விசாரணையில் பிரியங்கா, அருகில் அழும் தந்தை
சென்னையில் தேசிய குழந்தைகள் நலன் குறித்த நீதிவிசாரணை நடைபெற்றது. இவ்விசாரணையில் 337 வழக்குகள் தில்லிக்கு அனுப்பப்பட்டன. இதில் 57 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை சென்னையில் விசாரிக்கப்பட்டன. தலித் மாணவர்களை பள்ளி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியது, 5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதால், மாணவி இறந்தது, மாணவன் கல்வி கட்டணம் கட்டாததற்காக பள்ளியில் இருட்டறையில் அடைத்தது என கொடூரமான பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இவ்விசாரணையில் தேசிய குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, நீதிபதி ராமமூர்த்தி, பிலால் இசாகி, லோ வர்மா, கிரண்பேடி, நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அங்கு விசாரணைக்கு வந்த ஒரு பெற்றோர், “தங்கள் குழந்தையை ஆசிரியர் ஒருவர் வகுப்பைச் சுத்தம் செய்யச்சொல்லி, அந்தக்குப்பையைத் தின்ன வைத்தார்“ என்று அவர்கள் கண்ணீர் மல்கச் சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை வைத்தியநாதபுரம் கங்காணி லைனைச் சேர்ந்தவர் தனபால் (40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தனபால் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். செப்டிக் டாங்க் அடைப்பை எடுப்பது, ஆட்டோ ஓட்டுவது எனத் தொழில் செய்து தனது குடும்பத்தை பாது காத்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் கூறியவை யாருக்கும் நிகழக்கூடாதவை.
நான் ஏழாம் வகுப்பு ஏ பிரிவில் படித்து வந்தேன். கடந்த 19.3.2010 அன்று மாலை 3.30 மணியளவில் எங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியர் லதா என்பவர், மாணவிகள் பிரிஜிதா, பாண்டி பிரியா, மற்றும் என்னை அழைத்து,“ ஏன் கடந்த 2 நாட்களாக வகுப்பறையை சுத்தம் செய்யவில்லை” என்று அதட்டினார். உங்கள் வகுப்பு ஆசிரியர் சொன்னால் தான் கேட்பீர்களா? நான் பக்கத்து வகுப்பு ஆசிரியர் என்பதால் என் பேச்சைக் கேட்க மாட்டோம் என்ற திமிரில் இருக்கிறாயா என மிரட்டினார். நீங்கள் அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால் நீங்கள் இப்போ வகுப்பறையை கூட்டி என் கண்முன்னால் அள்ளிச் சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார். நாங்கள் எல்லோரும் எப்படி மிஸ் சாப்பிட முடியும் என்றும் வகுப்பறையை சுத்தம் செய்யாதது தப்புதான் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். அப்படி இருந்தும் லதா மிஸ், கொஞ்சம் கூட இரக்கப்படவில்லை, நீங்க இந்த வகுப்பறையை சுத்தம் செய்து அதை தின்ன வேண்டும் என்றும் மீண்டும் கூறினார். எங்க வகுப்பில் உள்ள லீடரை அழைத்து, இவர்கள் கூட்டின குப்பைய ஆளுக்கொரு கை அளவு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இல்லையென்றால் அதை நீ தான் சாப்பிட வேண்டும் என்றும் லீடரையும் மிரட்டினார்.
அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுத்தம் செய்து ஆசிரியர் சொன்னபடி, லீடர் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு கை அளவு குப்பையை அள்ளிக் கொடுத்தார். அப்போது நாங்கள் அந்த குப்பையைப் பார்த்த போது அதில் பழைய வெள்ளச்சோறு, அழுக்குப் பேப்பர், மண் எல்லாம் இருந்தது.மிஸ் அதட்டியவுடன் வேறு வழியின்றி இந்த குப்பையைச் சாப்பிட்டோம்”என பிரியங்கா கூறினார். குப்பையைச் சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபால், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து 21.3.2010 அன்று மூன்று குழந்தைகளிடம் தனித்தனி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் தேசிய குழந்தைகள் நலவிசார ணையில் அளிக்கப்பட்ட புகாராகும். பிரியங்கா தவிர மற்ற இரண்டு குழந்தைகளும் சமாதானம் ஆகி விட்டதாகக்கூறப்படுகிறது.
தனபால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலம் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறினார்.
இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபாலிடம் பேசிய போது, எனது குழந்தையைக் குப்பையைத் தின்ன வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற போது, திருச்சியில் பிரியங்காவிற்கு வலிப்பு வந்து விட்டது. திருச்சி மருத்துவமனையில் அனுமதித்து அவளுக்கு சிகிச்சை அளித்தோம். அதற்கு முன்பு வரை அவளுக்கு இப்படி வந்ததில்லை.
அனைத்து குழந்தைகள் மத்தியிலும் குப்பையைத் தின்ன வைத்ததால் எனது குழந்தையின் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறோம், பிரச்சனையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று பலர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். என் குழந்தையைப் போல வேறு எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது. ஆகவே, சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இதுவரை உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.
தற்போது வேறு பள்ளியில் பிரியங்கா 9-வது வகுப்பு படித்து வருகிறார். அவர் முதலில் படித்த பள்ளியில் பள்ளிச்சான்றிதழ் வாங்கச் சென்ற போது தனபாலிடம், வெள்ளைப் பேப்பரில் எழுதி வாங்கியதாக் கூறப்படுகிறது. இதுநாள் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்முறைகள், பாகுபாடுகள், தாக்குதல்கள் என்பது பள்ளியில் குழந்தைகள் வரை நீடிப்பதற்கு தமிழக அரசின் செயல்பாடுகளே காரணம்.
எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை காவல்துறையில் பதிவு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை கல்வித்துறை முதன்மை அலுவலர், மதுரை மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவியின் படிப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படக்கூடாது எனவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
வெளியே தெரிய வருகிற இதுபோன்ற வன்கொடுமைகளுக்கான தண்டனையும், பாதிக்கப்பட்டவ்ர்களுக்கான நீதியும் அரிதாகவே கிடைக்கின்றன. வெளியே தெரியாமல் எவ்வளவோ இந்த தேசத்தில் மௌனங்களுக்குள்ளும், பெருந்துயரங்களுக்குள்ளும் புதைந்து கிடக்கின்றன. ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்கும் வரலாற்றின் கறைகளாவும், அழுகிப்போன குப்பைகளாகவும் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் யார் வாயில் திணிப்பது?
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறதே. வன்கொடுமை செய்தவர்களை சிறையிலிட்டு, செருப்பால் அடிக்க வேண்டும்.
ReplyDeleteஉங்கள் அனுமதி கிடைத்தால் இதே பதிவை எனது வலைப்பூவிலும் இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்கும் வரலாற்றின் கறைகளாவும், அழுகிப்போன குப்பைகளாகவும் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் யார் வாயில் திணிப்பது? \\
ReplyDelete-:(((
ஐயயோ, இப்படில்லாம்கூட நடக்குமா?
ReplyDeleteவன்கொடுமை செய்தவர்களை செருப்பால் அடிப்பதால் என்ன பயன் டோண்டு? ...
ReplyDeleteசாதியை உருவாக்கிய வருணாசிரமாவாதிகளையும், வருணாசிரமத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும்.
டோண்டு!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. தாராளமாக பதிவிடலாம்.
அம்பிகா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
லஷ்மி!
இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்கின்றன. வெளியே தெரிய வருவது கொஞ்சமே.
சிந்தன்!
யார் வாயில் திணிக்க வேண்டும் எனபதற்கு, இந்தக் கொடுமையைப் படைத்த அந்த மனுவின் வாயில் எனபதைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.
பார்க்க: http://dondu.blogspot.com/2010/12/blog-post_02.html
ReplyDeleteஎனது பதிவில் இந்த இடுகையை மீள்பதிவு செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sindhan R //வருணாசிரமத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும்// சாதிச் சான்றிதல் கிழிக்கப்பட வேண்டும்.பொருளாதர அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட வேண்டும்.இரு தலைமுறைக்கு பின் சாதி இருக்காது..... சாத்தியப்படுமா ???
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? இந்த வசனம் இந்த விசயத்துக்கு தான் நல்லா பொருந்திது.
ReplyDeletebloddy fucking teacher.. kill that bastard.. Don't divert the topic against other caste.. Its all individual mindset.. Some people tried to command other castes. Where manu comes in between? To be frank, I am brahmin. But from my childhood, many of my friends (I have never think about their caste) used to have food at my home.. They used to spend their days at our house like me.. There is no discrepancy.. But at the same time, when I move to some of my friend's house, I (& other friends) were not allowed to enter... What will you say this?
ReplyDeleteWe should give a good lesson to that teacher.. This is pathetic.. She is a kid and how can a human being can eat dirty trash.. Can that teacher give it to her kids?
சாதிச்சான்றிதழ்கள் கிழிக்கப்பட வேண்டும் ... ஆனால் பொருளாதார, சமூக ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதான் எனது நிலை...
ReplyDeleteஆனால் அத்தோடு, சாதிய முன்நிறுத்தும் திருமணச் சடங்குகளும், ஜாதங்கங்களும், சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் .. சாதியைக் காப்பாற்றும் உண்மையான அடையாளங்கள் ஒவ்வொன்றும் மாற்றப்பட வேண்டும். டோண்டு இந்தப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள் ... எல்லோரும் இணைந்தே செய்வோம் ....
மன்னிக்கனும் ... மேற்சொன்ன பதில் நண்பர் ரகுவிற்கானது ...
ReplyDeleteரகு ... சாதிச் சான்றிதழ்கள் இல்லாத காலத்திலிருந்தே ... இந்திய சமூகத்தின் நடைமுறைகளில் சாதி ஊரியிருக்கிறது. படிக்காதவர்கள் எங்கே போய் சாதிச் சான்றிதழ் வாங்கினார்கள்? ... இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆரம்பக் கல்வியையே தாண்டாத நிலையில் ... சாதிச் சான்றிதழ் ஒழிந்தால் எப்படி சாதியை ஒழிப்பீர்கள்?
அன்புள்ள மாற்று ஆசிரியருக்கு ... இந்த படைப்பின் தலைப்பில் ஆசிரியர் என்பதை மாற்றி ... ஆதிக்க வெறியர் .. என்றுபோடலாமா? ... தலைப்பு ஏதோ ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குறிப்பதாக இருக்கிறது.
ReplyDeleteDon't divert the topic against other caste.. Its all individual mindset..///
ReplyDeleteசாதி, தனி மனிதரின் குணமாக அல்ல, இந்திய சமூகத்தின் பெரும்பான்மை ஆதிக்க வாதிகளின் குணமாக உள்ளது. எனவே எந்த சாதியையும் குறிப்பிட்டு தாக்கவில்லை. ஆனால், சாதி ஆதிக்க எண்ணங்களையும், சாதீயத்தை வலியுறுத்தும் தத்துவங்களையும், மதங்களையும் எதிர்ப்போம்...
மற்றபடி ... தனி நபர் தாக்குதலுடம் விசயத்தை முடித்துச் செல்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை...
சமூகத்தின் மனநிலை மாற வேண்டும் ...
சிந்தன்!
ReplyDeleteதாங்கள் சொல்வது சரிதான். மாற்றியாகி விட்டது.
Sindhan R படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லித்தரும் படித்த வர்கம் தானே இது இழி செயல் என்பது அறியாமல் செயல்படுகிறார்கள்.நான் முன் வைத்த விசயம் சாதிகள் ஒழிய ஒரு வழிமுறை அவ்வளவே.பொருளாதர எற்ற தாழ்வும் குறைய வாய்ப்புள்ளது. DOT
ReplyDeleteரகு!
ReplyDelete//படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லித்தரும் படித்த வர்கம் தானே//
இல்லைங்க. இங்கே கருவிலேயே ‘ஜாதியை’ பச்சைக் குத்தி வைத்திருக்கிறது இந்த அமைப்பு. வர்ணாசிரமத்தின் நுட்பமான, ஆழமான வேலைப்பாடு இது. பல்லாயிரம் காலம் இங்கு ஒன்றிலிருந்து ஒன்றுக்குள், ஆதிக்கத்தை ஊடுருவ வைத்திருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகம் இதற்கு தோதாகவும், கருவியாகவும் இருக்கிறது. அங்கிருந்து இதற்கான மருந்துகளை ஆரம்பிக்க வேண்டும். இது பெருந்தொடர் முயற்சி.
இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் இந்தக் கொடுமைகளை பரவாமல் இருக்கச் செய்யும்.
நிரந்தரமாக அழிப்புது வேறு. உடனடியாக பரவாமல் இருக்க வைப்பது வேறு.
கொடுமை..
ReplyDeleteஅந்த டீச்சரை உண்ண சொல்லணும்..
தீக்கதிரில் வந்த கட்டுரையென தங்கள் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கலாம் தோழர் கருணா
ReplyDeleteகண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகைய செய்திகளைத் தாங்கி வெளிவரும் தீக்கதிருக்கு செவ்வணக்கங்கள் ...
ReplyDeletethalith tamizhanai yerkkadha thamizhanai kazhu marathil yetra vendum . nantri theekkathir .
ReplyDelete