Wednesday, December 29, 2010

முழக்கங்களுடன் விடிந்த மார்கழிக்காலை

அந்த அதிகாலையில் அப்படி ஒரு போராட்டம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆன்மீக நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் திருவண்ணாமலையில் எந்த நாளும் திருவிழாதான்.இங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஏதாவது ஒரு விஷேசம் நடந்துகொண்டுதான் இருக்கும்.அதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வருவார்கள்.

இப்போது மார்கழி மாதம் என்பதால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே கோவில் நடை திறந்துவிடுகிறாகள்.அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்துவிடுகிறார்கள்.அதைப்போலத்தான் நேற்றும் பக்தர்கள் வந்தார்கள். ஓம் என்ற பக்தி நாதம் ஒலிக்கும் என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ‘திரும்பிப்போ திரும்பிப்போ.. நித்தியானந்தனே திரும்பிப்போ’ என்ற கோஷங்களின் சத்தம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

பாலியல் குற்றவாளியான பிறகு...காவிவேஷம் கலைந்த பிறகு...முதன்முறையாக பிறந்தநாளை கொண்டாட..(இதுக்கு பேரு அவதாரப் பெருவிழாவாம்) நித்தியானந்தன் இன்று திருவண்ணாமலைக்கு வந்தான்.அவனுக்கு எதிர்ர்ர்ர்ப்ப்ப்பு தெரிவிக்க திரண்டவர்கள் போட்ட முழக்கம்தான் அது.சரச சாமியாருக்கு சத்சங்கம் எதுக்குடா..என அதிகாலை 4 மணிக்கே அம்மணியம்மன் கோபுரத்தின் அருகே கருப்புக்கொடிகளுடன் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் திரண்டனர்.கூட்டம் குறைவுதான்..ஆனால் அந்த அதிகாலை நேரத்திலும் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டது ஆச்சரியமாய் இருந்தது.அதில் சில பெண் தோழர்களும் ஆர்வமாய் கலந்து கொண்டது நம்பிக்கையளித்தது.

கருப்புக்கொடிகளுடன் காத்திருக்கும் செய்தியறிந்துகொண்ட நித்தி..தனது பாதையை மாற்றிக்கொண்டு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தான்.உடனே ராஜகோபுரத்தருகே திரண்டது நமதுபடை.ரொம்ப நேரம் ஆனது. நித்தி வெளியே வரவேயில்லை.போராட்டக்காரர்கள் போனால்தான் வெளியே வருவேன் என கோவிலுக்குள்ளேயே தஞ்சமடைந்துவிட்டான்.போலிசும் போதும்..விட்டுடுங்க.என கேட்டார்கள். நாமும் சரியென போக்குகாட்டிவிட்டு நித்தி வெளியே வரட்டுமெனக் காத்திருந்தோம்.

 நாம் கலைந்துபோய்விட்டதாக போலீஸ் சொல்லியும் நம்பாத நித்தி, தனது ஆட்களை அனுப்பி உறுதி செய்துகொண்டபின்தான் கோவிலைவிட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தான். செங்கம் சாலை சந்திப்பில் காத்திருந்த நமது தோழர்கள் அவனது பொலீரோ கார் வந்தபோது குறுக்கே பாய்ந்து கருப்புக்கொடியை காட்டி ஆர்பாட்டம் செய்தனர். அரண்டு போன நித்தி சினிமாவில் வருவது போல சர்ர்ர்.. என காரைத் திருப்பிக்கொண்டு தப்பியோடினான்.

 வழ்க்கமாக இது போன்ற போராட்டங்கள் என்றால் மக்கள் பார்வையாளர்களாக ஒதுங்கி நின்று வேடிக்கைதான் பார்ப்பார்கள். ஆனால் இந்தப்போராட்டத்தின்போது அவர்களும் சேர்ந்துகொண்டனர்.

கொட்டிய மார்கழி பனிக்கு போட்டியாக..திசைகளில் முட்டிய முழக்கங்களுடந்தான் அன்றைய பொழுது விடிந்தது திருவண்ணாமலைக்கு.



1 comment:

  1. தோழர்களே!

    இந்தப் போராட்டம், ஒரு செய்தியாகவே வந்திருக்கிறது. இதை முன்னிறுத்தி இன்னும் அடர்த்தியாக விஷயங்களைச் சொல்லியிருக்கலாமே.

    நித்தியானந்தா ஒரு பாலியல் குற்றவாளி என்னும் சொற்றொடர் சரியானதுதானா? சமூகத்தில் சாமியார்கள் என்றால், ‘எல்லாம் துறந்த நிலை’ யென நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் பிம்பங்களைச் சிதைத்த ஒரு போலி. அவனை அம்பலப்படுத்தும்போதே, இப்படி நிறுவனமாக்கப்பட்ட சாமிகளின் மீதான பார்வைகளையும் சொல்லியிருக்க வேண்டும்.

    தோழர்கள் வெளியே அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவனுக்கு கோவிலுக்குள் செல்ல எந்தத் தடையும், அங்குள்ள சாமியோ, நிர்வாகமோ விதிக்கவில்லை. அதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    கெட்டிப்படுத்தப்பட்டு இருக்கும் பொதுப்புத்திகளில் சிறு உடைப்பைச் செய்ய இந்த நிகழ்வுகளை மையப்படுத்த வேண்டும்.

    சன் டிவியும், தினகரனும் நித்யானந்தாவை அம்பலப்படுத்துவதற்கும், நாம் அம்பலப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)