தமிழில் மிக முக்கிய முயற்சி இது. நாளை முதல் இந்த புத்தகக் கண்காட்சிகள் ஒரு வாரம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்கி அதை மக்களிடையே கொண்டு செல்லும் இயக்கம் தேசீய புத்தக வாரமாக கொண்டாடப்படுகிறது.
தேசீய புத்தக வாரம் முதன்முதலாக 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்டது. 1936ல் உலக அளவில் ஒரு இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1939களில் கிறிஸ்துவ கத்தோலிக்கத் திருச்சபையினரால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் முயற்சியினால் தேசீய புத்தக வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அரசு நிறுவனமான ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துகிறது. புத்தகங்களை வெளியிடுவதுடன், அந்த ஆண்டுக்கான கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு, நாவல் போன்ற தலைப்புகளில் புத்தகங்களுக்குப் பரிசளிக்கப்படுகிறது.
தேசீயப் புத்தக வாரத்தைக் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு பாரதி புத்தகாலயம் தமிழகம் முழுவதும் நவமபர் 14 முதல் 20ம் தேதி வரை நிகழ்த்துகிறது. புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதுடன், குழந்தைப் பருவத்திலிருந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், அந்த வாசிப்பின் மூலம் குழந்தைகளிடம் மனதையும், அறிவையும் விசாலப்படுத்தவுமான ஒரு முயற்சி இது.
இதற்கென ஏராளமான குழந்தைகளுக்கான புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படக்கதைகள், சிறுவர் நூல்கள், அறிவியல் களஞ்சியங்கள் என தொகுக்கப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான புத்தகங்கள்:
குட்டி இளவரசன் - அந்த்வர்ன் து செந்த் - தமிழில்: யூமா வாசுகி
நம்பர் பூதம் (கணக்கிற்குள் ஒரு அட்வென்ச்சர்) ஹான்ஸ் மாக்னஸ் என்சென்ஸ்பெர்கர்- தமிழில்: இரா.நடராசன்
பூமிக்கு வந்த விருந்தினர்கள் - ஜானு - தமிழில்: யூமா வாசுகி
கப்பலில் போகும் கனவுப் பயணம் - ரஸ்கின் பாண்ட் : தமிழில் : சொ.பிரபாகரன்
கடவுளைப் பார்த்தவனின் கதை - டால்ஸ்டாய் : தமிழில் : பாலு சத்யா
முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
டாக்டர் டுவிட்டலும் வினோத விலங்குகளும் - ஹூ லாபிங் - தமிழில் : கூந்தலிங்கம்
ஒற்றைக்கால் நண்டு - பய்யனூர் குஞ்ஞிராமன் - தமிழில் : யூமா வாசுகி
ஆயிஷா - இரா. நடராசன்
நீ எறும்புகளை நேசிக்கிறியா - இரா.நடராசன்
உலக பெண் விஞ்ஞானிகள் - இரா.நடராசன்
பிள்ளை பெற்ற பெரியசாமி - தமிழ்ச்செல்வன்
கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஒரு குமிழியின் கதை - கே.கே.கிருஷ்ணகுமார்
நிலாவும் குரங்குகளும் - செ.யோகநாதன்
தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - கழனியூரான்
கழுதையின் கதை - சிவதாஸ்
இன்னும் இன்னும் ஏராளமாய்....
புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடங்கள்
சென்னை - 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
ஈரோடு - 39, ஸ்டேட் பாங்க் சாலை
திருநெல்வேலி - 25A ராஜேந்திரன் முதல் தெரு
தஞ்சாவூர் - காந்திஜி வணிக வளாகம், காந்திஜி சாலை
வேலூர் - எஸ்.பி.பிளாசா, 264, பேஸ் II, சத்துவாச்சாரி
விழுப்புரம் - 261, பவானி தெரு
கடலூர் - பஜார், ஜீவா மார்க்கெட், பழைய அண்ணா பாலம்
மதுரை - 37A பெரியார் பேருந்து நிலையம்
சேலம் : பாலம், 1, திருநாவுக்கரசர் தெரு, அத்வைத ஆசிரம சாலை
செங்கல்பட்டு - VPC நூலகம். 1 டி, ஜி.எஸ்.டி சாலை
புதுக்கோட்டை - பூபாளம் புத்தகப் பண்ணை, வடக்கு ராஜா வீதி
திருப்பூர் - பின்னல் புத்தகாலாயம், 447, அவினாசி சாலை
பாரதி புத்தகாலயத்தின் இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்...
0 comments:
Post a Comment