லிவிங் டுகெதர் பற்றி பதிவர்கள் நிறையவே எழுதிவருகிறார்கள். ஒரு நல்ல விவாதத்தின் துவக்கப் புள்ளி எங்கிருந்து துவங்கியது என்று தெரியாது. ஆனால், எப்போதும் போலவே விவாதங்கள் திசைமாறிச் சென்று அதன் மையத்திலிருந்து விலகியிருப்பதை உணர முடிகிறது.
“தமிழா, தமிழா” பிளாக்கர் எழுதியதை படித்தேன். ‘இப்போதெல்லாம்.... திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்.. தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்.. இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று. கணவனும்.. மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது.. நண்பர்கள்.. கணவன்.. மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!’ என்று சொல்லியிருந்தார்.
இன்னொரு பதிவர், கலகலப்பிரியாவோ... ”திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க... இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டும்... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!... ” என்று கேட்டிருக்கிறார்.
விவாதம் வழிமாறித்தான் பயணித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பதிவர் இவ்வளவு சூடாக வேண்டிய அவசியமில்லை. பலப்பல கருத்துக்கள் எதிரும் புதிருமாக வந்திருக்கும் நிலையில், நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடலாம்.
முதலில் வெற்று காமத்திற்காக லிவ்விங் டுகெதர் ஆகுமானால் அதற்கு வேறு பெயர். அதுகுறித்து இங்கு விவாதிக்க வேண்டியதில்லை.
திருமணம் என்கிற சடங்கு முறைகள் ஏதும் இல்லாமல், மனது ஒத்த நட்புடன் இணைந்து, பழகி, அப்படியே வாழ்க்கையைத் தொடர்வதே லிவ்விங் டுகெதர் எனப்படுகிறது. நம் சமூகத்தில் ஏற்கனவே நிலவும் திருமண முறைகளைக் காட்டிலும், செலவு குறைவானதும், சமூக வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணிற்கு கொஞ்சம் கூடுதல் சுதந்திரமும் கொடுப்பதாகவும் இது இருக்கிறது. மேலும், குடும்ப வாழ்க்கை, திருமணம் ஆகியவற்றின் மீது போர்த்தப்படும் ஜிகினாத்திரைகள் ஏதுமின்றி, “அன்போடு இணைவதே வாழ்க்கை, அன்பு மறந்தால் அவ்வளவுதான்” என்று நெற்றியடியாகச் சொல்கிறது.
எல்லாத் திருமணங்களிலும் விவாகரத்துக்கு வழி இருக்கும்போது, எல்லா திருமணங்களிலும் பாதியில் கழற்றி விடுவது கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கும்போது, லிவிங் டுகெதர் தம்பதியரும் பிரிவதற்காக சாத்தியங்கள் இல்லாமலில்லை. அப்படி பிரிந்தால் என்னவாகும்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியைச் சுற்றிச் சுற்றிதான் விவாதங்கள் எழுகின்றன. “பிடித்தவரை வாழ்வது, அப்புறம் பிரிந்துவிடுவது” என்றானால் நிலைமை என்ன?, குடும்பம் அழிந்துவிடுமே, குழந்தைகள் கதி என்ன? என்று பெரும்பாலோர் கேட்கிறார்கள்.
ஆனால், ஏற்கனவே இருக்கும் திருமண முறை வாழ்க்கையிலுமே, எதிர்பாராத மணமுறிவு நடக்கிறது. ஓரளவு பொருளதார சுதந்திரம் பெற்ற பெண்ணும், அதே வழிப்பட்ட சிந்தனையோட்டம் கொண்ட ஆணுமே லிவ்விங் டுகெதரில் இணைவார்கள் என்ற உண்மையை வைத்துப் பார்க்கையில், மேற்சொன்ன கேள்வி தேவைக்கு அதிகமான அச்சுறுத்தலோ என்றுதான் படுகிறது. பிடித்தமில்லாமல் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், பிடித்தத்தோடு பிரிந்துவிடுவது சிறந்தது.
அதே நேரம் எந்த தம்பதியரும் தேவையற்ற காரணங்களால் பிரியக் கூடாது என்பதே நமது உள்மன வேட்கையாக இருக்கும். மனதுக்கே ஒத்துப்போகாத இணையைக் கட்டிக்கொண்டு அல்லல் படும் சாதாரண மனைவிமார்கள்/கணவன்மார்கள் கண்ணுக்கு முன் வந்து போகாமலில்லை. அவர்களில் ஒரு பகுதியினரே, நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாகவோ இணக்கமாகவோ வாழ்வதாக அர்த்தமா?
போலித்தனங்கள் இங்கு தேவையில்லை. ஜாதகப் பொருத்தத்தைக் காட்டிலும், இரண்டு மனங்கள் பொருந்துகிறதா என்று பார்ப்பதே அவசியம். அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் பிடித்திருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். அப்படி கனிகிற உறவு இணைந்தே பயணிக்கும் வாய்ப்புகள் கொண்டதாக இருக்கும்.
பரஸ்பரம் புரிதல் இருக்குமானால் அந்த வாழ்க்கை கசப்புகளைத் தாண்டி இனிக்கும். லிவ்விங் டுகெதர் அதற்கான அதிக சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிடிப்பை அதிகமாக்கி, சுதந்திர உணர்வைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அது மிக முக்கியமானது.
பதிவு அருமை.
ReplyDeleteபோலித்தனங்கள் இங்கு தேவையில்லை. ஜாதகப் பொருத்தத்தைக் காட்டிலும், இரண்டு மனங்கள் பொருந்துகிறதா என்று பார்ப்பதே அவசியம்.
ReplyDeleteliving together is a method of escape from the present socio Family system. this would not be a solution for the Problems of Present Socio Family System. In Our Nation Caste is a Vital factor of deciding the marriage. We need to look in to the Basic Problems of Caste Marriage. otherwise Speaking about the Living Together is lead one to a middle class sectarian outlook.
ReplyDeleteஅம்மி மிதித்து தான் கல்யாணம். ஆனால் அதற்க்கு பிறகு கணவன் போட்ட ஆட்டம் தாள முடியாமல் மனைவி குழவியை எடுத்து ''அய்யா'' தூங்கும் போது ''கதையை'' முடிச்சுட்டாள்!! இதெல்லாம் ''கதையில்'' வரும். இங்கு ஒரு சந்தேகம்!! சீர் திருத்தக்கல்யாணங்கள் எல்லாம் சொர்கத்தில் முடிவு செய்யபபட்ட தில்லை.. தலைவர் தாலி எடுத்து கொடுத்தது. விவாக ரத்து ஆனதே இல்லையா?
ReplyDeleteவிவாக ரத்தே ஆகாது என்பதல்ல ... விவாக ரத்து ஒரு உரிமை என்பதை அங்கீகரிப்போம். அப்போது அம்மி மிதித்தவள் கூட, அம்மி தூக்கும் அவசியம் ஏற்படாதில்லையா?
ReplyDelete