எல்லோருக்கும் உடலால் முகமுண்டு, ஆனால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் முகமிழந்து போனவர்களுக்காக தன் பன்முகம் கொண்டு போர்க்கொடி உயர்த்தியவர்தான் அம்பேத்கர். சமத்துவம் என்பதே அவரது அடிநாதம். ஆகவே தான் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், உதிரி தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் நலன் குறித்து நிறைய பேசினார், எழுதினார், வாய்ப்பு கிடைத்த போது சட்டமாக்கினார்.
"சமூக பொருளாதார சமத்துவம் என்னும் லட்சியத்தை பிரகடனம் செய்யும் துணிவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. சுயநலம் பிடித்த சில தனிமனிதர்களின் கட்டுப்பாட்டில் உற்பத்தி சாதனங்கள் இருக்கும் வரையில் அத்தகைய பிரகடனமே சாத்தியமில்லை. கலப்பையில் இரண்டு மாடுகளைத்தான் பூட்டுவார்கள். காந்தியம் என்பது உழுபவனையும் சேர்த்து மூன்றாவது மாடாக அதில் பூட்டுவது போன்றது." (தொகுதி 37 பக்கம் 212). காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கிருந்த முரண்பாடுகளுக்கு சமூகவியல் காரணங்கள் மட்டுமல்ல, வலிமையான பொருளியல் காரணங்களும் இருந்தன என்பதைத்தான் மேற்கண்ட அம்பேத்கரின் வரிகள் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது.
நில உடைமையாளர்களின் மகிழ்ச்சியில்தான், ஏழை விவசாயிகளின் வருத்தங்களுக்கான அடித்தளம் உள்ளது. எனவே நிலமற்றவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து அளித்திட வேண்டும். நிலங்கள் துண்டாடப்படுவதும், சிறு நில உடைமையும்தான் விவசாய முன்னேற்றமின்மைக்கு காரணம், ஆகவே நிலங்கள் இணைக்கப்பட்டு பண்ணைகள் உருவாக வேண்டும் என்கிற எதிர்மறையான கருத்தை தவறான அரசியல் பொருளாதார நிலைபாடு என்கிறார்.
இது நிலமற்ற பெரிய பட்டாளத்தை உருவாக்கும். பெரும் பகுதி மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பே இருக்கிறது. விவசாயத்தை தவிர வேறு ஊதியம் தரும் வேலை எதுவும் இல்லாததால் அனை வரும் சிறு துண்டு நிலமாவது பெரும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். நிலவுடமை எவ்வளவு சிறிதாகப் போனாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, அவற்றை அவர்கள் இயன்ற அளவு பயிரிடுகின்றனர். எனவே நிலம் துண்டாடப்படுகிறது என்பதை விட நிலம் பயிரிடப்படுகிறது என்பதுதான் உண்மை என்கிறார்.
பெரும் நில உடைமைகள் ஒழிக்கப்பட்டு அரசே அந்நிலங்களை உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். நில முதலாளித்துவம் ஒழிப்பு என்பது கூட்டுறவு முறையில் விவசாயம் செய்வது. ஆகவே விவசாயத்தில் அரசு முதலீடு அதிகரிக்க வேண்டும். நில அடமான வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றை தொடங்குமாறும் அவரது சுதந்திரத் தொழிற்கட்சி பரிந்துரைத்தது. விவசாயத்தில் தற்போது உள்ள தீமைகளில் இருந்து விடுபட கூட்டுறவு முறை விவசாயமே ஒரே வழி எனவும், தன்னைப் பொறுத்தவரை சோவியத் முறையிலான விவசாயமே மிகச் சிறந்ததாகும் என்றும் அம்பேத்கர் குறிப்பிகிறார். விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் தொழிற்சாலையில் பணிபுரிவோர் பெறும் நன்மைகள் விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் முறையினை செயல்படுத்த வேண்டும். அதோடு விவசாயத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காத கிராமப்புற மக்களுக்கு பிற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா மொழிமயமாக வேண்டும் என 1918-லேயே அம்பேத்கர் தனது கருத்துக்களை வெளியிடுகிறார்.
1936ல் அம்பேத்கர் துவங்கிய சுதந்திரத் தொழிற் கட்சி தனது கொள்கை பிரகடனத்தில், தொழிலாளர் நலன் பற்றி, தொழில் வளம் உயர்வதற்கு தொழிலாளர் நலன் மிக அவசியமானது, தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், நீக்குதல், பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றை நெறிப்படுத்துதல், தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தல், நியாயமான கூலி, ஊதியத்துடன் விடுமுறை, குடியிருப்புகள் அமைத்தல், தேவைக்கேற்ப தொழிற்சாலைகளின் நிர்வாகத்தை அரசே ஏற்றல் வேண்டுமென தெரிவிக்கிறது.
1936ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இக்கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அம்பேத்கர் அமர்ந்தார். 1938 செப்டம்பரில் ஆளும் காங்கிரஸ் அரசு தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில், தொழில் தகராறுகள் மசோதாவை கொண்டு வந்தது. இம்மசோதா கொடூரமானது, தொழிலாளர்களை பழி வாங்கும் இரத்த வெறி கொண்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான உரிமை ஒரு புனிதமான உரிமை என்பதைப் போன்றே வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் புனிதமானது.
மேலும் இம்மசோதாவிற்குத் தொழில் தகராறுகள் மசோதா என்பதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சிவில் உரிமைகளை முடக்கும் மசோதா என்றே பெயரிட்டிருக்க வேண்டுமென்று அம்மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் அம்பேத்கர் உரையாற்றினார்.
பின்னர் 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் நிர்வாகக்குழுவில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் சட்டத்தை மத்திய சட்டசபையில் முன் மொழிந்தார். சட்டம் நிறைவேறியது. முத்தரப்பு மாநாடுகளை நடத்தி தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடித்தளமிட்டார்.
இவ்வாறு சுரண்டப்படும் வர்க்கமான தொழிலாளர்களின் பக்கம் நின்று வாதிடுகிற அம்பேத்கர் "தொழிலாளர்கள் சாதி பார்வையை மீறி ஒரு தொழிலாளர் முன்னணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் இருக்க இடமும், அணிய ஆடையும், உண்ண உணவும் கிடைக்கும். உலகின் உணவு மற்றும் சொத்துக்களின் உற்பத்தியாளர்களாகிய நீங்கள் பட்டினி கிடந்து சாக நேரிடாது (தொகுதி 37 பக்கம் 221) என தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் தொழிலாளர் ஒற்றுமைக்கு இடையூறராக உள்ள சமூகத் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக பேசுகிறார். சாதி அமைப்பு தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பிரிக்கின்றது. மனிதர்களை சில சாதிகளாகப் பிரித்து அஞ்சறைப் பெட்டியில் போடுவது போல் போட்டு விட முடியாது. எங்கெல்லாம் ஒரு கூட் டம் தம் சொந்த (சாதி) நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் வெறுப்பு மனப்பான்மை காணப்படும். இந்த மனநிலையே மற்ற கூட்டத்தாரோடு இணக்கமாவதைத் தடுக்கிறது.
ஆகவே தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வர ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியோடு இனம், சமயம், சாதி ஆகிய பின்னணியில் பகைமை கொள்வதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து களைவதன் மூலம் தான் அத்தகைய ஒற்றுமையை கொண்டு வர முடியும் என அம்பேத்கர் நம்பினார்.
சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகிய அனைத்து தளங்க ளிலும் மானுட சமத்துவம் சிறகடித்துப் பறக்கிற ஒரு நவ இந்தியாவே அம்பேத்கரது கனவாக இருந்துள்ளது. இப்போதும் நம் முன் இருக்கிற கடமையும் அதுவே.
- கே.சாமுவேல்ராஜ்

0 comments:
Post a Comment