Friday, February 11, 2011

அதிகாரத்தை எள்ளி நகையாடும் மக்கள் கலைஞன் !

 'பூபாளம்’ பிரகதீஸ்வரன்

15 ஆண்டுகளுக்கும் மேலாக 'த.மு.எ.க.ச’-வின் கலை இரவுகளில் ஒலிக்கிறது, இவரது குரல். நடிப்பு, பாடல், எழுத்துஎனப் பல பரிமாணங்கள் கொண்டவர். கலைவாணரும் எம்.ஆர்.ராதாவும் இணைந்த கலவையாக, நடப்பு அரசியலைப் பகடி செய்யும் பிரகதீஸின் நாடக வடிவம், தமிழின் புதிய களம்


'என் அம்மா இலங்கை மலையகத்தில் பிறந்த தமிழ்ப் பெண். அவரது சிறு வயதிலேயே அவரை யும் தூக்கிக்கொண்டு தாத்தா இங்கு வந்துவிட்டார். அப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பக்கம் இருக் கும் விளானூர் என்ற கிராமம். படித்தது அங்குதான். பங்குனி, சித்திரை மாதங்களில் எங்கள் ஊரைச் சுற்றி எக்கச்சக்கமான திரு விழாக்கள் நடக்கும். அம்மாவின் அப்பா ஓர் ஆர்மோனிய இசைக் கலைஞர் என்பதால், எங்கு நாடகம் நடந்தாலும் என்னையும் அழைத்துப் போவார். விடிய விடியநாடகம் பார்ப்போம். என் அப்பாவும் குன்னக் குடி வைத்தியநாதன் கச்சேரி மாதிரி யான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் இசைப் பிரியர். இப்படி கலையும் இசையும் சிறு வயதிலேயே எனக்கு நிறையக் கிடைத்தது.

ப்ளஸ் டூ படிக்கும்போது, சத்தியமூர்த்தி என்கிற என் தமிழாசிரியர் தந்த உற்சாகத்தில் பேச்சு, நடிப்பு, எழுத்து என எல்லாப் போட்டிகளிலும் முதல்முறையாகக் கலந்து கொண்டேன். அனைத்திலும் எனக்குத்தான் முதல் பரிசு. பெரிய உற்சாகம். அதே ஆசிரியர், பிறகு நாடகங்களில் நடிக்கவைத்து என்னை மெருகேற்றினார். அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகப் பல ஊர் களிலும் நாடகங்கள் போடுவார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். பயிற்சி கொடுக்க பிரளயன் வந்திருந்தார். அவரால் ஈர்க்கப்பட்டு, 'இனிமேல் நாடகம்தான் வாழ்க்கை’ என முடிவு செய்தேன். அறிவொளி இயக்கம் மிகப் பெரிய களம். ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவது, பாட்டுப் பாடுவது என... பசி, தூக்கம் மறந்து சுற்றுவோம். 'அந்த நாளுல சின்ன வயசுல பள்ளிக்கூடம் நானும் போகலை, ஆத்தாவும் படிக்கலை, அப்பனும் படிக்கலை, படிப்பின் அவசியம் புரியலை... விவரம் சொல்லவும் ஆள் இல்லை, விளையாட்டா காலமும் போயிருச்சே’ என்றெல்லாம் அறிவொளியில் பாடல்கள் பாடிக்கொண்டு திரிந்த நாட்களை எந்த அறிவொளி தன்னார்வத் தொண்டனாலும் மறக்க முடியாது. இப்படிக் கிராமங்களில் நாடகம் போட்டு முடிந்ததும், துண்டு ஏந்தி மக்களிடம் வசூல் செய்வோம். அப்படி வசூல் செய்துகொண்டு இருந்த போது, எங்கள் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். 'உங்க பையன் பிச்சை எடுக்கிறான்’ என வீட்டில் அவர் சொல்ல... அடி, உதை, திட்டு. ஆனாலும், நாடக ஆசை அடங்கவில்லை.

ஞானக் கிறுக்கன்’ என்ற எனது முதல் த.மு.எ.க.ச. மேடை அனுபவம் புதுக்கோட்டை கலை இரவில் நடந்தது. நான் ஒருவன் மட்டும் மேடையேறி நடிக்கும் ஐந்து நிமிட டிராமா அது. நகைச்சுவையாகத் தொடங்கி, சமூக அவலங்களைக் கோபத்துடன் சொல்லி, இறுதியில் மண்ணை அள்ளி 'இது என்ன?’ என்பேன். மக்கள் 'மண்’ என்பார்கள். 'மண்ணா இது? வெறும் மண்ணா? இது ஜாலியன் வாலாபாக்கில் சிந்திய ரத்தம். பகத்சிங்கின் உயிர். கீழவெண்மணி பாட்டாளிகளின் தியாகம். இது வெறும் மண் இல்லை... என் தேசம். இந்த தேசத்தை மண்ணாக்கிடாதீங்க’ எனச் சொன்னபோது, கூட்டத்தினர் கண்களில் நீர். அதன் பிறகு 'ஞானக் கிறுக்கன்’ அரங்கேறாத மேடைகளே இல்லை.

பிறகு, தனியாக 'பூபாளம்’ குழு தொடங்கினோம். 'மயானம்’, 'சைக்கிள்’ என எத்தனையோ நாடகங்கள் போட்டு இருக்கிறோம். 'வியர்வையின் குரல்’ என்ற பெயரில் ஓர் இசைத்தட்டு வெளியிட்டோம். இடையில் நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இரண்டு முறை சென்னை வந்து தங்கினேன். அப்போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, நான் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இப்போது வரை சினிமாவைத் துரத்திக்கொண்டே இருக்கிறேன். ஆனால், இன்னமும் நாடகத்தில்தான் என் கால்கள் இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளே எங்கள் இரவு நேரப் படுக்கையறையாக இருக்கின்றன. முதல் நாள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சி, அடுத்த நாள் கன்னியாகுமரி, மறு நாள் சென்னை எனப் பறவை களைப்போல அலைந்து திரிகிறோம். எப்போதும் மக்களுடன் இருப்பதும், மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுமே எங்கள் பலம்.
நாடகத்தில் இப்போது நாங்கள் வந்தடைந்து இருக்கும் வடிவம் முக்கியமானது. இதில் எத்தனை பேரையும் சேர்க்கலாம். எதைப்பற்றியும் பேசலாம். எவ்வளவு நேரமும் நீட்டிக்கலாம், சுருக்கலாம். இந்த நாடக வடிவம்பற்றி தோழர் பிரளயன், 'பிரெஞ்சு நாடகக் கலைஞர் பிரெக்ட், narrative and reporting theatre என்ற வடிவத்தை நாடகத்தில் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் இதைச் சிறப்புடன் செய்கிறது பூபாளம் குழு’ என பாராட்டியதை மறக்க முடியாது. என்னுடன் ஆரம்ப நாட்களில் இருந்து உடன் வரும் தோழர் செந்திலும், நானும் இணைந்துதான் இப்போது நாடகங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். மக்கள் தொலைக் காட்சியில் சுமார் 2 வருடங்கள் நாங்கள் நடத்திய 'புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி, உலகம் முழுவதும் எங்களைக் கொண்டு சேர்த்தது. அதன் வீச்சில் எத்தனையோ நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தி வந்தோம்.
நாடகத்துடன் சேர்த்து, வாசிப்புதான் என்னைச் செழுமைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக 'பூபாளம் புத்தகப் பண்ணை’ என்ற பெயரில் நூல்கள் வெளி யிடத் தொடங்கினேன். நாடகத்துக்காக ஒத்திகையோ, முன் தயாரிப்போ எதுவும் எங்களிடம் கிடையாது. பேசு பொருளை மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுக்கிறோம். முன்பெல்லாம் பள்ளிக் கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக் கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக்கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான். ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி. தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில்விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்குறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்’னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா? இதைத்தான் மேடையில் நாடகமாகப் போடுகிறோம். அது நடிப்புதான், ஆனால் நடிப்பு மட்டுமில்லை; உணர்வு உள்ள மக்கள் கலைஞர்களின் அரசியலும் அதுதான்!''

நன்றி: யூத்புல் விகடன்
எழுதியவர்: பாரதிதம்பி, படம்: கே.கார்த்திகேயன்

3 comments:

  1. "ஞானக்கிறுக்கன்" நாடகத்தைப் பார்த்துவிட்டு விம்மி விம்மி அழுதவர்களில் ஒருவன் நான்.த.மு.எ.ச கோவை மாநாட்டில் சங்கத்தை ஆரம்பித்த 16 பெருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது."வேர்களுக்கு விழுதுகள் எடுக்கும்விழா" 16 பெரில் ஒருவனான எனக்கு மிகவும் இளைய உறுப்பினரான பிரகதீஸ்வரன் சால்வை அணிவித்தார் அந்தபுகைப் படத்தை பொக்கீஷமாக பாதுகாத்து வருகிறென்.---காஸ்யபன்..

    ReplyDelete
  2. பிரகதீஷ் உனக்கு இன்னும் உயரங்கள் மிச்சமிருக்கிறது தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாதக்கணக்கில் அலைந்து திரிந்து பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அதில் புதுகைபூபாளம் கலைகுழுவை மேடையேற்றி, கீழிறிந்து நிகழ்ச்சியை பார்க்கும்போது பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போகும்.
    குறிப்பாக கலப்படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பிரகதீஷ் கூறியது...
    விவசாயம் பொய்த்துபோய் விவசாயி ஒருவன் பூச்சிமருந்து குடிச்சிட்டான். ஆஸ்பத்ரிக்கு தூக்கிட்டு போனதும் பொழச்சிகிட்டான்.ஏன்னா பூச்சி மருந்துல கலப்பிடம் னு டாக்டர் சொல்லிட்டார்.வாய்க்குள்ள ட்யூப் போட்ட காயம் ஆற டாக்டர் கொடுத்த டானிக் சாப்டவன் உடனே செத்துட்டான், ஏன்னா டானிக் லயும் கலப்படம். உயிர்கொள்ளி மருந்து சாப்டு பிழச்சவன் உயிர்காக்கும் மருந்து சாப்டு செத்து போய்ட்டான்". சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உமது பணி தொடரட்டும். நட்புடன்நாகா, சிதம்பரம்.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)