மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். நெருப்பினை உருவாக்குவது எப்படி என்று கண்டறிந்தவன் அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுத்த காலம் முதலே கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற தனியார்மயமும் வணிகமயமாக்கலும், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும், எதனை கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் 'பணமே' தீர்மானிக்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உயர்கல்விக்கான "மொத்த சேர்க்கை விகிதம்" (Gross Enrolment Ratio ) உலக சராசரியை விடவும் பாதிக்கும் குறைவாகத்தான் இந்தியாவில் இருக்கிறது. அதாவது ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 11 க்கும் குறைவான குழந்தைகளுக்கே உயர்கல்வி எட்டும் கனியாக இருக்கிறது...
100
கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும்
ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி
பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக்கணக்கிடப்பட்டிருக் கிறது.
இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை
கண்டறிந்துவிட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள். உலகளாவிய
சந்தையைக்கொண்டிருக்கிற இத்தொழிலில், மாணவர்கள் நுகர்வோராகவும்,
ஆசிரியர்கள் சேவை வழங்குபவர்களாகவும், கல்வி நிறுவனங்கள் தொழில் நடத்தும்
நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும்
கற்பித்தலும்-கற்றலும் தேச வளர்ச்சியினை குறிக்கோளாகக்கொண்டிராமல்
இலாபமீட்டும் தொழிலாக மட்டுமே உருவாகி வருகிறது.
பன்னாட்டு
நிறுவனங்கள் யாவும் உயர்கல்வியினை இலாபமீட்டும் நோக்கில் எப்போதும்
குறிவைத்துக்கொண்டே இருக்கின்றன. கல்வி என்பது அரசின் கடமையாக
இருந்தபோதிலும், பெரும்பாலான அரசாங்கங்கள் புதிய தாராளமய பொருளாதார
சீர்திருத்தங்கள் காரணமாக கல்வியளிக்கிற பொறுப்பிலிருந்து
விலகிக்கொண்டிருக்கின்றன. தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும்
கல்விநிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது போன்றவற்றின் மூலமாக
இந்திய அரசாங்கமும் இதனை ஆதரித்தே வந்திருக்கிறது.
இருபத்தியோராம்
நூற்றாண்டின் முதல் பத்தாண்டிலேயே உயர்கல்வியினை தனியார்மயமாக்குவதையும்
வியாபாரமாக்குவதையும், உயர்கல்வியை காட்ஸ் (GATS ) ஒப்பந்தந்தின் கீழும்
உலக வர்த்தக மையத்தின் கீழும் கொண்டுவருவதையும் எதிர்த்து மிகப்பெரிய
அளவிலான மாணவர்-ஆசிரியர்-மக்கள் போராட்டங்களை இவ்வுலகம் கண்டிருக்கிறது.
காட் மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவை கல்வி போன்ற சேவையினை உலக அளவிலான
சந்தையில் விற்பனைப்பொருளாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.
1. தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியில் உயர்கல்வியின் தனியாமயமாக்கல்
முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு உயர்கல்விக்கான தேவையோடுதான் நாம் இருபதாம்
நூற்றாண்டிற்குள் காலடியெடுத்துவைத்தோம். அத்தேவையினை பூர்த்திசெய்து
நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்வதைவிடுத்து, பா.ஜ.க. அரசும்
யூ.ஜி.சீ.யும் உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிவதிலும், கல்வியை
வியாபாரமாக்க வேண்டுமென்கிற உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தங்களை
கண்மூடித்தனமாக கைஎழுத்திடுவதிலுமே அக்கரையோடிருந்தது. உயர்கல்வியினை
தனியார்மயமாக்கும்/வியாபாராமாக் கும் பொருட்டு, கல்விக்கட்டண உயர்வு,
கல்வி நிறுவனங்களுக்கு எவ்விதக்கட்டுப்பாடுகளுமற்ற தன்னாட்சி அதிகாரம்,
நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களா வதற்கான விதிமுறைகள் தளர்த்தல் போன்ற முடிவுகளை எடுக்கத்துவங்கியது பா.ஜ.க. அரசாங்கம்.
"உயர்
கல்வி நிறுவனங்கள் யாவும் கல்விக்கட்டணத்தினை உயர்த்தியும், தனியார்
நன்கொடைகளை ஏற்றும், இன்ன பிற வழிமுறைகளை கண்டறிந்தும் தங்களுடைய
தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். உயர்கல்வியில் தனியார் முதலீடுகள்,
அரசின் சுமையைக்குறைக்கும்." என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 1998 இல் பாரிசில் நடந்த உயர்கல்விக்கான
யுனெஸ்கோ மாநாட்டில் தனியார்மயத்திற்கு ஆதரவாகப்பேசினார்.
அம்பானி-பிர்லா அறிக்கை:
கல்வியை
இலாபம் நிறைந்த சந்தையாகக்கருதி, முகேஷ் அம்பானியும் குமார் மங்கலம்
பிர்லாவும் இணைந்து "கல்விச்சீர்திருத்த கொள்கை வரைவு" ஒன்றை பிரதமரின்
கீழியங்கிய வர்த்தக-தொழில் குழுமத்திற்கு 2000 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் சமர்ப்பித்தார்கள். மாணவர்களிடமிருந்தே கல்விக்கட்டணத்தை
முழுமையாக வசூலிக்கவும், உயர்கல்வியை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கவும்
வழிவகுப்பதாகத்தான் இருந்தது அவர்களது அறிக்கை. அவ்வறிக்கையினை மட்டும்
நடைமுறைப்படுத்தியிருந்தால் காசிருப்பவன் மட்டுமே உயர்கல்வி
பயிலமுடியுமென்ற சூழல் முழுமையாக ஏற்பட்டிருக்கும். அம்பானிக்கும்
பிர்லாவுக்கும் கல்வியில் இருக்கும் சந்தையினை கார்ப்பரேட்டுகளே கட்டியாள
வேண்டுமென்பதே விருப்பம். அதனாலேயே கல்வி நிலையங்களில் எவ்வித அரசியல்
செயல்பாடுகளும் இருக்கக்கூடாதென்றும், சங்கமமைக்கிற அடிப்படை
உரிமைகளைக்கூட அனுமதிக்கக்கூடாதென்று அறிக்கையில் கேட்டுக்கொண்டனர்.
இவ்வறிக்கையினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்கள்யாவரும்
பெரியளவில் விமர்சித்தனர்.
உலகவங்கியின் வழிகாட்டுதல்:
உயர்கல்வியினை தனியார்மயமாக்கும் நோக்கில் செயல்பட்ட உ.வ.மை.(உலக வர்த்த மையம்) மற்றும் காட்ஸ்(GATS ) ஆகியற்றுக்கு கிடைத்த கடும் எதிர்ப்பினால், உலக வங்கி வேறு வகையில் அதனை நிறைவேற்ற "அறிவார்ந்த சமூக உருவாக்கம்: புதிய சவால்கள்" என்றொரு அறிக்கையினை 2000 இல் வெளியிட்டது. கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு, குறைந்தபட்ச தரத்துடன் புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் துவங்க அனுமதிக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களும் கூட மாணவர்களிடமிருந்தும் அவர்களின் பெற்றோரிடமிருந்தும் கட்டணமாக வசூலித்தும், வெளியிலிருந்து நன்கொடையாகப் பெற்றும் வருமானமீட்டிக்கொள்ளவேண்டுமென்
"உலக
அளவிலான அறிவுசார் பொருளாதாரத்தின் தேவையை பூர்த்திசெய்யவும், மாறிவரும்
தொழிலாளர் சந்தைக்காகவும், கல்விநிறுவனங்கள் புதுமையான
வழிமுறைகளைக்கண்டறிய ஏதுவாகவும் ஒரு திட்ட வரைவினை உருவாக்க வேண்டும்"
என்று வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அவ்வறிக்கையின் மூலமாக
கேட்டுக்கொண்டது. உலக வங்கி தன் கட்டுப்பாட்டிலேயே அத்திட்டவரைவினை
உருவாக்கி செயல்படுத்துவதனை உறுதி செய்யுமென நம்பிக்கை தெரிவித்தது.
இதன்மூலம் உலக உயர்கல்வியை தனது காலடியின்கீழ் வைத்துக்கொள்ளும்
திட்டம்தான் உலகவங்கிக்கு.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான மாதிரிச்சட்டம்:
உலகமயத்தின்
தேவைகளுக்கேற்ப உயர்கல்வித்துறையினை வடிவமைக்க வேண்டுமென வளரும்
நாடுகளையெல்லாம் உலகவங்கி நெருக்கத்துவங்கியது. புதிய பொருளாதாரக்கொள்கைகளுக்கேற்ப அவை அமையுமென்ற நம்பிக்கையையும் அளித்திருப்பதால்,
பெரிய அளவிலான எதிர்ப்பும் தவிர்க்கப்படும் என்பது உலகவங்கியின் கணிப்பு.
இப்பின்னனியில்தான்
உலகவங்கியின் நெருக்குதலுக்கிணங்க பா.ஜ.க. தலைமையிலான அரசு யூ.ஜி.சி.
மூலமாக அக்டோபர் 2003 இல் "பல்கலைக்கலைக்கழகங்களை சிறப்பான
எதிர்காலத்திற்காக தயார்செய்யும் நோக்கில் " என்கிற பார்வையில் "21 ஆம்
நூற்றாண்டில் இந்தியப்பல்கலைக்கழங்களுக்கான முன்மாதிரிச்சட்டம்
உருவாக்கும் பொருட்டு" என்னும் தலைப்பில் கருத்தாக்கக்கட்டுரை ஒன்றை
வெளியிட்டது.
"'நிதியுதவி
பெற்று ஆய்வு நடத்துதல்', 'அறிவுசார் ஆலோசனை வழங்குதல்',
'புத்தகங்கள்/ஆய்வறிக்கைகள் தயாரித்தல்/வெளியிடுதல்' போன்றவற்றை உலகின்
மற்ற பல்கலைக்கழங்கள் போலவே இந்தியா பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே
செய்யத்துவங்கிவிட்டன. அதே போல இன்னபிற உலக அளவிலான முன்னேற்றங்களையும்
(குறிப்பாக தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்கள்)
பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கலைக்கழங்களின் எண்ணிக்கை,
அணுகுமுறை, தரம் மற்றும் நிதி ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள் இன்னமும்
தொடர்ந்து இந்தியப்பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை பாதித்துக்கொண்டே
இருக்கின்றன.
பல்கலைக்கழகங்கள் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களாக மாறிக்கொண்டிருப்பதால், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைச்சிக்கலற்ற நிர்வகிக்க எளிமையான வழிமுறைகளை உருவாக்குதல் அவசியமாகிறது. எனவே பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால்தான் உலகமயமாக்கலின் சவால்களை ஏற்றுக்கொண்டு உயர்தரத்திலான கல்வியை வழங்கமுடியும்."
பல்கலைக்கழகங்கள் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களாக மாறிக்கொண்டிருப்பதால், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைச்சிக்கலற்ற நிர்வகிக்க எளிமையான வழிமுறைகளை உருவாக்குதல் அவசியமாகிறது. எனவே பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால்தான் உலகமயமாக்கலின் சவால்களை ஏற்றுக்கொண்டு உயர்தரத்திலான கல்வியை வழங்கமுடியும்."
புதிய
பல்கலைக்கழக 'மாதிரிச் சட்டங்கள்' யாவும், தகவல் தொடர்பு தொழிற்நுட்பப்
புரட்சியின் பலனைப்பெறுவதாகவும், தேசிய அளவிலும் உலக அளவிலும்
உருவாகியிருக்கிற போட்டியினை சமாளிக்கும் விதமாகவும் இருக்குமென்றும்,
2020 இல் இந்தியா ஒரு அறிவுசார் வல்லரசாக உதவுமென்றும் இவ்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'மாதிரிச்சட்டங்கள்'
வழியாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உயர்கல்வியில் நிகழும் உலக அளவிலான
மாற்றங்களோடு ஒன்றிச்செல்லவும், சொந்தச்செலவிலேயே நிர்வாகத்தினை
நடத்தவும், கல்வியினை ஒரு வியாபாரமாகவே நடத்தவும் தயார் செய்வதே
யூ.ஜி.சி.யின் எண்ணம். மற்றுமொரு யூ.ஜி.சி.யின் ஆய்வறிக்கையில்,
"மானியமில்லாத பாடத்திட்டங்கள், தொழிற்கல்வி படிப்புகளுக்கு இரட்டைக்கட்டண
முறை என இந்தியாவில் உயர்கல்வியானது ஏற்கனவே ஓரளவிற்கு
தனியார்மயமாகிவிட்டது." என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'மாதிரிச்சட்டங்களின்'
மூலமாக இந்தியாவிலிருக்கும் எல்லா உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கும்,
கல்லூரிகளுக்கும், இன்னபிற கல்வி நிறுவங்களுக்கும் மத்திய அரசு வழங்கி
வரும் மானியத்தினை முழுவதுமாக நிறுத்தி, அவற்றையெல்லாம் உலகமயத்தின் ஓர்
அங்கமாக மாற்றி, GATS -இல் செர்த்துவிட்டதால் ஏற்படும் விளைவுகளையும்
அனுபவித்து, இலாபமோன்றே குறிக்கோளாகக்கொண்ட உலக கல்வி முதலாளிகளிடம்
நாட்டின் உயர்கல்வித்துறையினை அடகுவைத்து, கல்வியும் ஒரு வியாபாரம்தான்
என்பதனை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக, மிக
அதிகமான கட்டணங்களை செலுத்த இயலாத நிலையிலிருக்கும் ஒடுக்கப்பட்ட,
நலிவடைந்திருக்கிற பிரிவு மக்களும் கீழ்நடுத்தர மக்களும்
உயர்கல்வியிலிருந்தே விலக்கப்பட்டுவிடுவார்கள்
இது
போன்ற ஒரு சூழலை உருவாக்கவே, பாஜக அரசும் யூ.ஜி.சி.யும் இணைந்து
உயர்கல்விக்கான நிதியினை குறித்தும், மாணவர்களின்மீது சுமையினை
திணிக்கவலியுறுத்தியும், கல்விக்கடன்களை திணித்தும், கல்வி நிறுவனங்களின்
கட்டாய தரமதிப்பீடு நடத்தியும், கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை
வழங்கியும், சுயநிதிக்கல்லூரிகள் துவங்க ஊக்கமளித்தும், ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்களல்லாத ஊழியர்களின் வேலைப்பளுவினை அதிகரித்தும், ஒப்பந்த
ஆசிரியர்களை நியமிப்பதை ஊக்குவித்தும் உயர்கல்வியில் தனியார்மயத்தையும்
வியாபார நோக்கத்தினையும் புகுத்தினார்கள்.
'மாதிரிச்சட்டங்கள்'
செயல்வடிவத்திற்கு வந்தால், இருபத்தோராம் நூற்றாண்டில் சமச்சீரான
உயர்கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதனை நன்கு
புரிந்துகொள்ளமுடியும்.
நாட்டின்
உயர்கல்வியினை ஒட்டுமொத்தமாக வியாபாரமாக்கும் நோக்கிலேயே பா.ஜ.க.
தலைமையிலான அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே இத்தகைய "மாதிரிச்சட்டத்தினை"
உருவாக்கி முன்மொழிந்தது. இக்கடுமையான சட்டத்திற்கெதிராக மாணவர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர் என நாடுமுழுவதிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
2. ஐ.மு.கூ. அரசு
2004 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியேற்றது. ஐ.மு. அரசும் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் தனியார்மய மற்றும் வணிகமயமாக்கும் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றியது. ஏராளமான தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப்பல்கலைக்கழக உரிமை பெற்றன. இருப்பினும் அரசுக்கு ஆதரவளித்துவந்த சி.பி.எம். இன் கடும் எதிர்ப்பால், 'அந்நிய கல்வி நிறுவனங்கள் சட்டத்தினை' 2007 இல் திரும்பப்பெற்றுக்கொண்டது ஐ.மு. அரசு. மாதிரிச்சட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டன.
2004 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியேற்றது. ஐ.மு. அரசும் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் தனியார்மய மற்றும் வணிகமயமாக்கும் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றியது. ஏராளமான தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப்பல்கலைக்கழக உரிமை பெற்றன. இருப்பினும் அரசுக்கு ஆதரவளித்துவந்த சி.பி.எம். இன் கடும் எதிர்ப்பால், 'அந்நிய கல்வி நிறுவனங்கள் சட்டத்தினை' 2007 இல் திரும்பப்பெற்றுக்கொண்டது ஐ.மு. அரசு. மாதிரிச்சட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டன.
காட்சின் (GATS ) முன்முயற்சி
2006
இல், "இந்திய உயர்கல்வியும் காட்சும் (GATS): ஒரு வாய்ப்பு" என்கிற
தலைப்பில் இந்திய வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில், "உலக வர்த்தக மையத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிற பேச்சுவார்த்தையினை
ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, அந்நிய கல்விநிறுவனங்களை இந்தியாவில்
நேரடியாக துவங்குவதற்கு அனுமதிக்கவேண்டும். இதன்மூலம் இந்தியாவிலிருந்து
வேறுபல நாடுகளுக்குச்சென்று கல்விபயில்கிற மாணவர்களின் ஆயிரக்கணக்கான
கோடிரூபாய்களை நாம் சேமிக்கலாம். பாடத்திட்டம் நிர்ணயிப்பது, ஆசிரியர்களை
நியமிப்பது, மாணவர்களை சேர்ப்பது, கல்விக்கட்டணத்தினை நிர்ணயிப்பது
போன்றவற்றில் அவர்களுக்காக சில விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும்
ஆலோசிக்கலாம்".
இந்தியாவில்
கல்வித்துறையில் சுதந்திரமாக நுழைந்து செயல்படுவதற்கு சட்டங்களில்
மாறுதல்கள் செய்யவேண்டுமென்று உலக வர்த்தக மையம் ஏற்கனவே
கேட்டுக்கொண்டதும், இவ்வறிக்கையினில் குறிப்பிடப்பட்டிருக்கிற "விதிமுறை
தளர்த்தலும்" ஒரே புள்ளியில் ஒன்றிணைவதைக்காணலாம். உலக வர்த்தக மையம்
மற்றும் காட்ஸ் ஆகியவற்றின் மூலமாக வளர்ந்த நாடுகளும், அங்கிருக்கும் பெரிய
கல்வி நிறுவனங்களும் மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நெருக்குதல்
கொடுக்கத்துவங்கின. அது அப்போது இந்தியாவை ஆட்சி செய்யத்துவங்கிய ஐ.மு.
அரசையும் வெகுவாக நெருக்கியது. ஆனாலும் ஐ.மு. அரசின் ஆட்சிக்கு ஆதரவளித்த
இந்திய இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பினால், பெரிய அளவில் இந்தியா
பாதிக்காமல் போனதும் நிதர்சன உண்மை.
ஐ.மு.கூ. அரசு - 2
ஐ.மு.கூ. அரசு இரண்டாவது முறையாக மே மாதம் 2009 இல் ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களில் செய்துகாட்டுவோமென்று சிலவற்றை பட்டியலிட்டார்கள். கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்யப்போகிறோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பல சட்டங்களை முன்மொழிந்தார். அதன்படி, 2010 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியில், அந்நியப்பல்கலைக்கழங்கள் இந்தியாவில் நுழைவதற்கு ஏதுவாக நான்கு புதிய மசோதாக்களை நிறைவேற்றியது ஐ.மு.கூ. அரசு.
ஐ.மு.கூ. அரசு இரண்டாவது முறையாக மே மாதம் 2009 இல் ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களில் செய்துகாட்டுவோமென்று சிலவற்றை பட்டியலிட்டார்கள். கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்யப்போகிறோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பல சட்டங்களை முன்மொழிந்தார். அதன்படி, 2010 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியில், அந்நியப்பல்கலைக்கழங்கள் இந்தியாவில் நுழைவதற்கு ஏதுவாக நான்கு புதிய மசோதாக்களை நிறைவேற்றியது ஐ.மு.கூ. அரசு.
நாட்டின்
ஒட்டுமொத்த உயர்கல்வி இயக்கமுறையினை எவ்வித விவாதங்களும் ஆலோசனைகளுமின்றி
மாற்றும் முயற்சியில் அரசும் அமைச்சரும் இறங்கியதன் பின்னணி என்ன என்பதனை
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உயர்கல்விச்சூழலையும் தற்போதைய
நிலைமையினையும் அறிந்தால் அனைத்தையும் நாம் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
இச்சட்டங்களை எல்லாம் மிகவிரைவில் நிறைவேற்ற, வளர்ந்த நாடுகள் (குறிப்பாக
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து) இந்திய அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தம்
கொடுத்தார்கள் என்பதையும் அதற்கான காரணங்கள் என்னவென்றும் நாம் அறிவது
அவசியம்.
மையக்கட்டுரையாளர் - விஜயேந்தர் ஷர்மா
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இ.பா.சிந்தன்
(தொடரும்...)
நல்ல கட்டுரை. கடைசி பகுதிக்கு இன்னும் விளக்கம் தேவை. வெட்டியது போல் உள்ளது. தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteறொம்ப நீளமாக உள்ளது கட்டுரை அரைவாசி படித்து விட்டேன் மீதியை படித்து விட்டு கருத்திடுகிறேன்...
ReplyDelete