ஆனால் இதுதான் உண்மை. வாழும் பெரியார் என்று அழைக்கப்படுகிறவரும், அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.
சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது |
இந்த அடக்குமுறையை எதிர்த்து 12 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் வரும் டிச.3 ஆம் தேதி விடுதலையடைகிறார் ”டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்.”
ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வுசெய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.
ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர். நாட்டின் இன்ன பிற பகுதிகளைப் போல அல்லாமல், தமிழகத்திலோ படம் வெளியாகவேயில்லை. தமிழகத்தின் சில பகுதிகளில் சாதிக் கலவரங்கள் நடந்திருந்ததால் சட்டம் ஒழுங்கு கருதி இப்படத்தை சில காலம் கழித்து வெளியிடலாம் என்று அரசு நிர்வாகத்தினர் தள்ளிப் போட்டார்கள். எந்திரன் படம் பார்த்தெல்லாம் கருத்தும், வாழ்த்தும் சொல்லத் தெரிந்த தமிழக முதல்வரின் கவனத்துக்கு அம்பேத்கர் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை வராமல் போயிருக்கலாம்.
பாம்புச் சுருள்போல நீண்டிருக்கும் படச்சுருள் மொழியாக்கம் செய்வதற்கு பணம் இல்லாமலும், பணம் ஒதுக்கப்பட்ட பின்னர், 2010 வரை 6 ஆண்டுகள் பெட்டிக்குள் தூங்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர் சத்யச்சந்திரன், என்பவர் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு அம்பேத்கர் படத்தை வெளியிடக் கோரி மனுச்செய்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் வராததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் 2007ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த தினத்தில் படம் வெளியிடப்படவேண்டும் என்று தீர்ப்பானது. படம் வெளியானதா? இல்லை.
“சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மனுநீதியே கோலோச்சிகிறான். தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாக மீண்டும் முறையீடு செய்தபோது, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தினர் ஆஜரானார்கள். “படத்தின் பதிப்புகள் சிதைந்திருப்பதால் மூலப்பிரதியைப் பெற்று அதனைச் சரி செய்திருக்கிறோம்.” என்று காரணம் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து இறுதியாக வரும் டிச.3 ஆம் தேதி, அம்பேத்கர் நினைவு தினத்தில் படம் வெளியாகவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.
10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.
எடிட்டிர் லெனின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் என்.எப்.டி.சி துணை மேலாளர் டி.ராமகிருஷ்ணனை சந்தித்து படம் வெளிவருவதற்கு ஆதரவினையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் படம் குறித்த தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வது திட்டமிட்டு வருகின்றனர்.
அம்பேத்கர் படம் குறித்த செய்திகளையும், தகவல்களையும் பரவலாக்குவோம் நண்பர்களே!

டிசம்பர் 3லாவது தங்குதடையின்றி இப்படம் வெளியிடப்படவேண்டும்.. நிச்சயம் ஆகவேண்டும்.. நல்ல மனிதரை திரைமூலமும் நாம் அறியவேண்டும்..
ReplyDeleteஅவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் விளம்பரங்களோ, தகவல்களோ வராது. நாம்தான் கொண்டு செல்ல வேண்டும்.
அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇங்கு தந்தைபெரியாரின் படத்தை எடுக்கிறார்கள், மகாகவியின் படத்தையும் எடுக்கிறார்கள் நல்லதுதான், ஆனால் எடுக்கப்பட்ட அம்பேத்கர் குறித்த ஆவணத்தை ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்.
ReplyDeleteதலித்களின் காவலன் என்று சொல்லிக்கொள்வோர் ஒருவர் கூட போராட்டம் இல்லை கோரிக்கையாவது வைத்தார்களா?
உண்மையாக இங்கு அந்தப் படத்தை நிச்சயமாக திரையிடுவார்களா என்பது ஐயமாகத்தான் உள்ளது.
@ பாலாசி!
ReplyDeleteதங்கள் ஆதரவுக்கும், ஆசைக்கும் நன்றி.
@மாதவராஜ்!
செய்வோம் தோழரே!
@சிவதரிசன்!
வருகை தந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி.
@ஹரிஹரண்!
சில தலித் அமைப்புகள் முயற்சிகள் எடுத்திருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் இது.
good article comrade..
ReplyDeleteமதுசூதன்!
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
karunanithis mafia is interested only in making money by corruption
ReplyDeleteand protecting the interest of kanImozhi and Rajathi AMMAL. THE only dalit they are interested is A.Rasa whose concubine is Kanimozhi
and who has looted crores for Karunanithis family.