Sunday, November 27, 2011

“why this கொலவெறி டீ ” என்ன சொல்கிறது?

கணிணி யூத்துகளின் மனசில் கொலவெறியாக மீட்டிக்கொண்டிருக்கிறது தங்லீஸ் பாடல் ஒன்று. இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில், தனுஷ் எழுதி பாடிய “சூப் சாங்” ... Why This கொலவெறி கொலவெறி கொலவெறி டீ?

சமீபத்தில் டாம் 999 படமாக இருக்கட்டும் அல்லது கொலவெறி பாடலாக இருக்கட்டும் பெரிய விவாதத்தை கிளப்பி விட்டிருக்கின்றன. அதற்கும், இந்திய சினிமா சந்தையில் வார்னர் பிரதர்ஸ், சோனி மியூசிக் போன்ற பெரும் நிறுவனங்கள் குதித்திருப்பதற்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. அவர்களின் வணிகத் தந்திரத்திற்கு எல்லாவற்றையும் ஆட்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து அனுதினமும் எழுதப்படும் செய்திகளும் விளம்பரங்களும் நீங்கள் இந்தப் பாடலை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ... ஒருமுறையாவது கேட்டே தீரவேண்டும் என்று காதைத் திறந்து உட்செலுத்திவிடுகின்றன. இதன் மெட்டை  மட்டும் மனதிற்குள் முணுமுணுத்துப் பார்த்தால்  ஏற்கனவே வந்த சில பாடல்கள் ஒருவேளை நினைவுக்கு வரக்கூடும். ஆனால் அதன் சுவடுகள் எதுவும் தெரியாமல், இந்தப் பாடல் புதுசாகத் தெரிகிற ஒரு பாவனை இருக்கிறது.

”Why This கொலவெறி கொலவெறி கொலவெறி டீ?” பாடலைப் பொருத்தமட்டில் அது இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் 6 மில்லியனுக்கும் கூடுதலான முறைகள் பாடல் கேட்கவும், தரவிரக்கம் செய்யவும் பட்டிருந்தது. (எனவே எனது விமர்சனத்தால் பாடல் பிரபலமாகவில்லை மாறாக பாடலின் பிரபலத்தின் மீது உருவான சில கருத்துக்களையே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்)

Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?

(கடவுளே நானோ செத்துக் கொண்டிருக்கிறேன்.
அவளால் எப்படி சிரிக்க முடிகிறது?)

பள்ளியில் அறியாக் காலத்தில் என் நெஞ்சில் புகுந்துவிட்டிருந்த உணர்வு காதல். அப்போதெல்லாம் எதற்காக காதலிக்கிறோம் என்று தெரியாது ஆனால் பெண்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். விடலைக் காதலின் தருணத்தில் பெண்கள் மட்டும் ஏன் நம்மைப்போல இல்லை என்ற எண்ணம் வந்து கொல்லும். நாம் என்னதான் அலைந்தாலும், நம்மை ஏரெடுத்துப் பார்த்திடாத பெண்களுக்கு விடலைப் பருவ ஈர்ப்புகள் கிடையாதா?, இருக்க வேணுமே ... ஓ அவள் திமிறில் இதையெல்லாம் செய்கிறாள் என்ற முடிவுக்கு சென்றுவிடுவோம்.

பெண் திமிறின் வடிவம் - அது உண்மையா? ... இந்த சமூக அமைப்பில் ஆண்கள் அவிழ்த்துவிட்ட காளைகளாகவும். பெண்கள் அடக்கிவைக்கப்பட்டவர்களாகவுமே வளர்க்கப்படுகிறார்கள். உண்மை ரொம்ப வித்யாசமானதுதான். தன் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து திமிற முடியாதவளாக, தனக்கான வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், வாழ்க்கைத் துணை விசயத்தில் சுதந்திர முடிவெடுக்கவும், பிடிக்காவிட்டால் விலகிச் செல்லவும் அவளுக்கு உரிமைகள் தரப்படவில்லை. ஆனால் அதுவே அவளை ஏங்கிக் கசிந்துருகும் காதலன்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது.

ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்வார்கள். பெண்கள் மீதான இந்தப் பார்வையை ஆண் ஒரு விதமாகவும், பெண் ஒரு விதமாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆணுக்கு திமிறாகப் படுவது, பெண்ணுக்கு ஒருவித சுகத்தைக் கொடுக்கிறது. தன்னை அடக்கிவைத்திருந்த சமூகத்தை, தனக்காக கண்ணீர் விடவும் செய்ய முடிகிறதே என்கிற ஒரு அல்ப சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அவளும் ஒரு ஆணுக்காக கண்ணீர் விட நேரும்போது மேற்கண்ட வரிகளை உச்சரிப்பால்... காதலும், பிரிவாற்றாமையும் இருபால் உணர்வுகள் அல்லவா?

--
White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku

(வெள்ளைத்தோல் கொண்ட
அந்தப் பெண்ணின் இதயம்
இருள் கவ்வியதாக இருந்தது ...)

”பேர் அண்ட் லவ்லி” போன்ற பண்டங்கள் வெண்மையையே மேம்பட்ட ஆக்கிவைத்திருக்கிறார்கள். எனவே வெள்ளைத் தோல் பெண்களால்தான் இந்த அல்ப சந்தோசத்தையும் கூட அடைந்துவிட முடிகிறது. அழகிய பெண்களை நோக்கியே எல்லாக் காதல்களும் தூதுவிட, போட்டி உருவாவதும் ஒருவன் வெற்றிபெற பலர் தோற்பதும் இயற்கைதானே? ...

மறுமுனையில் இருந்து பார்த்தால். ஆணின் பார்வையில் அழகற்றவர்களும், காதல் இருந்தும் வெளிப்படுத்த முடியாதவர்களுமான பெண்களும் காதலுக்கு ஆளாகத்தானே செய்வார்கள். அந்தக் காதல்கள் எல்லாம் கைகூடிடுகிறதா?. அந்தத் தோல்விகள் சமூகத்தில் வெளிப்படுவது மிகக் குறைவே. காதல் ஒருமுறைக்கும் கூடுதலாக வருவதை கற்பொழுக்கம் ஏற்பதில்லை. எல்லோருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் உண்டும் என்ற யதார்த்தத்தை யாவரும் உணர்ந்திருந்தாலும் இது தொடர்கிறது. கற்பு பெண்கள் மீதே வலிந்து திணிக்கவும் படுகிறது. எனவே, பெண்ணின் காதல் மெளத்தில் வெளிப்படுகிறது. அந்தக் கண்ணீரின் சூடு சில தலையணைகளுக்கு மட்டுமே தெரியலாம். (இந்த வரிகளை எழுதும் போது என் மனத்தில் கவிதாயினி மீரா வந்து செல்கிறார். மெய்யாகவே அவள் போராட்டக்காரி - படிக்க ‘காலந்தோரும் பிராமணியம் -அருணன்)

Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..

(கண்கள் சந்தித்த
அந்த நொடியிலிருந்து
என் எதிர்காலம் மாற்றி எழுதப்பட்டது)
----
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru

(வெற்று வாழ்க்கையில்
அவள் நுழைந்தது அடுத்த நிமிடம்
நான் பின்னோக்கிச் செல்லத் துவங்கினேன்)

காதலிக்கும் காலத்தில் எந்த ஆண் தனது ஆதிக்கத்தால் பெண்களை முழுவதும் கவர்ந்துவிட முடியாது. சில சலுகைகளும், REJECTION சுதந்திரமும் கிடைக்கும் அந்தக் காலத்தை எல்லா ஆண்களும் எப்படி விரும்புவார்கள்? ...

கவிதையின் நேர்மறை அம்சமே அது வாசகர்களுக்கு நேரடியான பொருளையும், மறை பொருளையும் உணர்த்தும் என்பதுதான். எனவே, இந்தப் பாடலைக் கேட்கும் எவரும் இந்த வரிகளை தனக்கு ஏற்றார்ப் போல பொருள் கொள்கிறார்கள்.

காதல் தோல்வி உணர்வு கொண்ட ஆண் தனக்கானதாகவும்,
வென்ற ஆண் தனக்கு நேராத துன்பத்தை நினைத்தபடியும்,
ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் ஒருவித கோபத்துடனும்,
இசை விரும்பிகள் புதிய இசையைச் சுவைக்கும் சுவாரசியத்துடனும்,
காதல் தோல்வி உணர்வு கொண்ட பெண், காதலின் மெய்ப் பால் தன்மையை மாற்றியும்,
தங்லிஸ் புரிந்தவர்கள் ஒருவிதமாகவும்,
புரியாதவர்கள் ஒருவிதமாகவும் ... ஏற்கனவே கேட்டு முடித்துவிட்டார்கள்.

நாம் சமூக யதார்த்தத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தியாக வேண்டும். தொடர்ச்சியான முயற்சி இல்லாமல் ஆணும், பெண்ணும் சமமான உலகைப் படத்திட முடியாது.

இதுபோல தமிழில் ஆயிரம் பாடல்கள் வந்துவிட்டன. ஆனால், இந்தப் பாடல் மொழிகளைத் தாண்டி வெற்றியடைந்ததற்கு அதன் மொழி, இணைய வெளி, பெரும் முதலீடு என பல காரணங்கள் இருக்கின்றன. புதிய யுகத்தில் இப்படி இன்னும் நிறைய பாடல்கள் வெற்றியடையலாம். ஆனால், அதன் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கான கருத்து யுத்தத்தை நடத்துவது, சமூகப் பொறுப்புள்ள சக்திகளின் கையில் தான் இருக்கிறது.

- இரா.சிந்தன்

2 comments:

  1. சிந்தன் அவர்களே! ரஷ்ய அடக்குமுறைக்காலத்தில் லெனின் அவர்கள், ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்கள்.பிதோவனின் சிம்ப்ஹோ நியைக் கேட்டு என் ரஷ்யநாட்டு தொழிலாளி இதனை ரசிக்ககூடிய காலம் வருமா!என்று ஏங்கினார்."ராக்கம்ம கையைத்தட்டு" என்ற படல் நாடோடிப்பாடலாக ஆரம்பித்து,செவ்விசைக்குவந்து,மெற்கத்திய இசையில் முடியும்.இளையராஜாவின் மேதமையப் பறைசாற்றும்.கொலைவேறி பாட்டும் அப்படியே. மத்திய பிரதெசத்தின் உத்கேர்ஷனும் உபியின் சல்மானும் (பத்தாம் வகுப்பு மாணவர்கள்) என் பேரனுடன் படிப்பவர்கள் கூறித்தான் இந்த்ப்பட்டை கெட்டேன். முதலில் ரசிக்கக் கற்றுக் கொள்வோம்.--- காஸ்யபன்

    ReplyDelete
  2. தோழர் காஸ்யபன் அவர்களுக்கு... பாடலில் வரும் அனைத்து வரிகளும் ஆணாதிக்க சிந்தனையோடு வருகிறது. தனுஷ் ஏற்கெனவே ஒரு படத்தில் காதலிக்க மறுத்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றம் சென்று பெண்களுக்கு எதிராக பேசுவான். இருந்தாலும் பரவாயில்லை இந்த பாடலை ரசிக்க வேண்டும் நல்லதுதான் தோழர். நான் ஆண் என் காதலை எந்த பெண்ணிடம் கூறினாலும் அவள் உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சாபம் விடுவேன். கண்டபடி திட்டுவேன் இது எந்த வகை காதல் தோழர். "கையில கிளாசு அதுல ஸ்காச்" இது மேல்தட்டில் இருக்கும் பண திமிர். அதென்னங்க மாடுல புனிதமான மாடு வேற இருக்கா? டவுட்டு தோழர். இந்த பாட்டை கொண்டு போய் அடக்குமுறைக்கு எதிராக ஒப்பிட்டிருக்கீங்களே தோழர் அது எப்படி கொஞ்சம் விளக்குனீங்கனா தேவல.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)