Wednesday, November 10, 2010

யார் ஏகாதிபத்தியம்? - தினமணி தலையங்கத்திற்கு விமர்சனம்



அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை வரவேற்று தினமணி நாளேட்டில் திங்கட்கிழமை 8ம் தேதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகளிடையே வெளியுறவுத் துறையில் அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் சீனாவை ஏகாதிபத்தியமாக வரையறுத்து தினமணி நாளேடு எழுதியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சீன "ஏகாதிபத்திய" அரசியல் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா என்ற "ஜனநாயக" நாட்டோடு இந்தியா என்ற ஜனநாயக நாடு இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?

ஏகாதிபத்தியம் என்ற சொல்லையும், அதன் பொருளையும் புரிந்து கொண்டு தான் தினமணி இதை எழுதியிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக ஏகாதிபத்தியம் என்ற சொல்லை வேறு யாரையும் விட இடதுசாரிகள் அடிப்படை அரசியல் சொல்லாடலாக, அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஏகாதிபத்தியம் என்பதற்கு அர்த்தம் என்ன? எல்லா விதத்திலும் உலகில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனப்பாங்கைக் குறிப்பது தான் ஏகாதிபத்தியம் என்ற சொல். அமெரிக்காவைப் பொருத்தவரை பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, ராணுவரீதியாக உலக அளவில் வல்லாண்மை செலுத்துகிறது என்பதையும், அதை மென்மேலும் தக்கவைத்து விரிவுபடுத்திச் செல்ல எல்லாவித முயற்சிகளையும் செய்து வருகிறது என்பதையும் அதன் வரலாறே மெய்ப்பித்து வருகிறது.

அது ஈராக் ஆக்கிரமிப்பாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் யுத்தமாக இருக்கட்டும் அல்லது கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தன்னந்தனியாக (இஸ்ரேல் என்ற ஒரேயொரு யூத நாட்டின் ஆதரவை மட்டுமே கொண்டு) கியூபா மீதான பொருளாதாரத் தடையை 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிப்பதாக இருந்தாலும் சரி, ஈரான் உள்பட பல நாடுகளையும் தானடித்த மூப்பாக மிரட்டுவதாக இருந்தாலும் சரி அதன் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளில் என்ன ஜனநாயகம் வாழ்கிறது? விக்கிலீக்ஸ் அண்மையில் வெளிப்படுத்திய ஒரு சொட்டுத் தகவல் போல, அமெரிக்காவின் மறுபக்கத்தைப் பற்றி வெளி வராத எண்ணற்ற விபரங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அதன் அதிகாரப்பூர்வ செயல்பாடே ஏகாதிபத்திய குணத்தை வெளிப்படுத்தவில்லையா?

மக்கள் ஓட்டுப் போட்டு அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அமெரிக்காவை ஜனநாயக நாடு என்று தினமணி வரையறுப்பது எந்தவிதத்தில் நியாயம்? அமெரிக்காவின் வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் எவரும் எளிதில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். தனது சுயநலனைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித தார்மீக நெறிமுறைக்கும் உட்படாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளும் குணம் கொண்டது அமெரிக்கா என்பதே அது!

இப்படிப்பட்ட ஒரு நாட்டை ஜனநாயக நாடாக கற்பிதம் செய்தும், சோசலிசப் பாதையில் நடைபோடும் மக்கள் சீனத்தை ஏகாதிபத்தியம் என்று மாற்றிச் சொல்வதும் அடிப்படை உண்மையை நேர் எதிர் நிலையில் வைத்துப் பேசுவதாக உள்ளது. அதாவது ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராக ஜனநாயக இந்தியா, மக்கள் சீனத்துடன் நட்புடன் செயல்பட வேண்டும் என்று சொல்வதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் பேசுகிறது தினமணி
.
ஏன் இப்படிப் பேச வேண்டும்? மேலே சொல்லியிருக்கும் ஏகாதிபத்திய வரையறைப்படி சீனாவை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச நியாயம் ஏதாவது இருக்கிறதா? இன்று சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வல்லமை பெற்று வளர்ந்து வருகிறதென்றால், ஊரையடித்து உளையில் போட்ட அமெரிக்கப் பாணியிலா சாதித்தது? அந்த நாட்டின் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்கி, உள்நாட்டு உற்பத்தியையும், உள்நாட்டுச் சந்தையையும் வலுப்படுத்தி அதற்கேற்ப அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளுடன் பொருளாதார உறவு கொண்டு செயல்படுகிறது. வளர்ச்சியின் பலன்கள் கடைக்கோடி சீனர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் சீன அரசு சோசலிச பாதையில் நடைபோட்டு இந்த வளர்ச்சியைச் சாதித்துள்ளது. அதற்கேற்ற வெளியுறவுக் கொள்கையைச் சீனா கடைப்பிடிக்கிறது.

உலகிலேயே அதிக இயற்கை வளம் கொழிக்கும் ஆப்பிரிக்க கண்டத்தை இதுவரையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிக் கொழுத்தது தான் வரலாறு. பட்டினிச் சாவு, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள், எங்கனும் அரசியல் குழப்பம், இனச் சண்டைகள் என்று சீரழிந்து கிடக்கும் ஆப்பிரிக்க கண்டத்து ஏழை நாடுகளை செல்வச் சீமானாக, நாகரீகக் கோமானாக வலம் வரும் அமெரிக்காவோ, வேறெந்த வளர்ந்த ஐரோப்பிய நாடுகளோ கனிவோடு கவனித்ததுண்டா?

அந்த நாடுகளில் அரசியல் அடிவருடிகளை கொண்டு பொம்மை ஆட்சிகளை நிறுவி இயற்கை வளங்களை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் ஒட்டச்சுரண்டியது தானே இன்று வரையும் தொடர்ந்து வரும் வரலாறு! அந்த நாடுகளின் வறுமையைப் போக்கவும், தொழில், வர்த்தகத்தைப் பெருக்கவும், கட்டமைப்பு வசதிகளைச் செய்யவும் என்று பல ஆயிரம் கோடி டாலர்களை அள்ளிக் கொடுக்கும் விதத்தில் ஆப்பிரிக்க ஏழை நாடுகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி அங்கெல்லாம் மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில், வரலாறு படைத்திருப்பது மக்கள் சீனம் தான் என்பது தெரியுமா? இந்த நிலையில் சீனாவின் நடவடிக்கையில் ஏகாதிபத்தியப் போக்கு எங்கே தென்படுகிறது?

சொந்த நாட்டின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அண்டை நாட்டைச் சூரையாடுவதற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு தான் சீனாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அந்த இரு நாடுகளின் வரலாறுமே இதை தெளிவாக உறுதிப்படுத்தும். இந்த உண்மையை ஏற்க மறுப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

இந்தியா அமெரிக்காவுடன் உறவு கொள்வதா, சீனாவுடன் உறவு கொள்வதா என்ற கேள்விக்கு பட்டிமன்ற தர்க்கம் தேவையில்லை. எந்த நாட்டோடு உறவு கொண்டாலும் நம் நாட்டின் தற்சார்பு, தன்னாளுமை, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறதா, இல்லையா என்பது தான் முக்கிய அளவுகோல். இந்தியா என்ற தேசத்தின் மையமான இந்த அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுமானால் அந்த நாட்டோடு உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்க முடியும்?
அதன்படி பார்த்தால் அண்மையில் நிறைவேற்றியிருக்கும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாக இருந்தாலும், அணுவிபத்து இழப்பீடு சட்டமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் அணுகுமுறை நமது மையமான சுதந்திர செயல்பாட்டை கேலி செய்து முடக்குவதாக இருக்கிறது என்பது தானே உண்மை.

போபால் யூனியன் கார்பைடு விஷவாயு வழக்கு கால் நூற்றாண்டு காலம் நடந்தும் அந்த விபத்தில் கொல்லப்பட்ட 25 ஆயிரம் இந்தியர்களுக்கும், கடுமையான இழப்பு, பாதிப்புகளைச் சந்தித்து இன்றளவும் சித்திரவதை அனுபவிக்கும் பல்லாயிரம் பேருக்கும் என்ன நீதி வழங்க முடிந்திருக்கிறது நம்மால்? அமெரிக்க பேரரசின் குடிமகனான ஒரேயொரு ஆண்டர்சனைக் கூட நம் அரசமைப்பு நீதி முறையில் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை என்றால், தன்மானமுள்ள இந்தியர்கள் இதை எப்படிச் சகிப்பது? இதைக் கேட்கக் கூட திராணியற்றவர்களாக நம் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் இந்தியாவின் சுதந்திர செயல்பாடு, தன்னாளுமை காக்கப்படுகிறதா? இல்லையே!

இவ்வளவுக்கும் பிறகு இருபெரும் ஜனநாயகங்கள் என்ற போர்வையில் அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்க்க நம் ஆட்சியாளர்கள் துடியாய்த் துடிப்பது ஏன்? தினமணி தலையங்கத்தின் இறுதிப் பகுதியில் குறிக்கப்பட்டிருப்பது போல அமெரிக்கா அந்த நாட்டின் பன்னாட்டு வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகச் செயல்படுவது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு மறுக்க முடியாத உண்மை இந்திய ஆட்சியாளர்களும் இங்குள்ள பெரு முதலாளிகள், வர்த்தக சூதாடிகளுக்காகச் செயல்படுகிறார்கள் என்பதுமாகும். இந்த ஏகபோக பெருமுதலாளிக் கூட்டம் அமெரிக்க பன்னாட்டுப் பெரு வர்த்தகக் கூட்டத்தோடு கைகோர்ப்பது தங்களுக்கு ஆதாயம் என்று கருதுகிறது. அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு நலனைப் பற்றியோ அதாவது இங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியோ வேறு பார்வையேதும் இல்லை. தங்கள் ஆதாயம் தான் மையமான நோக்கம். அதற்கேற்பத் தான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இதன் உள்ளே இருக்கும் மெய்ப்பாடு. 

இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழலில் அமெரிக்க பன்னாட்டுப் பெரு வர்த்தகக் குழுமத்திற்கும் இதேபோல் ஆதாயம் இருக்கிறது என்பதால் தான் அமெரிக்கா இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் கால் பதிப்பதன் மூலம் அமெரிக்காவின் வால்மார்ட் பெரு நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. அதற்கு ஏற்பத் தான் நம் ஆட்சியாளர்களும் நடந்து கொள்கிறார்கள்.

அமெரிக்காவின் ஆயுத வியாபாரிகள் தங்கள் ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்பதற்காகத் தான் சீனாவின் மூலம் இந்தியாவிற்கு ஆபத்து என்ற செயற்கைத் தோற்றத்தை அமெரிக்க அதிகாரவர்க்கம், பெரும் கார்ப்ரேட் ஊடகங்கள் மூலம் விதைக்கின்றனர். அதையே அமெரிக்க ஆதரவு இந்தியப் பெருமுதலாளிப் பத்திரிகைகள் கருத்துக்கள் என்ற பெயரில் விஷத்தை கொட்டி எழுதுகின்றன. அண்மையில் சீனா எல்லையில் போர் தயாரிப்பில் ஈடுபட்டதாக எழுதி இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரிக்கப்பட்டதும், அப்படி எதுவும் இல்லை என பிற்பாடு இந்திய அரசே மறுப்பு வெளியிட்டதும் இங்கே நினைவுகூரத் தக்கது.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை தனது நட்பு நாடுகளாக்கி இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா என்று கூசாமல் எழுதும் தினமணி, இதே நாடுகளில் இன்றளவும் அமெரிக்க அரசு அரங்கேற்றி வரும் நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? இந்த விசயத்தில் இதே தலையங்கத்தில் முற்பாதியில் சீன நட்பு நாடகள் என எழுதியதையே பிற்பாதியில் அமெரிக்க நட்பு நாடுகள் என மாற்றிமாற்றி எழுதி தனக்குள்ளேயே முரண்பட்டு நிற்கிறது இந்தத் தலையங்கம்.

இந்தியா சுதந்திரம் பெற்று ஓராண்டு கழித்துத் தான் சீனாவும் விடுதலை அடைந்தது. ஒப்பளவில் ஒரே சமயத்தில் அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற இரு நாடுகளும் இன்று எந்தப் பாதையில் பயணிக்கின்றன? சீனா ஏன் அனைத்துத் துறைகளிலும் கம்பீரமாகச் சாதித்து வருகிறது? இந்தியா ஏன் அந்தளவுக்கு சாதிக்க முடியவில்லை? வறுமை ஒழிப்பிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், நுகர்விலும், விளையாட்டுத் துறையிலும் ஆக பெரும் புரட்சியே நடத்தி வரும் சீனாவுடன், இன்றும் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே செலவிடக்கூடிய நிலையில் எம் மக்கள் 84 கோடி பேர் இருக்கிறார்கள் என்ற இந்தியாவின் நிலையையும், இது போன்றே பொருளாதாரம், பண்பாடு, விளையாட்டு என எல்லா துறைகளிலும் இருநாடுகளும் எப்படிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன? என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி நியாயமான விடை காண ஒரு நடுநிலை நாளேடு என்ற முறையில் தினமணி முன்வர வேண்டும். முன்வருவார்களா?



6 comments:

  1. உண்மையிலேயே நல்ல பதிவு .. காலத்திற்கு மிக அவசியமான பதிவும் கூட ...

    ReplyDelete
  2. ஆம், உண்மையிலேயே அருமையான பதிவு.

    ReplyDelete
  3. நாளிதழ்களின் தலையங்கங்கள் எப்போர்துமே ஒருதலைபட்சமாகவே இருக்கின்றன. தான் சார்ந்து இருக்கும் சமுகத்தை தூக்கி பிடிக்கும் ஒரு ஆயுதமாகவே நான் தலையங்கங்களை பார்க்கிறேன். இதில் ஆனந்த விகடன், தினமணி மற்றும் தினமலம் என்று எதுவும் விதிவிலக்கல்ல

    ReplyDelete
  4. முசமில் இத்ரூஸ்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    சிந்தன்!
    நன்றி.

    அசோகன்!
    பகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி.


    இலயாஸ்.மு!
    உண்மைதான். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. please refer this and revert me
    http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_29.html

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)