Sunday, November 28, 2010

திசை திருப்ப வேண்டாம் திராவிடக் கழக தலைவரே!


“ஆ.இராசாமீது குற்றம்சாற்றிட எந்த இடத்திலும் ஆதாரமில்லை”
“பார்ப்பன உயர்ஜாதி ஊடகக் கூட்டம் திட்டமிட்டு சதிவலை”
“மீண்டும் கலைஞர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதே நோக்கம்”
“தமிழர்களே, விழிப்பாக இருந்து கலைஞர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வீர்!”


இப்படியான முழக்கங்களோடு கரடி விட ஆரம்பித்திருக்கிறார் திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி அவர்கள். நாடே கதிகலங்கும் ஊழல் நடந்திருக்கிறது. அதற்கு ஆதாரங்கள் அறிக்கைகளாகவும், டெலிபோன் உரையாடல்களாகவும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் ஐயாவின் பார்வையில் அவையெல்லாமே ஜோடிக்கப்பட்டவைகளாகத் தெரிகிறது. எல்லாம் அமபலமாகிப் போன ஊழலில் இப்போது தலித், தமிழன், திராவிடன் என்னும் கவசங்களை அணிந்துகொண்டு ஐயா வீரமணி அவர்கள் வீறுகொண்டு புறப்பட்டு இருக்கிறார்.

அதிகாரத்தின் வளைவுக்குள் தலித்துக்களை எளிதில் நுழையவிடாது, இருக்கவும் விடாது சாதீய இறுக்கம் நிறைந்த இந்த அமைப்பு என்பதில் உண்மை உண்டு. மைய அரசின் ஆட்சியதிகாரத்தில் தெற்கிலிருந்து வருகிறவர்களுக்கு முக்கிய இடம் கொடுப்பதில் வட பகுதியினருக்கு விருப்பமிருப்பதில்லை என்பதற்கும் வரலாறு உண்டு. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு (கலைஞரின் குடும்பத்திற்கு) ஏகப்பட்ட அமைச்சர் பதவிகளைப் பெற முடிந்தபோது, இதுபோன்ற வார்த்தைகளையெல்லாம் மூட்டைகட்டி பரண்மேல் வைத்துவிட்டு, கலைஞரின் சாதனை என்று மார்தட்டிக்கொண்டு இருந்தார் இதே ஐயா வீரமணி அவர்கள். இப்போது பிரச்சினையென்று வந்தவுடன், பழைய வார்த்தைகளையெல்லாம் தூசிதட்டி உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆ,ராசா ஒரு பகடைக்காயாகவே இருக்கலாம். ஆனால் யாருக்கு இருந்திருக்கிறார் என்பதுதான் கேள்வி. அவர் மீதான அபாண்டமாக குற்றச்சாட்டில் ‘பார்ப்பனீயச் சதி’ இருக்கிறதென்றால், அவரது முறைகேடுகளால் பலன் பெற்றவர்கள் யாராம்? அதிகராத்தில் தானும் ஒரு புள்ளியாய் மாறிய ராசா யாருக்கு விசுவாசமாய் இருந்திருக்கிறார், யாருக்கு துரோகம் செய்திருக்கிறார் என்பதை ஆராயத் தலைப்பட்டால், தெளிவானச் சிந்தனை எனலாம். பீடங்களில் இருப்பவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும், பார்ப்பனராய் இருந்தாலும், தலித்தாய் இருந்தாலும் அவர்கள் தங்கள் சுயங்களைத் தொலைத்து, சுயநலம் கொண்டவராகவே மாறிப்போகின்றனர். மக்களையும், தேசத்தையும் சுரண்டுகிறவர்களாக உருமாறிப் போகின்றனர். இது ஏன் நிகழ்கிறது என அறிய முற்பட்டால், நேர்மையான கண்ணோட்டம் எனலாம்.

நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னரே எப்படி ஊடகங்களுக்கு போனது என்னும் மாபெரும் அறிவுபூர்வமான கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார் ஐயா வீரமணி அவர்கள். இதற்கு முன் எப்போதுமே இப்படி வெளியாகவில்லையோ? அதிகாரத்திற்கான போட்டிகளில், அரசியல்வாதிகளும், ஊடக முதலாளிகளும் சேர்ந்து அவ்வப்போது இப்படிக் காரியங்களைச் செய்யவில்லையா? ஃபோர்பர்ஸ் ஊழலில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் எந்த தலித்துக்கு எதிரான பார்ப்பனீயச் சதி இருந்ததாம். இது வேறு அரசியல் ஐயா.

நாட்டின் மிகப்பெரும் ஊழலில், ஆள்பவர்களின் சகல மோசடி வேலைகளும், லஞசத்தில் ஊறித் திளைக்கிற அதிகார வர்க்கமும் அமபலப்பட்டு நிற்கின்றன. ஆ.ராசாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி விஷயத்தைப் பார்க்காமல், இந்த அமைப்பின் கோணல்களையும், குளறுபடிகளையும் பேச வேண்டிய வேளை இது. ஐயா வீரமணியோ, ராசாவை முன்னிலைப்படுத்தி முழு பூசணிக்காயை சேற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறார். மொத்த விஷயத்தையும் திசை திருப்பப் பார்க்கிறார்.

சந்தடி சாக்கில் அப்படியே ‘தமிழகத்தில் கலைஞர் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது’ எனவும் அதைக் கவிழ்க்க சதி எனவும் வேறு அளந்து விடுகிறார் ஐயா வீரமணி. மனு தர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும் நடக்கும் போர் என முரசறைகிறார். சில இலவசத் திட்டங்களை அறிவித்ததன் மூலம், கலைஞரின் ஆட்சி பொன்னான ஆட்சியாகிவிடுமா?  தேர்தலின் போது அறிவித்த இரண்டு ஏக்கர் நிலத்தை நிலமற்றவர்களுக்கு வினியோகம் செய்து விட்டாரா? அவரது குடுமபமே இப்போது தமிழக அரசியலையும், சினிமாவையும் ஏகபோகமாக ஆட்டுவிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? சத்துணவு ஊழியர்களிலிருந்து நெய்வேலித் தொழிலாளர்களின் போராட்டங்களென தொடர்ந்து  தமிழகம் முழுவதும் அரசுக்கெதிரான குரல்கள் எழும்புவது கூட பார்ப்பனீயச் சதியா? அந்நியக் கம்பெனிகளுக்கு ஆதரவாய் சொந்த மக்களையே காவல்துறையால் குதறுவது எந்த மனித தர்மமோ? பெரியாரின் கொள்கை வழிவந்தவரின் பேச்சும், செயலும் இப்படியாகிப் போனதில் நாம்தான் வருந்த வேண்டும் போலிருக்கிறது. பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்று புறப்பட்டவருக்கு, பார்ப்பனீயத்தின் இத்தகைய குணாம்சங்கள் பீடித்திருப்பது கண்டு நாம்தான் அவமானப்பட வேண்டும் போலிருக்கிறது.

தலித்துக்கள் என்று இப்போது வரிந்து கட்டிக்கொண்டு வருகிற ஐயா வீரமணி அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தி ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. நாகர்கோவில் மாவட்டத்தில் தாழக்குடி பஞ்சாயத்து துணைத்தலைவரான தங்கசாமி தலித் சமூகத்தைச் சார்ந்தவர். தலித்துகளுக்கான வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் அப்பஞ்சாயத்தின் துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றார். அவரது குழந்தைகளுக்காக தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற சான்று கேட்டு பல மாதங்களுக்கு முன்னர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.  அதிகாரிகள் சான்று வழங்காமல் பல்வேறு பொய் காரணங்கள் கூறி இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் பிரதிநிதியான எனக்கே நியாயமாக சான்று கிடைக்கவில்லையென்றால் வாழ்ந்து என்ன பயன் என நினைத்து விஷத்தை குடித்துள்ளார். அங்கிருந்த மக்கள் அவரை பூதப்பாண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மதியம் இறந்தார். (தமிழக அர்சின்!) காவல்துறையோ அவர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுத்தது.

ஐயா வீரமணி அவர்கள் குரல் எழுப்ப வேண்டியது தங்கசாமிகளுக்காக. ஆ.ராசாக்களுக்காக அல்ல.

16 comments:

  1. இவர் அ.ராசா தலித் என்பதால் குரல் கொடுக்கிறார் என்றால் தமிழக அரசால் பந்தாடபட்ட உமா சங்கர் என்ன பார்ப்பனரா .அவரும் ஒரு தலித் தானே அப்போது இவர் குரல் ஒலிக்கவில்லையே

    ReplyDelete
  2. தாழக்குடி நிகழ்வு வருத்தமடையச் செய்கிறது.

    ReplyDelete
  3. இந்த நாய் தான் பெற்ற ரொட்டித்துண்டுக்காக நன்றி மறவாமல் குலைக்கிறது. அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. இனி நாம் வீரமணியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்கக்கூடாது....தந்தை பெரியாரின் பெயரை கெடுக்க இவர் ஒருவரே போதும்.

    ReplyDelete
  5. நண்பர்களே!

    ’நாய்’ போன்ற சொற்பிரயோகங்கள் வேண்டாம் என வேண்டுகிறோம். அதில் எங்களுக்கு சம்மதமில்லை.

    தங்கள் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும்கூட ஆரோக்கியமாகவும், நாகரீகமாகவும் பயன்படுத்தலாமே!

    ReplyDelete
  6. “தமிழர்களே, விழிப்பாக இருந்து கலைஞர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வீர்!”//

    ஐயா வீரமணி அவர்கள் மீது எனக்கு தனியாக மதிப்பேதும் இருந்ததில்லை. ஒருவேலை தந்தைப் பெரியாருக்கு அடுத்ததாக திராவிடர் கழகத்தை நடத்துபவராக, குடியரசு இதழை நடத்துபவராக இருக்கலாம். ஆனால், தவறை தவறெனச் சுட்டக்கூடிய தைரியம் இல்லை?

    வீரமணி ஒரு பகடைக்காய். அவர் விசயத்தில் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதன் தலைமையை நினைக்கும்போது, அந்த அற்பத்தைப் பார்க்கும்போதுதான் அடச்சீ என்று வருகிறது.

    தமிழ் மக்களிடம், உண்மை எதுவென்பதை முந்திச் சொல்ல வேண்டுமே. என்று பரபரக்கிறது.

    ReplyDelete
  7. இந்த ...... தான் பெற்ற ரொட்டித்துண்டுக்காக நன்றி மறவாமல் குலைக்கிறது. அவ்வளவுதான்.


    நன்றி

    ReplyDelete
  8. அ.ராசா தலித் என்பதால்தான் அவர் மீது எல்லாரும் இப்படி சந்தர்ப்பம் பார்த்து நடந்துகொள்கிறார்கள் என்று இவர் மட்டும் சொல்லவில்லை

    தமிழகத்தின் சிறுத்தை தோழர் திருமாவும், சுபவி என ஒரு வகையான திட்டமிட்ட கூட்டம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    தவறுகள் யார் செய்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்டை உணர்வை மழுங்கடிக்கும் செயல்களின் தொகுப்பாகதான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

    இதில் இவர்களுக்கு குற்ற உணர்வோ வெட்கமோ இருப்பதில்லை சுயமாரியதைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்

    ReplyDelete
  9. //ஐயா வீரமணி அவர்கள் குரல் எழுப்ப வேண்டியது தங்கசாமிகளுக்காக. ஆ.ராசாக்களுக்காக அல்ல. //
    முற்றிலும் சரி.

    ReplyDelete
  10. கலைஞர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி ஆசிரியர் வீரமணி மீதும் திரும்பியிருக்கிறது என்பதனைத் தவிர புதிதாக ஏதும் இப்பதிவில் இல்லை.

    பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து விவரங்களை முழுதும் அறிந்தவர்கள் அல்லது விடுதலை நாளிதழை எப்போதாவது படித்தவர்கள் கலைஞர், ஆசிரியர் வீரமணி பற்றி தெரிந்திருப்பார்கள்.
    கலைஞரையும், திராவிட இயக்கங்களையும் தாக்குவதாக எண்ணிக்கொண்டு புறப்பட்ட அத்தனை சூராதி சூரர்களும் நன்கு பொதுமக்களிடையே உணரப்பட்டே இருக்கிறார்கள்.

    பாவம், அம்பேத்கார் பெயரைச்சொல்லிக்கொண்டு, பார்ப்பன ஊடகங்களின் ஒத்தூதுவர்களாக செயல்படும் உங்களைப்பற்றி பரிதாபப்படுவதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

    ReplyDelete
  11. அன்புள்ள அரசு ... உங்களின் ஆதங்கம் புரிகிறது. வீரமணியும், அய்யா கலைஞரும் இப்படி ஒட்டுமொத்தமாக ஊடகங்களின் வசவுக்கு ஆளாகிறார்களே என்று நீங்கள் துடிக்கிறீர்கள்.

    ஆனால், ஒட்டுமொத்த தேசமே களவு போகிறதே என்று மாற்று கவலை கொள்கிறது. சோற்றுக்கில்லாத எத்தனையோ தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக கவலைப்படாமல், ராசபோகம் வாழும் ராசாவுக்கோ, கருணாநிதிக்கோ மாற்று வலைப்பக்கம் ஒருநாளும் வருத்தப்படாது.

    பார்ப்பனீயத்தை, திராவிடர் இயக்கத்தைக் காட்டிலும், எதிர்க்கும் திராணி மாற்று வலைப்பக்கத்திற்கு உண்டு. அம்பேத்கர் பதிவில் மட்டுமல்ல, வரும் நாட்களில் எல்லாப் பதிவுகளிலும் நீங்கள் அந்த எதிர்ப்பைக் காணாலாம். ஏதோ, வீரமணிதான் பார்ப்பன எதிரி, அவரோடோ சேர்ந்து நின்றால் மட்டுமே நாங்களும் பார்ப்பனீய எதிரிகள் என்று நீங்கள் ஜோடிக்க விரும்பினால். அது சரியில்லை என்பதை காலம் அனுதினமும் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.

    ReplyDelete
  12. "மாற்று" மிக அற்புதமான பணியைச் செய்து வருகிறது.இன்றய இருப்பை மாற்றி புதியதை உருவாக்குவது அதன் நோக்கம்.சாதிமத குரோதங்களை நீக்குவதும் அதற்குள் அடங்கும்.பார்ப்பன எதிர்ப்பும் அதில் ஒண்று.ஈராக்கை அமுக்கியது போல் இப்போது ஈரானையும் அமுக்க .அமேரிக்கா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.ஈரான் ஆரிய பூமி.அதனால் ஆரியத்தை,பார்ப்பனீயத்தை அழிக்க அமேரீக்காவுக்கு ஆதரவளிக்கவெண்டும் என்று கருணாநிதி கூறும் வாய்ப்பு .அதிகம். வீரமணி தாளம் பொடுவார்.பெராசிரியர் சு.ப.வீயும் திருமாவும் ஒத்து ஊதுவார்கள்.நீங்கள் கொண்டுள்ள பார்ப்பனீய எதிர்ப்பு என்பது அதனை நிரந்தரமாக ஒழிப்பதாகும்.பெரியாரிஸ்டுகளின் சந்தர்ப்பவாத எதிர்ப்பு அல்ல. சிந்தனின் பின்னூட்டம் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையோடு எழுதப்பட்டிருக்கம். நம்மை திசை "மாற்று" வதும் அவர்கள் நொக்கங்களில் ஒன்றாகும்---காஸ்யபன்.

    ReplyDelete
  13. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, தாழக்குடி ஊராட்சி துணைத்தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவர் தனது குழந்தைகள் கல்விக் காக சாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்து 18 மாதங் களாகியும் தாலுகா அலுவல கத்திலிருந்து வழங்கப்பட வில்லை. பலமுறை அலைக் கழிக்கப்பட்டும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் 24.11.2010 அன்று மீண்டும் தாசில்தார் அலுவல கம் சென்று முறையிட்டுள்ளார். அப்போதும் வழங்கப்படு வதற்கான உத்தரவாதம் இல் லாத நிலையில் அங்கேயே விஷம் அருந்தி பின்னர் பூதப் பாண்டி மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். இச்சம் பவம் ஜனநாயக இயக்கங் களையும், மனிதநேயம் படைத் தோரையும் மனம் பதறச் செய்துள்ளது.

    தங்கசாமி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையிலேயே இடஒதுக்கீடு அடிப்படையில் ஊராட்சிமன்ற உறுப்பினருக்கும் போட்டி யிட்டு வெற்றிபெற்று, பிறகு ஊராட்சியின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு மேலும் அதிகாரிகள் கோரிய வேறு சில ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இவ்வாறிருந்தும் அவருடைய குழந்தைகளுக்கான சாதிச்சான்றி தழ் 18 மாத காலமாக அதிகாரிகளால் வழங்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அதிகார வர்க்கத்தின் சட்டத் திற்கும் சமூக நீதிக்கும் எதி ரான இந்த நிலைபாடு அவரை விஷம் அருந்தி தற்கொலை செய்யுமளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாக்கியுள்ளது. அதிகாரிகளின் இத்தகைய தவறான நிலைபாடு வன்மை யான கண்டனத்துக்குரியது.

    ReplyDelete
  14. வாஜ்பாய் அரசில் TR பாலு கேபினெட் மந்திரி. அவருக்கு அடியில் தலித் ராஜா குட்டி மந்திரி. பாலு பாம்பேயில் பயம் காட்டி கட்சி பெயரை சொல்லி கப்பம் வாங்குகிறார். கலைஞருக்கு ''பங்கு'' சரியாக போகவில்லை.அசிஸ்டன்ட் அய்யாவுக்கு எல்லாத்தையும் போட்டு கொடுக்கிறார். அன்றே பாலு பகைவர் ஆனார். ராசா விஸ்வாசியானார்
    ராடியா டேப்பில் " Big No for BAALU '' மீண்டும் மீண்டும் கேழ்க்கிறது.
    அப்படிப்பட்ட சிஷ்யனை எப்படி அய்யா கை விட முடியும். அவர் கையில் இவர் குடிமி இருக்குமோ?

    ReplyDelete
  15. மாற்று- வலைப்பதிவில் வரும் கட்டுரைகள் யாவும் சிறந்தவையகவும் ‘காலவிரயம்’ இல்லாமல் இருக்கிறது என்பது தான் தனிச்சிறப்பு.

    வீரமணி, அடுத்தமுறை ஜெ ஒருவேளை முத்லவர் ஆனால் அந்தத்தலைவியுடன் கூட்டனியில் இருப்பார். ஏன்? பெரியார் சொத்தை தன்வசம் பாதுகாப்பாக? வைத்திருப்பதில் பிரச்சினை வரக்கூடாது.

    இப்போது இதெல்லாம் ஒரு விசுவாசத்திற்கு செய்யும் வேலை.அதாவது வெட்டிவேலை!

    ReplyDelete
  16. ஜெயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் சூட்டி ஜால்ரா அடித்தவர் இதே வீரமணி தான். ஆளும் கட்சி எதுவாயிருந்தாலும் காக்கா பிடிப்பது தான் தி.க

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)