ஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
இவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.
டிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.
பொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.
பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.
ஒரு சினிமாவாக காவலன் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் இந்த சமூகத்திற்கும், மக்களுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இன்னொரு மசாலாப் படம் அது. அவ்வளவுதான். ஆனால் இங்கு நாம் கவலைப்பட வேண்டியது, தமிழ்ச்சினிமா தயாரிப்பிலும், வெளியீட்டிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நிறுவனங்களின் ஏகபோகம் குறித்து. அவர்கள்தாம் படம் எடுக்க வேண்டும், அவர்கள்தாம் வெளியிட முடியும் என்ற ஆதிக்கம் உருவாகியிருப்பது அவலமானது, நல்ல படங்களோ, குப்பைப் படங்களோ அது முக்கியமில்லை, இத்தனை நாட்கள்தான் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்கிற விதியை அவர்கள் எழுதுவது ஆத்திரப்பட வேண்டியது.
சினிமாவே இப்போது வில்லன்களின் கையில் இருக்கிறது. மக்கள்தாம் கதாநாயகர்களாக எழுந்து நிற்க வேண்டும். நிஜத்தில் அவர்கள்தாம் காவலர்கள்!
ரொம்ப உயரத்துக்கு சென்றால் விழும்போது அடி மிக பலமாக இருக்கும்.
ReplyDeleteகுப்த, அசோக, மொகலய, கிரேக்க , ரோம , சாம்ராஜியங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியால் போய்விட்டன என்ற வரலாறை படித்தால் , இது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.
இவர்களின் வீழ்ச்சியை நாம் கண்முன் பார்கத்தான் போகிறோம்.
இது அராஜகத்தின் உச்சம். இதற்கு எதிராக மக்களை திரட்டுவதைவிட திரையுலகினரை திரட்ட வேண்டும்..
ReplyDelete//ரொம்ப உயரத்துக்கு சென்றால் விழும்போது அடி மிக பலமாக இருக்கும்.
ReplyDeleteகுப்த, அசோக, மொகலய, கிரேக்க , ரோம , சாம்ராஜியங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியால் போய்விட்டன என்ற வரலாறை படித்தால் , இது ஒன்றும் பெரிய விஷ்யம் இல்லை.
இவர்களின் வீழ்ச்சியை நாம் கண்முன் பார்கத்தான் போகிறோம்//
முற்றிலும் உண்மை. இதற்க்கு அதிக நாட்கள் இல்லை என்பதும் கண் முன்னே தெரிகிறது. அதிக பட்சம் ஒரு வருடம். அவ்வளவு தான்
/எஸ்.கருணா said...
ReplyDeleteஇது அராஜகத்தின் உச்சம். இதற்கு எதிராக மக்களை திரட்டுவதைவிட திரையுலகினரை திரட்ட வேண்டும்..//
நம்ம விதி, சினிமாக்காரர்கள் சொன்னால்தான் தமிழகமக்கள் கேட்பார்கள்.
அவர்களின் கடவுள் ரஜினி, கமல்,விஜய், அஜித், சூரியா போன்றவர்கள் தான்.
ஓசி நிலம், வீட்டுமனை, வரிவிலக்கு என திரைத்துறையை தன்னை துதிபாடும் கூட்டமாக்கி விட்டார் முதல்வர். பத்தாதிற்கு வைரமுத்து, வாலி வேறு அரசவை புலவர்களாய். படத்தையும் பஞ்ச் டயலாக்கையும் கேட்டு கெட்ட, கேடு கெட்ட நாடு, நம்ம தமிழ்நாடு. பேப்பர்ல, தலைப்பு செய்தி படிக்கிறமோ இல்லையோ சினிமா செய்தி கிசுகிசு படிப்போம். அரசியல் பார்வை இல்லாத
குருடர்கள் நாம், நடிகர்கள் நாட்டின் நலனுக்காக இல்லாவிடினும் அவர்களது துறைக்காவாவது
கூடி குரல் எழுப்புவார்களா? எந்திரன் ஓடுவதற்காக, கலாநிதி மாறனையே 'இந்திரன், சந்திரன்'
எனப் புகழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். மாற்றம் வருமா?