_______________
“பிரச்சனைகள் எழுந்தபோது, அமைதியாக இருந்தார்கள். மக்கள் கதறியபோது, அவர்கள் தங்களின் காதுகளை கனமான டர்பனால் இறுகக் கட்டிக் கொண்டார்கள். குற்றம் செய்தவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதுதான் தண்டனை என்றார்கள். குற்றவாளிகளின் அமைச்சரவை ... அது என்றைக்கும் இப்படித்தான் இருக்கும்.”
_______________
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ... பல்லாயிரம் பேரின் உயிரைக் கொள்ளைகொண்ட போபால் விச வாயு வழக்கின் நியாயமற்ற தீர்ப்பு .... சமீபத்தில் நம் கண் முன்னே கடந்து சென்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளும் சாதாரணமானவை அல்ல.
ஆனால் இத்தகைய முக்கியமான பிரச்சனைகளில் நாட்டின் பிரதமரோ, முக்கிய அமைச்சர்களோ கடைப்பிடித்த தர்மம் என்ன?. பிரச்சனைகள் எழுந்தபோது, அமைதியாக இருந்தார்கள். மக்கள் கதறியபோது, அவர்கள் தங்களின் காதுகளை கனமான டர்பனால் இருகக் கட்டிக் கொண்டார்கள். குற்றம் செய்தவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதுதான் தண்டனை என்றார்கள். குற்றவாளிகளின் அமைச்சரவை ... அது என்றைக்கும் இப்படித்தான் இருக்கும்.
போபால் விசவாய் படுகொலைகள்:
நேற்று போபால் விச வாயு படுகொலைகளுக்கு நாட்டின் நாடாளுமன்றம் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அந்த மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மருந்து தடவுவதாக மிண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்திருக்கிறார்கள். மக்களைக் கொன்ற மாபாதகர்களை தப்பிக்க விட்டுவிட்டு, கொலையாளிக்கு இன்றுவரை அடைக்கலம் கொடுத்துவரும் அமெரிக்காவுடன் கூட்டு ஒப்பந்தகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில், போபால் காயங்களை வருடி விடும் ஏற்பாடு அது. இந்திய குடிமக்களோ பார்வையாளர்களாக, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ராசாவும் பினாமி கம்பெனிகளும்:
அதே போல, நேற்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஒரு தகவலை வெளியிட்டார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உரிமம் கோரி ஒரு நிறுவனம் விண்ணப்பிக்க வேண் டும் என்றால் அந்நிறுவனம் இந்தியாவில் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, கடைசியாகத் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 கோடிக்கு விற்பனைப் பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும். வைமாக்ஸ் என்ற ஒரு கம்பெனி அந்த உரிமத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து கேள்வி கேட்டதற்கு, தொலைதொடர்பு அமைச்சகம், “ஆம் போல்ஸ அண்ட் ஆட்டோ பிரை வேட் லிமிடெட் என்னும் நிறு வனம் கொல்கத்தாவை அடிப் படையாகக் கொண்டு இயங்குவ தாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.” அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை விசாரணையில் அவர் தெரிந்து கொண்டார்.
ஆதாரங்களின் அடிப்படையில் அவர் பிரதமருக்கு கேள்வி அனுப்பியிருக்கிறார். ஆனால் அவை பெற்றுக் கொண்டதாக ஏற்பளிப்பு மட்டும் பிரதமரின்அமைச்சகத்திலிருந்து வந்ததேயொழிய, கேள்விகளுக்கு பதிலேதும் இல்லை.
ஆட்சியாளர்கள் கூச்சல் போடுவார்கள். நாட்டின் முதுகெலும்பை முறிக்கும் விவசாய நெருக்கடி பற்றிக் கேட்டால், பணம் இல்லை என்று கைவிரிப்பார்கள். பெரும் நிறுவனங்களுக்கு தரப்படும் 5 லட்சம் கோடி “ஊக்கத்தொகை” பற்றிக் கேட்டார், அது வளர்ச்சிக்கு இடப்படும் வித்து என்பார்கள். களவுபோகும் இந்திய மக்களின் வாழ்க்கை குறித்துக் கேட்டால், மெளனம் சாதிப்பார்கள். ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் சத்துக் குறைவால் சாகிறார்கள், இந்தியப் பெண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரத்தம் பற்றாக்குறையால் தவிக்கிறார்கள். நகரங்களில் தொழிலாளர்கள் மன அழுத்ததால் தற்கொலைக்குச் செல்கிறார்கள். ஆட்சியாளர்கள் முகம் திருப்பிக் கொண்டு, வளர்ச்சி குறித்து பேசி சிலாகிக்கிறார்கள்.
இதோ 2 வாரங்களாகத் தொடர்கிறது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்... எதிர்க்கட்சிகள் எல்லாமே யோக்கியவான்கள் அல்ல. ஆனால் இந்தப் போராட்டம், இந்திய மக்களின் மனக்குமுறலின் வெளிப்பாடாக உள்ளது.
அந்த ஓநாய்கள் எலும்புத்துண்டுகளை கால்களுக்கு அடியில் பத்திரமாக வைத்துக் கொண்டு மெளனம் சாதிக்கின்றன.
தமிழ்மணம் டாப் 20 இல் நெம்பர் ஒன் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். மாற்று முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாற்று பக்கம் தினம் தினம் மேம்பட்டு வருகிறது ... வாழ்த்துக்கள்
ReplyDeleteமாற்று பக்கத்தை முதல் இடத்திற்கு பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி
ReplyDeleteமேலும் முன்னைவிட வேகமான மாற்றுவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் தோழர்களே!
ReplyDelete