Tuesday, June 11, 2013

ஆண் ஆசிரியர்கள் இல்லாத பெண்கள் பள்ளிகள் - விவாதம் ...

 தமிழகத்தில் பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக இனி பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள். ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் தான் இருப்பார்கள் என்று சமீபத்தில் வெளிவந்த அரசாணை தெரிவிக்கிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கூட்டு வன்புணர்ச்சி சம்பவத்திற்கு பிறகு நாடெங்கும் பெண் மீதான வன்முறையை எதிர்த்து போராட்டங்களும் விவாதங்களும் எழுந்தன.அதன் தொடர்ச்சியாக பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை தவிர்க்க அரசு இந்த முடிவை அறிவித்துள்ளதாக கூறுகிறது.

இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”என் பொண்ணு இனி பத்திரமா ஸ்கூலுக்கு போய்டு வருவா. பேப்பரிலியும் டிவிலையும் பாக்கும் போது பயமா இருக்கு.ஸ்கூலுக்குள்ள இனி எதுவும் நடக்காதுன்னு திருப்தியா இருக்கு.” என்று சிலர் கூறுகின்றனர்.

இது எனக்கு 50% ஓகே. 50% நோ. பசங்களுக்கு ஸ்கூல்ல வாத்தியாரால எதுவும் ஆகாதுன்னு உத்தவாதம் இருக்கு. ஆனா அவங்க பள்ளிகூடத்த முடிச்சு வெளிய வரும் போது ஆண்களும் இருக்கிற இந்த சமூகத்த விட்டு ஓடி விட முடியாது என்று கூறுகிறார், ஷண்முகப்பிரியா, அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட மற்றும் சிலர் கருதுகின்றனர்.
இது பிற்போக்கான முடிவு. ஆண்-பெண் சமத்துவத்தையும், ஆரோக்கியமான ஆண்-பெண் புரிந்துணர்வையும் தடுத்து விடும் என்றும் சிலர் கூறுகின்னர்.

மூன்றுமே சரியான வாதங்கள் போ தான் தோன்றுகின்றன. ஆனால் மூன்றுமே சரியானதாக இருக்க முடியுமா?

ஹரியானவில் சமீபத்தில் கல்வித் துறை நடத்திய கள ஆய்வில் வருடத்திற்கு 1000 மாணவிகள் பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே கூறுகிறது. இது போன்று பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான நேரடியான வாய்ப்புகளை அரசின் இந்த நடவடிக்கைபள்ளிகளில் குறைக்கும். இந்த முடிவினால் பெண்கள் பள்ளிகளில் இப்போதிருப்பதை விட குறைவான ஆண்களை காணலாம்.

ஆனால் இது போதுமா? ஆசிரியர்களாக ஆண்களின் நுழைவை தடுத்தாகி விட்டது. ஆனால் காவலாளியாக, ஆய்வுகூட உதவியாளராக ஆண்கள் இருக்க மாட்டார்களா? ஆண்களின் பங்கே இல்லாமல் ஒரு பள்ளியை முழுமையாக நடத்த முடியுமா? எனவே, ந்த முடிவு உடனடி தீர்வுகள் தந்தாலும் இது நிரந்தர தீர்வாக அமையாது. ”இது பாதுகாப்பை தரும். உண்மை தான். ஆனால் இது உண்மையான பாதுகாப்பாக இருக்காதுஎன்று கூறுகிறார் இதயகீதன், அரசுப்பள்ளி ஆசிரியர்.

ஏன் உண்மையான பாதுகாப்பை தராது?
நாம் நடக்கும் போது காலில் முள் ஏறிக் கொள்கிறது. அதை பிடுங்கி எறிகிறோம். அன்றைய பிரச்சனை சரியாகிவிடுகிறது. மறுபடியும் அதே பாதையில் நடக்கிறோம். மறுபடியும் முள். அதையும் பிடுங்கிவிட்டுச் சென்று விடுகிறோம். இப்படி ஒவ்வொரு முறையும் முள்ளை பிடுங்கி எறிய மட்டுமே வழி செய்துக் கொண்டிருப்பதை விட, முட்செடிகளை அகற்ற வேண்டாமா? அது தானே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும்.

அதே போல், பாலியல் குற்றங்களுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து அதை களைய முயற்சிகள் எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் நம் சமூகத்தில் தொடர்வதற்கான அடிப்படை காரணம் ஆண்-பெண் சமத்துவமின்மை. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சரியான புரிந்துணர்வு இல்லாதது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு உலகம் என்று சிறுவயதிலிருந்தே பிரித்து வைக்கிறது சமூகம். ஆண்கள் இப்படி தான் இருப்பார்கள், இப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்தீர்மானம் செய்யப்படுகிறது. இந்த சமூகச் சூழலில் ஆண்களிடமிருந்து விலகி இருப்பது மூலம் பாலியல் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று அரசு நம்புவது சரியில்லை. ஆணும் பெண்ணும் சகஜமாக சமூகத்தின் சம அங்கத்தினராக குழந்தை பருவத்திலிருந்தே பழகினால் தான், ஆரோக்கியமான சமமான சமுதாயத்தை வளர்தெடுக்க முடியும்.

இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?
·         இருபாலர் கல்வி நிலையங்களை அதிகரிப்பது

பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற ஆணையை விட, இரு பாலர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்று முடிவு செய்திருந்தால், அது பாராட்டுக்குரியது. அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது என சந்தோஷப்படலாம். இளம் பருவத்தில் கல்வி நிலையத்தில் ஒரு சேர வளரும் போது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆரோக்கியமான நட்பு, புரிதல் வளருவதற்கு இடம் தரும்.ஆனால் அதை விட்டு உடனடி தீர்வையும் பாதுகாப்பு உணர்வையும் தரும் வகையில் செயல்படுவது தேர்தல் அரசியலில் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையை கை விட்ட கட்சிகளின் செயல்பாடாகவே தோன்றுகிறது.

·         பள்ளிகளில் பாலியல் கல்வி
பாலியல் நமது சமூக வெளியில் இயல்பாக எல்லோரும் விவாதிக்கும் ஒரு பொருளாக இல்லை. ”குசு குசு வென பேசும் பொருளாகத்தான் இருக்கிறது. இதைச் சுற்றி ஒரு ரகசியத்தனம் எப்போதும்நிலவுகிறது. நேர்மையான ஆர்வத்துடன் குழந்தைகள் பாலியல் சம்பந்தமான கேள்விகளை கேட்டாலும் நாம் அவர்களை உதாசினப்படுத்துகிறோம். “அதெல்லாம் பேசக் கூடாது” ”எல்லாம் தெரிய வேண்டிய வயசுல தெரியும் என்று ஏதாவது பதில் கூறி நாம் அந்த கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறோம். இது சரியான புரிதல் ஏற்படாமல் போக, தவறான வழிகள் மூலம் தவறான புரிதல் ஏற்பட நாமே வழி வகுக்கிறோம். இதை தடுத்து பள்ளிகளிலேயே அறிவியல்பூர்வமாக பாலியல் கல்வியை கற்று தந்தால், பாலியல் தொடர்பான மாயையை உடைத்தெறிய முடியும். இதற்கு ஆசிரியர்களுக்கு முதலில் சரியான பயிற்சி அளிக்க வேண்டும்.

·         தண்டனையை அதிகரிப்பது
அரசு வேறு என்ன செய்திருக்க முடியும்? தவறு செய்தால் ஒன்றும் நடக்காது. யாரும் ஏதும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தை  காவல்துறையும் நீதித் துறையும் பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ளது. வழக்கு பதிவு செய்ய அனைத்து திசைகளிலிருந்தும் எல்லா விதமான தடை கற்களும் வீசப்படுகின்றன. ”பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது?” ”பள்ளிக்கும் பெண்ணுக்கும் மானக்கேடு” என்று பள்ளி நிர்வாகிகள், அக்கம் பக்கத்தினர், ஏன் காவல்துறை கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க மறுக்கின்றனர். அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் அது பல ஆண்டுகள் கழித்து தான் தூசி தட்டப்படும். அதற்குள் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி விடும். சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள்.  வழக்கு விசாரணைக்கு வந்தாலும் தண்டனை கிடைப்பது நிச்சயமல்ல. இது மாறி தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலை உருவானால் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

அதோடு தண்டனையை அதிகரித்தால் இந்த தவறுகள் நிச்சயமாக குறையும் என்றும் கூறுகின்றனர். ”ஏன் சஸ்பெண்ட் மட்டும் செய்ய வேண்டும்? டிஸ்மிஸ் செய்யட்டுமே. குடும்பம் பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான் தவறு செய்வதற்கு பயத்தை உண்டாக்கும். “ என்று கூறுகிறார் ஷண்முகப்பிரியா, அரசுப் பள்ளி ஆசிரியர்.

எனவே அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு ஒரு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டதாக இல்லை. நுனிப்புல் மேய்வது போல் ஒரு சில கண்கூடான மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. பெண்ணின் மீதான சமூகப் பார்வை மாற வேண்டும். அதற்கு முதல் படியாக ஆசிரியர்களின் பார்வை சரியானதாக அமைய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கான கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்த வேண்டும். அரசாணை வெளியிட்டதோடு பிரச்சனை முடிந்து விட்டதாக அரசு நினைத்தால் அது தன்னையே ஏமாற்றிக் கொள்வது போலாகும்.

- சாரா விஜி

12 comments:

 1. ஆண் பெண் புரிதலுக்கும், முறையான பாலியல் கல்வி அனைத்துத் தரப்பினர்கும் கிடைப்பதற்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

  கல்வித் திட்டத்தில் ஆண்பெண் சமத்துவம் பற்றிய பாடங்களை சேர்க்க வேண்டும்.

  ReplyDelete
 2. தண்டனையை அதிகரிப்பது என்ற பகுதியில் - தாங்கள் வெளிப்படுத்தும் கோபம் நியாயமானது என்றாலும். இத்தனை சட்டங்கள் இருந்தும் அவை ஏன் அமலாகவில்லை? என்ற கேள்வி மிக முக்கியமானது.

  குற்றாங்கள் நடப்பதிலும், சட்டங்கள் அமலாவதிலும் சமூக உளவியலுக்கு முக்கிய பாத்திரங்கல் உண்டு.

  சமூகத்தில் - பாலின சமத்துவ வளர திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதும். பெண்களை இரண்டாம் பாலினமாக கருதும் மலினமான நடவடிக்கைகளை தடுப்பதும் இங்கே முக்கியத்துவம் பெருகின்றன.

  குற்றத்தின் பிறகு -கடுமையான தண்டனைகளைக் காட்டிலும். குற்றத்தை செய்ய தூண்டுதலாக இருக்கும் காரணிகளை மாற்றுவதில் உண்மையான அக்கரை செலுத்துவதை - வலியுருத்தியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. குற்றத்திற்கு கடுமையான தண்டனையையும், குற்றக்காரணிகளை தடுக்கும் முயர்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பதே சரியானது.

   Delete
 3. பேசாம எல்லா இஸ்கூலையும் காலேசையும் ஒரு 50 வருசத்துக்கு இழுத்து மூட்டிட்ட ?

  ReplyDelete
 4. ஒண்ணு பண்ணலாம்...
  பள்ளிக்கூடத்தில் ஆண் ஆசிரியர்கள் இல்லாதாதல் பெண்களுக்கு பாதுகாப்பு...

  அதேபோல் தெருவிலும் வீட்டிலும் இனி பெண்கள் மட்டும் இருக்கவேண்டும்னு ஒரு சட்டம் கொண்டுவந்துடலாம்...

  அப்படின்ன ஆண்களை என்ன செய்யலாம்னு கேட்டீங்கனா... இருக்கவே இருக்கு ஜெயில்.. என்கவுண்டர்... எதிலாவுது போட்டுடா போச்சு...

  ஆணா பிறந்தது எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கங்க... அதுக்கு இந்த தண்டனை கூட இல்லைன எப்படி.......

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. பாலினத்தை வைத்து வேறுபாடு காட்டப்படுவது என்பது அரசியல் சட்டத்ற்கு எதிரான குற்றம்... அரசு அதை செய்கிறது அதுவும் தொடர்ந்து...

  எப்படி பெண் என்பதற்காக உரிமை மறுக்கப்படுவது குற்றமோ, அதெபோல் ஆண் என்பதற்காக மறுக்கபடுவதும் குற்றமே.

  இதற்கு எதிராக , அனைத்து ஆண்களை புறம் தள்ளும் சட்டங்களுக்கெதிராக அனைத்தயும் ரத்து செய்து, சம நீதியை நிலை நாட்டும் வகையில் அரசுக்கு உத்திரவிடகோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்..

  இது மட்டுமல்ல இப்படிபட்ட யோசனைகளை கொண்டு உண்மையான பொறுப்பை தட்டிகழித்த அரசு அதிகாரிகள் தண்டனை அதுவும் இனி 2 வருசத்துக்கு சம்பளம் கிடையாது, இல்லையானல் பணி நீக்கம், தற்காலிகம் இல்லை உடனடி நிரந்தர பணீ நீக்கம், ஓய்வூதிய பயன் ஏதுமில்லைன்னு கொண்டு வரணும்...

  2 -3 அதிகாரிகளுக்கு இப்படி நடந்தால் மாட்டுமெ உண்மையான தீர்வு தரும் திட்டங்களை கொடுப்பர்..

  இல்லையெனில் லட்சகணக்கில் மக்கள் காசில் சம்பளம் வாங்கிகொண்டு.. ஏசி ருமில் இருந்து.. ஒன்றுக்கும் உதவாத இத்தகைய திட்டஙகளை அறிவித்து தங்களை புத்திசாலி என்று நினைத்து கொள்வர்..

  என்னா இப்படி கவைக்குதவாத திட்டங்களை அறிவிச்சுடா.. இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்தமாதிரி காட்டியாச்சு .. அது தீர்ந்ததா , இல்லை தொடர்ந்ததா என்பது அவர்களுக்கு தேவையில்லை..

  இப்படிபட்ட ஐடியா கொடுததற்கு கூட எதாவது இன்கிரிமேன் பிரமோஷன் கூட வாங்கி இருக்கலாம்..

  ReplyDelete
 7. @Vinoth Kumar தாங்கள் கட்டுரையின் சாராம்சத்தை சற்று தவறாக புரிந்து கொண்டதாக தோன்றுகிறது .
  நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குடும்பத்தில் , கல்வியில், வேலையில், அரசியிலில், சினிமாவில் என அனைத்து துறைகளிலும் ஆணாதிக்க சிந்தனையும், செயலும் பல வடிவங்களில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன . "பெண்கள் தான் இப்போது கார் ஓட்டிகிரார்களே!, விமானம் ஓட்டுகிரார்களே! ராக்கெட்டில் செல்கிறார்களே!. அவர்களுக்கு எல்லா உரிமையும் கிடைச்சாச்சு" என்று கூறுவது சரியாகாது . மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதற்காக நாம் ஆணாதிக்க சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதை மறுத்து விட முடியாது.

  எனவே கட்டுரையில் அரசு ஆண்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக கூறவில்லை. நாம் வாழ்கின்ற இந்த ஆணாதிக்க சமுதாயத்தின் சவால்களை எதிர்கொள்ள , பாலியல் சமத்துவத்தை நிலைநாட்ட, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை நிரந்தர தீர்வாக அமையாது என்று கூறுகிறது .

  ReplyDelete
 8. @saradhav கட்டுரை பற்றி மட்டும் நான் பேசவில்லை, அரசின் நடவடிக்கைகள் பிரச்சனையை தீர்ப்பதாக இருப்பதற்கு பதில் திசை திருப்புவதாக இருக்கின்றன.

  பெண்களுக்கு பாதுகாப்புன்னு பள்ளியில் ஆண் ஆசிரியர்களை மற்றலாம் சரி அது தான் தீர்வா? அப்படியானால் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக படிக்கும் பள்ளி , கல்லூரி, பல்கலைகழங்கள் எற்படுத்திவிட்டால் பாதுகாப்பு கிடைத்து பாதுகாப்பு கிடைத்துவிடும் அல்லவா..

  சரி படித்து முடித்து வேலைக்கு வரும்போது ? மருத்துவமனையில் ? ... இப்படியே போனால் பெண்களூக்கன தனி சுடுகாடு ஏற்படுதலாமா?

  அப்படி செய்துவிட்டால் 100% பாதுகாப்பை உறுதி செய்துவிடலாமா?

  ஆணத்திக்கம் ஆணாதிக்கம் என்று பேசுகிறீர்களே .. உண்மையில் அது அப்படித்தானா?

  அடிப்படையில் இயற்கையை எதிர்த்து போராடினால் வெற்றிபெறமுடியாது. இயற்கையை எதிர்த்து 1 பிரச்சனைக்கு இப்படி தீர்வுகண்டால் 4 பிரச்சனை புதிதாக வரும்.

  ஆணாதிக்க சமூகம், மாற்றம் வரும் காலத்தில் வாழ்கிறோம் என்கிறீர்கள், அந்த மாற்றம் எப்போது முடியும் ? எப்போது சமத்துவம் நிலை நாட்டபடும் ? புதுமைபித்தன் வாழ்ந்த 1930ம் ஆண்டு கட்டுரை, செய்திகளை பார்த்தால் இந்த பெண்களின் பாதுகாப்பு , ஆண் பெண் சமத்துவம் போன்றவை மாறவேயில்லை.மாற்றம் நிகழும் என்பது சரியானால் சரி 80 வருடத்திலும் ஏன் அப்படியே தொடர்கிறது ?

  இன்னம் சொல்லப்போனால் பிரச்சனை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. நேசனல் ஜியாகிரபியின் நிகழ்ச்சி ஒன்றில் (Human Trafficking) எனப்படும் ஆள் கடத்தல் பல காலமாக பருவ வயதை எட்டிய பெண்களை சினிமா , திருமண ஆசை காட்டியோ, இல்லை மயங்க செய்தோ கடத்தி விற்பனை செய்தார்கள். வாங்குவோர் விபச்சார விடுதிகள் நடத்துவோரே. சில பெரும் புள்ளிகள் தங்களின் வக்கிர சுவைக்காகவும் மூட நம்பிக்கையாலும்( கன்னி பெண்ணுடன் உறவு கொண்டால் எயிட்ஸ் குணமாகும், எடுத்த காரியம் வெற்றிபெறும்) வாங்கினார்கள். கடத்தலில் ஈடுபட்டோர் அனைவரும் ஆண்களே.

  இப்போது இதில் குழந்தகள்- ஆண் பெண் சிறாரகளும் கடத்தபடுகிறார்கள். ஆண் சிறுவர்கள்
  கற்பழிக்கபடுவது அதிகரித்திருக்கிறது.

  முன்னாள் இன்னொரு விபச்சார விடுதியில் அடிமைகளாக விற்கப்பட பெண்கள், இப்போது எஜமானர்களாக வருகிறார்கள்.

  பெண்கள் குழந்தைகள் கடத்தலில் வரும் செய்திகளை கவனித்தால் அதில் புரோக்கர்கள் சம்பந்தபடுவது தெரியும்.

  எனக்கு தெரிந்த பியூட்டி பார்லர் நடத்தும் பெண், அரசியல் முக்கிய புள்ளிக்கு பெண்களை அனுப்புவதை சைடு பிஸ்னஸ் போல செய்கிறார்.
  போலீஸ் தரப்பில் 1980-90களில் இந்த நிலை வந்துவிட்டது என்கிறார்கள்.

  இவர்களின்(அரசின்) வழியில் சென்றால் மறப்போவதும் இல்லை.
  இவர்கல் 1930களில் இருந்த சமூக நிலைக்கு 80 வருடத்துக்கு பிறகு இப்போது தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

  பெண்களுக்கு சாதகமான பல சட்டஙள் மேற்படி கிரிமினல் பெண்களால் துஷ்பிரையோகம் செய்யபடுகின்றது.

  எனக்கு தெரிந்த நபரின் சகோதரி மேறடி பியூட்டி பார்லருக்கு தன் தோழியுடன் செல்லும்போது, 4 வாரம் தொடர்ந்து வர சொல்லி இருக்கிறார். முதல் இரண்டு வாரம் ஒன்றும் போசாமல் 3ம் வாரம், சுளையாக பணம் சம்பாதிக்க வழி இருக்கு, நீஙகள் கல்லூரி நேரத்தில் 3 மணி நேரம் நான் சொல்லும் இடத்துக்கு சென்றால் போதும் என கூறி இருக்கிறார்.

  இதை தட்டிகேட்க சென்ற நண்பரை, அதிகம் பேசினால், ஈவ் டீசிங்க், பாலியல் வன்கொடுமை சட்டகளில் கேஸ் கொடுத்து 2 வருடம் உள்ளே வைப்பேன் என்று மிரட்டுகிறார். நான் நண்பரிடம் தங்கையில் செல்போன் எண்ணை மாற்றிவிடு , இனி அங்கே போகவேண்டாம்..

  யார்கண்டது அந்த பியூட்டி பார்லர் பெண் அடுத்த எம் எல் ஏ வாக கூட வரலாம். பிரச்சனை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

  ReplyDelete
 9. @ saradhav
  இப்போது சொல்லுங்கள், இதற்கு என்ன செய்யலாம் ?பெண்களிடம் இருந்து பென்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பீர்கள் ? பெண்களிடம் இருந்து ஆண் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பீர்கள் ? பெண்களுக்கு ஆண்களால் மட்டுமெ பிரச்சனை என்பது 100 வருடத்துக்கு முந்தய நிலை.

  ஓஷோவின் வார்த்தைகளில் சொன்னால், இருளை எதிர்த்து எத்தனை காலம் போராடினாலும் வெல்ல முடியாது.

  பாட்டியின் வார்த்தைகளீல், இருளை கூடையில் அள்ளி வெளியே கொட்ட முடியாது. விளக்கேறுவது தான் ஒறே வழி, அது சிறிய மெழுகுவர்த்தியானலும், அதனால் இருளை வெல்ல முடியும்.

  அதே போல் இந்த பிரச்சனயில் கொஞ்சம் ஆழமான ஆய்வு தேவை, இது ஒரு மாவடடமோ, இல்லை மாநிலமமோ சம்பந்தபட்டதில்லை, உலகளாவிய பிரச்சனை.

  மேலும் பெண்கள் ஆண்களூம் சேர்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும், பிரச்சனைகளை சந்தித்து ஜெயிக்க முடியவில்லை என்றால் தப்பிக்க கற்றுகொடுக்க வேண்டும்.

  பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரியில் படித்து வரும் பெண்கள் வேலை என்று வரும்போது அதுவும் எம்என்சி நிறுவனக்களில் பணியாற்றும்போது அனைவருடனும் பழகுவதில் பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள். பலர் வேலையை விட இதுவும் ஒரு காரணம். இதற்கு அரசு என்ன தீர்வு சொல்லும்?

  ஆண்கள் மட்டும் பள்ளில் படிக்கும் ஆண்களின் நிலையும் இதுதான்.
  திறமை இருந்தும் தேவையற்ற கூச்சம்/பயம் முன்னேற்றத்துக்கு தடையாகின்றது.

  ஆண் பெண் பிரித்து வைத்தால் தான் கவர்ச்சி கூடும், நெருங்கி பார்க்க தோன்றும், தினமும் அருகிலிருந்து பார்ப்பவர்களுகு கவர்ச்சியெல்லாம் தெரியாது. அனைவரும் ரத்தமும் சதையும், உள்ள மனிதர்களே என்பது தெளிவாக புரியும்.

  அனைத்து பள்ளி/கல்லூரிகளையும் இருபாலர் பள்ளிகாக்குவது தான் சரியான நடைமுறை. அதை விடுத்து இப்படி செய்வது பின்னேறத்துக்கு தான் வழிக்கும்.

  ReplyDelete
 10. தண்டனை குறித்த விஷயத்தில் ஒரு அடிப்படை கருத்து பிழை இருப்பதாக தோன்றுகிறது. ஒருவர் பாலியல் குற்றம் புரிந்துள்ளாரா இல்லையா என்பதை நீதி மன்றம் தான் தீர்மானிக்க முடியும். அப்படி அவர் பாலியல் குற்றம் புறிந்தது நிருபிக்கப்பட்டால், அவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. குற்றம் நிருபிக்கபடாத ஒருவர் suspension pending enquiry செய்யப்படுவது தான் சரியாக இருக்கும். கல்வி துறைக்கு குற்றவியல் பிரிவு முடிவுகளை எடுக்க அதிகாரம் கொடுப்பது அரசியல் சட்டத்திற்கே புறம்பானது.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)