இந்த வார இந்தியா டுடே இதழில் மாற்று வலைப்பக்கம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தமிழில் பொதுத்தளங்களில் விவாதங்களுக்கான வாய்ப்புகளை இணையதளங்கள் திறந்துவிட்டிருக்கின்றன.
மாற்று.காம் பொதுவுடைமைச் சித்தாந்த அடிப்படையில் சமூக நிகழ்வுகளையும், மற்ற விசயங்களையும் பற்றிய அலசல் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பல எழுத்தாளர்கள் கைகோர்த்து இந்த வலைப்பதிவுக்கு பங்களித்து வருகின்றனர்.
பெண்களின் கவிதைகள், திரைப்படங்கள், இலவசத்திட்டங்களின் அரசியல், ஊடகங்கள் என பல்வேறு தளங்களைப் பற்றிப் பேசுகின்றன இதில் உள்ள கட்டுரைகள். வழக்கமான சண்டைகள், எதிர்த்தாக்குதல்கள், பின்னூட்டங்கள் போன்றவற்றை எழுதிக் குவிக்காமல் நுணுக்கமான பார்வையுடன் பிரச்சனைகளை அணுகும் போக்கை இக்கட்டுரைகளில் காண முடிகிறது.
மேற்கண்ட கருத்து உண்மையிலேயே நமக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, வெற்றுத்தாக்குதல்களையும் விமர்சனங்களையும் முன் வைப்பதை தவிர்த்து, நேர்மையான அணுகுமுறையுடன் பிரச்சனை அலசிடவே நாம் விரும்பினோம். அதையே, அவர்களும் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
தொடர்ந்து செயல்படுவோம். மாற்றம் சாத்தியமே !
மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteCongratulations Comrade....
ReplyDeleteKeep it your Work
மாற்று விரைவில் மாற்றத்தை கொடுக்கும்.
ReplyDelete