Tuesday, June 14, 2011

தமிழகத்தில் பறிபோன தலித் நிலங்கள் மீட்கப்படுமா?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக் கள் மீட்கப்படும் என சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத் தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், அரசு நிலங் கள் ஆகியவை தலித் மக்களிடமிருந்து மிரட் டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந் நிலங்களையும் தமிழக முதல்வர் மீட்பதற் கான நடவடிக்கையை எடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள்.

மதுரையில் உள்ள எவிடென்ஸ் (சாட் சியம்) என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோயம் புத்தூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கட லூர், காஞ்சிபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித் மக்களை நேரடியாக சந்தித்து ஆய்வு நடத்தி யுள்ளதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் கள் வெளியாகியுள்ளன.

தற்போது நிலமுள்ள தலித்துகள்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலித்துகளில் தற்போது நிலம் உள்ள தலித் துகளின் எண்ணிக்கை 34 சதவீதமாகும். நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை 66 சத வீதமாகும். நிலம் இருக்கக்கூடிய தலித்து களில் 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்தி ருப்பவர் 3 பேர் மட்டுமே. 6 லிருந்து 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே. 1 லிருந்து 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் 28 பேர். 51 சென்ட் முதல் 99 சென்ட் நிலம் வைத் திருப்பவர்கள் 7 பேர். அதிகபட்சமாக 10 சென்ட்டுக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் 48 பேர். நிலம் இருப்பவர்களில் 50 பேர் வீட்டு மனை வைத்திருப்பவர்கள். நன்செய் நிலம் உள்ள வர்கள் 13 பேர். புன்செய் நிலம் உள்ள வர்கள் 32 பேர். நிலம் வைத்திருக்கக்கூடிய 99 தலித் துகளில் 45 பேருக்கான நிலம் அர சால் வழங் கப்பட்டதாகும். இவற்றில் பஞ்சமி நிலம் வைத்திருப்பவர்கள் 12 பேர். தொகுப்பு வீட் டிற்கான நிலம் வைத்திருப்பவர்கள் 10 பேர். சிறப்பு திட்டங்களால் நிலம் பெற்றவர்கள் 12 பேர்.

தலித்துகளும் நிலஉரிமை மீறல்களும்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளும் நில உரிமை மீறலால் பாதிக் கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 247 பேர் (82 சதவீதம்) சாதி இந்துக்களாலும், 7 பேர் (1.7சதவீதம்) சாதி கிறிஸ்தவர்களாலும், தனியார் நிறுவனங்களால் 21 பேரும் (7.5 சத வீதம்), திருச்சபையால் 5 பேரும் (1.7 சதவீதம்), அரசால் 19 பேரும் (6 சதவீதம்) பாதிக்கப்பட் டுள்ளனர்.

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 நபர்களில் 17 பேர் (5 சதவீதம்) 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை பறிகொடுத்தவர்கள். 170 பேர் (56 சதவீதம்) 1 - 5 ஏக்கர் நிலத்தை பறி கொடுத்தவர்கள். 10 சென்ட்டுக்குள் நிலத்தை பறிகொடுத்தவர்கள் 53பேர். (18 சதவீதம்). நிலம் பறிக்கப்பட்ட ஆண்டு ஆய்விற்கு எடுத் துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளில், 1970க்கு முன்பு 80 தலித்துகளின் நிலம் பறிக் கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 1970 லிருந்து 1980 இடையே 59 தலித்துகளின் நிலமும், 1981 லிருந்து 1990 இடையே 44 தலித்துகளின் நிலமும், 1991 லிருந்து 2000 ஆம் ஆண்டு இடையே 41 தலித்துகளின் நிலமும் பறிக்கப் பட்டுள்ளன.

கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 இடையே 76 தலித்துகளின் நிலம் பறிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் துகளின் நிலம் பறிப்பு இரண்டு மடங்காக அதி கரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.

நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித்துகளில் 195 தலித்துகளின் நிலம் அர சால் வழங்கப்பட்டுள்ளது. 90 தலித்துகளின் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. மற்றவர் களுக்கெல்லாம் நிலம் தானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

குறைந்த விலைக்கு நிலத்தை பறிகொ டுத்தவர்கள் 93 பேர் ஆவர். பொருளுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண் ணிக்கை 42. கடனுக்காக நிலத்தை பறி கொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 98. வட்டிக்காக நிலத்தை பறிகொடுத்த தலித் துகளின் எண்ணிக்கை 40. நிலத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து, வழி தடங்கலை மறித்து அதன் மூலம் நிலத்தை விற்க நிர்ப்பந்திக் கப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 78. அரசு நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்த தலித்துகளின் எண்ணிக்கை 16. தனி யார் நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 19 பேர் ஆவர்.

இதில் கொடுமை என்னவென்றால், 30 தலித்துகள் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களுக்காக நிலத்தை பறிகொ டுத்துள்ளனர். சாராயம், கள் போன்ற மதுபா னங்களுக்காக 5 தலித்துகள் நிலத்தைப் பறி கொடுத்துள்ளனர். உணவுக்காக 5 தலித்துகள் தங்கள் நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், தேவிநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாத னுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம் ரூ.300 கடனுக்காக பறிக்கப்பட்டுள்ளது. திண்டுக் கல் மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக் கண்ணன் என்பவருக்கு 1985ம் ஆண்டு தமி ழக அரசு 3 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுத் துள்ளது. இந்நிலத்தை கடந்த 1994ம் ஆண்டு 8 படி கம்புக்காக சாதி இந்து ஒருவர் ஏமாற்றி பறித்துள்ளார். விழுப்புரம், மேல்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேனி. இவருக்கு தமிழக அரசு கடந்த 1965ம் ஆண்டு 4 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. இந்நிலம் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு சாராயத்திற்காக பறிக்கப்பட் டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என்று கூறப்படுகிறது. விழுப்புரம், குதிரை சந் தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாயி. இவரது 4 ஏக்கர் நிலத்தை 5 படி தானியம் மற்றும் ரூ. 100 கொடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முருகன் என்பவரது நிலமும் இதே கிராமத்தில் சாதி இந்துக்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. திண் டுக்கல், சின்னகரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்த மான அரசு கொடுத்த 60 சென்ட் நிலத்தில், 15 சென்ட் நிலத்தை ஒரு பஞ்சாயத்து தலைவர் 2005 ஆம் ஆண்டு பறித்துள்ளார். தற்போது இந்த நிலம் சாதி இந்துக்களின் பொதுப் பாதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சில ஆண்டுகளுக்கு முன்பு இவ ரது தாத்தாவிற்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை அப்பகுதி சாதி இந்துக்கள் ஊர் மயா னம் அமைப்பதற்காக இலவசமாக கேட்டு, மயானம் அமைத்துள்ளனர். இவரது நிலம் மட்டுமல்லாமல், சில சாதி இந்துக்களின் நிலம் ஊர் மயானம் அமைப்பதற்கு கொடுக் கப்பட்டுள்ளது. ஆனால் இம்மயானத்தில் தலித்துகளின் சடலத்தை புதைக்க அனுமதியில்லை. 65 சென்ட் நிலத்தை கொ டுத்த ராஜேந்திரனின் உறவினர்களோ, சமூ கத்தைச் சேர்ந்தவர்களின் சடலத்தை புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுங் குன்றம் தாலுகா, பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் உள்ளிட்ட 50 பயனாளிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலத்தினை தமிழக அரசு கடந்த 1963ம் ஆண்டு வழங்கி யுள்ளது. இந்நிலங்கள் அனைத்தும் சாதி இந் துக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு நியாயம் கேட் கச் சென்ற இப்பகுதி தலித் மக்கள் மீது தாக் குதல் நடந்தது மட்டுமல்லாமல், போலீசா ரால் பொய்வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்கீரனூர் கிராமத் தைச் சேர்ந்த தலித் பெண்ணான காட்டேரி யம்மாளுக்குச் சொந்தமான 50 சென்ட்டுக்கு மேலான நிலம் குறைந்த விலைக்கு பறிக்கப் பட்டுள்ளது. இவ்வழக்கு தற்போது தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக் காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி, பெரியகுறவக்குடி கிராமத் தைச் சேர்ந்த 74 தலித் மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு வீடு கட்டுவதற் கான நிலம் வழங்கியுள்ளது. ஆனால் இதுநாள் வரை தமிழக அரசு வழங்கிய நிலத்தில் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி சாதி இந்துக்கள், தலித் மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக் கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், அம் மக்களை மிரட்டியும் தாக்கியும் வருகின்றனர். இதேபோன்று உசிலம்பட்டி அருகில் உள்ள சொக்கதேவன்பட்டி கிராமத்தில் 51 தலித் குடும்பத்தினருக்கு 2002ம் ஆண்டு தமிழக அரசு நிலம் வழங்கியிருக்கிறது. இப்பகுதி சாதி இந்துக்களும் தலித்துகளுக்கு நிலத்தை கொடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத் தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட் டோரும் கடனுக்காக சாதி இந்துக்களிடம் நிலத்தை பறிகொடுத்துவிட்டு இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாத காலம் டீ சாப்பிட்ட கடனுக்காக தலித் ஒருவரின் 1 ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தஞ் சை மாவட்டத்தில் சாதி இந்து ஒருவரிடம் கா தணி விழா நடத்துவதற்காக தலித் ஒருவர் கடன் கேட்டிருக்கிறார். சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவழித்த சாதி இந்து, தலித்துக்கு சொந்த மான 80 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள் ளார். இச்சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.


நிலங்களும் வன்கொடுமைகளும்

தலித்துகள் நிலம் வைத்திருந்தபோது சாதி இந்துக்களால் 240 தலித்துகள் மீது வன்கொடுமை நடந்துள்ளது. நிலஉரிமையால் 5 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 146 தலித்துகள் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு இழிவாகப் பேசப்பட்டுள்ளனர். 45 தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நிலஉரிமை மீறலுக்கு எதிரான சட்டத் தலையீடு

பல்வேறு கொடுமைகளை தலித்துகள் சந்தித்தாலும், 65 சம்பவங்களுக்கு மட்டும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. புகார் கொடுக்கப்பட்ட 65 சம்பவத் தில் கூட 15 சம்பவத்தில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப் பாக 3 வழக்குகள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, 2 வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எங்கெல்லாம் பஞ்சமி நிலங்கள் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன், பஞ்சமி நிலம், தலித் மக்களுக்கு அரசு கொடுத்த நிலம், தலித் மக்களின் சொந்த நிலங்கள் போன்ற வற்றை பறித்த நிலைகள் குறித்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் குறைதீர்ப்பு கமிட்டி மூலமாக உண்மைகளை கண்டறிந்து, அதன டிப்படையில் தீவிர விசாரணை மேற் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நீதி வழங் குவதற்கு முறையான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளை யும் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.கவிதா குமார்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)