மேலும் ராடியா பேசிய 800 உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவுட்லுக் இணையத்தில் அதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
முகவரி: http://www.outlookindia.com/
மாற்று ஏற்கனவே வெளியிட்ட சாம்ப்பிள் : ஸ்பெக்ட்ரம்: தோண்டத் தோண்ட வெளியாகும் ரகசியம் ... ! (பாஜக Exclusive)
இந்த பேச்சுக்களில், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் குறித்து ராடியா, அமைச்சர் பூங்கோதையுடன் பேசிய பேச்சுக்கள் உட்பட நிறைய பரிமாற்றங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில், காங்கிரஸ் நடத்தும் உள் அரசியல் என்ன என்பதை இனிவரும் நாட்களில் ஆராயவேண்டியுள்ளது.
நீதிமன்றத்தில் பத்திரமாக இருக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டேப்களில் 800 மட்டும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவைகளில், குடும்ப அரசியல், துறைகளுக்கான பேரம் வெளிப்படையாக நடைபெற்றுள்ளது.
இதுபற்றி அவுட்லுக் ஏடு ... குறிப்பிட்டுள்ளவை தற்போது உங்கள் பார்வைக்கு ...
ராடியாவின் சில உரையாடல்கள்,
“ராசா ஒரு தலித் என்பதால், கருணாநிதிக்கு அவர் தேவைப்படுகிறார். யுபிஏ முதல் அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஆர்.பாலு தொடர்வதில் பிரதமருக்கு விருப்பமில்லை” என்கிறார்.
பிரதமரின் மனநிலை குறித்துக்கூட ராடியா பேசுவது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வெளியாகும் உண்மைகள், இந்த புரோக்கர்களுக்கு ஆளும் கட்சிகளுக்குள் இருக்கும் செல்வாக்கு அம்பலமாகும்போது இது சாதாரணமாகத்தான் படுகிறது.
“ராசா ஒரு தலித் என்பதால், கருணாநிதிக்கு அவர் தேவைப்படுகிறார். யுபிஏ முதல் அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஆர்.பாலு தொடர்வதில் பிரதமருக்கு விருப்பமில்லை” என்கிறார்.
பிரதமரின் மனநிலை குறித்துக்கூட ராடியா பேசுவது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வெளியாகும் உண்மைகள், இந்த புரோக்கர்களுக்கு ஆளும் கட்சிகளுக்குள் இருக்கும் செல்வாக்கு அம்பலமாகும்போது இது சாதாரணமாகத்தான் படுகிறது.
”கருணாநிதி ஒரு குழப்பவாதி”
”கனிமொழி மூலமாகவும் பிரதமர் பேசிவருகிறார்”
”அழகிரியுடன் நட்பாக இருக்கவேண்டும் என்று கனிமொழிக்குச் சொல்லுங்கள்”
என்றெல்லாம் அவர் பேசுவது நமக்குக் கேட்கிறது. சுனில் மிட்டல், அம்பானி டாடா என்ற பெயர்களெல்லாம் அடிபடும்போது, நம் தலையெழுத்துக்களை நிர்ணயிக்கும் பெருமுதலாளிகள் ஆளும் கட்சிகளை எப்படி வசப்படுத்துகிறார்கள் என்ற சூட்சுமம் புரிகிறது. தாயநிதி மாறனும் அவர்களுக்கு சளைத்தவரில்லை. இப்பிரச்சனையில் அவரின் உள்குத்தும் இல்லாமலில்லை. ஆனால் மக்களிடம் இந்த பிரச்சனைகளை அம்பலப்படுத்தவேண்டியிருக்கிறது. அப்போதுதான், நம்மால் நமது அரசாங்கத்தை, நமக்கான ஜனநாயகத்தை அமைக்க முடியும்.
பொய்மையின் குட்டு உடைபட்டால்தான், உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
can u give d link??
ReplyDeletehttp://scrazyidiot.blogspot.com/
லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
ReplyDelete//அடிபடும்போது, நம் தலையெழுத்துக்களை நிர்ணயிக்கும் பெருமுதலாளிகள் ஆளும் கட்சிகளை எப்படி வசப்படுத்துகிறார்கள் என்ற சூட்சுமம் புரிகிறது. //
ReplyDeleteelection voting will solve all this problem. Especially CPM who worked for TATA and Salim group in West Bengal are the best candidates for this.