வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை, சென்னை-600018
தொலைபேசி-04424332424-04424332924
முதல்பதிப்பு. ஜனவரி-20
(இந்த சிறு பிரசுரம் - பகுதி பகுதியாக .. தொடராக வெளியாகும்)
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை, சென்னை-600018
தொலைபேசி-04424332424-04424332924
முதல்பதிப்பு. ஜனவரி-20
(இந்த சிறு பிரசுரம் - பகுதி பகுதியாக .. தொடராக வெளியாகும்)
உணவு பற்றாக்குறையால் மனித நாகரிகம் வீழ்ந்துவிடுமா? என்ற கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பினால் நகைப்பார்கள். இன்றோ, அது நடந்துவிடுமோ என்ற அச்சத்துடன்தான் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். 2008-ஆம் ஆண்டு, உலகம் பட்டினிச் சுனாமி என்ற பெரும் தாக்குதலாலேயே விழித்தெழுந்தது. இதுவரை இல்லாத நெருக்கடியும், விலையேற்றமும் உலகில் கொந்தளிப்பை உருவாக்கியது.
உணவு விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட 1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலகமக்கள் இதுவரை சந்தித்தது இல்லை. 2005 முதல் உணவு தானியங்களின் விலை 75 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை 150 சதம்வீதம் உயர்ந்துள்ளது. இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள் 2008-ஆம் ஆண்டு மட்டும் 12.5 கோடி மக்கள் தள்ளப்பட்டனர். 2007-இல் 84.8 கோடியாக இருந்த பட்டினியாளர்கள் 2008-இல் 92.3 கோடியாக உயர்ந்தனர். மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் (undernurished) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்விளைவு உலகில் உணவுக்கான சண்டைகள் (food wars) தீவிரமடைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானா முதல் பிலிப்பைன்ஸ் வரை 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில நாடுகளில் பெரும் எழுச்சியான ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில சின்னஞ்சிறு நாடுகளில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளத
இந்த உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்கும் காரணம் என்ன? தேவைக்கும், அளிப்புக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி முக்கிய காரணம் அல்ல. பெட்ரோல் விலை 40 டாலரிலிருந்து 150 டாலர் வரையில் ஏறுவது , பிறகு 40 டாலர் வரை இறங்குவது என்பதை சந்தையில் அளிப்புக்கும், தேவைக்கும் உள்ள முரண்பாடு தீர்மானிப்பது இல்லை என்பது தெளிவாகும். 1950-ஆம் ஆண்டு உலக உணவுஉற்பத்தி 60.31 கோடி டன்களாகும். அன்றைய மக்கள் தொகை 200.54 கோடியாகும். 2007-ஆம் ஆண்டு உலக உணவு உற்பத்தி அளவு 207.60 கோடிடன்னாகும். இக்காலத்தில் மக்கள் தொகை 2.6 மடங்கு உயர்ந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.3 மடங்கு உயர்ந்துள்ளது.
சராசரியாக ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 314 கிலோ உணவு கிடைக்கவேண்டும். ஆனால் வளர்ந்த அமெரிக்காவில் 1042 கிலோ வீதம் கிடைக்கிறது ஆனால், ஆப்பிரிக்காவில் 162 கிலோதான் கிடைக்கிறது. எனவே இந்த 2007-2008-இல் ஏற்பட்ட நெருக்கடி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அதுவும் வளர்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும்.
கட்டமைப்பு சீரமைப்பின் சீரழிவு:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால், உலகவங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் சுமார் 90 நாடுகள் மீது கட்டமைப்பு சீரமைப்பு திட்டத்தை திணித்தன. இதை அமுலாக்கிய அனைத்து நாடுகளிலும் இந்த உணவு நெருக்கடி தற்போது தீவிரமாகியுள்ளது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக உலகவர்த்தக அமைப்பு 1995-இல் உருவாகி, வளரும் நாடுகளின் வணிகம் மற்றும் விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுத்தன. தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் விவசாய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
மேற்கண்ட திட்டங்களின் சாராம்சம், விவசாயத்தில் பொது முதலீடு குறைப்பு, தாராளமயம், தனியார்மயக் கொள்கை ஆகியவை மூலமாக விவசாயப்பொருட்கள் வணிகத்திலும் உணவுச் சந்தையிலும், பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன; இதனால் விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்கும் வகையில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த வணிகக்கட்டுப்பாடுகள், உற்பத்திக் கட்டுப்பாடு, மற்றும் அரசு கொள்முதல் ஆகியவை விவசாய ஒப்பந்தம் (ஹடீஹ) மூலம் தளர்த்தப்பட்டன
.
விவசாயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டன. இதன் விளைவாக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் சந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்டன. சந்தைகளே விவசாய உற்பத்தியை தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது. பெரும் நிறுவனங்கள் இந்த இடத்தை அபகரித்து கொள்ளைலாபங்களை ஈட்ட ஆரம்பித்தன. இந்த உலகமய பின்னணியில் ஒரு விவசாயி நிலைமாற்றம் குறித்து திருமிகு வந்தனாசிவா அவர்களின் கூற்று கவனிக்கத்தக்கது
ஒரு விவசாயி சமூக, பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியில் தான் ஒரு உற்பத்தியாளன் என்ற அடையாளத்தை இழந்து நிலபிரபுக்கள், வட்டிக்கடைகாரர் ஆகியோர் மூலமாக சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் விதை, உரம் ஆகிய இடுபொருட்களை வாங்கும் நுகர்வாளனாக மாறிவிட்டான் என்பதுதான் கட்டமைப்பு சீரமைப்பின் விளைவு. இக்கொள்கைதான் நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் அடிப்படைக்காரணம்.
0 comments:
Post a Comment