Thursday, January 19, 2012

தீண்டாமைக் கொடுமை - முடிவு கட்டுவது எப்போது?

தமிழ்நாட்டில் காதல் திருமணம் என்பது அதிகரித்துள்ளது என்றும் அதே நேரத்தில் காதலித்தபின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் பெற்றோருக்காக காதலை விட்டவர்கள், பெற்றோர் ஏற்காவிட்டாலும் பெற்றோரைத் எதிர்த்து, காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டவர்கள் என்று இரு அணிகளின் விவாதம் விஜய் டி.வியில் சமீபத்தில் நடைபெற்றது.

பொதுவாக காதல் திருமணங்களில் தாழ்த்தப்பட்டவர்களுடன், மேல்சாதிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது மேல்சாதிக்காரர்களின் பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. மேல்சாதிக்காரர்களுக்கிடையே காதல் திருமணம் என்றால், அங்கு அந்தஸ்து அதாவது பணம் மற்றும் செல்வாக்கு இல்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

தான் தாழ்த்தப்பட்டவரை காதலித்து திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால், தன்னை கொலைசெய்துவிடலாம் என்று தனது சித்தப்பா தனது அப்பாவிடம் சொன்னதாகவும், தனது ஊரில் இதுபோன்று பலர் முன்பு கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்றும் ஒரு பெண் அப்பொழுது பதிவு செய்தார். காதல் திருமணம் செய்த பலர் கொலை செய்யப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வருவது இதனை உறுதி செய்கிறது. பள்ளிச்சான்றுகளை பறித்து வைத்துக்கொள்வது, சிலர் தங்களது மகன், மகள் இறந்துவிட்ட தாகவே உறவினர்களிடம் தெரிவிப்பதும், இறுதிச்சடங்குகள் நடத்தி விடும் கொடுமை கள் மற்றும் கொலைகள் தமிழகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகம் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூகம் என்பதும் இங்கு சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் உள்ளன என்பதும் பணக்காரன் பணம் சம்பாதிப்பதற்கு எதையும் செய்யத் தயங்காதவன் என்பதும் அவ்வாறு செய்பவர்களே இன்று பெரும் பணக்காரர் களாக உள்ளனர் என்பதும், பணம் இல்லாதவர் மேல் சாதியாக இருந்தாலும் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் நடைமுறையாகும்.

பாரதியார், பெரியார் மற்றும் கம்யூனிஸ்ட்கள் செய்த பிரச்சாரங்கள், முயற்சிகளுக்குப் பின்னும் தமிழ்நாட்டில் சாதியக்கொடுமைகள் தீரவில்லை என்கின்றபோது, பிற மாநிலங்களில் எவ்வளவு கொடுமைகள் நிகழும் எனச்சொல்ல தேவையில்லை.

தமிழ்நாட்டில் தஞ்சை பகுதிகளில் தாழ்த்தப்பட்ட விவசாயக்கூலி தொழிலாளர்கள் சாணிப்பாலும், சவுக்கடியும் பெற்று அடிமைகளாக இருந்தபோது அவர்களைத்தட்டியெழுப்பி, திரட்டி, ஆண்டைகள் அடித்தால் திருப்பி அடிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் பி.எஸ். சீனிவாசராவ் அவர்கள் இச்சாதிய கொடுமைகளுக்கு எதிராக அவர்களைத் திரட்டி போராட வைத்தார்.

ஒரு படி நெல் கூலி உயர்வு கேட்டு நிலப் பிரபுக்களுக்கு எதிராக, ஆண்டைகளுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்கள் போராடினார்கள் என்பதால்; அதனைச்சகிக்க முடியாத, ஆணவம் பிடித்த நிலத்திமிங்கலங்கள் 44 உயிர்களை தீயிட்டுக் கொளுத்துவதற்கும் தயங்கவில்லை என்பது சரித்திர சாட்சி..

கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேரவேண்டிய சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி, அதே நேரத்தில் அதை அவர்களுக்குப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்டது.

மாநில அரசும் தான் ஒதுக்கிய நிதியை இலவச டி.வி.வழங்குவது போன்ற திட்டங்களுக்கு செலவு செய்து, தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்ந்து தாழ்த்தப்பட்டுக்கொண்டே உள்ளது. மற்றவர்களோடு இவர்களும் சமம் என்று உயரும் காலம் எது வோ, அந்நாள்தான் இவர்களுக்கு பொன்னாளாக இருக்கும். ஆனால் அது எப்பொழுது..?

நீதித்துறையில் பணிபுரிந்த நீதிபதிகளான சௌமித்ரா சென், ராமசாமி மற்றும் பி.டி.தினகரன் ஆகியோர் மீது கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானங்கள் குறித்து ஓர் மூத்த வழக்குரைஞரோடு இக்கட்டுரைக்காக விவாதிக்க நேர்ந்தது. அந்த வழக்குரைஞர் சம்பந்தமே இல்லாமல், இங்குள்ள தலித் நீதிபதிக்கு சட்டமே தெரியாது. இவனுக்கெல்லாம் பதவி கொடுத்து விட்டார்கள் என்று தனது சாதியவிஷத்தைக் கொட்டித்தீர்த்தார். இவை தீண்டாமை என்பது அங்கிங்கெனாதவாறு எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கான சத்தியசாட்சிகள்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, அங்கு அதிகபட்சம் 200 பேர் கூடியிருந்துள்ளனர். 200 பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத திறமையற்ற காவல்துறை அதிகாரிகளா அங்கு பணி யில் இருந்தனர். வாய்ப்பில்லை.

பின் எதனால் ? எதனால்? மேலே கண்டவாறு தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் கீழ்நிலையில் உள்ளவர்கள், அவர்கள் கேள்வி கேட்கவோ, உரிமை கோரவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ தகுதியற்றவர்கள், உரிமையற்றவர்கள் என்று எண்ணும் ஆதிக்க குணம் கொண்ட அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. குறிப்பாக முதல் நாள் அப்பகுதியில் ஓர் இளைஞன் கொலை செய்யப்பட்ட பின்னணியில், அதிலும் குறிப்பாக ஜான்பாண்டியன் கைதுக்குப் பின் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டிய காவல்துறை, முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் காக்கை குருவிகளைச் சுடுவது போல் சுட்டதும், இருவரை அடித்தே கொன்றதும் இம்மக்கள் மீதான வன்கொடுமை பார்வை தவிர வேறு என்னவாக இருக்கும். ?

வாச்சாத்தி தீர்ப்புக்குப்பிறகும் திருக்கோவிலூரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், நாங்கள் திருந்தமாட்டோம், காவல்துறைக்கு ஆதரவான அரசு உள்ளது, யாரும் ஒன்றும் செய்ய முடியாது என திமிரெடுத்துத் திரியும் போக்கையே காட்டுகிறது.

காவல்துறை என்பது சகல அதிகாரமும் கொண்டதாக தன்னைப் பாவித்துக்கொண்டு செயல்படும் ஓர் அமைப்பு. ஆட்சியாளர்கள் சொல்படி நடக்கும்….. “என்கவுன்ட்டர்” நடத்தி விட்டு, கூடவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, தற்காப்புக்காக நடத்தியதாக கூறுவதென்பது காவல்துறையைப் பொறுத்தவரை தொடரும் நிகழ்வுகள் என்பது நமக்குத் தெரியும். நேரடி அனுபவமும் நமக்குண்டு. “துப்பாக்கிச்சூடு அல்லது லத்திசார்ஜ்” க்கு முன் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உத்தரவு ஏதும் பெறப்படாமல் நடத்துவதும் பின்னர் ஒப்பம் பெற்றுக்கொள்வதும் தானே நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் அரசு பதில் சொல்லவேண்டிய காலம் வராமல் போகாது என்பது வரலாறு சொல்லும் பாடம்!


தீண்டாமை குறித்த சில விபரங்கள் :


1) தொடரும் வன்கொடுமைகள் பற்றி-

1995 முதல் 2007 வரை எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட 4,41.424 வழக்குகளில்...

கொலைகள் : 9593

படுகாயம் ஏற்படுத்திய தாக்குதல்கள் : 61168

வன்புணர்ச்சிகள் : 20865

சூறையாடல் : 4699

ஆள்கடத்தல் : 4484

தீண்டாமை சம்பந்தமான

வழக்குகள் : 10512

(என்.சி.ஆர்.பி. இந்தியாவில் குற்றச்செயல்கள் 1995-2007, புதுதில்லி 1996-2008)


2) வெளிவராத வன்கொடுமைகளுக்கு காரணங்கள் பற்றி…
 • வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குகின்றனர்
 • காவல்துறையினரிடம் நிலவும் சாதி பாகுபாட்டு உணர்வும், ஊழலும்
 • தங்களது அதிகார எல்லையில் குறை வான குற்றங்கள் நடப்பதாக காட்டுவது.-
 • வழக்கு மெதுவாக நடப்பதும்-குறைவான தண்டனையும்
 (தேசிய எஸ்சி ஆணையம்-2004-05 அறிக்கை)3) சட்டம் சொல்வதென்ன?

 • வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. தான் விசாரிக்க வேண்டும்.
 • 30 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும்
 • முன் ஜாமீன் வழங்க தடை விதிக்கப்பட் டுள்ளது (2008 உசi டுது 4779).
 • மத்தியப்பிரதேச மாநில அரசு எதிர் ராம்கிரிஷன் பலோத்தியா மற்றும் ஒருவர் வழக்கில்(1995) இச்சட்டத்தின் 18 வது பிரிவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு வருக்கு முன் ஜாமீன் வழங்க இந்தப்பிரிவு கட்டுப்படுத்துகிறது (நாடாளுமன்றக்குழு 2004-2005)
 • 2004 ல் குஜராத் மாநிலத்தில் பதிவு செய் யப்பட்ட 400 வழக்குகளில் முன் ஜாமீன் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதும்(320)80சதவீதம்முன்ஜாமீன்வழங்கப் பட்டுள்ளது. (ஃபிரண்ட் லைன், 4.12.2009)
 • பெண் அரசு ஊழியரை சாதிப்பெயரை சொல்லி திட்டி, அடித்த ஓர் வழக்கில், புகார் தாரரை அவமானப்படுத்தியதுடன், அரசு நிர்வாகப்பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளை யும் திட்டினார் என்று தண்டனை வழங்கப் பட்டது. 2010 ஊசi டுது 948(ர்ஞ)

ஆனால் என்ன நடக்கிறது..?

 • வன்கொடுமை புகார் அளித்தால் காவல் துறை உடனடியாக பதிவு செய்வதில்லை.
 • எதிர் வழக்கு.. 
 • கட்டப்பஞ்சாயத்து …
 • காலம் கடத்துதல்....
 • மாவட்ட விழிக்கண் குழுக்கூட்டத்தில் மேல் நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்வது. 
 இது தான் தொடரும் நிலைமை


வேலியே பயிரை மேய்வது(காவல்துறை)

சிதம்பரம்,வாச்சாத்தி,திருக்கோவிலூர் போன்று, 1992 முதல் 1995 வரை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து காவல் துறையினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் “699”.

இவை காவல்நிலையத்தில் மரணங்கள், வன்புணர்ச்சிகள், எஸ்.சி., எஸ்டி மக்களின் புகார்களை விசாரிக்காதது, இப்படி..

“சமூகக் குற்றங்கள் தொடர்பான ஒரு சிறப் புச் சட்டத்தின் வெற்றியானது எந்த அமலாக் கப்பிரிவிடம் அந்தச்சட்டம் ஒப்படைக்கப் படுகிறதோ அதன் செயல்பாட்டைப் பொறுத்தே என்பது உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தாகும்”. நீதிபதி புன்னையா (ஆந்திரா எஸ்சி, எஸ்டி ஆணையம் 2001-பக்.140)

இதோ ஈரோட்டில் நேரடி அனுபவம்

அரசு தலைமை மருத்துவ மனையில் ஒரு பெண் ஊழியரை அதே பிரிவில் பணி புரியும் ஆண் ஊழியர் சாதிப்பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.

 • அன்றே புகார் அளித்துள்ளார்: 22.7.2011
 •  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாள்: 24.8.2011 (ஈரோடு காவல்நிலைய குற்ற எண். 1473 ஃ 2011 ல் ( இ.த.ச. 294(பி) மற்றும் 3 (1)(ஒ))
 • டி.எஸ்பி. விசாரணை செய்த நாள்: இதுவரையில்லை (31.12.2011)
 • தற்பொழுது விசாரித்த அலுவலர்: (இணை இயக்குநர் நலப்பணிகள்)
 • முன் ஜாமீன் பெற்றது: 4.10.2011


மேலும் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்….

 • கோவில்களில் நுழையத்தடை.
 • தீண்டாமைச் சுவர்கள்.
 • திருமணமண்டபம் வழங்கப்படுவதில்லை.
 • கிராமங்களில் முடிவெட்டுவதில்லை.
 • பள்ளிகளில் கூட தாழ்த்தப்பட்ட குழந்தைகள்தான் வகுப்பறை, கழிவறை களைச் சுத்தம் செய்வது,
 • பள்ளிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளின் சாதிப்பெயரைச்சொல்வது,
 • சுமார் 146 நபர்கள் இம்மாவட்டத்தில் கையால் மலம் அள்ளும் அவலம்.
 • சமத்துவ மயானங்களில் அனுமதிப்பதில்லை..
 • தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் நிலங்களை அபகரிப்பது.
 • புகார் கொடுத்தால் காவல்துறை உயர் அலுவலர்களே நேரில் மிரட்டுவது..
 • பள்ளிகளில் ஆசிரியர்களே பெற்றோர் சாதியைப் பற்றி பேசுவதால் குழந்தைகள் பள்ளி செல்வது குறைந்து, குழந்தைத் தொழிலாளர்கள் ஆவது மற்றும் பண்ணைகளில் கொத்தடிமை வேலை செய்யும் நிலை ஏற்படுவது.. 
 • இப்படி தொடரும் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

தீண்டாமைக் கொடுமைகள் தீரவேண்டுமானால் இதற்கு எதிராக இம்மக்களை மட்டுமல்ல, இதர பகுதி மக்களையும் இணைத்து போராட்டம் நடத்துவதே தீர்வாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் இவர்களின் நல்வாழ்வுக்காக, இலவசக்கல்வி, வேலை வாய்ப்பு, குடியிருப்பு, நிலம், வேலைக்கான தொழிற்பயிற்சி, தொழில் துவங்குவதற்கு உதவி போன்றவற்றை வழங்க வேண்டும்.

ஆனால் கிடைத்திருக்கிற அனுபவம் என்னவென்றால், பல ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு குறைந்தபட்ச நிதியை ஒதுக்கி அதையும் இவர்களுக்குப் பயன்படுத்தாமல் “காமன்வெல்த்”, “இலவச தொலைக்காட்சிப்பெட்டி” ஆகிய திட்டங்களுக்கு ஒதுக்கும் நிலை உள்ளது என்பதுதான் கொடுமையாகும். 

அரசு ஒதுக்கும் நிதி முறையாக , இடைத்தரகர்கள் இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலையை கணக்கெடுப்புக்கள் நடத்தி , முறையாக அமல்படுத்த ஓர் உயர்மட்டக்குழுவை அமைத்து, அரசியல் தலையீடு இல்லாமல், சிறப்பு ஆய்வுகள் செய்து உரிய திட்டத்தை தயாரித்து அமல்படுத்துவதே இன்றைய தேவை.

மத்திய அரசு ரூ4 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அதனைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொண்டது மத்திய அரசின் பிரதமர் தான்.

“நமது சமுதாயத்தின் மிகவும் ஒதுக்கப் பட்ட நிலையில் உள்ள பிரிவுகள் மீது, எதிராக அதாவது எஸ்சி,எஸ்டி பிரிவுகள் மீது தொடுக்கப்படும் வன்கொடுமைகள் ஒரு கொடுநோயாகும். இதற்கு எதிராகப் போராடி, இனியும் காலதாமதம் இல்லாமல் நமது சமுதாயத்திலிருந்து இதனை அடியோடு அகற்றுவதற்கு தேசத்தின் ஒன்றுபட்ட உறுதியும், தீர்மானகரமான முயற்சியும் தேவை” எனக்கூறியுள்ளார் டாக்டர் மன்மோகன் சிங் (2006).

இனி இவரது பேச்சை நடைமுறைப் படுத்த நாம் போராட்ட வடிவங்களைக் கையில் எடுப்போம்.


-எம்.அண்ணாதுரை

(மாவட்ட தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஈரோடு)

2 comments:

 1. பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. படித்தவர்கள் மத்தியில், தீண்டாமை இலைமறை காயாக
  உள்ளது, மூத்த வழக்கறிஞரின் குமுறலில் வெளிப்பட்டுள்ளது.

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)