“ஸ்ரீ லங்கா மாதா...” என்று துவங்கும் இலங்கை நாட்டின் தேசிய கீதம் அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பான்மை மக்களின் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தின் தமிழ்வடிவம் இனி இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தா ராஜபக்சே தலைமையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்டதாக “சண்டே டைம்ஸ்” ஏடு ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகாக அவர்கள் கூறியுள்ள காரணம் வேடிக்கையானது. வேறு எந்த நாட் டிலும் தேசிய கீதம் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இசைக்கப் படுவதில்லை என்பதே அதற்கான காரணமாகும்.
இலங்கையில் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கப்படுகிறது என்ற போதிலும், தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்குமற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் இனி தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது நிர்வாக அமைச்சரகத்திற்கு அரசின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில், சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு, அனைத்து துறைகளும் கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கு நியாயம் கற்பத்த ராஜபக்சே “இலங்கை ஒரேநாடு என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும்” என்றும், அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்றும் சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த இந்த விவாதத்தின்போது ஜனாதிபதி ராஜபக்சேயின் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச, அண்டை நாடான இந்தியாவில் கூட 300க்கும் மேற்பட்ட மொழிகள் மக்களால் பேசப்படுகின் றன. ஆனால் தேசிய கீதம் இந்தி மொழியில் மட்டுமே இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
தமிழில் தேசீயகீதம் இல்லையென்றால், தமிழ்மக்களும் இனி சிங்களத்திலேயே தேசீயகீதம் பாடவேண்டும் என்னும் நிர்ப்பந்தங்கள் ஏற்படும். கடும் துயரங்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களை மேலும் தனிமைப்படுத்தும் விதமாகவே, தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்தை ரத்து செய்து ராஜபக்சே அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்மக்கள் மீது பாரபட்சமான, ஓடுக்குமுறையின் இன்னொரு வடிவமே இந்த அறிவிப்பு. இதுபோன்ற திணிப்புகள், இலங்கை ஒரே நாடு என்னும் உணர்வை ஏற்படுத்திட உதவாது.
//அண்டை நாடான இந்தியாவில் கூட 300க்கும் மேற்பட்ட மொழிகள் மக்களால் பேசப்படுகின் றன. ஆனால் தேசிய கீதம் இந்தி மொழியில் மட்டுமே இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.//
ReplyDeleteஇநதியவின் தேசியகீதம் இந்தி அல்ல. அது வங்காள மொழியில் எழுதப்பட்டுள்ளது
இலங்கை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் வசுதேவ நாணயக்கார மற் றும் அமைச்சர் ரஜீதா சேனரத்ன ஆகியோர், இது எந்த விதத்திலும் பொருத்தமற்ற முடிவு என்று கூறினர்/
ReplyDeleteஇந்த இரண்டு பேராவது அந்த அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்பதே பெரிய விசயம்.
இந்தியாவில் தேசீயகீதம் தமிழில் வேண்டும் என்று நாம் போராட வேண்டும். பின்பு இலங்கையை பற்றி கவனிப்போம். இலங்கையிலாவது இரண்டு சிங்கள அமைச்சர்கள் இருக்கிறார்கள் தேசீயகீதம் தமிழில் வேண்டும் என்று சொல்லுவதற்க்கு. இந்தியாவில் அப்படி சொல்ல தமிழ் அமைச்சர் ஒருவர் கூட கிடையாது.
ReplyDelete