2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா திட்டம் தீட்டி செயல்பட்டதை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத் தின்போது மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், மதவெறி பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக் கும் பொருட்டு, ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியி லிருந்து ஆதரவு அளித்தன. இந்நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் கையெழுத்திட முயன்றது. இந்திய நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் கொந்தளிப்புடன் போராட்டம் நடத்தின. எனினும், அமெரிக்காவின் ராணுவ ரீதியான இளைய கூட்டாளியாக மாறுவது என்ற சீரழி வான கொள்கையை அமல்படுத்தும் விதமாக மன்மோகன் சிங் அரசு அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திட்டது. இதை எதிர்த்து, இடது சாரி கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றன. எனினும் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினை வாங்கி, நாடாளுமன்றத் தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு தப்பிப்பிழைத்தது.
இத்தகைய அரசியல் பின்னணியில் 2009ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு எதிராகவும் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளை இடதுசாரிக் கட்சிகள் ஓரணியில் திரட் டின. சிபிஎம், சிபிஐ, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள், அதிமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் ஓரணியில் திரண்ட மூன்றாவது மாற்று அணி உதயமானது.
இந்த மூன்றாவது மாற்று அணிக்கு மக்கள் மத் தியில் பெரும் வரவேற்பு எழுந்தது. இந்த சூழலி லேயே இந்திய அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்த அமெரிக்க தூதரகம், இடதுசாரிகளின் முக்கியப்பங்குடன் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பதட்டத்துடன் சதிச் செயல்களில் ஈடுபட்டது.
இந்த விவரங்களை தற்போது விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், 2009 பிப்ரவரி 12ம் தேதி ஒரு ஆய்வு அறிக்கையை தயா ரித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளி கைக்கு அனுப்பியது. அதில் காங்கிரசோ அல் லது பாஜகவோ தங்களது சொந்த பலத்தில் ஆட் சிக்கு வர முடியாத நிலையில், “காங்கிரசும், பாஜகவும் இல்லாத ஒரு அரசை ‘மூன்றாவது அணி’ அமைக்குமானால் அது அமெரிக்கா-இந் தியா உறவை மிகக்கடுமையாக பாதிக்கும்” என்று கூறியிருந்தது. மேலும், “அப்படி ஒரு அரசு அமையுமானால், அந்த அணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரும் செல்வாக்கினை பெற்றி ருக்கும் எனத் தெரிகிறது” என்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அந்தக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதத் தில் நடைபெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.
வெள்ளை மாளிகைக்கு தூதரகம் சார்பில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், இந்தியாவுக் கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்டு கை யெழுத்திட்டிருந்தார். அத்துடன் அமெரிக்கா - இந்தியா இடையிலான நெருக்கமான உறவுக்கு பாஜகவும் காங்கிரசும் முழுமையான ஆதரவு தெரி வித்து வருபவர்கள் என்று தனது கைப்பட குறிப் பையும் எழுதி முல்போர்டு இந்த அறிக்கையை அனுப்பினார் என்ற விவரத்தையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத்தூதர் முல்போர்டு எழுதிய அறிக் கையில், அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதற்கு இந்தியா இன்னும் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது என்றும், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுஉலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒப் பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவுடனான இந்த ஒத்துழைப் பின் வர்த்தக லாபங்கள் எத்தகையவை என்பது குறித்து அமெரிக்கா முழுமையாக உணரவேண் டும்; அமெரிக்க நிறுவனங்களுக்காக அணு உலைகள் அமைப்பதற்கான இடங்களை கண்ட றிந்து, அதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்வோம் என்ற தனது உத்தரவாதத்தை இந்தியா கட்டாய மாக நிறைவேற்ற வேண்டும்; காப்புரிமை பாது காப்பு, அணுவிபத்து பொறுப்பை ஏற்பதிலிருந்து விலக்கு போன்ற தொழில் ரீதியான அமெரிக்கா வின் கவலைகளையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் முல்போர்டு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இருநாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதன் மூலம் அமெரிக்க கம்பெனிகளுக்கு 150 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இது அடுத்த 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பயன்படும் என்றும் முல்போர்டு தனது அறிக்கை யில் கூறியிருந்தார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய விவரங்க ளில் மேற்கண்ட அனைத்து அம்சங்களும் முழு மையாக அம்பலமாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அலுவலகங்கள் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா எப்படியெல்லாம் பகிரங்கமாக தலை யிட்டது, சதி செய்தது என்ற விவரங்கள் வெளி யாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கண்டனம் !
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சனிக்கிழமை வெளி யிட்ட அறிக்கையில், இந்திய அரசியலில் அமெரிக்கத் தூதரகம் அத்துமீறி தலையிட்டு, தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவாக இந்தியா வின் இறையாண்மையை சிதைக்க முயற்சித் ததை கடுமையாக கண்டித்துள்ளது.
சதி திட்டம் இதில் என்ன? ஆய்வு செய்ததாக மட்டுமே குறிப்பிடுள்ளீர்கள்...
ReplyDeleteGokul Rajesh நன்பரே இந்திய அரசியல் குறித்த முனைவர் பட்ட ஆய்வை செய்யவில்லை அமெரிக்கா.
ReplyDeleteதனது காலனிய நாடாக தொடர்ந்து இந்தியா இருப்பதற்கு, இந்தியாவின் அதிகார வர்க்கம் யாராக இருக்கவேண்டும், யார் இருக்க கூடாது என்பதை தீர்மாணிக்கும் ஆய்வு