_______________
“ஒரு விஷயம் மக்கள் இயக்கமாக மாற்றப்படும்போதுதான் அதன்
முழுப்பலனையும் பெறமுடியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்
டாக்டர்.அம்பேத்கார்.”
_______________
1998ல் எடுக்கப்பட்ட அம்பேத்கார் பற்றிய திரைப்படம் பெரும் தடைகளைத்தாண்டி இன்றுதான் தமிழ்நாட்டுத் திரைகளுக்கு வந்திருக்கிறது. இதை திரைக்கு கொண்டுவருவதற்கு பெரும் போராட்டத்தையே நடத்தவேண்டியிருந்திருக்கிறது.
தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தயாரிப்பான இந்த படத்தை விஸ்வாஸ் சுந்தர் என்பவர் வாங்கி தனது 'பிறப்பு’க்கு விஸ்வாசமாக நடந்துகொண்டு படத்தை முடக்கி வைத்திருந்தார்.
சத்யசந்திரன் நீதிமன்றம் போனபிறகும் ஏதேதோ சப்பைக் காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள். கோர்ட் கறாராக இந்த ஆண்டு டிசம்பர் 6ந்தேதி வெளியிட்டே ஆகவேண்டுமென கூறியதற்க்கு பிறகுதான் என்.எப்.டி.சி. திரைப்படத்தை சென்னையில் ‘ஐநாக்ஸ்’ தியேட்டரில் மட்டும் ஒப்புக்கு வெளியிட ஏற்பாடு செய்தார்கள். அதுவும் 5 நாட்களுக்கு மட்டும்தான் தியேட்டர் புக் செய்திருந்தார்கள்.
அப்போதுதான் எடிட்டர் லெனின் ஆலோசனையின்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், என்.எப்.டி.சியுடன் தொடர்புகொண்டு “அம்பேத்காரை தமிழகம்முழுவதும் நாங்கள் தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளியிடுகிறோம்” என்று சொன்னது. “ஓ..தாராளமாக செய்யுங்கள்” என்றார்கள்.
சும்மா சொல்றாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனால் தமுஎகச உடனே களத்தில் இறங்கியது.அனைது தமுஎகச மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தை மதுரையில் 12.11.2010 அன்று கூட்டி, படத்தை திரையிடுவது பற்றி விவாதித்து உடனே அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேசியது.
இதை நாம் மட்டுமே செய்யாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என முடிவுசெய்து..அனைத்து இலக்கிய அமைப்புகள், கட்சிகள, தலித் இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என எல்லாரையும் அம்பேத்கர் என்ற ஒரு குடையின் கீழ் இணைத்தது.
சும்மா சொல்லக்கூடாது..இந்த முயற்சிக்கு எல்லாரும் கை கொடுத்தார்கள்..எல்லாம் அம்பேத்கர் என்ற மனிதரின் மீது கொண்ட அன்புதான். காரணம் சென்னை, மதுரை, திருப்பூர், தேனி, வந்தவாசி, செய்யார், ஈரோடு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கன்யாகுமரி, சேலம், கோவை, என பல ஊர்களிலும் இதற்காக வரவேற்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் இயக்கமானார் அம்பேத்கர்.
அம்பேத்கர் படப்பெட்டியையே எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. ஊர் ஊராக போட்டுக்கொண்டே செல்கிறோம் என என்.எப்.டி.சியிடம் கேட்டோம். 6 லட்சரூபாய் கொடுத்து வாங்கிகொள்வோம் என்றார் எடிட்டர் லெனின்.
எல்லா ஊர்களிலிருந்தும் எனக்கும், தமிழ்செல்வனுக்கும்(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர்) போன் மேல் போன் “எப்ப படப்பெட்டி வரும்” , ”எங்க ஊருக்கு எப்ப அனுப்புவீங்க” ”நாங்க எவ்வளவு பணம் தரணும்” “எங்களுக்கு 5 நாள் வேணும்” “எங்களுக்கு3 நாள்” ”எங்களுக்கு 2 காட்சி” என தோழர்கள் பிய்த்து எடுத்துவிட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை சென்னையையும் தாண்டி திருவண்ணாமலை, தஞ்சாவூர், என பல ஊர்களிலும் என்.எப்.டி.சியே நேரடியாக வெளியிட்டுவிட்டார்கள் (ஆனால் திருவண்ணமலையில் ஒரு சிறிய(250 சீட்தான்) தியேட்டரில் போட்டிருக்கிறார்கள். மோசமான, .தரமற்ற..தியேட்டர் அது மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்க்காகத்தான் அதில் போட்டிருப்பார்களோ என்றுகூட தோன்றுகிறது)
ஒருவகையில் என்.எப்.டி.சியின் இந்த நடவடிக்கை அம்பேத்காரை மக்கள் இயக்கயமாக்கியதின் எதிரொலி என்றுதான் தோன்றுகிறது.வெகுமக்களின் கைகளுக்கு அம்பேத்கர் போய்விடக்கூடாது என்பதற்க்காக தாங்களே சில அரங்குகளில் பெயருக்கு வெளியிட்டுவிட்டு முடக்கும் திட்டமோ என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.
ஆனாலும் திரைக்கு வந்துவிட்டார் அம்பேத்கர். அவரை அவ்வளவு சீக்கிரம் தியேட்டரைவிட்டு அனுப்பிவிடக்கூடாது. எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் படத்தை ஓட்ட வைப்போம்.. நமக்கு தெரிந்த எல்லாரையும் படத்தை பார்க்க வைப்போம். “படத்தை பார்க்க வாங்க” என போஸ்டர் அடித்து ஒட்டுவோம். துண்டு பிரசுரங்களை வெளியிடுவோம். உள்ளூர் கேபிள் டிவிக்களில் சொந்த செலவில் விளம்பரம் செய்வோம்.குறுஞ்செய்தி அனுப்புவோம்.
இன்று சென்னையில்... திருவண்ணாமலையில். விரைவில் தமிழகமெங்கும்!
நோக்கம் ஒன்றுதான். அம்பேத்காரை எல்லோரும் பார்க்க வேண்டும். ஏனென்றால் அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் அல்ல. சாதியால், இனத்தால், மொழியால், பாலால், பொருளாதாரத்தால், கலாச்சாரத்தால், இன்னும் எதன் பொருட்டும் ஒடுக்கப்படும்... பட்டிருக்கும்... எல்லாருக்கும் அவர் தலைவர்.
(பின்குறிப்பு: தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு இந்த படத்தை நீங்களே கூட்டிச்சென்று காட்டுங்கள்.)
-எஸ்.கருணா (தமுஎகச மாநிலச் செயற்குழு)
படங்கள்: கவாஸ்கர்
வாழ்த்துகள்
ReplyDeleteபடம் மதுரையிலும் வெளியாகி உள்ளது.. வாழ்த்துகள்..:-))
ReplyDeleteஇந்திய சமூகத்தை புரட்டி போடும் நெம்புகோல் உருவாக்கத்தின் முக்கிய கதாநாயகனின் படத்தை கொண்டுவர ஒரு நெடிய போராட்டத்தை நடத்திய தமுஎகசவுக்கும் சிபிஎம் கட்சிக்கும் தோழர் லெனின் அவர்களுக்கும் நன்றி
ReplyDeleteDecember 3, 2010 at 11:02 PM
வாழ்த்துகள்
ReplyDeleteஇங்கிருக்கிற ஏராளமான திராவிடக் கட்சிகளும், தலித் அமைப்புகளும் பெரியார், அம்பேத்கர் படங்களைத் தங்களின் ஃபிளக்ஸ் பேனர்களில் பிரமாதமாகப் போட்டுக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவது தங்களின் ஓட்டுப் பெட்டியை மனதில் வைத்தே என்பதை 'அம்பேத்கர்' படத்தின் இத்தனை நாள் 'அவலம்' நன்றாகவே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது;முதலாளித்துவ அரசியலுக்கு அப்பழுக்கற்ற தலைவர்களின் படங்களும் வெறும் வணிகச் சின்னங்களே என்பது அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்குப் புரிவதில்லையே ஏன்?
ReplyDeleteஎன் காதுகளுக்கு எட்டாத செய்தியை அளித்துள்ளீர்கள்..நன்றிதோழரே.
ReplyDelete