இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 12+2 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களோடு கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக இருந்த உறவு, நட்பு எல்லாவற்றையும் ஒரேநாளில் தூக்கியெறிந்தது பெரும் பரபரப்பாகவும், ஆச்சரியமாகவும் இனி சிறிது நாட்கள் பேசப்படும். இதனால் அதிமுக வலுப்படுமா, பலவீனமாகுமா என்று பட்டிமன்றங்கள் நடத்தப்படும். தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக இதனை அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சிகளில் பகிர்ந்துகொள்வார்கள்.
முக்கியமாக இதன் பின்னணி பற்றி அவரவர் பார்வையில் சுவாரசியமாகவும், புனைவாகவும் அரைத்துத் தள்ளுவார்கள். ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் எல்லை மீறிப் போய்விட்டது என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் ஏற்கனவே பேசத் தொடங்கி விட்டனர். இன்னும் கதை கதையாய் கொட்டித் தீர்க்கப்படும். தினமலர் ‘பேஷ், பேஷ்’ என வாயில் எச்சில் தெறிக்க தெறிக்க எழுதித் தள்ளும். வரலாற்றிலிருந்து பல நிகழ்வுகளை எடுத்து ஆராய்ச்சிகள் நடத்துவார்கள்.
அவர்கள் நடத்தட்டும். ஆனால் காரணம் மிக எளிதானது. சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட உறவு எதுவாகவும் இருந்திருக்கலாம். ஆனால், அந்த எல்லைத் தாண்டி அதிகார மையத்தை நோக்கிய காய் நகர்த்தலாக மாறுகிற போது இதுபோன்ற விரிசல்கள் நிகழவேச் செய்யும். அதிகார போதையில் அல்லது வெறியில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது நிலைநிறுத்திக்கொள்ள அடுத்தவருக்குக் குழிபறிக்கும் காரியங்களைத் தாண்டி வேறு பின்னணி எதுவும் ‘உயர்ந்த இடங்களில்’ இருக்கப் போவதில்லை. எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஒருவேளை ஜெயலலிதாவையும் இப்படி கட்சியை விட்டு நீக்கியிருக்கக்கூடும். இதன் கதை இப்படித்தான்.
இதனால் பால்விலை குறையப் போவதில்லை. பஸ் கட்டணம் குறையப் போவதில்லை. மின்சாரக் கட்டணமும் அதிகரிக்காமல் இருக்கப் போவதில்லை. மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. அண்ணா நூலக இடமாற்றம் வாபஸ் பெறப்படப் போவதில்லை. அதுதான் ஜெயலலிதாவின் அரசியல். இது வேறு. வெறும் அதிகாரச் சண்டை!
"சனிப் பெயர்ச்சி" இரு நாட்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்டதோ?
ReplyDeleteraja won't be acquitted, kani won't reside in tihar again,daya wouln't be charge sheeted by cbi
ReplyDelete12 பேர் நீக்கம் அதிரடி.ஒருவாரத்தில் சேர்ப்பு மறுபடி.
ReplyDeleteமீண்டும் எப்பொழுது தோழி தோட்டத்திற்கு வருவார். (இது ஒன்றும் புதிதல்லவே)
ReplyDeleteSuperunko.
ReplyDeleteJ katchiel kosdi uruvakumo , aatchiku aapathdu varumo ..... viraivil therdhal varumo , mannaarkudi vakaiyara sasikalavudan amma dmk aarampikumo ethellam karpanaiyakumo .tamilaka arasiyalil pudiya nadagam thuvanki eruku ........... ETHANA NALAIKU .
ReplyDelete