“உலகத்தின் சிறப்பான நகரங்களில் டெல்லியும் ஒன்று” அம்மாநில முதல்வர் சொல்லி முடித்து ஒருநாள் கூட ஆகவில்லை. ஒரு பதினெட்டு வயதுப் பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்ய்ப்பட்டவர்களில் ஒருவன் மைனர் என்றும் காவல்துறை சொல்லியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இதுபோல் கால் செண்டரில் பணிபுரிந்து வந்த ஒரு 19வயது பெண் வேனில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் இதுபோல் 452 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. “டெல்லி இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமில்லை” என செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
இதுகுறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், “டெல்லிக்கு இடம்பெயர்ந்தவர்களால்தான் இது போன்ற குற்றங்கள் நிகழ்கின்றன” எனக் குறிப்பிட்டார். எதோ டெல்லியில் இருப்பவர்கள் அனைவரும் யோக்கியர்களாகவும், பிழைப்புக்காக வெவ்வெறு மாநிலத்திலிருந்து வந்தவர்களே அத்தனை பழிபாவச்செயல்களையும் செய்கிறவர்களாகவும் அர்த்தம் அதில் இருந்தது. பல மாநிலங்களின் ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்போது ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நானேகூட இங்கு இடம்பெயர்ந்தவன்தான். எனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என தப்பிக்கும் விதமாக உளறிக்கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து குற்றங்கள் பெருகி வரும் ஒரு சமூகத்தில் அதன் காரணிகளை ஆராய்வதை விட்டு ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என இம்மாதிரி பேசுவது நாகரீகமும் இல்லை. ஒரு தேர்ந்த அமைச்சரின் மொழியும் இல்லை.
டெல்லியில் நடந்த குற்றங்களின் புள்ளி விபரங்கள் சொல்லும் கதைகள் வேறு. அதிகாரம் தாண்டவமாடும் அந்த நகரத்தின் பெரிய புள்ளிகளின் குடும்பத்து இளைஞர்களின் கைவரிசையில், நடந்த பாலியல் பலாத்காரங்களே அதிகம். பீடங்கள் ஒவ்வொன்றும் தனது பாதுகாப்பிற்கு வைத்திருக்கும் லும்பன்களிடம் எந்த ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?நேரம் கடந்த பார்ட்டிகளும், அளவுக்கதிகமான போதையும் மிக இயல்பாகிப் போன ஒரு பிரதேசத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன. வக்கிரமான சிந்தனைகள் தொடர்ந்து விதைக்கப்படும் சமூகத்தில் இந்த சீரழிவுகளே விளையும். இதுபற்றியெல்லாம் பேச வக்கில்லாமல், பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்கின்றன உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வார்த்தைகள்.
காவல்துறையின் ரோந்துகளை அதிகமாக்குவதற்கும், பெண்களுக்கு பாதுகாப்பை பலமாக்குவதற்கும் திட்டங்கள் தீட்டப்படுகின்றனவாம். நாகரீக சமூகத்தின் அடையாளங்களாகவா இவை இருக்கின்றன. “நள்ளிரவில் இந்த தேசத்தில் ஒரு பெண் எப்போது தன்னந்தனியாக செல்ல முடிகிறதோ, அப்போதுதான் இந்த தேசம் சுயராஜ்ஜியம் அடைந்ததாக உணரமுடியும்" என்றார் மகாத்மா காந்தி. நாம் எங்கே இருக்கிறோம்? பதில் சொல்வாரா உள்துறை அமைச்சர்.....
அதிகாரம் தாண்டவமாடும் அந்த நகரத்தின் பெரிய புள்ளிகளின் குடும்பத்து இளைஞர்களின் கைவரிசையில், நடந்த பாலியல் பலாத்காரங்களே அதிகம். பீடங்கள் ஒவ்வொன்றும் தனது பாதுகாப்பிற்கு வைத்திருக்கும் லும்பன்களிடம் எந்த ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?//
ReplyDeleteநெத்தி அடி தோழர்
மாவோஸ்ட் பேச்சுவார்த்தை தீர்வுக்கு எனச் சொல்லி அழைத்துவரப்பட்டு என்கவுண்டர் செய்பவர்கள், நாடு நலம் பேற நல்லவர்க்ளை தேர்ந்தெடுங்கள் என்பார்கள், அவர்களே
ReplyDeleteமறு எண்ணிக்கை என்று சொல்லி தேர்தல் தீர்ப்பை மாற்றுவார்கள். முட்டாள் மக்கள்கள்
படித்த அறிஞர்கள் நிறைந்த மந்திரிசபை. வாழ்வது எல்லாம் அந்நிய கம்பனிகள்.