"urgent. see sun news channel"
புதிதாகத் திருமணமாகிய என் தோழி அனுப்பியிருந்தால், தாயாகப் போகிறவள், எனவே அந்தச் செய்தி அவளுக்கு இனிப்பாக இருந்திருக்க வேண்டும். தொலைக்காட்சியை திருப்பினேன், ”சற்று முன்” ”சுட்டுக்கொலை” என மாற்றி, மாற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள்.
விசயத்தை விளக்க வேண்டியதில்லை, கோவையைக் கலங்கடித்த, நம் நெஞ்சங்களைப் பதறச்செய்த குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு, தமிழக காவல்துறையே மரண தண்டனை கொடுத்திருந்தது. குழந்தைகளைக் கொன்றவனைக் கொல்வது தவறா? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்பவில்லை. அது அவசியமும் இல்லை.
ஆனால் மேலும் சில கேள்விகள் எழாமலில்லை.
நிதானமாகப் படியுங்கள்... (இது கேள்வித்தாள் அல்ல)
"ஒரு வேன் ஓட்டுனரை குழந்தைக் கடத்தல்காரனாக மாற்றியது எது?"
"ஏன் சமீபத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன?"
இதற்கு காரணம் “குறுகிய காலத்தில் பணக்காரனாக எதையும் செய்யலாம்” என்று, சமுதாயத்தின் பொதுப்புத்தியில் ஏற்றபட்டுள்ள எண்ணமில்லையா?
ஊரையடித்து உலையில் போட்டு சிலர் லட்சம் கோடிகளுக்கு அதிபதியானால், அவர்களே நாயகனாகக் காட்டும் ஊடகங்களுக்கு இதில் பங்கில்லையா?
கொள்ளையடிப்பதை சட்டப்படியானதாக்கும் ஆன் லைன் வர்த்தகத்தையும், பங்குச்சந்தைகளையும் ஊட்டி வளர்க்கின்ற இந்திய அரசின் கொள்கைக்கும் இதில் பங்கு இல்லையா?
”மனிதமே வாழும்” என்ற நிலையை உருவாக்கக் கேட்டால் “வலுத்தவன் வாழ்வான்” என்பதே நியதியென வறட்டுச் சித்தாந்தம் பேசும் நம்மில் சிலருக்கு இதில் பங்கு இல்லையா?
இத்தனை கேள்விகளும் உங்களை யோசிக்கச் செய்யலாம், ஆனால், செயலில் இறங்கி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்க விடமாட்டார்கள் இதனை முடிவாகவே சொல்கிறேன். ஏனெனில், நமக்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. நாம் அந்த வரிசையை எப்போது மீறப்போகிறோம்?
கடந்த சில மாதங்களை எண்ணிப்பாருங்கள் ...
ஆர்.எழுத்து நடிகை யார்? எனக் கேட்டார்கள். முகம் காட்டினார்கள், தேவையெனில் முழுதும் கூட காட்டுவார்கள் அதோடு மறக்கடித்து விட்டார்கள். மத்திய அரசின் ஊழல் பற்றி பேசினால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்றார்கள். இட ஒதுக்கீடு பற்றி பேசும்போதே அடுத்த செய்திக்கு தாவிட்டார்கள்
இப்போது நடந்ததும் அதுதான்... மத்திய திமுக அமைச்சர் ஊழல் குறித்த விரிவான செய்திகள் வந்தபோது - என்கவுண்டர் நடத்திவிட்டார்கள்.
குழந்தைகள் கொலைமட்டுமா? இந்த சமூகத்தில் எத்தனை கொலை பாதகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன... உங்களுக்குத் தெரியாததில்லை. சுதந்திரமடைந்து பொன்விழாக்கண்ட நம் தேசத்தில் பெரும்பாலான குழந்தைகள் சவலைகளாகவே தொடர்கிறார்கள். எடை குறைவானவர்களாக, உயரம் குறைந்தவர்களாக சத்துக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். சத்துக்குறைவு மூளையின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் அவர்களின் கல்வியில், சமச்சீரற்ற போட்டி நிலை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சத்துக்குறைவினால் இந்தியாவில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் வருடத்திற்கு 2 லட்சம் பேர் செத்து மடிகிறார்கள். (ஆதாரம்: ஐக்கிய நாடுகள் சபை ஆரோக்கியமான குழந்தைகள் குறித்த அறிக்கை) அதாவது, ஒரு சிறு நகரமே பூண்டோடு அழிக்கப்பட்டு, மயானங்களில் புதைக்கப்பட்டு விடுகிறது. குழந்தைக் கடத்தல் சம்பவம் போன்ற கொலை பாதகங்களை கண்டு துடிக்கும் நம் நாட்டு மக்களுக்கு, அனுதினமும் நடந்துகொண்டிருக்கும் இதுபோன்ற உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
இப்போது எழுந்திருக்கும் கோபம் தவறானதல்ல, ஆனால் எப்போதும் அது எழுகிறதா. கோபத்தை சரியான திசையில் திருப்பியிருக்கிறோமா?. ஆட்சியாளர்களின் சட்டையை உலுக்கி ... ஏன்? என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறோமா?
நம் சமூகத்தின் தலைமை எப்போதும் யோக்கியவான்கள் கையில் இருந்ததேயில்லை. அது அகிம்சை பேசிய காந்தியாக இருக்கட்டும், இல்லை மாவீரன் பகத்சிங்காக இருக்கட்டும். அவர்களின் முடிவை தூக்குக் கயிரும், தோட்டாக்களுமே முத்தமிடும். செத்து மடிந்தது மனிதர்கள் மட்டுமா? எத்தனை கனவுகளை நாம் தொலைத்திருக்கிறோம்? பெருந்தனக்காரர்கள் உண்டு கொழுப்பதற்காய் எத்தனை நதிகளைக் காவு கொடுத்திருக்கிறோம்? எத்தனை குடிசைகள் தீயில் அழிந்தாயிற்று?
அத்தனை கோபங்களும் என்ன ஆனது? கேள்விகளுக்கு முடிவே கிடையாது...
திரும்பவும் பிரச்சனைக்கு வரலாம் ... ஏற்பட்டுள்ள புண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் தீர்வேது?. ஒரு கொலை, ஒரு மனிதனை அழிக்கலாம். ஊற்றுக்கண்ணாக இருக்கும் சூழலை மாற்றுவது யார்?. கொடுமைகளைச் சகித்துக்கொண்டேயிருந்தால், மாற்றத்தை எப்போது சாதிப்பது.
ஒரு உண்மை ஒலித்துக் கொண்டேயிருக்கிறது, “தோட்டாக்களின் மருந்து என்றும் புண்ணை ஆற்றியதேயில்லை !”
சரியான கேள்விகல். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியதிருக்கிறது. சொல்வேன் நாளை..
ReplyDeleteவாதம் சரியே! இடம்தான் சரியல்ல! உங்களின் வாதத்தை விளக்கும் இடம், இந்த சம்பவமல்ல!
ReplyDelete//“தோட்டாக்களின் மருந்து என்றும் புண்ணை ஆற்றியதேயில்லை !”//
ReplyDeleteஆம்.... அடிப்படையில் சமுகம் மாற வேண்டும் .. என்றும் உணர்ந்து செயல் படும் கல்வி பெற அனைவரும் முனைய வேண்டும். வாழ்த்துக்கள்
neengal koorum vishayam sariyanadhuthaan aanal indru ella thuraigalilum oolal nadakiradhu adhai naam sila natkal mattumae ninaivil vaithirukirom ...
ReplyDelete"maradhi nam desia viyathi"
`தன்னலம் (சுயநலம்) என்பது ஒர் அருவருப்பான சொல்லாய் இருந்தது. இப்போது மந்திரச் சொல்லாய் மாறிவிட்டது. ஊடகமும், போலி சுவாமிகளும், கார்பரேட் கம்பனிகளும், அரசியல் தலைமைகளும் அதை ஆர்ஜிதம் செய்கின்றன. தியாகம், விட்டுக் கொடுத்தல் போன்றவை பழங்கதையாகி, ஏமாளிக்கான இலக்கணமாகிவிட்டன. அடுப்பின் மீதுள்ள அண்டாத் தண்ணீரில் குதுகலிக்கும் தவளைக்கு, அதைச் சிறுகச் சிறுகக் சூடேற்றி சமைக்கப் போகிறார்கள் என்ற உண்மை அறியாத முட்டாள் தவளைகளாய் தான் நாம் இருக்கிறோம். அந்நிய கம்பனிகளின் சூடு இப்போது இதமாய் தான் இருக்கிறது.
ReplyDeleteமாதவராஜ்!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
ரம்மி!
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறோம். ஆனால் உணர்வுகளை மட்டுமே வைத்து மதிப்பீடுகள் செய்வதும், மௌனம் சாதிப்பதும் சரியல்லவே.
மதுரை சரவணன்!
சரியாகச் சொன்னீர்கள்.
அசோக்!
மறதி நம் தேச வியாதி மட்டுமல்ல. இதுதான் ஆள்பவர்களுக்கான பெரும் மூலதனமும்!
வாசன்!
உண்மைதான். ஆனால் இப்போதும் இதமாய் ஒன்றும் இல்லையே. சூடு, சொரணையும் இல்லை போலும்.
உங்களின் வாதமும், ஆதங்கமும் சரிதான்.. ஆனால் அடிப்படையில் எடுத்துக்கொண்ட சம்பவம் வேறாக இருந்திருக்கலாம்...
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள்..!
http://natputanramesh.blogspot.com/2011/02/blog-post.html
ReplyDeleteநல்ல பதிவு என்கவுன்டர் குறித்த எனது பதிவு