Tuesday, November 30, 2010

நந்தலாலா காட்டும் இருவேறு தாய்கள் ...
காலங்காலமாக நமது சமூகம் பெண்களுக்கென்று சில நியாய தர்மங்களை வகுத்து வைத்திருக்கிறது. அது நியாயமானதுதானா,  தர்மம்தானா என்பதெல்லாம் விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டியவை. அந்த விவாதக்குரல் ரொம்பவும் பலகீனமாக ஒருபக்கம் ஒலித்துக்கொண்டேயிருந்தாலும்,  அந்த நியாய தர்மங்களை வலுப்படுத்தும் குரல் பலமாகவும்ம் நுட்பமாகவும்,  தீவிரமாகவும் பல்வேறு கலைவடிவங்கள் மூலமாக திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.தியாகத்தின் மறுவடிவம் பெண் என்பது அத்தகைய கற்பிதங்களில் ஒன்று. குடும்பத்திற்காக, கணவனுக்காக, மகனுக்காக, பேரனுக்காக என்று சதாகாலமும் பெண் யாருக்காகவாவது எதையாவது தியாகம் செய்துகொண்டே இருக்கவேண்டும். தன் கனவு தனது ஆசாபாசங்கள்... தனது லட்சியங்கள், தனது கோபங்கள் என்று எதையும் அவள் வைத்துக்கொள்ளக்கூடாது. எந்த நேரமும் எந்த காலத்திலும் சர்வபரி தியாகங்களுக்கும் அவள் தயாராக இருக்கவேண்டும்.


அப்படி இருந்தால் அவள் நல்ல தாய். அப்படி இல்லாமல் தனக்கென்று யோசித்தாலோ தனக்கென்று வாழ்ந்தாலோ அவள் கெட்ட தாய். தனது மகனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் இரும்புச்சங்கிலியால் கட்டிக்கொண்டு, மனநோய்க்கு ஆளாகி சேறும் சகதியுமாய்  இருந்தால் அவள் தாய்மையின் சின்னம். வந்த இடத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் புதியதொரு வாழ்க்கை கிடைத்து அதை ஏற்றுக்கொண்டு ஒரு குடும்பத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வாழ்ந்துவிட்டால் அவள் மோசமான, கெட்ட தாய்.
.
இந்த கற்பிதங்களை நியாயப்படுத்த அழகியலோடும், நல்ல இசையோடும் வலுவான நடிகர்களின் பங்களிப்போடும் வந்திருக்கும் படம்தான் நந்தலாலா. இளையராஜாவின் அற்புதமான இசையில் இயக்குநர் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் படம் இது.


சிறு வயதிலேயே தனது தாயால் ஒரு மனநலக்காப்பகத்தில் கொண்டுவந்து விடப்படும் பாஸ்கரமணி (மிஷ்கின்) தன்னை ஏன் இப்படி கொண்டுவந்து விட்டுவிட்டாள் தனது தாய் என வெறுத்துப்போய் ‘முண்டச்சி.... சிறுக்கி‘ என்று திட்டியபடியே அவளை சந்தித்து கன்னத்தில் அறைவதற்காக காப்பகத்தில் இருந்து வெளியேயறி தாயை தேடிக் கிளம்புகிறான். இன்னொருபுறம் அகி. பெரிய மனிதரைப்போல செயல்படும், சிந்திக்கும் பள்ளிச்சிறுவன். தன்னைத் தனியாக பாட்டியுடன் தவிக்கவிட்டுவிட்டு எங்கோ ஒரு கிராமத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தனது தாயைக்காண அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கவேண்டுமென்ற ஆவலுடன் கிளம்புகிறான்.


பாஸ்கரமணியிடம் தாய் இருப்பது ‘தாய்’வாசல் கிராமத்தில். அகியின் தாய் இருப்பது ‘அன்ன’வாசல் கிராமத்தில் (இங்கேயே கற்பிதத்திற்கு நியாயம் சேர்ப்பது தொடங்கிவிடுகிறது). ‘வாசல்’களைத்தேடி புறப்படும் இருவரும் பறிகொடுப்பின் முனையில் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். பின் இருவரும் சேர்ந்து பயணத்தை துவங்குகின்றனர்.


இந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடன் ஏற்படும் மோதல், சிநேகம், அன்பு, கோபம் இவற்றுடன் பயணிக்கிறது படம். பள்ளிக்கூட மாணவி, லாரி டிரைவர், ஐஸ்கிரீம் விற்பவர்,  இளநீர் விற்கும் கிழவன், போலியோ காலுடன் வரும் இளைஞன், மோட்டார் சைக்கிளில் வரும் குண்டு மனிதர்கள, ஆட்டோக்காரனம் என படம் நெடுகிலும் பயணம். வரும் சாதாரண மனிதர்களும் அவர்களின் எளிய கோபமும் அன்பும்தான் படத்தின் உயிரோட்டமான காட்சிகள்.


அதிலும் பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்னிக்தா அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். மழை சத்தத்தின் பின்னணியில் இவரது வலி நிறைந்த கடந்தகாலம் அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பயணத்திலும் அவளும் இணைந்துகொள்கிறாள்.


ஒருவழியாக அன்னவாசல் வந்துசேரும் அவர்கள், சிறுவனின் தாயை வீடு வீடாகச்சென்று தேடுகிறார்கள். அது ஒரு கிராமம். யாரைக் கேட்டாலும் வீட்டைக்காட்டி விடுவார்கள். ஆனால் அவர்களோ... தெருத்தெருவாக தேடி அலைகிறார்கள். (என்னதான் இருந்தாலும் சினிமாதானே உடனே காட்டிவிட்டால் “சுவாரஸ்யம்” போய்விடுமே...!).


கடைசியில் அந்த பெண்ணை ஒரு குடும்பத்துடன் காணும் பாஸ்கரமணியிடம் அந்த பெண் தன் நிலையை விளக்கி, காலில் விழுந்து கதறுகிறாள் (அவள் என்ன பேசினாள், அவள் தரப்பு நியாயங்கள் என்ன,  என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது என முடிவு பண்ணியதாலோ என்னவோ அந்த காட்சியில் வசனமே இல்லை. அதிரவைக்கும் இசை மட்டும்தான்.) தேடிக் களைத்து நிற்கும் சிறுவனிடம் உன் தாய் இங்கு இல்லை, அவள் கெட்டவள் என்கிறான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் பாஸ்கரமணி. சிறுவனின் தாய் பாஸ்கரமணியிடம் என்ன கதறினாள் என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே, தன் தாய் சரியில்லை என்று சிறுவனுக்கு உணர்த்தப்படுகிறது. 


அடுத்து பாஸ்கரமணியின் அம்மாவை தேடிப்போகிறார்கள். “முண்டச்சி... சிறுக்கி” என திட்டியபடியே தாயை தேடி வீட்டுக்குள் செல்லும் பாஸ்கரமணிக்கு. அவள் தாய் சங்கிலியால் கட்டப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு தோட்டத்தில் கிடப்பது தெரியவருகிறது. அது ஏன் என்றும் விளக்கப்படுகிறது. அவனை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டுவந்த நாளில் இருந்தே அதை எண்ணியெண்ணி.. இப்படியாகி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்கிறாள் என்பது தெரியவந்ததும இளையராஜாவின் நெகிழவைக்கும் குரலில் அவளின் தியாகமும் அவளின் தாய்மையும் போற்றப்படுகிறது! (ஆனாலும் கடைசியில் அந்த தாயை தன் அனுபவித்த கொடுமைகளை தனது தாய் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணமின்றி அவளை மனநல காப்பகத்தில் விட்டுவிடுகிறான் பாஸ்கரமணி!).


கடைசியில் ஸ்னிக்தாவை தனது தாயாக ஏற்றுக்கொண்டு முத்தங்களை வாரி வழங்குகிறான் சிறுவன். அவளும் அவனை மகனாக ஏற்று வாழத்துவங்குகிறாள். மனநிலை தெளிந்துவிட்டதாக காணப்படும் பாஸ்கரமணி, பலூன்களை விற்றுக்கொண்@ட போகிறான். குழந்தைகள் ஓடி ஓடிவந்து பலூனை வாங்கி மகிழ்கிறார்கள். அன்பைத்தேடித் தேடி புறப்பட்டவர்கள், தங்களுக்குள் அன்பை கண்டடைவதாகவும் பிருந்தாவனத்தில் ஏறிப்போவதாகவும் ( கடைசியில் அவர்கள் பயணிக்கிற லாரியின் பெயர் ) நிறைவடைகிறது படம்.


படத்தின் ஹீரோ மிஷ்கின் என்றாலும், நிஜ ஹீரோ இசைதான். இளையராஜாதான்!  தேவையான இடங்களில் அமைதி காத்து சில இடங்களில் மெல்லியதாக அடக்கிவாசித்து, அதிர வைக்குமிடங்களில் அதிரவைத்து, பிரமாதப்படுத்திவிட்டார் ராஜா! நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழ்ப்படத்தில் அர்த்தமுள்ள பின்னணி இசையை கேட்க முடிந்திருக்கிறது. 


மனநிலை பாதிக்கப்பட்டவராக இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார். நல்ல நடிப்பு. வசன உச்சரிப்பு நடையை தேர்வு செய்திருப்பது பொருத்தமானதாக இருக்கிறது. (ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு எல்லாம் தெரிகிறது. எல்லாம் புரிகிறது. பாலியல் தொழிலாளியின் சோகம் புரிகிறது. கலாட்டா செய்யும் இளைஞர்களின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து விரட்டத்தெரிகிறது. ஆனால் இடுப்பு பெல்ட்டை மட்டும் போடத்தெரியவில்லை என்பது நம்புகிற மாதிரி இல்லையே!).


மிக நீளமான காட்சி அமைப்புகள். அகண்ட திரையின் சாத்தியங்களை முழுமையாக பயன்படுத்தியிருக்கும் தரமான ஒளிப்பதிவு. அடுத்துவரும் காட்சி என்ன சொல்லப்போகிறதென்பதை துவக்க ஷாட்டிலேயே காட்டிவிடும் படிம உத்தி என நிறைய யோசித்து செதுக்கியிருக்கிறார்கள்..


எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.  கதையின் ஒரிஜினாலிட்டியைத்தவிர. ஜப்பான் திரைப்படமான ‘கிகுஜிரோ’வை தழுவி எடுக்கப்பட்டிருக்கிற கதை. அந்த படத்தில் வருவதைப்போன்றே பாட்டி-சிறுவன், மனநோயாளி-மோட்டார் சைக்கிள்காரர்கள்-நெடுஞ்சாலை பயணம்-காரில் வரும் திருமண தம்பதிகள், லாரி டிரைவர் என்று நிறைய்ய பாத்திரங்களையும் காட்சிகளையும் கதையின் மைய சரடையும் கிகுஜிரோவில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதை தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் மண்ணுக்கே உரிய தாய் செண்டிமெண்ட்டை தூக்கலாக்கி பிழிந்திருக்கிறார்கள். அதற்கு ராஜாவின் இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் பயன்பட்டிருக்கிறது.


இன்னும் விவாதிக்கவும் கேட்கவும் நிறைய கேள்விகள் படத்திற்குள் இருந்தாலும்... அதையும் மீறி, குடும்பத்துடன் சென்று பார்த்துவைக்க வேண்டிய படங்களில் நந்தலாலாவும் நிச்சயம் இடம்பெறும்.


ஒருவேளை ‘கிகுஜிரோ’வை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலோ, அல்லது பார்த்திருந்தாலும் ‘செலக்டிவ் அம்னீஷியா’ வந்து மறந்துவிட்டிருந்தாலோ, இந்த படத்தை இன்னும் நெருக்கமாக உணர முடியும். ஒரு படத்தை தழுவி படம் எடுப்பது (சினிமா பாஷையில் சொல்வதானால் ‘சுடுவது’) பெரிய பாவமில்லைதான். ஆனால் அது இந்த படத்தை தழுவியது என்பதை சொல்லிவிடுவதுதான் நாகரீகம். ஆனால் இந்தப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் இன்னமும் இதை தனது சொந்தக்கதைதான், சொந்த கற்பனைதான், சொந்த காட்சியமைப்புதான்,  சொந்த பாத்திர வடிவமைப்புதான் என்று சொல்லிக்கொண்டிருப்பதுதான் என்னவோ மாதிரியிருக்கிறது.


நந்தலாலா. பெரும்பகுதி... சொந்தலாலாயில்லை!


படம் முடிந்து வெளியில் வருகையில் எழுந்த கேள்வி இதுதான்....


‘இன்னும் எத்தனை நாளைக்குதான் பெண்களை தியாகத்தின் சின்னங்களாகவே காட்டி, அவர்களின் சுதந்திரத்தைத் தட்டிப்பறித்துக் கொண்டிருப்பீர்களோ?

6 comments:

 1. உங்கள் எண்ணம் போற்ற தகுந்ததே. ஆனால் அங்கே அந்த தாயை கெட்டவள் என்று நினைக்க வேண்டியது இல்லை. கெட்டவளாக இருந்தால் தண்டிக்க பட்டு இருப்பாள் இல்லையா அந்த இடத்தில. சிறுவனின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு தன தாய் நல்லவள் என்ற எண்ணம் கடைசி வரை ஒரு உறுத்தலாகவே இருக்கும். அதற்காகவாவது அதை இப்படி சொல்லுவது சரி என்றே படுகிறது.

  ReplyDelete
 2. அருமை நண்பர் கருணாவுக்கு! வாழ்த்துக்கள்.!நந்தலாலா படம் பார்க்கவில்லை.உங்கள் விமரிசனம் படித்தேன்.70அல்லது 72ம் ஆண்டுவாக்கில் மதுரையில் நடந்த காங்கிரசுக்கு மிகச்சிறந்த விமரிசகரான சிதன்சு தாஸ் குப்தா வ்ந்திருந்தார். காரை அனுப்பி சத்யஜித் அவரை அழைத்துவந்து படத்தப் போட்டுக்காட்டுவார்.அவர் விமரிசனத்திற்குப் பிறகுதான் படத்தை வெளியிடுவார் என்று கேள்விப்பட்டிறுக்கிறென்.அவர் சொன்னது"படைப்பை விமரிசிக்க வெண்டும்.சிற்பி ராமர் சிலையைச்செய்தால் அது ராமரை போல் இருக்கிறதா என்று விமரிசிக்கலாம் கிருஷ்ணர் சிலை செய்திருக்கலாம் என்பது யோசனையா.கதத்தான் இருக்கமுடியும்."என்றார்.பெண்களின் பாடுகள் பற்றிய உங்கள் எழுத்து பாராட்டுக்குறியது.உங்களை நினத்தால் பொறாமையாக இருக்கிறது.படங்களை உடனடியாக பார்க்கமுடிகிறதே!---காஸ்யபன்

  ReplyDelete
 3. நால் ரோடு ...

  தாய் நல்லவள் என்ற கற்பிதம் குறிதே கருணா கவலைப்படுகிறார்.. நீங்கள் அதனை கவனித்ததாக தெரியவில்லையே

  ReplyDelete
 4. காஸ்யபன், வருக தொடர் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிகள் ...

  ReplyDelete
 5. மதுராஜ் அவர்களே. அப்படியானதொரு முடிவுக்கு போகத் தேவையில்லை. திருமணம் என்ற சடங்கு தவிர்த்து, நண்பர்கள், இணைந்து வாழ்வதும் ஒரு மணமுறை என்றால் அப்படியான முறை இருக்கட்டுமே. அன்பு ஒரு "முன் நிபந்தனையாக" இருப்பது தவறில்லையே.

  ReplyDelete
 6. கிகுஜிரோ பார்த்துட்ேன். இந்த படம் இனிேல் தான் பார்க்கணும்..உண்மைனை ஒத்துக் கொண்டால் மிஷ்கினுக்கு சிறப்பு..

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)