வலைத்தளப் பதிவுகளில் கனமான விசயங்களை போடுவதை விட சாதாரண விசயங்களைப் பற்றிப் பேசுங்கள். அது பரவலான வாசிப்புக்குச் செல்லும் என்று ஒரு வாசகர் கூறினார். அதுவும் சரிதான் எனப்பட்டது.
ஆனால் தற்போது போய்க்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தங்கம். நெடுந்தொடர்களைப் பார்க்க பிடிக்காவிட்டாலும், வீட்டின் நடுவில் இருக்கும் அந்த முட்டாள் பெட்டி எம்மை அறியாமல் என் கவனத்துக்கு பட்டுவிடுகிறதே, அந்த ஆதிக்கத்தில் பட்டது தான் இந்தத் தங்கமும். சரி விசயத்துக்கு வருகிறேன்.
"தங்கத்தில்" அய்யா கேரக்டரில் வரும் நம்ம விஜயகுமார் அநேகமாக அனைத்து சிக்கல்களையும் சமாளித்து அனைவரின் மரியாதைக்கும் உரியவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நாடகத்தில் தான் என்பதை மறந்துவிட வேண்டாம். அப்பேர்பட்ட விஜயகுமார் தற்போது சென்னை காவல் துறை வாசல் படிக்கட்டில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
தங்கம் நாடகத்தில் அவ்வளோ பெரிய குடும்பத்தின் அனைத்துச் சிக்கல்களையும் தன் கடைக்கண் பார்வையிலேயே சமாளித்து, தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் நம்ம அய்யா, இப்போது தான் பெற்ற சொந்த மகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மகள் கணவன், மருமகனை உள்ளே தள்ளி கம்பி எண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதென்னடா, வம்பாகப் போச்சு, நாடகம் நாடகம் தானே, அதை ஏன் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறான் என்று என் மனநிலையை யாரும் சந்தேகப்பட்டு விட வேண்டாம்.
இது ஒன்றும் அந்தக் காலமில்லை, திரையில் தோன்றும் பாத்திரங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே தான் இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்க. மக்கள் மிகவும் புத்திசாலிகளாகத் தான் இருக்கிறார்கள். வெள்ளித் திரை, சின்னத் திரைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரிந்து வைத்துத் தெளிவாகத் தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது என் காதுகளில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
இப்போது கேள்வி கேட்பது எளிமையான விசயம் தான். ஆனால் அதற்கு பதில் சொல்வதுக்குத் தான் கனமான சிந்தனை தேவைப்படுகிறது. அடச் சே, என்னதான் லேசான விசயம் என்று பேசினாலும் மீண்டும் கனம் வந்து மண்டையை அழுத்துகிறதே?! சரி போகப் போகச் சரியாகிவிடும்..
இந்தக் கேள்விக்கு கனமான சிந்தனை தேவை என்கிறேனே, அது என்ன அப்படி சிக்கலான கேள்வியா? என்கிறீர்களா. சரி சொல்லுங்களேன் பதிலை. நான் கேட்டதென்ன, மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன், சின்னத்திரையையும், நிஜ வாழ்க்கையையும் பிரித்துப் பார்த்து அது வேறு, இது வேறு என்று புரிந்து கொள்ளும் நம் சமூகம் ஏன் சின்னத் திரை போதையில் சிக்கி இருக்கிறது?
இந்தக் கேள்வி ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இல்லையா?
அது சரி, நான் என்ன பதில் சொல்கிறேன் என்கிறீர்களா? அது வேறொன்னும் இல்லீங்க, இந்த மெகா சீரியல்களில் எல்லாம் குடும்பம் தனித்தனி ஆளுகளோட சுயநலத்தையும், எப்படி அவங்க இதில் சிக்கி சின்னாபின்னமாகுறாங்கனும் காட்டுறாங்க இல்லையா, அதுல ஏதோ நிஜ வாழ்க்கையைப் பிட்டுப் பிட்டு வைக்கிறமாதிரி காட்டுறாங்க. ஆனால் ஒரு வகையில எல்லா குடும்பங்களையும் செதச்சு செதச்சு தனித்தனியா அவங்கவங்களுக்கு வீடு, டிவி, விதவிதமா வண்டி, டிரஸ்ஸு, இன்னும் இன்னும் உபயோகப் பொருளெல்லாம் தனித்தனியா வாங்கிக் குவிக்கிறதுக்கு ஒரு பண்பாட்டு சமையல் தான் இந்த மெகா சீரியல்கள்னு நான் நினைக்கிறேன். சரிங்களா, கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்!
சர்தாம்.. ஹா.ஹா
ReplyDeleteதொ(ல்)லை தொடர்கள் நல்லா கல்லா கட்டுது என்பதில் சந்தேகம் இல்லே.. ஒரு நாள் வசூல் 3ல. இது போன வருட நிலை. இப்பொ இன்னும் கூடியிருக்கலாம்.
ReplyDeleteஇந்த வசூல்லுக்காக இவங்க செய்யுறது என்ன ?
விஜய குமார் சிக்கலை தீர்கிற மாதிரி காட்றங்க சரி ஆன அந்த சிக்கலை உண்டக்க வில்லன் வில்லி செய்யும் சதியை விலவாரியாக் காட்டி மக்களிடம் வில்லத்தனம், சதி வஞ்சகம் , துரோகம் எல்லவறையும் பரப்பி தங்கள் கல்லா கட்டுறன்ஙக..
பலரை துரோகம் , கொலை கொள்ளை பண்ண, அதனால பலர் கஷ்டபட வெச்சா..
அப்புறம் அவங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.?
அதிகபட்ச நடிகர் நடிகையர் சினிமா , நாடக துறையினரின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும். சிலர் நல்ல திரை தவித்து மிகவும் ஒழுக்கமா இருப்ப்ஙக அவ்னக வாழ்க்கை நல்லா இருக்கும்.. எனா செய்ய விதைத்ததை அறுக்கிறங்க...
மெஹா தொடர்களைப் பற்றி எவ்வளவு கிண்டல் வந்தாலும் அதை எப்படி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வளைகுடா நாடுகளில் சன் டைரக்ட் கனைக்சன் இல்லாதவர்களை ஏதோ வித்தியாசமாகப் பார்ப்பார்கள், என்னிடம் கேட்பார்கள் எப்படி உங்களுக்கு பொழுது போகுது என்று, நான் சொல்வேன் டிவி நம்மை அடிமையாக்குகிறது எதையும் சிந்திக்கவிடாமல் தடுக்கிறது. படிக்கவேண்டிய புத்தகங்களும் செய்திகளும் நிறைய இருக்கும் போது டிவி அதை மறைத்துவிடுகிறது, குறிப்பாக இந்த நெடுந்தொடர்கள்.
ReplyDeleteபட்டாபட்டி!
ReplyDeleteவருகைக்கு நன்றி.
வினோத்!
இதில் நடிக நடிகையரைக் குறை சொல்வதைவிட, அவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிற இந்த பெரிய திரை, சின்னத்திரையின் ஆதிக்கம் குறித்து பேசுவது சரியாக இருக்கலாம் அல்லவா?
ஹரிஹரன்!
இந்த மெகா சீரியல்களின் கதையும், கதை சொல்லும் விதமும் மகா எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் பெரும் சுவாரசியத்துடன் பார்க்கிறார்கள். நம் மண்டையை குப்பைமேடாக்கி வைத்திருக்கிறார்கள் அவர்கள். அதை எப்படிச் சுத்தம் செய்வது அல்லது தூர் வாருவது எனவும் நாம் யோசிக்க வேண்டும்.
மெகா சீரியல்களை ஒரேயடியாக திட்டித் தீர்ப்பது 8 மணிக்கு பசியுடன் வீட்டுக்குள் நுழையும்போது, சமயல் ஆக்காமல், மனைவிமார்கள் டி.வி.யின் முன் உட்கார்ந்திருக்கும்போது சரியாக இருக்கலாம். ஆனால், உண்மை என்ன?. கடந்த காலங்களில் பாலகுமாரன் உட்பட பல நாவலாசிரியர்களுக்கு இருந்த வாசகர் கூட்டத்தின் மனோநிலைதான் இன்றையை அம்மையார்களுக்கும். படிக்க முடியாதவர்களும் கேட்க முடியும், பரந்துபட்ட பார்வையாளர் வட்டம் ஆகியவை மெகா சீரியல்களுக்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுக்கின்றன.
ReplyDeleteமனிதக்கூட்டம் பொழுதுபோக்கிற்காக ஏங்குவது, அது கலையின் எந்த வடிவத்தையும் வரவேற்கும். இதற்கான ஒரு மாற்று தளத்தை உறுவாக்காமல், மெகா சீரியல்களை எதிர்க்க முடியாது.
//மனிதக்கூட்டம் பொழுதுபோக்கிற்காக ஏங்குவது, அது கலையின் எந்த வடிவத்தையும் வரவேற்கும். இதற்கான ஒரு மாற்று தளத்தை உறுவாக்காமல், மெகா சீரியல்களை எதிர்க்க முடியாது. //
ReplyDeleteஅது சரி தான் , ஆரேக்கியமான அறிவை வளர்க்கும் பொழுதுபோக்குகள் பல உள்ளன.
அறிவை வளர்க்கும் செஸ். மன, உடலை ஒருமை படுத்தும் கேரம், என பல உள்ளன.
மேலும் குடும்பமாக பேசகூட நேரமில்லதவர் பலர். ஆனால் யோசிக்க, விளையாட கூட சோம்பல் படும் இல்லாள்கள் அதிகம் உள்ளதால் , தொடர்கள் வரவேற்றுப்பு பொறுகின்றன. மேலும் தொடர்களீன் மைய கரு ஒரு பெண் துயரபடுவது தான், அதன் தொடர்ச்சியாக மாமியார் கொடுமை, இன்ன பிற காட்டபடுகின்றன.
இவற்றில் ப்ல பெண்களுக்கு சொந்த அனுப்வம் உள்ளதால், தொடர்கள் அவர்களின் வாழ்கையின் பிரதிபலிப்பக தெரிகிறது.
எனவே மாற்று பொழுதுபோக்கால் மட்டும் தொடர் வரவேற்பை நிறுத்த் இயலாது.
வினோத்!
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல குடும்பமாக பேச இயலாமல் இருக்கிறார்கள். ஒருவித stress அலைக்கழிக்கிறது. பணிச்சுழல், புறச்சூழல் என பல காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை உருவாக்குவதும் அவர்களே. அதற்கு ரிலாக்ஸ் தருவதாக் கூறிக்கொண்டு இந்தக் குப்பைகளையும் அவர்களேத் தருகிறார்கள்.
//பெண்களுக்கு சொந்த அனுபவமாக உள்ளதால்//இது பொருத்தமானதா என்று தாங்கள் யோசிக்க வேண்டும். இங்கு சொந்த அனுபவம் என்பதைவிட, சொந்த அனுபவம் போல உணர வைக்கிற ஜாலம் இருக்கிறது. நம் மக்கள் செண்டிமெண்ட்களில் கரைந்து தொலைந்து போகிறவர்கள்.