மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்களின் பேரணி/ஆர்ப் பாட்டம் முழுமையாக வியாபித்திருக்கிறது. ராணுவ டாங்கிகளும், ராணுவத் தினரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றைக் கண்டு சிறிதும் அஞ்சிடாமல், அரசின் ஊரடங்கு உத்தரவைத் துச்சமெனத் தூக்கியெறிந்து, கடல் போன்று மக்கள் கூட்டம், தங்களைக் கடந்த முப்பதாண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும், மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்தக்கூடிய வகையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பரித்து வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நெருப்பை அணைக்கக்கூடிய விதத்தில் முபாரக் தன்னுடைய புதிய அமைச்சர வையில் சில மேம்போக்கான சீர்திருத் தங்களை அறிவித்திருந்தபோதிலும், ராணுவத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை, முபாரக் தொடர்ந்து ஆட்சியில் நீடிப் பதைத் தொடரும் முயற்சிகளுக்கு பலத்த அடியாக வந்திருக்கிறது. ‘‘ராணுவம், தங்களின் மகத்தான மக்களுக்கு எதிரா கத் தங்கள் சக்தியைப் பயன்படுத்தாது. உங்களின் ராணுவம், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்ப தற்காக முன்வைத்திருக்கும் உங்களின் நியாயமான கோரிக்கைகளையும் அதற் காக ஒவ்வொரு பிரஜைக்கும் உத்தர வாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளின் படி அமைதியான வழிகளில் உங்களின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமைக்குத் தன் ஒப்புதலையும் அளிக்கிறது,’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத சக்திகள் கொள் ளையடித்திடவோ, மக்களைத் தாக்கி அச்சுறுத்திடவோ மக்களின் தன்னெழுச் சியான, நியாயமான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அராஜகத் தைத் தூண்ட முயலும் எதிரி முகாமின் ஏஜெண்ட்டுகளையோ அனுமதிக்காது என்றும் அது மேலும் எச்சரித்துள்ளது. எகிப்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிப் போக்குகளின் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்று இப்போது சொல்ல முடி யாது என்றபோதிலும், நாட்டின் வளர்ச் சிப் பாதையில் மிகப்பெரிய அளவிற்கு மாற்றம் இருக்கும் என்பது மட்டும் தெளிவுபடத் தெரிகிறது.
துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டு களாக அதிகாரத்திலிருந்து எதேச்சதி கார ஆட்சி நடத்திய அதன் அதிபர் சைன் எட் அபிடைன் பென் அலி அந்நாட்டு மக் களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட் டுள்ள பின்னணியில், எகிப்தில் இம் மாபெரும் வளர்ச்சிப் போக்குகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பணவீக்கம், ஊழல், ஜனநாயக உரிமைகள் வெட்டிக் குறைக்கப்படுதல், வறுமை ஆகிய பிரச்சனைகளுக்கு எதி ராகவே இத்தகு ஆர்ப்பாட்டங்களும், எழுச்சியும் தொடங்கின. இத்தகைய ‘மல்லிகைப்பூ புரட்சி’ யின் தாக்கம் மத்தியக் கிழக்கின் மற்ற நாடு களிலும் வேகமாகப் பரவிவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆட்சி யாளர்களின் சுகபோக வாழ்க்கையையும் அதே சமயத்தில் அதற்கு நேரெதிராக அங்கேயுள்ள பெரும்பான்மையான மக் கள் படும் துன்ப துயரங்களையும் விக்கி லீக்° இணையதளம் வெளிப்படுத்தியது. அதில் இளைஞன் ஒருவன் தன்னைத் தானே கொளுத்திக் கொள்ளும் காட்சி யை அது ஒளிபரப்பியதே இவ்வாறு மக் கள் எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது.
ஏனெனில், எதேச்சதிகார ஆட்சி நடத்திடும் அலி அப்துல்லா சாலே (ஹடi ஹனெரடடயா ளுயடநா) யின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, பல்லாயிரக்கணக் கான மாணவர்களும் எதிர்க்கட்சியின ரும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வடக்கு ஏமனின் அதிபராக 1978இல் இருந்து வந்த சாலே, 1990இலிருந்து ஒன்றுபட்ட ஏமனின் அதிபராக மாறினார். பின்னர் 1999இல் மறுபடியும் ஒன்றுபட்ட ஏமனின் அதிபராக மாறினார்.
ஜோர்டானில் கடந்த 90 ஆண்டு களுக்கும் மேலாக ஹாஷிமைட் அரச குடும்பத்தின் மன்ன ராட்சி நடந்து வருகிறது. 2011 ஜனவரியில் ‘ரொட்டி வேண்டும், விடுதலை வேண்டும்’ என்கிற முழக்கத்துடன் துவங்கப்பட் டுள்ள மக்கள் கிளர்ச்சியானது, அந்நாட்டில் நிலவும் சமத்துவமின்மையையும், ஆட்சியில் உள்ளோர் தங்கள் உறவினர் களுக்குக் காட்டி வரும் சலுகைகளையும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது. மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தி மனப்பான்மையைத் தணிப்பதற்காக, மன்னர் அங்குள்ள அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்து, புதிய தொரு அரசாங்கத்தை புனரமைத்திருக் கிறார்.
மொராக்கோ, அல்ஜீரியா போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் இது போன்று மக்கள் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிக் கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அல்ஜசீரா என்னும் அரபுத் தொலைக் காட்சி மக்களின் ஆவேசமான கிளர்ச்சி இயக்கங்கள் பலவற்றை ஒளிபரப்பியது. இதற்காக இது பலதடவை தடை செய் யப்பட்டிருக்கிறது அதன் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள எதேச்சதிகார ஆட்சியாளர்களால் துன்பத்திற்கு ஆளாகியிருந்தபோதிலும், கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவர்கள் துன்ப துயரங் களால் மேலும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பொருளா தாரச் சீர்திருத்தங்களைப் பின்பற்றும் பிரியமுள்ள நாடுகளாக இருந்த எகிப்தும் ஜோர்டானும் உலகப் பொருளாதாரத் துடன் தங்களை ஆழமாகப் பிணைத்துக் கொண்டிருந்தன. உலகப் பொருளா தாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியானது, இத் துறையில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தவர்களில், எகிப்தில் முப்பது லட்சம் பேரையும், ஜோர்டானில் ஐந்து லட்சம் பேரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. சூய° கால்வாய், சுற்று லாத்துறை மற்றும் ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டு வந்த எகிப்தின் வருவாய் கடுமையாகப் பாதித்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் கடும் வீழ்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்தில் 2005இல் 34 விழுக்காடாக இருந்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரித்தது. ஜோர்டானின் பொருளாதார வளர்ச்சியும் 2008க்கும் 2009க்கும் இடையே 7.9 விழுக்காட்டிலிருந்து 2.8 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. இத்தகைய கடும் துன்ப துயரங்களின் தாக்கம்தான், இத்த கைய மக்கள் எழுச்சிக்கான உடனடிக் காரணங்களாகும்.
பனிப்போர் காலத்திற்குப் பின் அமெரிக்கா கொண்டுவர எத்தனித்த ‘புதிய உலக ஒழுங்கு’ இவ்வாறு நொறுங்கிக் கொண்டிருக்கிறது. உலக நிகழ்வுகளைத் தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு இருந்து வந்த திறன் கணிசமாக நலிவ டைந்திருக்கிறது என்பதையே இந்நிகழ்ச் சிப் போக்குகள் காட்டுகின்றன என்பது மிகவும் முக்கியமாகும். கடந்த காலங் களில் ஏகாதிபத்தியம், பல நாடுகளில் குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் உலகமய நலன்களைப் பாதுகாத் திடுவதற்காக பழிபாவத்திற்கு அஞ்சாது மிகவும் கொடூரமான முறையில் தலை யிட்டது. 1953இல் ஈரானில் எண்ணெய் வளங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது அங்கே ஆட்சியிலிருந்த மொசாடேக், சிஐஏ-தலைமையில் நடைபெற்ற ராணுவ சதி மூலமாகத் தூக்கி எறியப் பட்டது, 1956இல் அதிபர் நாசர் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை தேசிய மயமாக்கியதை அடுத்து எகிப்துக்குள் ஆங்கிலோ பிரெஞ்சு ஊடுருவலை மேற்கொண்டது, எண்ணெய் வளங்கள் மீது கட்டுப்பாடு, சூயஸ் கால்வாய் போக்குவரத்து மீது கட்டுப்பாடு மற்றும் அமெரிக்க ராணுவ இயக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடிய, ஏகாதிபத்தி யத்தின் நலன்களைப் பாதுகாத்திடுவ தற்கு ஒத்துழைப்பு நல்கும் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளை நிறுவியது, மற்றும் இப்பிராந்தியத்தில் இ°ரேல் ராணுவத் தின் மேலாதிக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்து, பதிலுக்கு கேம்ப் டேவிட் ஒப்பந்தம் மூலம் 1978இலிருந்து எகிப்து 35 பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியைப் பெற்றது. இத்தொகை என்பது அமெரிக்கா, இ°ரேலுக்கு அளித்திடும் தொகைக்கு அடுத்த நிலையில் உள்ள தொகையாகும். மேலும் அது இதர உதவிகள் மூலம் ஒவ்வோராண்டும் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை சராசரியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, ஜனநாயகம், மனித மாண்புகள் மற்றும் மனித உரிமைகள் காவலர் என்று தன்னைத்தானே பிரகடனம் செய்து கொள்ளும் அமெரிக்கா, எகிப்து நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்பாக மிக வும் எச்சரிக்கையாகக் காயை நகர்த்து வதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. துனீசியா, ஏமன் மற்றும் ஜோர்டான் - இம்மூன்று நாடுகளுமே அமெரிக்க ஆதரவு ஆட்சிகள்தான். ஆயினும் இவை எகிப்திலிருந்து வேறுபட்டவைகளாகும். ‘‘குறைந்தபட்சம் இப்போதாவது முபாரக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிபர் ஒபாமா பேசியிருக்கிறார்’’ என்று ஜனவரி 30 அன்று, ‘தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு’ குறிப்பிட்டிருக்கிறது.
எகிப்தில் எவ்விதமான ஆட்சி மாற் றம் வேண்டும் என்று வெளிப்படை யாக எதுவும் கூறாத அதே சமயத்தில், பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மூலம் அங்கே தன் பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. அங்கே ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை அமர்த்துவதற்கான முயற்சி அநேகமாக வெற்றிபெறவில்லை. தன்னி டம் வெகு காலம் வேலை பார்த்த உளவுத் துறைத் தலைவர் உமர் சுலைமான் என் பவரை துணை ஜனாதிபதியாக முபாரக் நியமித்ததன் மூலம் ராணுவத்தினரின் எதிர்ப்பைச் சமாளித்திடலாம் என்றும் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், முபாரக் அறிவித்ததும் மக்களால் உருப்படியான சீர்திருத்த நடவடிக்கைகளாகப் பார்க்கப் படவில்லை. இப்போது அனைவரின் கவனமும் வெகுகாலம் வெளி நாடுகளிலேயே இருந்து விட்டு தற்போது நாடு திரும்பி இருக்கக் கூடிய, மாற்றத்திற்கான தேசிய சங்கம் என்று அழைக்கப்படக்கூடிய அமைப்புக்குத் தலைமை தாங்கும் முன்னாள் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் எல்பாரடே மீது திரும்பியிருக்கின்றன. சர்வதேச அணுசக்தி முகமையில் அவர் தலைவராக இருந்த சமயத்தில் இராக் ராணுவ நடவடிக்கைகளின்போது அமெ ரிக்கா தனக்கு ஆதரவாக அவரைப் பயன் படுத்திக் கொண்டதுபோல் இப்போதும் முயற்சிக்கும் என்று சொல்லத் தேவை யில்லை.
பல தலைமுறைகளாக, அரபு நாடு களில் உள்ள மக்கள், அளப்பரிய தியாகங் களும் போராட்டங்களும் நடத்தியிருந்த போதிலும், அவை அனைத்தும் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பசப்புவார்த்தைகள் ஆகியவற்றால் புரட்சிகர மாற்றங்கள் அங்கே ஏற் படாதவாறு சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சியும் அதேபோன்று முடிவுக்கு வரக்கூடும் என்கிற நியாயமான அச்சம் உள்ளது.
இப்போது ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, நிச்சயமாக புதியபாணியிலான எதேச்சதிகார இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவராது என்பது நிச்சயம். புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முற் போக்குத் துனிசீயன் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எட்டாஜ்டிட், “நாம் புரட்சியைப் பாதுகாக்க வேண்டும், அதேசமயத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பாக அடைந்திட்ட ஆதாயங்களையும் பாது காத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டி ருக்கிறார்.
ஆண்-பெண் சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக அடித்தளங்கள் ஆகியவற்றால் மட்டுமே புதியதொரு சமத்துவ சமுதாயத் தைக் கட்டி எழுப்பிட முடியும். இத்தகை யதொரு ஜனநாயக அமைப்பை நிறுவுவ தன் மூலமாகவே அமெரிக்காவின் கட்ட ளைகளுக்கு அடிபணிந்து ஆட்சி நடத் தும் அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சி கள் அமைவதைத் தடுத்திடவும் முடியும். மொசாடேக் தூக்கி எறியப்பட்ட சமயத் தில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அமெரிக்காவால் ஷா ஆட்சி நிறுவப்பட் டமை, ஈரானில் இ°லாமிய புரட்சி உரு வாவதற்கு இட்டுச் சென்றன. இவை மத் தியக் கிழக்கு நாடுகளின் வேதனை மிகுந்த வரலாற்று நிகழ்வுகளாக இன்ன மும் மக்களால் பார்க்கப்படுகின்றன.
இத்தகைய பின்னணியில், தங்கள் பிராந்தியத்தில் புதியதொரு வரலாற்றை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொண் டுள்ள அரபு மக்கள் அனைவருக்கும் அவர்களது முயற்சிகள் அனைத்துவித மான வெற்றிகளையும் ஈட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
தமிழில்: ச.வீரமணி
(நன்றி பீப்பிள்ஸ் டெமாக்ரசி)
நல்ல பதிவு.
ReplyDeleteநல்ல மொழிபெயர்ப்பு.