வளைகுடாப் போர் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் 34 கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர்கள் கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கையெழுத்திட்டுள்ளது.
வளைகுடாப் போர் துவங்கி 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஐ.நா.வின் பாதுகாப்புக்கவுன்சில் ஒப்புதலைப் பெற்று ஜனவரி 17, 1991 அன்று அமெரிக்கா, நேட்டோ மற்றும் அதன் கூட்டாளிகளின் ராணுவம், மேற்கு ஆசியப் பகுதியில் தனது மிகப்பெரியத் தாக்குதலைத் தொடுத்தன. பல நாடுகளில் போருக்கு எதிரான குரல்கள் எழுந்ததை மீறியே இது நடந்தது. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத இந்தப் போர், அடுத்து வந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போர்கள், படையெடுப்புகள் மற்றும் ஏகாதிபத்தியத் தலையீடுகள் ஆகியவற்றிற்கு முன்னோட்டமாக அமைந்தது.
வளைகுடாவிலிருந்து யூகோஸ்லேவியா வரை, ஆப்கானிஸ்தானிலிருந்து இராக், லெபனான் மற்றும் பாலஸ்தீனம் வரை ஒவ்வொரு நாட்டின் மீதும், ஒட்டுமொத்த உலகின் மீதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஏகாதிபத்தியம் முயற்சி செய்துள்ளது. உலகின் பிரதானமான எரிபொருள் வளங்களைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மக்களின் இறையாண்மை உரிமைகளை அழித்தொழிப்பது, ஒட்டுமொத்த உலகத்தை பெரு மூலதனத்தின் சுரண்டலுக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை ஏகாதிபத்தியம் எடுத்திருக்கிறது. இந்த ராணுவ ரீதியான தாக்குதல்கள் மற்றும் போர் வெறி நடவடிக்கைகள், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்கெதிரான தாக்குதல்களோடு சேர்ந்தே நடக்கிறது.
ஏகாதிபத்திய நாடுகள் சிலவற்றிலும் இது நடப்பதால் ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது.
தாக்குதல்களுக்கு யார் முதலில் இலக்கானோர்களோ, அந்த மக்களின் கடுமையான போராட்டங்களால் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு தடைகள் ஏற்பட்டன. முக்கியமான பின்னடைவுகளையும் சந்தித்தது. ஆனால் அமைதி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிடவில்லை. மாறாக, முதலாளித்துவம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதிலிருந்து மீள்வதற்கான சக்தி ஆட்சியாளர்களுக்கு இல்லாமை ஆகியவற்றால், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தைப் போல வன்முறை, சர்வாதிகாரம், போர் மற்றும் மக்களின் உரிமைகள், வாழ்நிலைகளுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்கள் மூலம் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சி நடக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் மக்களின் இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. இந்த இயக்கங்கள் உள்நாட்டு எதிரிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியான ஏகாதிபத்திய போர் மிரட்டல்கள், சீண்டல்கள் மற்றும் தலையீடுகள் உள்ளன. ராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைக்கான செலவை ஏகாதிபத்தியம் அதிகரித்துள்ளது. போர் மற்றும் தாக்குதல் மிரட்டல்கள் இவற்றிலிருந்து வெளிப்படையாகவே தெரிகின்றன.
ஏகாதிபத்தியத்தின் போர் மற்றும் தாக்குதல் திட்டங்களுக்கு எதிராகவும், அமைதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாகவும், முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தவும், இறையாண்மையைப் பாதுகாக்கவும், உலக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உலகில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மக்கள் முன்வர வேண்டும் என்று கையெழுத்திட்டுள்ள அனைத்துக் கட்சிகளும் கோருகின்றன. அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான போராட்டங்கள், முதலாளித்துவத்தைத் தூக்கியெறியும் மற்றும் சோசலிசத்தைக் கட்டமைக்கும் போராட்டங்களிலிருந்து பிரிக்க முடியாததாகும் என்று இக்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
மக்களுக்கு ஆதரவாக நிலைபாடு எடுக்கும் இந்தக்கட்சிகள், தேசிய விடுதலைக்கான போராட்டம், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள், தலையீடுகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றிற்கு எதிரான நிலையெடுக்கும் புரட்சிகர, முற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புச்சக்திகளுக்கு ஆதரவு தரும். குறிப்பாக, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, குறிப்பாக, 1967 ஆம் ஆண்டுக்கு முன்பாக இருந்த பாலஸ்தீனப் பகுதிகளைக் கொண்ட சுதந்திர நாட்டை உருவாக்கப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கும், மேற்கு ஆசியாவில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் முழு ஆதரவை இந்தக் கட்சிகள் தெரிவித்துக் கொள்கின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அல்ஜீரியா, வங்கதேசம், பிரேசில், பெல்ஜியம், பிரிட்டன், கனடா, சைப்ரஸ், டென்மார்க், பின்லாந்து, கிரீஸ், நெதர்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, வடகொரியா, லெபனான், லக்சம்பர்க், மெக்சிகோ, பாலஸ்தீனம், நார்வே, பெரு, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, வெனிசுலா, ஸ்பெயின், துருக்கி மற்றும் யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர்கள் கட்சிகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.

0 comments:
Post a Comment