நாடோடிகள் படத்தில் வந்து கலக்கிய அபிநயா ஒரு மாற்றுத் திறனாளி என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அப்படிச் சொன்னால் ஆச்சரியப்படுபவர்கள்தான் அதிகம். பேச வராது. காது கேட்காது என்று சொன்னால் நம்பவே முடியாத அளவுக்கு அவரது நடிப்பு நாடோடிகள் படத்தில் இருந்தது. அவரது அடுத்த படமும் சசிக்குமார் எடுக்கும் படமாகவே அமைந்துள்ளது.
இவருக்கு ஏற்றாற் போல வசனங்கள் குறை வாக இருக்கப்போகி
றது. முகபாவங்கள்தான் அதிகமாக இருக்கும். எப்படி ஒரு காட்சியையோ அல்லது நடனத்தையோ புரிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால், படப்பிடிப்பிற்கு முதல் நாளே நான் நடிக்க வேண்டிய காட்சிகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள். வீட்டில் அம்மாவும், அப்பாவும் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் எனக்கு விளக்கிச் சொல்வார்கள். அப்படிச் சொல்லும்போது வசனங்களை மட்டும் நான் உள்வாங்கிக் கொள்வேன். படப்பிடிப்பின்போது இயக்குநர் எனக்கான காட்சிகளைப் புரிய வைப்பார். புரியாதபோது நான் சைகை காட்டுவேன். மீண்டும் எனக்கு அந்தக்காட்சியை இயக்குநர் சொல்வார்.
நான் குறையுள்ளவள் என்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என்று கூட நினைத்திருக்கிறேன். முதன்முறையாக திரையில் என்னைப் பார்த்தவுடன் எதையோ சாதித்தது போல இருந்தது. தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் உடலில் உள்ள ஊனம் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை என்று தோன்றியது. பல விருதுகளும் எனக்குக் கிடைத்தன என்று சைகை மூலமாகவே பதிலளிக்கிறார்.
இன்று முதல் டாக்டர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் சென்னையில் வெளியிடப்படுகிறது. விபரங்களுக்கு...
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள காவலன் திரைப்படத்தை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.எம்.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் ஆர்.ஸ்ரீதர், செயற்குழு உறுப்பினர் சுரேஷ்லால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்
கள் கூறியதாவது : நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் முதல் சுறா வரை அனைத்துப்படங்களும் தோல்வியையே தழுவியுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் எங்களுக்கு ( திரையரங்க உரிமையாளர்களுக்கு) நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுறா படத்தை திரையிட்டதால் மட்டும் சுமார் 7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதே போல் ரஜினி படம் தோல்வியடைந்த போது ரஜினி எங்களது நஷ்டத்தை பகிர்ந்து கொண்டார். இதே போல் தற்போது விஜய் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விஜய் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது குறித்து கடந்த 5 மாதங்களாக விஜயிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் விஜயிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நடிகர் விஜய் நடித்து வெளிவர வுள்ள காவலன் திரைப்படம் வெளிவருவதற்குள் பிரச்சனைக்கு தீர்வு காண விஜய் முன்வர வேண்டும். இல்லையென்றால் விஜய் நடித்து வெளிவரும் எந்த படத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்.
தற்போது தமிழகத்தில் 1475 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மினிமம் கேரண்டி, ரினிவல் கட்டணம் போன்றவற்றை ரத்து செய்வதால் மட்டுமே திரையரங்குகள் மூடப்படுவதை தடுத்திட முடியும் என்று தெரிவித்தனர்.
இன்று முதல் டாக்டர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் சென்னையில் வெளியிடப்படுகிறது. விபரங்களுக்கு...
அரவான் படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக தனது உடலிலும், தோற்றத்திலும் சில மாற்றங்களை நடிகர் பசுபதி செய்திருக்கிறார். தனது திரைப்பட வாழ்க்கையிலேயே அரவான் படம் மிக முக்கியமானதாக அமையும் என்பது அவரது எதிர்பார்ப்பாகும்.
இந்தப்படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாகவே வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. தனது தோற்றத்தில் மாற்றம் செய்துள்ளதால் பொது நிகழ்ச்சிகளுக்குக்கூட அவர் செல்லாமல் இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நல்ல கதாபாத்திரங்கள் அமையும்போது அதற்காகக் கடுமையாக உழைப்பதும், சில வாய்ப்புகளை இழப்பதும் தவிர்க்க முடியாததாகும். அந்த வகையில் எனக்கு வந்த பல வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். மார்ச் மாதத்தோடு அரவான் படத்தின் வேலைகள் முடிந்துவிடும். அந்தப் படப்பிடிப்பு நிறைவுபெற்ற பிறகு மூன்று படங்களில் நடிப்பதாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இன்று முதல் டாக்டர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் சென்னையில் வெளியிடப்படுகிறது. விபரங்களுக்கு...
அம்பேத்கர் அவர்களை குறித்த படமும் வெற்றி பெற வேண்டும்.
ReplyDeleteஅபி அழகிய பெண்
ReplyDeleteபசுபதிக்கு வெற்றி கிடைக்கட்டும்..
ReplyDeleteசித்தரா அவர்களுக்கு உங்களுடைய வருகைக்கு நன்றி
ReplyDeleteபாலகிருஷ்ணா நிங்கள் சொல்வது உண்மைதான் உங்களுடைய வருகைக்கு நன்றி
ReplyDeleteஅமுதா கிருஷ்ணா ஆசை நிறைவேறட்டும் உங்களுடைய வருகைக்கு நன்றி
ReplyDelete