2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோத்தி ரோமருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தளித்திருக்கிறார்.
இந்த விருந்தில் திமோத்தி ரோமர் பேசும்போது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பது குறித்து ராகுலின் கருத்தை கேட்டிருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அத்தகைய அமைப்புகளுக்கு முஸ்லிம்களில் ஒரு சிலரிடம் ஆதரவு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதேசமயம் இந்தியாவில் இப்போது ஹிந்து பழமைவாத அமைப்புகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன. இவர்கள் லஷ்கர்-இ தொய்பா அமைப்பினரைவிட மிகவும் பயங்கரமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதை அப்படியே குறிப்பிட்டு திமோத்தி ரோமர் எழுதிய அறிக்கையை "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அத்வானி, உமா பாரதி, மோடி, பால் தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளுக்கு சதையாட, கொதித்து எழுந்து இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் உட்பட்ட சங் பரிவார அமைப்புகள் அனைத்தும் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்க ஆரம்பித்திருக்கின்றன. ராகுல் பேசியது, தவறா என்று விவாதிப்பதற்கு முன்பு இங்கே சில கேள்விகள் முன்வருகின்றன.
இந்த தேசத்தின் முக்கியமான ஒரு அரசியல் பிரச்சினை குறித்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவர், நாட்டு மக்களிடையே தன் கருத்தைத் தெரிவிக்காமல், ஒரு விருந்தில் கலந்துகொண்ட அமெரிக்க தூதரிடம் ஏன் ரகசியமாக பகிர்ந்துகொள்கிறார்? (விக்கிலீக்ஸின் வெளியான பல தகவல்கள் இப்படியான விருந்துகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை! இந்த அமெரிக்க தூதர்கள் அனைவருமே இப்படியான ஒற்றர்கள் வேலைதான் பார்த்து வந்திருக்கின்றனர்.) இதை அமெரிக்கா, தனது ரகசிய ஆவணங்களில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக சேமித்து வைத்திருந்திருக்கிறது?
அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அது காங்கிரஸானாலும், பா.ஜ.கவானாலும் தனக்கு உகந்த அடிமைகளாகவேக் கருதி வந்திருக்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும், யார் அமெரிக்காவுக்கு விசுவானமானவர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதில் பலத்த போட்டியே உண்டு. “பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் பயங்கரமானவையே” என்று அமெரிக்காவுக்கு புரிய வைப்பதன் மூலம், பா.ஜ.கவை அமெரிக்காவின் இணக்கத்திலிருந்து விலக வைத்து, தாங்கள் மட்டுமே அமெரிக்காவின் ஏகபோக அடிமையாகும் இலட்சியக்கனவு காங்கிரஸின் எழுதப்படாத செயல்திட்டங்களில் ஒன்று. அதைத்தான் ராகுல் காந்தி நைசாக அமெரிக்கத் தூதரிடம் சொல்லிப் பார்த்திருக்க வேண்டும். மற்றபடி, இதுபோன்ற விஷயங்களில் சுயேச்சையாகவோ, சுயமாகவோ கருத்து சொல்லும் அளவுக்கு துணிந்திருக்க மாட்டார்.
அமெரிக்காவுக்கு, இது மிக முக்கிய செய்தி. இந்தியா போன்ற நாடுகளை எப்போதும் தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ள இதுபோன்ற தகவல்கள் ஆயுதங்களாக பயன்படும். இதை எப்படி அரசியலாக்குவது என்று கைதேர்ந்த ஏகாதிபத்தியத்துக்குத் தெரியும். எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும். கங்கிரஸ், பா.ஜ.க ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டாலும், இரண்டும் தன் சேவகர்களாக எப்போதும் இருக்க வேண்டும் என்ற அதன் செயல்திட்டத்திற்கு பெரும் உதவியாக இந்த அபிப்பிராயங்கள் இருக்கும்.
இப்போது அவையும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. விக்கிலீக்ஸுக்கு நன்றி. இந்த விவகாரங்களுக்குள் எல்லாம் போகாமல், ராகுல் காந்தி சொன்ன கருத்தை மட்டும் இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும். இரண்டுமே அமெரிக்கா குறித்து வாயேத் திறக்க மாட்டார்கள்.
ராகுல் காந்தி சொன்ன விஷயம் தர்க்கவியல் ரீதியாக சரியான விஷயமே. பெரும்பான்மை வகுப்புவாதம் குறித்தும், சிறுபான்மை வகுப்புவாதம் குறித்தும் புரிதல் நமக்கு வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் ஆக்கிரமிப்பிலும், அதிகாரம் செலுத்துவதிலும், ஒடுக்குவதிலும் தன்னை வார்த்துக்கொள்கிறது. சிறுபான்மை வகுப்புவாதம் அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் தன்னை வளர்க்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் பகிரங்கமாக, மிருகத்தனமாக தனது தாக்குதல்களைத் தொடுக்கும். சிறுபான்மை வகுப்புவாதம் ரகசியமாகவும், வெறித்தனமாகவும் தனது தாக்குதல்களை நடத்தும். இரண்டுமே மக்கள் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது. சமூகத்தின் மூளையை பைத்தியக்காரத்தனமாக்குவது. பாசிச சிந்தனைகள் கொண்டது. இரண்டும் ஒன்றையொன்று சுட்டிக்காட்டி தங்கள் வலிமையை பெருக்கிக்கொள்ளப் பார்க்கும். இந்தப் புரிதலோடு பார்க்கும்போது, இந்துத்துவா சக்திகள் இங்கே பெரும்பான்மை வகுப்புவாதத்தை முன்வைத்துக்கொண்டு இருப்பதும், சமூகப் பதற்றத்தில் அதற்குரிய இடமும் தெளிவாகும்.
ஆனால் இது பற்றிப் பேச, காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. தங்கள் அரசியல் பிழைப்புக்காக, இரண்டுவகையான வகுப்புவாதங்களையும் மாறி மாறித் தூண்டியதில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு. கொள்கையற்ற அதன் இரட்டைநிலை அயோத்திப் பிரச்சினையில் அம்பலமானது.
எதுகுறித்தும் பேச, அரசியல் நடத்த வகையற்று இருந்த பா.ஜ.கவுக்கு இப்போது ஒரு மைதானம் கிடைத்து விட்டது. விஷத்தையும், விஷமத்தையும் வேக வேகமாக விதைக்கும். அவர்களது பேச்சுக்களைப் பாருங்களேன். “ராகுலின் இந்த வார்த்தைகள், பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கும்” என்பது அவர்களது முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று. ராகுல் காந்தி, பேசியது பயங்கரவாத அமைப்புகள் குறித்தும், இந்துத்துவா அமைப்புகள் குறித்தும். இவர்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகிறார்கள்? ஜாக்கிரதையாகவும், உன்னிப்பாகவும் கவனியுங்கள்.
//ன். “ராகுலின் இந்த வார்த்தைகள், பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கும்” என்பது அவர்களது முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று.//
ReplyDeleteஏனென்றால் இன்னொரு தீவிரவாத செயல் நடந்தால் அதற்க்கு தாங்கள் பொறுப்பல்ல. இந்து தீவிர வாதம் தான் பொறுப்பு என்று பாகிஸ்தான் எளிதாக சொல்ல இது ஏதுவாக இருக்கும்!
விஷயம் தர்க்கவியல் ரீதியாக சரியான விஷயமே. பெரும்பான்மை வகுப்புவாதம் குறித்தும், சிறுபான்மை வகுப்புவாதம் குறித்தும் புரிதல் நமக்கு வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் ஆக்கிரமிப்பிலும், அதிகாரம் செலுத்துவதிலும், ஒடுக்குவதிலும் தன்னை வார்த்துக்கொள்கிறது. சிறுபான்மை வகுப்புவாதம் அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் தன்னை வளர்க்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் பகிரங்கமாக, மிருகத்தனமாக தனது தாக்குதல்களைத் தொடுக்கும். சிறுபான்மை வகுப்புவாதம் ரகசியமாகவும், வெறித்தனமாகவும் தனது தாக்குதல்களை நடத்தும். இரண்டுமே மக்கள் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானது.//
ReplyDeleteவார்த்தைத் தெரிவுகள் மிகச் சரியானவை ... வாசித்து உள்வாங்கவேண்டியவை
இவ்வளவுமுட்டாளா நீங்க்ள்?. இல்லாத ஒன்றை ராகுல் சொல்லும் போதே தெரியவில்லையா?. இது ஓட்டரசியல் என்பது. இன்னொரு காரணம் தீவிரவாத செயல் நடந்தால் அதற்க்கு தாங்கள் பொறுப்பல்ல. இந்து தீவிர வாதம் தான் பொறுப்பு என்று பாகிஸ்தான் எளிதாக சொல்ல இது ஏதுவாக இருக்கும்!
ReplyDelete1) ராகுலின் முதிர்ச்சியற்ற உரையாடல், 2) பதவிவிலகிய காங்கிரஸ் பொதுக்காரியதரிசி திக்விஜய்சிங்கின்,மும்பை தாக்குதலில் பலியான உயர்காவல் அதிகாரி கர்கரே மரணம் பற்றிய
ReplyDeleteபேச்சு,3) மாகராஸ்டிர சிமெண்ட் ஊழல் புகழ் (முன்னாள் சுறுபான்மைத்துறை மத்திய அமைச்சர்) அந்துலேயின் அப்போதைய பேச்சு 4) உள்துறைஅமைச்சர், சிவகங்கை தொகுதி மறுஎண்ணிக்கை வெற்றியாளர், பார்டிசிபேட்டரி நோட் புகழ் ப.சிதம்பரம் வருணித்த காவி பயங்கரம் மற்றும் 5) 125வது ஆண்டு கட்சி விழாவில், இத்தாலிய தங்கம் பேசிய தீவிரவாதம் எல்லாம், அறுபதாண்டு காலம் நாட்டை ஆண்டு அழித்தப்பின்னும், சிறுபான்மையினரின் மொத்த ஓட்டுக்காக நாட்டின் ஒற்றுமையையே கேள்வியாக்கும் அற்ப பேச்சு. 80 சதவீத இந்துமக்களில் பெரும்பான்மையோர் பெரும்பான்மை பற்றி சிந்திக்காமல் "எம் மதமும் சம்மதமே" என எண்ணி சாதி, மொழிகளால் பிரிந்திருப்பதால் தான், சசிதரூர் சாஃப்ட் பவர் பேச்சில், 'கத்தோலிக்க சோனியாவின் தலைமயிலான காங்கிரஸின் சிறுபான்மை சிங் தலைமை பொறுப்பேற்கிறார் அதனை முஸ்லீம் மதம்சார்ந்த அப்துல்கலாம் பதவிபிரமாணம் செய்விக்கிறார்' என உலகஅரங்கில் கூறமுடிகிறது.
'ஜனநாயகம்' என்பது பெரும்பான்மையினரின் தேர்வு. இந்தியாவின் பெரும்பான்மையினர் இந்துக்கள். அவர்களின் தேர்வு இதுவரை அவரகளை ஏமாற்றி சுரண்டும் அரசியல்வாதிகள்தான். ஏமாற்றாத, நேர்மையான அரசியல்வாதி எங்களிடம் இல்லை.
ஊழல்தான் இன்றைய மிகப்பெரிய பயங்கரவாதம்.