்ல, லாபத்தில் ஏற்படும் குறைவை சரிகட்ட அரசு உதவாமல் இருந்தால் தகுமா? இந்தத் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபம் குறைந்தால் அதை நஷ்டம் என்று கூறிக் கூக்குரலிடுவார்கள் என்றுகூடத் தெரியாத, அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்கள் நமது இன்றைய ஆட்சியாளர்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது
தனியார் நிறுவனங்களின் லாபம் குறைந்துவிடாமல் பாதுகாக்கப் பொதுமக்கள் தலையில் பாரத்தை சுமக்க வைப்பது என்ன புத்திசாலித்தனம்? இதனால் ஏற்பட இருக்கும் தொடர் விளைவான விலைவாசி உயர்வு, சராசரி இந்தியரின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கப் போகிறதே, அதைப் பற்றி அரசின் பொருளாதார மேதைகளுக்குக் கவலையே கிடையாதா? பொறுத்துக்கொள்ளுங்கள்.. பெட்ரோல் விலை இன்னும் உயரும் !? என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை ? என்ன அரசோ? என்ன ஆட்சியோ? என்ன நிர்வாகமோ? கோபம் வருகிறது..
well said ..:)
ReplyDeleteமக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விலைவாசி உயர்வு என்னும் எமன்
ReplyDeleteஇந்தியாவின் சாபகேடு ஏழைகளின் உயிர் குடிக்கும் சாத்தான் காங்கிரஸ் என்னும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் முற்றிலுமாக கொன்று அழிக்கப்படாதவரை
மக்கள் உணவு பற்றாக்குறையால் இறந்து கொண்டே இருப்பார்கள் .
தற்போதைய இந்த அநியாய விலை உயர்வு மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
மக்களின் எதிர்கட்சிகளின் கவனத்தை திசை திருப்புமும் நோக்கமும் அடங்கி இருக்கிறது என்றே தோன்றுகிறது.
மக்களின் எதிர்கட்சிகளின் கவனத்தை திசை திருப்புமும் நோக்கமும் அடங்கி இருக்கிறது என்றே தோன்றுகிறது.......இதுதான் முற்றிலும் உண்மை.. அப்புறம் இந்த விடுதலைப்புலிகள் இந்த கொள்ளைக்காரப்பயலுகள கொல்லப்போற விஷயமும் இதே திசைதிருப்பல் தான்..
ReplyDelete