Wednesday, June 12, 2013

இலக்கியங்களில் - சாதிய நச்சுப் புகுத்தல் ... (சமகால அரசியலை முன்வைத்த மீள்பார்வை)

நன்றி: ஹாசிப்கான், விகடன்
உலக வரலாறுகள் அனைத்தும் வர்க்க போராட்டங்களின் வரலாரேயாகும் என்றார் மார்க்ஸ்.மார்க்சின் இந்த மேற்கோள்  உண்மைதான் என்றபோதிலும் இந்திய சமூகத்திற்கு எப்படி இது பொருந்தி வருகிறது என்பது தான் நம்மிடையேயான கேள்வி?  

ஐரோப்பிய நாடுகளில் நீராவி மற்றும் இன்னபிற எரிசக்திகள் கண்டுபிடித்ததின் பயனாக தொழிற்சாலைகள் தோன்றலாயின இதன் காரணமாக நேரம் காலம் பாராமல் கட்டாயத்தின் பேரில் விளைநிலங்களில் தன்  உழைப்பை செலுத்தி வந்த ஆப்பரிக்க ஐரோப்பிய சமூகம் தன்  மீதான உழைப்பு சுரண்டலிலிருந்து சிறிதளவேனும் மீளுவதற்கான ஒரு போராட்ட உத்தியாகத்தான்  நகரங்களில் உருவாகிவந்த தொழிற்சாலைகளை நோக்கி நகரத்துவங்கினர் (UNCLE TOM'S CABIN நாவலில் வருவது போல) நேரடியாக தொழிற்சாலைகளில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே  வேலைக்கு செல்லும் நிலை உருவானது இதைத்தான் முதலாளித்துவத்தின் சிறப்பாகவும் பாட்டாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவம் செய்த ஒரே நன்மை எனவும் மார்க்ஸ் மேற்கோள்காட்டுகிறார்.

ஆனால் இந்திய சமூகத்தில் அப்படி ஒரேயடியாக விளைநிலத்திலிருந்து விடுபட்டு தொழிற்சாலைகளுக்கும் அதன் நவீன உற்பத்தி முறைக்கும் மக்கள் மாறிவிடவில்லை.விவசாயத்தில் இருந்து விடுபட்டும் விடுபடாமலும்(மிச்சசொச்சம்) புதிய உற்பத்தி முறைக்கு இடம்மாறத்துவங்கினர்.இதுபோன்ற இடமாற்றத்தின் விளைவுகளால் நிலம் சார்ந்த ஆதிக்க முறை முற்றுமுழுதாக அழியாத நிலையில் தான் முதலாளித்துவம் தனக்கான வளர்ச்சி பாதையை நோக்கி நகரத்துவங்கின அதாவது நிலபிரபுத்துவம் முழுதாக அழிவுராமலேயே முதலாளித்துவமும் வளர்ச்சியடைந்தது என்பததைத்தான் இந்திய சமூகத்திற்கான பிரத்யேக நிலையாக வராலாற்றாளர்கள் முன்வைக்கிறார்கள்.இதுபோன்ற வளர்ச்சிப்போக்கின் காரணமாகவே பண்ணையடிமை முறை நவீன வடிவம் பெற்று புதிய ஒடுக்கு முறையாக உருப்பெற துவங்கியது.

ஆதி நாட்களில் இனக்குழுக்களுக்கிடையேயான முரண்பாடு நமபிக்கையின் பேரிலும் அதிகாரத்தின் பேரிலும் ஒடுக்கப்பட்டு வந்தது .காலப்போக்கில் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிலத்திலிருந்து உற்பத்தியாகிய பொருட்களும் வேற்று குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட யாவும் மனித வாழ்வின் உடமையாக உருமாறியது.ஆரம்பகட்ட ஆசை பேராசையாக உருமாறி பிறக்குழுக்களை போரிட்டு வேன்றதோடில்லாமல் விவசாய வேலைகளுக்காக போரில் தோற்ற அடிமைகளை பயன்படுத்தி வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.உயிர்வாழ்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஏற்பட்ட தேக்கநிலை தான் வாழ்வியல் ஏற்றத்தாழ்வாக உருவாகத் துவங்கியது.
மேலும் இதுபோன்ற அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதில் ஏற்பட்ட காரணங்கள் தான் ஆரம்பகால  பாகுபாடாக பரிணமிக்க துவங்கியது.பின்னாளில் வணிக வர்க்கம் உருவானபோது மேலும் இது புதுவடிவம் பெற்று பொருளாதார ஏற்றத்தாழ்வாக உருவாகின்றது.இது வாழ்வின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் துவங்கி பின் ஏற்ற இறக்கமான பாகுபாடாக வலுவடைந்தது.அனாலும் இது தீண்டாமையாக கருதப்படவில்லை மாறாக தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் ஏறபட்ட நிராசை என்றளவில் இருந்தது.

அனேகமாக இந்த காலகட்டம் தான் சங்க காலமாக கருதப்பட்டது.இக்கால கட்டத்தின் வாழ்வியல் முறை அதன் கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்க துவங்கியதன் விளைவாகத்தான் சங்கம் போற்றிய 'குறுந்தொகை'யில் 

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் 
செம்புலப் பெயல்நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"  
எனும் பாடல் நமக்கு சொல்கின்ற செய்தி யாதெனில் ஏற்றத்தாழ்வு பாராத நல்லிணக்கத்தை பேணுகின்ற  வகையிலான சமூக போக்கு அக்காலகட்டத்தில் நிலவி இருக்கிறது  என்பதற்கான சான்று தான் சங்க இலக்கிய  பாடல் வரிகளிலும் பிரதிபலித்திருக்கிறது.குறிப்பாக இந்த வரிகளில் சாதி எனும் சொல்லாடல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.பாகுபாடு இருந்ததே தவிர தீண்டாமையாக அது சங்ககாலத்தில் உருவாகி இருக்கவில்லை என்பதற்கு மேற்கண்ட வரிகள் மிகசிறந்ததொரு உதாரணமாகும்.

பின் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு மண்சார்ந்த பூர்வகுடிகளின் வாழ்வியல் முறை வந்தேறிய ஆதிக்க வர்க்கத்தின் தாக்கத்திற்கு உட்பட்டு அல்லது பலவந்தமாக அழிக்கப்பட்டு அதன்மீது அதிகார வர்க்கத்திற்கு சார்பான புதிய முறை திணிக்கப்பட்டது.இதனொரு உட்கூராகத்தான் தீண்டாமை எனும் புது வடிவம் பிறப்பெடுக்கத் துவங்கியது.இதுதான்  கெட்டி படுத்தப்ட்ட பாகுபாடாக பொருளாதார தேவையை கடந்த நவீன அம்சமாக சாதியை உருமாற்றியது.இதை நம் மனங்களில் ஆழப்பதியவைப்பதற்கான வேலையாகத்தான் புனைகதைகள் உருபெறத்துவங்கின.
இதுபோன்ற கதையாடல்கள் தான்  பின்னாளில் சமயம் சார்ந்த புனித நூற்களாக புதுபுது வடிவமேடுக்க துவங்கின.

பொதுவாக ஒரு விஷயத்தை நமக்கு அப்படியே சொல்லும்போது அதை ஏற்பதில் மனிதமனங்களுக்கு பல ஐயப்பாடுகள் முளைக்கிறது.ஆனால் அதையே கதையாக சொன்னால் பொய்யாக இருந்தாலும் அதை ரசிக்க துவங்கிவிடுகிறது மனிதமனம்.இந்த ரசிப்பு தன்மைதான் போகப்போக நமபிக்கையாய் உருமாறி கதையில் வருவதுபோல நாமும் இருந்தால் நமக்கும் அந்த பேரு கிடைக்கும் என்ற எண்ணம் நம் மனங்களுக்குள் வலுப்பெற துவங்கியது.இதன் ஒரு விளைவாகத்தான் கற்பனை பாத்திரமான கண்ணின் மீது ஆண்டாள் மோகம் கொண்டு தன்னையே கண்ணனுக்கு கொடுக்கும் விதமாக 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

எனும் இது  போன்ற பாடல்களால் திருப்பாவையை படைத்தாள். 

இதுபோன்ற நம்பிக்கைகளின் மீது உருவான கருத்துருவங்கள் தான் நாம் வணங்கும் கடவுள் பிம்பங்கள் ஆகும்.அதற்காக எழுதப்பட்டது தான் சமய காப்பியங்களும் சமயம் சார்ந்த வாய்மொழி வரலாறுகளும்.கம்பனைபோன்ற கற்பனை வளம் மிக்க ஒரு படைப்பாளனால வால்மீகி ராமாயணத்தின் மூலத்தை கடந்து வியக்க வைக்கும் வகையிலான காட்சிபடுத்தளின் மூலம் கடவுளை மண்ணில் நடமாட விட்டார்கள்.இவ்வாராகத்தான் கடவுள் மனிதனின் ஆதர்சமாய் உருவானான்.மனித மனம் தன மன திருப்திக்காக உருவாகிய ஒன்று காலபோக்கில் பல்வேறு மாற்றங்களுக்கும் கதையாடல்களுக்கும் உட்பட்டு புனித உருவம் பெற்றது.

இதுபோன்ற வரலாற்று போக்கி லிருந்து தான் சாதிகளும் அது உருவான புனைகதைகளும் அக்காலகட்டத்தின் தேவைகேற்ப உருப்பெறத் துவங்கியது.உதாரணமாக வீரவன்னியன் கதையாடலும் இப்படித்தான் பல்வேறு வரலாற்று போக்குகளை உள்வாங்கி கொண்டு சாதி உருவானதற்கான சான்றை முன்வைக்கிறது. 

"வாதாபி-இடதாபி என்ற சகோதரர்கள்(அரக்கர்கள்) ஆதாவது ராவணனை அரக்கனாக உருவாக்கினார்களே அது போல.தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்திவந்தார்கலாம்.தங்களுக்கு வேண்டாதவர்களை அழித்து அட்டகாசமும் செய்துவந்தார்கலாம்.தங்களால் அழிக்க முடியாதவர்களின் உடலுக்குள் ஒருவன் புகுந்து கொள்ள இன்னொருவன் அவன் பெயரை சொல்லி அழைக்க புகுந்தவனின் உடலை கிழித்து கொண்டு உள்ளிருந்தவன் வெளிவந்து அவனை சாகடிப்பானாம்.
இப்படியாக இவர்களின் அட்டகாசம் தொடர.... இவர்களை அழிப்பதற்கு சாம்புமகாரிஷி என்பவரின் தலைமையில் கலசத்துடனான யாகம் வளர்க்கபடுகிறது.இந்த யாகத்தில் உருவான உஷ்ணம் சிவனை பாதிக்க..... சிவனின் உஷ்ணத்தை குறைக்க பார்வதி அவரை கட்டியானைக்க இதனால் ஏற்படும் வியர்வை அக்னி குண்டத்தில் விழ..... மந்திரம் என எல்லாம் ஒன்று சேர்ந்து வீர வன்னியன் நெருப்பில் பிறக்கிறான்.நெருப்பில் பிறந்ததால் எப்போதுமே கோவத்தோடு இருக்க என்னை என் படைத்தீர்கள் என்று ரிஷிகளை பார்த்து கேட்க்க அவர்களும் நடந்த கதையை சொல்ல வீர வன்னியன் வாதாபி-இடதாபியை அழைக்க கிளம்புகிறான் அவனுக்கு படை வேண்டுமென்பதால் அதே அக்னி குண்டத்திலிருந்து மந்திரங்களின் மூலம் இருளர்,அருந்ததியினர் ஆகிய துணை தளபதிகளை உருவாக்குகிறார்கள்.இவர்களக்கு தூக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்பதால் தூக்கக கலக்கத்துடன் போரிட முடியாது என்பதால் போகும் வழியில் பள்ளி கொள்கிறார்கள்(உறங்குகிறார்கள்) அப்போது உருவானவர்கள் தான் பள்ளர்கள்.இவர்கள் அனைவரையும் கொண்ட படையை வழிநடத்தி சென்றதால் தான் வீர வன்னியனுக்கு "படையாட்சி" என்ற பெயர் சூட்டபடுகிறது.மேலும் வாதாபி-இடதாபி கடலை கடந்து இருப்பதால் இவர்கள் அனைவரும் கடலை கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது.ஆனால் அனைவரின் சக்தியோடு கனபொழுதில் கடலை கடந்தவன் போரில் வெற்றி பெறுகிறான் வீரவன்னியன்."கணப் பொழுதில் கடலை கடந்தவன்" என்பது தான் கலாபோக்கில் மருவி கௌண்டன என்று பெயர்பெறுகிறது" இதுவே வீரவன்னியனுக்காக உருவாக்கப்பட்ட வரலாறு.

வரலாறு பல முரண்பாடுகளை கொண்டுள்ளது என்பதற்கு இக்கதையே சிறந்தொரு எடுத்துக்காட்டு..... இக்கதையில் வரும் வாதாபி-இடதாபி எனும் கதாப்பாத்திரங்கள் அகத்திய முனிவரோடு தோற்றுபோவதாக இன்னொரு கதை சொல்கிறது....மேலும் நெருப்பில் பிறந்த ஒருவனே கனபொழுதில் கடலை கடக்கும் போது கடவுளே மனித உருவம் பெற்று வாழ்ந்ததாக சொல்லப்படும் ராமாயணத்தில் இந்துமாக்கடலை கடக்க கற்பாலம் அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது.இவ்விரு கதையாடல்களுமே முரணாகத்தான் இருக்கிறது.   

வரலாற்று புனைவுகள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்து உருவானதால் அது தன்னகத்தே பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளது.மேலும் களபிறர் காலம் முடிந்து பல்லவர் காலம் உருவானபோது வடக்கே இருந்த வாதாபி-இடதாபி எனும் அரசனை போரிட்டு தோற்கடித்த பின்பு தான் "வாதாபி கணபதியை" அதாவது பிள்ளையாரை தமிழகத்திற்கு கொண்டுவருகிறார்கள் பல்லவர்கள்.பல்லவர்கள் சிற்ப கலைகளில் சிறந்தவர்கள் என்பதால் பல்வேறு வடிவங்களில் சிலையாக உருமாற்றினார்கள் என்று ஒரு வரலாறு நீள... இன்னொரு புறத்தில் சமண முனிவராக இருந்த விநாயகரைத்தான் சைவ-வைணவ சமயங்கள் பின்னாளில் யானை முகம் கொண்ட பிள்ளையாராக மாற்றியதாக இன்னொரு கதை இருக்கிறது.

ஆக நாம் வன்னியர் கதைக்கு வருவோம்.விஞ்ஞான கூற்றுப்படி எந்தவொரு உயிரும் நெருப்பில் பிறக்க முடியாது என்பதுதான் இன்றுவரையில் நிரூபிக்கப்பட்ட உண்மை.இல்லவே இல்லை நெருப்பில் உயிர்கள் தோன்ற முடியும் என சுயசாதி பெருமை பேசுபவர்கள் வாதிடுவார் களேயானால் அதற்க்கு பல நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பது தான் இதுவரையிலான உயிரினங்கள் தோன்றிய வரலாறு நமக்கு சொல்லித்தந்த பாடமாகும்.ஆனால் வீரவன்னியன் கதையாடலில் வருவதுபோல் ஒரு நோடிபொழில் எல்லாம் எரியும் நெருப்பிலிருந்து உயிர்கள் ஜனிக்க முடியாது.

சங்க காலம்- சங்கம் மருவிய காலம்- சமண பௌத்த காலம்- சைவ வைணவ காலம் என படிப்படியாக வேலைபிரிவினை சாதி கட்டமைப்பாக கெட்டிபடுத்தப்பட்ட வரலாற்று போக்கை புரிந்துகொள்ளாமல் சுயசாதி பெருமை பேசுவதும்  கலப்பு திருமணம் செய்தவர்களின் மீதும் அவர்களை சார்ந்தவர்களின் மீதும் வன்கொடுமையை ஏவிவிடுவதும்  இருவேறு சாதிகளுக்கிடையில் கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கைபார்ப்பதும் சமூக சமத்துவமின்மைக்கு வழிகோலும்  செயலாகும்.

NGO களின் மூலம் தன்னை வளர்த்து கொண்ட ராமதாஸ் சாதி வெறி பிடித்த ஒரு கூட்டமாய் வன்னிய இளைஞர்களை மாற்றுவதை விட்டுவிட்டு அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலை சார்பான நல்ல கோரிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலமாக அவர்களின் முழு செல்வாக்கை பெற முயற்சிக்கலாம்.

மேலும் இதுபோன்ற வரலாற்று புனைவுகளின் மீதான நமபிக்கையை உக்கிரமாக்கும் நிகழ்வாக ஆண்டு தோறும் சித்திரை திங்களில் மாகாபளிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு சென்றவர்களால் மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற இடதுசாரி தலைவர்களை ஒருமையில் விளித்ததன் காரணம் யாம் அறியாததொன்றுமில்லை.சுயசாதிக்கு திரோகமிழைப்பவர்களால் தான் கம்யுனிஸ்ட்டாக இருக்கமுடியும் என்பது ராமதாஸ் போன்றவரக்ளுக்கு தெரியாதொன்றுமில்லை.

சமூக நீதிக்காகவும் சமூகத்தின் மீது கொண்ட கற்றற்ற காதலுக்காகவும் தங்களின் வாழ்வையே அற்பனித்திட்ட மகத்தான மாமனிதர்களின் பெயர்களையும் புகைபடங்களையும் பயன்படுத்திக்கொண்டே இச்சமூகத்தில் நஞ்சை தூவிக்கொண்டிறுப்பீர்களேயானால் - அந்த நாயகர்கள் உரைத்ததைப் போல ’உங்களுக்கான சவக்குழியை வரலாறு தயாராய் வைத்திருக்கிறது.

-மதுசூதனன்

4 comments:

 1. அருமையான கட்டுரை... இதனை ஒரு தொடராகக் கூட எழுத முயற்சிக்கலாம்... வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை... தகுந்த நேரத்திற்கான கட்டுரை.............

  ReplyDelete
 3. ஒவ்வொரு சமூகத்திலும் நிலவுகின்ற யதார்த்தங்களுக்கு ஏற்ப - சித்தாந்த போராட்டத்தை இலக்கியங்கள் நடத்துகின்றன.

  ஒன்று - நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை நியாயப்படுத்துகின்றன. அல்லது அவற்றை எதிர்த்துப் பேசுகின்றன.

  தமிழ்ச் சூழலில் இப்படி நடந்த போராட்டத்தை அறிந்துகொள்ள முடியாத வகையில் - ’ஆடிப் பெருக்கு’என்ற சதி அறங்கேற்றப்பட்டதும். அதன் காரணமாக, சாதிய எதிர்ப்பு பாக்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டதையும் அறிந்திருக்கிறோம்.

  இந்தக் கட்டுரை - மிச்சமுள்ள இலக்கியப் பதிவுகளை ஆய்வு செய்து - அதிலிருந்து தமிழ் இலக்கியங்களின் ஊடாக நடந்த விவாதங்களை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

  ReplyDelete
 4. இ.பா.சிந்தன்: வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தொடராக எழுத முயற்சிக்கிறேன்...

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)