மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வுகளுக்கு எதிராக, நேற்று டிசம்பர் 5 அன்று, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியலில் ஈடுபட்டது. பால்விலை, பஸ் கட்டணம் உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் திரளாக அனைத்து ஊர்களிலும் கலந்து கொண்டனர். காவல்துறையின் கெடுபிடிகள், தடியடிகளை மீறி செங்கோடிகளோடு, ஆக்ரோஷமான குரல்களோடு சாலைகளில் அவர்கள் நடத்திய போராட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போர்க்கோலமாய் இருந்தது. அந்தக் காட்சிகள் இங்கே....
போர்க்கோலக் காட்சிகளில் காணும் முகங்கள் யாவும் பொருளாதாரத்தில் கூடிய நிலையில் இருப்பதைப் போல் தெரிகிறது.உண்மையிலேயே இவர்கள் அடித்தட்டு மக்களின் நிலைக்காகப் போராடுகிறார்களா என்ன?
ReplyDeleteநண்பர் இளம்பிறை.. ஆகவே தங்கள் கூற வரும் கருத்து என்ன? பொருளாதாரத்தில் கூடிய நிலையில் இருப்பவர்கள் போராடக்கூடாது என்கிறீர்களா?
ReplyDeleteஅல்லது அடிதட்டு நிலை மக்களின் நிலைக்காக பிறர் போராடக்கூடாது என்கிறீரகளா?
வெண்மையான சட்டை போட்டிருப்பவர்கள் எல்லாம் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்றா?
கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கள்!
தமிழகம் முழுவதும் பால் விலையேற்றம் மற்றும் பேருந்துக்கட்டண உயர்வுக்காக வேறு யாரும் இப்படி மறியல் செய்து போராடாத போது போராடியவர்களுடன் கைகோர்த்து நில்லுங்கள் அல்லது கிண்டல் செய்யாமல் இருங்கள். நண்பா..
This comment has been removed by the author.
ReplyDeleteஇளம்பிற//
ReplyDeleteஉங்க கண்ணு என்ன அவிச்சாபோச்சு போராடுவது யார் அம்பாணி பசங்களா இல்ல கலைஞர் குடும்பமா
மெய்சிலிர்க்கச் செய்யும் இப்போர்க்கோலக் காட்சிகள் தரும் பலன்களை நாம் எப்போது அறுவடை செய்யப் போகிறோம்!மக்கள் எப்போதும் போருக்குத் தயாராகத் தான் இருக்கிறார்கள்.ஆனால் இப்போரின் இலக்கை நாம் எப்போது எப்படி அடையப் போகிறோம்.
ReplyDelete