Tuesday, November 30, 2010

உலகம் முழுவதும் அமெரிக்கா அட்டூழியம், ஆவணங்கள் அம்பலம்!இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, ‘விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதரகங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந்நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களையெல்லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூழியங்கள் குறித்த விவரங்கள் ஏராளமாக இந்நிறுவனத்திடம் சிக்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத்திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை உள்ளடக்கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங்களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்கு இழிவானவையாக இருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதுமான தலைவர்கள், அவர்களின் அந்தரங்க விஷயங்கள், நாடுகள், அவைகளுக்கிடையேயான பிரச்சினைகள் எல்லாவற்றையும்  கண்காணித்து, அமெரிக்கா வைத்திருக்கும் கருத்துக்கள் இதனால் வெளிவந்திருக்கின்றன. இவை சர்வதேச அளவில் அமெரிக்காவின் அபிலாஷைகளையும், அட்டூழியங்களையும் காட்டுகின்றன. அவைகளில் சில:

 • பாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத்பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 • சவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிககாவிடம் வலியுறுத்தி வந்துள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப் ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது.

 • ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந்தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக்கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.
 • இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப்பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த விவரங்கள் அடங்கும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளை தீர்க்க அமெரிக்கா முழுமையாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந்தியா - பாகிஸ்தான் இடையே தாங்கள் ஒருபோதும் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க தூதர்கள் அடிக்கடி கூறி வருவது கவனிக்கத்தக்கது).
 • இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புதலோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் விவகார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என்பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட தனது கைக்கூலி நாடுகளுடன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங்டனிலிருந்தும், பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித்தும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா, உலகின் முன்னே அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

12 comments:

 1. விகிலீக்ஸ் தளத்தையே செயலிழக்கும் முயற்சியெல்லாம் நடக்கிறது

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு இன்னும் வெளி வரவேண்டியது நிறைய இருக்கிறது.

  ReplyDelete
 3. When KGB files were opened up the left parties in India were exposed. KGB files gave evidence that then USSR was trying to influence Indian leaders.
  Communists in India were getting benefits for their service to USSR.
  Was this not confirmed by KGB documents,
  WikiLeaks expose China too and they talk about China's unhappiness on India's attempt for seat in UNSC.Slaves of china like you may not like this.But the harsh fact WikiLeaks exposes diplomats and leaders from many countries including China.Look at your dirty face first and then talk about others.

  ReplyDelete
 4. அமெரிக்க‌ர்க‌ளின் இத்த‌கைய‌ செய‌ல் ப‌ற்றி ஜான் பெர்க்கின்ஸ் த‌ன‌து `பொருளாத‌ர‌ அடிய‌ளின் வாக்குமூல‌ம்' என்ற‌ புத்த‌க‌த்தில் இன்னும், குறிப்பாய், மிக‌ நுணுக்க‌மாய் விவ‌ரித்திருப்பார். கேட்ப‌த‌ற்கு ஆள் (ம‌ன்மோக‌ன்) இருப்ப‌தால் அமெரிக்கா வாய் உதார் காட்ட‌த்தான் செய்யும்.
  பாகிஸ்தானுக்கு மில்லிய‌ன் க‌ண‌க்கில் இராணுவ‌ ம‌ற்றும் ப‌ல பொருளாத‌ர உத‌வி செய்யும். ஆனால் இந்தியாவை போர் அணு தள‌வாட‌ங்க‌ளையும், பிற‌ இரசாய‌ண‌ பொருட்க‌ளையும் விற்க, மென்பொருள் கூலிக‌ளை வாங்க‌ என அத‌ன் வியாபார‌த்தை பெருக்கும் ஒரு சந்தையாக‌ ம‌ட்டுமே
  ப‌ய‌ன்ப‌டுத்தும். ந‌ம்மை ஆள்ப‌வர்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஒரு மீட்ப‌ராக‌ காட்சிய‌ளிக்கிறார்க‌ள். என்ன‌ செய்வ‌து? அமெரிக்க‌வின் கோட்பாடே "நான் சொல்வ‌தைச் செய்,நான் செய்வ‌தை செய்யாதே" என்பதுதான்.

  ReplyDelete
 5. அன்பர் தமிழுக்கு, மாற்று தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.

  உங்களை ஒரு முன் முடிவிலிருந்து வாசிப்பபவராக அறிகிறேன். உங்களுக்கும் ஒரு கோபமிருக்கிறது.

  உங்கள் அன்புக்குறிய அமெரிக்கா, அல்லது நீங்கள் மதிக்கக் கூடிய ராஜதந்திரம் அம்பலப்படும்போது இப்படி கோபம் எழுவது இயற்கைதான். நேற்றுக்கூட அ.ராசா பற்றி அய்யா வீரமணி பேசியது பற்றிய விமர்சனத்தில் ஒருவர் கொதித்துப் போய்விட்டார்.

  நீங்கள் ஒரு பதிவை எப்படி வாசிக்க வேண்டும். எப்படி பதிலிட வேண்டும். என்பது உங்கள் சுதந்திரம்.

  ஆனால் நீங்கள் மாற்று வலைப்பக்கம் குறித்து கூறியிருக்கும் விமர்சனத்திற்கு நான் பதில்கூற விரும்புகிறேன்.

  மாற்று வலைப்பக்கம் ஜனநாயகத்திற்கு கட்டியம் கூறும், சோசலிசத்தை வரவேற்கும். இந்த இரண்டும் மனித குல விடுதலைக்கு அவசியமான ஒன்று என்கிற வகையில் அதுபற்றி பேசும்.

  அதே சமயம், சோசலிசத்தின் பேரில் தவறுகள் நடந்தால், அவற்றை விமர்சிக்காமல் இல்லை. முரண்படுவதும், விவாதிப்பதும், சிக்கலைத் தீர்ப்பதும் பின் செயல்படுவதும் ஒரு சுழற்சி, அது நியதி

  இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் நாங்கள் அதையே சொல்கிறோம். ரஷ்யாவின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சீனாவிடமிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த அரசுகள் மக்களுக்கு ஆற்ரிய தொண்டு மிகப்பெரியது. அதே சமயம் அவர்கள் தவறு செய்கிறார்களா? .. அதையும் வெளிப்படையாக விவாதியுங்கள். அந்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அத்துடன், இந்தியத் தன்மையில் செயல்படுங்கள். இந்திய மக்களின் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில், வர்க்கப் போராட்டங்களில் முன் நில்லுங்கள் என்பதே எங்கள் முழக்கம்.

  -

  உங்கள் காழ்ப்புணர்ச்சியை நீக்கிவிட்டு, விசயத்திற்கு பதில் சொன்னால்...

  நண்பரே, அதிகாரம் எதோ ஒரு இடத்தில் குவிந்தால், இப்பிரச்சனை எழத்தான் செய்யும். அது மக்கள் திரளை தனது லாபத்திற்காக கொன்று குவிக்கும். அதிகாரப் பரவலே, முறைகேடுகளைக் குறைக்கும். அதுவும், மக்களுக்கான உண்மையான ஜனநாயகமே இன்றைய எதேச்சதிகாரங்களுக்கான தீர்வு.

  ”ஜனநாயக நாடுகள்” என்ற அடைமொழியைத் தாங்கியிருக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பெரிய மூலதனங்களைக் கொண்டிருக்கும் கம்பெனிகளுக்குதான் ஜனநாயகம் சேவை செய்கிறது.

  மக்கள், வேலையின்மையில், வறுமையில் திண்டாடுகிறார்கள்.

  உண்மையான ஜனநாயகம் இவையல்ல என்பதை கடந்த சில நாட்களாக லீக் ஆகிக் கொண்டிருக்கும் ஆவணங்கள் காட்டுகின்றன. எனவே, தானுண்டு தன் வேலையுண்டு என இருப்போரை இவைபற்றியெல்லாம் பற்றி சிந்திக்க வைப்பதும், மாற்றத்தை முன்னெடுக்கச் சொல்வதுமே எங்கள் பணி. தொடர்கிறோம் ... நன்றி!

  ReplyDelete
 6. சிந்தன்..தமிழுக்கு நல்ல பதில்..தொடரட்டும் உங்கள் மாற்றுப்பணி! என்ன தான் அமெரிக்கா அட்டூழியம் செய்தாலும்..அதை அலட்சியம் செய்து,அமெரிக்காவிற்கு ஆலவட்டம் வீசுபவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தானே செய்கிறார்கள். அமெரிக்காவில் குடியரசுக்கட்சிக்கும்,ஜனநாயகக்கட்சிக்கும் மாற்றாக வேறு ஒரு இடதுசாரிக்கட்சியையா அமெரிக்க மக்கள் ஆதரிக்கப்போகிறார்கள்?

  ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

  ReplyDelete
 7. விக்கிலிக்ஸ் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும், நமது நாட்டில் நவம்பர் மாதம் ஒன்றில் மட்டுமே அடுக்கடுக்காய் அம்பலப்பட்ட ஊழல்கள், ஆட்சியாளர் தடுமாற்றங்கள், விலை போக இருந்த ஒரு முதல்வரின் நாற்காலி அவராலேயே அதிக விலைக்குத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டது...எல்லாம் சொல்வது என்ன..
  புதிய தாராளமய மதிப்பீடுகள் பண்பாட்டு ரீதியாகவும், சமூக-அரசியல்-பொருளாதார உட்கூறுகளிலும் நுட்பமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நச்சு ஊடுருவலை சாதாரண மக்கள் அறியமாட்டார்கள். தனி நபர் சார்ந்து பேசப்படும் அரசியல் விவாத களங்களே பழக்கப்பட்டிருக்கும் நாட்டில் சாதுரியமாக நடத்தப்படும் வித்தைகளை அலசுவது சற்று சிரமமானது.
  ஜான் பெர்க்கின்ஸ் அளித்த முதல் சாட்சியமான, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பல வண்ண பிரதியாகவும், காட்சி ஆவணப் பொருள்களாகவும், சான்றாதாரங்களாகவும் ஏகாதிபத்தியத்தின் அரசியல் சதுரங்கத்தின் செப்படி வித்தைகள், அவற்றின் உள்ளூர் கதாபாத்திரங்கள் அம்பலமாகின்றனர்.
  கம்யூனிஸ்டுகள் தேச பக்தர்கள் இல்லை என்று தேசப் பிதா கூட குற்றம் சாட்டியதில்லை. சர்வதேச பார்வை என்பது அனைத்தின் ஆரோக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய முற்போக்குக் குணாம்சமே அன்றி வால் பிடிப்பது அல்ல. என் அழுக்கு, உன் அழுக்கு என்று அடையாளப்படுத்தி மகிழ்வது வேடிக்கை பார்ப்போருக்கும், தப்பிக்கத் துடிப்போருக்கும் ஆன அரசியல் சூத்திரமாக இருக்கட்டும். புவியை பொதுவில் நடத்து என்று முழக்கம் இடுபவர்களுக்கு இதில் மகிழ ஏதுமில்லை. மாற்றங்களுக்கான இயக்கத்தில் அவர்களுக்கு நிறைய அலுவல் இருக்கிறது.

  எஸ் வி வி

  ReplyDelete
 8. இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் நாங்கள் அதையே சொல்கிறோம். ரஷ்யாவின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சீனாவிடமிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த அரசுகள் மக்களுக்கு ஆற்ரிய தொண்டு மிகப்பெரியது. அதே சமயம் அவர்கள் தவறு செய்கிறார்களா? .. அதையும் வெளிப்படையாக விவாதியுங்கள். அந்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அத்துடன், இந்தியத் தன்மையில் செயல்படுங்கள். இந்திய மக்களின் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில், வர்க்கப் போராட்டங்களில் முன் நில்லுங்கள் என்பதே எங்கள் முழக்கம்.//

  shridharan//
  நீங்கள் சொல்வதை என்றோ ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கிறவர்கள் தான் இந்தியா கம்யுனிஸ்டுகள்(ஓட்டுப்பொறிக்கிகள்cpi,cpm கிடையாதுங்க).

  ReplyDelete
 9. இருந்தாலும் அவன் காலை கழுவி தண்ணி குடிப்பதை உலகம் நிறுத்தாது

  ReplyDelete
 10. உலகத்தையே எதிர்த்து நிற்கும் ஜுலியன் அசானேஜ் போன்றவர்களே இன்றைய தேவை. ஹாட்ஸ் ஆஃப் !

  ReplyDelete
 11. விக்கி லீக்ஸ் இணய தள லிங்க் வேலை செய்யவில்லை அப்டேட் செய்யவும்.

  ReplyDelete
 12. அக்கிரமம்
  அவமானம்
  அமெரிக்கா!

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)