சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கவலையோடு குறிப்பிட்டபோது இடைமறித்த நிதி அமைச்சர் க.அன்பழகன்,
விலைவாசி உயர்வு குறித்து தனது ஆழ்ந்த வேதனை யை தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விலை உயர்விற்கு காரணமான பதுக்கல் முதலாளிகள் யார்? வெங்காய வியாபாரிகள் யார்? என்பதை மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சொன்னால், நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைப்பதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள் ளார்.
அது மட்டுமல்லாமல் பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும்; அது போலத் தான் விலைவாசி உயர்வும். இதற்கு யாரைக் கண்டிப்பது? விலைவாசியை குறைக்க வழிகள் இருந்தால் கம்யூ னிஸ்ட்கள் அரசிற்கு வழி கூறலாம் எனவும் திருவாய் மலர்ந்துள்ளார்.
ஆட்சி, அதிகாரம் என்ற அரியணையில் அமர்ந்துகொண்டு விலைவாசியை குறைக்க வழி கேட்கும் தமிழக நிதி அமைச்சரின் போக்கு வியப்பிற்குரியது. ஒரு அரை நூற்றாண்டுக்காலம் தமிழக அரசில் அமைச்சர் பதவி வகித்து வருபவர், 1967-ல் தமிழ்நாட்டில் கடும் விலை வாசி உயர்வின் காரணமாகவே காங்கிரசி டமிருந்து ஆட்சியை கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பொறுப்புமிக்க அமைச்சர், விலைவாசி உயர்வு என்பது இயற்கை இன்னல்களை போன்றது என்று கூறி யிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
விலைவாசிக்கு என்ன காரணம்? எப்படி குறைக்க முடியும் என்பதை தமிழ கத்திற்கு மட்டுமல்ல, இந்திய அரசிற்கும் உரிய முறையில் ஆலோசனைகளை கூறிவருவது மார்க்சிஸ்ட் கட்சியாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனை களை திமுக இடம் பெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டுங் காணாமல் விட்டுவிட்டது பேராசிரிய ருக்கு தெரியாதா?
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே எப்பொழுது வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளலாம் என அறிவித்தது திமுக பங்கேற்றுள்ள ஐ.மு. கூட்டணி ஆட்சியல்லவா? விலைவாசி உயர்விற்கு இது முக்கிய காரணம் என்பது அறிவார்ந்த அமைச்சருக்கு தெரியாதா?
ஊக வணிகத்தை தடை செய்ய வேண் டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது இடதுசாரிகளல்லவா?
மத்திய அரசு குறைந்த விலைக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டு, அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்ததை இந்திய நாட்டுமக்கள் அறியாதவரா?
தவறான கொள்கையின் காரணமாக பொது விநியோக முறையை சீரழித்தது மன்மோகன் சிங் அரசு என்பது அமைச்சருக்கு தெரியாதா? இதற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து போராடி வருவதும் உண்மையல்லவா.
கட்டுப்பாடற்ற வணிகத் தை கொண்டுவந்து காய்கறி கடைவரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, அரசின் கட்டுப்பாட் டில் எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய ஐ.மு. கூட்டணி அரசில் திமுக முக்கிய கூட்டாளியல்லவா?
மேற்கு வங்கத்தில் எரிபொருள் விலை ஏறினால் அதற்கொப்ப மாநில அரசின் வரியை உயர்த்தாமல் உள்ள தைப்போல் தமிழக அரசு செய்யமுன் வருமா? மேற்கு வங்கத்தில் 19-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்வதைப் போல் தமிழ்நாட்டில் செய்திட முன் வருமா?
வெங்காய இறக்குமதி குறித்து பேசும் அமைச்சர், பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டுவர தயாரா? இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் உணவுப் பொருள்கள் ஊக வணிகத்தில் சிக்கிக்கொண்டு தவிப்பது அரசிற்கு தெரியாதா?
விலைவாசி உயர்வால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, இலவசம் என்ற பெயரில் சொற்ப பொருட்களை கொடுத்து விளம்பரம் செய்வதை தவிர்த்து, அனைத்து உணவுப் பொருட்களையும் மலிவு விலையில் தருவதற்கு அரசு தயாரா?
பூகம்பம் வறட்சியுடன் விலைவாசி யை ஒப்பிட்டு பேசும் அமைச்சர், இவை வருவதை முன்கூட்டி அறிந்திட விஞ்ஞானம் வழிவகுத்திருப்பதை அறியாத வரா? பருவ மழை பொய்த்துப் போனால் மக்களின் உணவு தேவைக்கு முன் கூட்டியே சேகரித்து வைப்பது அரசின் கடமை என்பதை மறந்துவிட்டாரா அமைச்சர். தமிழக அரசின் உணவுத் துறையும், தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் விலைவாசியை கட் டுப்படுத்திட வகுத்த திட்டங்கள் என்ன என்ன என்பதை விளக்கிட அமைச்சர் முன்வருவாரா? திட்டங்கள் ஏதும் இல்லை என்றால், இவைகள் எதற்காக உள்ளன என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டியது அமைச்சரின் பொறுப் பல்லவா?
யார் யார் பதுக்கல் பேர்வழிகள் என்பது கம்யூனிஸ்ட்களை விட, அவர்களிட மிருந்து தேர்தலுக்கு நன்கொடை பெறுபவர்களுக்கு தெரியாதா? உணவுப் பொருள் தானியங்கள் இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? அத்தியா வசியப் பொருட்கள் பராமரிப்புச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? எல்லா கட்டுப்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு பதுக்கல் பேர்வழிகளை காட்டுங்கள் என்பதா?
கேரள கம்யூனிஸ்ட் அரசு விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட நிதி நிலை அறிக்கையில் 80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ( கேரள அரசின் நிதி நிலை மதிப்பு ரூ.11,030 கோடியாகும்). இதைப் போல் ஐந்து மடங்கு வருவாயை கொண்ட தமிழக அரசு, விலைவாசியை கட்டுப்படுத்திட எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது?
தமிழக மக்கள் கடுமையான விலை வாசி உயர்வால் தத்தளித்துக்கொண் டுள்ளபோது, நிதிஅமைச்சர் விலைவாசி உயர்வு குறித்து வியாக்கியானம் செய்வார் என்றால், 1967 ம் ஆண்டை அவர் மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. “பருப்பு விலை என்ன ஆச்சு? பக்தவத்சலம் அண்ணாச்சி” என்றெல்லாம் 1967 தேர்தல் களத்தில் திமுக தரப்பிலிருந்து முழக்கம் எழுந்தது. இன்று விலைவாசித் தீ வீடு தோறும் பற்றி எரிகிறது. தமிழக மக்கள் மீண்டும் உரிய முறையில், விலை வாசிக்கெதிராக 1967-ல் தீர்ப்பளித் ததைப்போல் இந்த ஆண்டும் தீர்ப் பளிப்பார்கள்.
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத் தரப்பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற் கொள்கையில், ஒரு மாணவர் விலை வாசி உயர்வு குறித்து கேட்டபோது, எனது பாட்டி இந்திராகாந்தி இருந்திருந்தால் விலைவாசி குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருப்பார். கூட்டணி ஆட்சியான தால் நடவடிக்கை எடுக்க முடியவில் லை என தெரிவித்துள்ளார். இதற்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துவரும் தேசியவாத கட்சியின் பொதுச் செய லாளர் தாரிக் அன்வர் கன்டனம் தெரி வித்துள்ளார். இதே கூட்டணியில் அங் கம் வகித்து வரும் திமுகவின் பொதுச் செயலாளர் இதற்கு கண்டனம் தெரிவிக்க தயாரா?
விலைவாசியின் சீற்றத்தை உணராத வராக காட்டிக்கொள்ள நிதிஅமைச்சர் முற்படுகிறார். விலைவாசியின் கொடு மையால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள, அமைச்சர் சட்டமன்றத்தில் விலைவாசி உயர்வினை நியாயப்படுத்தி பேசியிருப்பதைக்கண்டு ஆவேச மடைந்துள்ளனர்.
வார்த்தை ஜாலங் களால் வெகுநாட்கள் மக்களை ஏமாற்ற முடியாது. தன் பசி தீர்க்கும் வழியினை மனிதன் கண்டறிவான். அப்போது அவனை யாரும் தடுத்து நிறுத்திட முடி யாது என்பதே வரலாறு நமக்கு உணர்த் தியுள்ள பாடம்!
கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ. 1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.
ReplyDeleteசமீபத்திய புள்ளிவிவரம் ஒன்றின்படி, 40 சதவீதம் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டார்கள் அல்லது விட்டுவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விளைநிலங்கள் அரசின் அனுமதியுடனும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் வீட்டுமனைகளாக்கப்படுகின்றன. காரணம், ஊருக்குப் பசி தீர்க்கும் விவசாயம், விவசாயிக்குப் படியளக்கவில்லை,
ReplyDeleteஉணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் விலை ஏற்றத்திற்கு முழு முதல் காரணம் விவசாய அமைச்சர் சரத்பவாரும் மன்மோகன் சிங்கும் மட்டுமே. கிரிக்கெட் துறைக்கும் வியாபாரிகள் தொழிலதிபர்கள் நலன் மீது மட்டும் அக்கறை செலுத்தும் ஊழல் சரத்பவாரும் கண்மூடி ஆதரிக்கும் பிரதமரும் சவுக்கடி பெற வேண்டியவர்கள்
ReplyDeleteபண முதலைகளுக்குப் பணியாது, பெருகி வரும் ஊழல்களுக்கு துணை போகாது,அவற்றை உண்மையான அக்கறையுடன் ஒழிப்பதும்,தேவைக்கு குறைவாக உற்பத்தி ஆகும் பொருட்களை ஏற்றுமதி செய்யாதிருப்பதுமே விலை வாசி குறைய எடுக்கப்படும் ஆரம்ப நடவடிக்கைகளாகும்.பதுக்கல்காரர்களை தொடர்ந்து கண்காநித்தாலே போதும் விலைவாசி கட்டுக்குள் இருக்கும்.
ReplyDeleteபுதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் மக்களை கசக்கி பிழிந்து முதலாளிகளின் மூலதனத்தை பெருக்கியதுதான் பொருளாதார புலி மன்மோஹன்சிங் அரசின் சாதனை. வுலகவங்கியின் அதிகாரியாக இருந்தவருக்கு மக்களை சந்திக்காமலே, ஓட்டுக்களை வாங்கமலய்யே பிரதமர் பதவியில் அமர்ந்தவருக்கு மக்களைபற்றி கவலைபட நேரமில்லை. அமெரிக்காவின் விசுவாசமிக்க ஊழியராக செயல்படுவதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறார். அதனால் தான் விலைவாசி உயர்வை பற்றி விவாதிக்க கூடிய கூடம் முடிவு எடுக்கமலய்யே கலைகிறது
ReplyDelete