Tuesday, February 7, 2012

அமெரிக்கா-இங்கிலாந்திலிருந்து ஓடிவரும் கல்விவியாபாரிகள் - பின்னணி என்ன?

கட்டுரையின் முதற்பகுதி :  வியாபாரமாகும் உயர்கல்வி -1




நெருக்கடியில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் உயர்கல்வித்துறை 

அமெரிக்காவில் கல்விக்கான நிதி குறைப்பு

அமெரிக்காவின் பொருளாதார சரிவினைத்தொடர்ந்து, அந்நாட்டின் உயர்கல்வியும் கடும் நெருக்கடியை சந்திக்கத்துவங்கியது. குறைந்தபட்சம் 43 அமெரிக்க மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் மானியக்குறைப்பும், கல்விக்கட்டணம் பன்மடங்கு உயர்வும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. வருமான வரி, விற்பனை வரி மற்றும் வரி வருமானம் குறைந்தமையால், அமெரிக்க மாநில அரசுகள் நேரடியாக உயர்கல்வி மானியத்தைக் குறைத்தன. மறுபுறம் பொருளாதார மந்தநிலையின் காரணமாக தங்களது வருமானம் குறைந்து, பழைய கல்விக்கட்டணத்தைக்கூட செலுத்தமுடியாமல் மாணவர்கள் திண்டாடினர்.

அலபாமா மாநிலம் - இம்மாநிலத்தில் கல்லூரியின் தரத்திற்கேற்ப 8 முதல் 23 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வு
அரிசோனா மாநிலம் - இம்மாநிலத்தில் மூன்று பல்கலைக்கழகங்களில் 9 முதல் 20 சதவீதம் வரை கல்விக்கட்டண உயர்வும், 2 .75 சதவீதம் ஆசிரியர்களின் ஊதியக்குறைப்பும்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 32 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் 2300 குறைப்பு, ஒட்டுமொத்தமாக கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத் திட்டத்திலிருந்து 40 ஆயிரம் மாணவர்கள் இடங்கள் குறைப்பு.
கொலராடோ மாநிலம் - 2010 இலிருந்து உயர்கல்விக்கான நிதி 62 மில்லியன் டாலர்கள் குறைப்பு.
ப்ளோரிடா மாநிலம் - இம்மாநிலத்திலிருக்கும் 11 பொதுப்பல்கலைக்கழகங்களில் 2010 -2011 ஆண்டில், 15 சதவீதம் கல்விக் கட்டண உயர்வு. 2009 ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இது, 32 சதவீத உயர்வாகும்.
ஜார்ஜியா மாநிலம் - 151 மில்லியன் டாலர் நிதிக்குறைப்பு (அதாவது 7 சதவீதம்). அதனால், இளங்கலை படிப்பின் கல்விக் கட்டணமே 500 டாலர் (16 சதவீதம்) உயர்ந்திருக்கிறது.
மிச்சிகன் மாநிலம் - 135 மில்லியன் டாலர்  நிதிக்குறைப்பு  (61 சதவீதம்), மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் 50 சதவீதம் குறைப்பு
நியூயார்க் - 2009 இலிருந்து இளங்கலைக் கல்விக்கட்டணம் 14 சதவீதம் உயர்வு.
வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 750 டாலர் அளவிற்கு ஒவ்வொரு மாணவரின் கல்விக்கட்டணமும் உயர்வு.
வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்திற்கான மானியத்தில் 26 சதவீதக்குறைவு. கல்விக்கட்டணம் 30 சதவீத உயர்வு. இம்மாநிலத்தின் பொதுக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் 26 சதவீதம் குறைப்பு.
அடுத்த இரண்டாண்டுகளில் விர்ஜினியா பல்கழைக்கலைக்கழகம் 27 மில்லியன் டாலரும், விர்ஜினியா டெக் 32 மில்லியன் டாலரும், ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழகம் 14 .5 மில்லியன் டாலரும் மானியக்குறைப்பை சந்திக்கவுள்ளன.
எம்.ஐ.டி. யின் மானியக்குறைப்பு 25 சதவீதம், ஹார்வர்டின் மானியக்குறைப்பு 23 சதவீதம், யால்சின் மானியக்குறைப்பு 30 %.

நிதிகுறைப்பை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள்:

ஊதியமில்லா விடுப்பில் ஆசிரியர்களை வீடுக்கனுப்புவது, நிரந்தரமாக வேலையைவிட்டு அனுப்புவது, பணியிடங்களை குறைப்பது, குறைந்த அனுபவமுள்ளவர்களை பணிக்கமர்த்துவது, ஒரே ஆசிரியரை நிறைநேரம் வகுப்பெடுக்கச்சொல்வது, ஒரே வகுப்பில் நிறைய மாணவர்களை அனுமதிப்பது, மருத்துவ  மற்றும் ஓய்வூதிய வசதிகளுக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்தே அதிகம் பிடித்தம் செய்வது, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை குறைப்பது, ஊழியர்களின் ஊதியக்குறைப்பு போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டுவிட்டன.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரை கடும்கோபத்திற்குள்ளாக்கின இந்நடவடிக்கைகள். கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலிபோர்னியாவிலிருக்கும் பல்கலைக்கழகங்களில் 30 சதவீதம் கல்விக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து, 3200 மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழக கட்டிடமொன்றில் ஆக்கிரமிப்பு போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக அறைக்கதவுகளை அடைத்துக்கொண்டு தொடர்ந்து 24 மணிநேரம் உள்ளேயே இருந்து கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்துப் போராடினர். இறுதியில் (10 , மார்ச் , 2010 )  காவல்துறையினர் வந்து அறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று 26 மாணவர்களை கைது செய்தனர். அதே நாளில் அதே காரணங்களுக்காக பெர்கேலி உள்பட 3 இடங்களிலும் பல்கலைக்கழக கட்டிட ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் நடந்தன. 

ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு கல்விக்கான நிதிகுறைப்பினை எதிர்த்து கலிபோர்னியாவில் துவங்கிய போராட்டம், நாடுதழுவிய போராட்டமாக உருவெடுத்தது. 2010 மார்ச் 4 ஆம்தேதி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒக்லாந்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போராடியதற்காக 160 பேரை காவல்துறை கைதுசெய்தது. டேவிஸ் நகரில், மிளகு போடி தூவி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டனர். மேலும் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பேண்டு வாத்தியங்களுடன் பாட்டு பாடிக்கொண்டே, பொதுக்கல்வியினை பாதுகாப்பதற்கான ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தம் செய்து போராட்டம்  நடத்தினார்கள். போராட்டங்களை மேலும் தொடரப்போவதாகவும் அன்று அறிவித்தார்கள்.

2010 ஆண்டு அக்டோபர் 7 ஆம்தேதி, பொதுக்கல்வியை பாதுக்கக்கவேண்டி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல்விடுத்தார்கள். லூசியானா பல்கலைக்கழகம் அருகில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகள் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். 637 மில்லியன் டாலர் அளவிற்கு கல்வி நிதிக்குறைப்பை சந்தித்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் நூலகம் நிரப்பும் போராட்டத்தினை   நடத்தினார்கள்.
"இது யாருடைய பல்கலைக்கழகம்? நம்முடைய பல்கலைக்கழகம்" 
என்கிற முழக்கங்களுடன் அன்றைக்கு மாபெரும் போராட்டம் நடந்தது. பொதுக்கல்வியினை பாதுக்காக்கும் நோக்கிலான போராட்டங்கள், நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.


இங்கிலாந்தில் கல்விக்கான நிதி குறைப்பு

அமெரிக்காவைப்போன்று இங்கிலாந்திலும் பெருமளவிலான கல்விக்கட்டண உயர்வும், கல்விநிதிக்குறைப்பும் பல்கலைக்கழகங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டும், 8000 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கல்விநிதியினை குறைத்திருக்கிறது அரசு. இனி வரும் காலங்களில் நிதிக்குறைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. நூற்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை குறைக்க சசெக்ஸ் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதனை எதிர்த்து, பல்கலைக்கழக கட்டிடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டத்தினை மார்ச் 2010 இல் மாணவர்கள் நடத்தினார்கள்.
லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆட்குறைப்பை எதிர்த்துப் போராடினார்கள். இருப்பினும் சில ஆயிரம் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியாகிவிட்டது. கல்விக்கான நிதியினை அரசு மேலும் குறைத்தால், குறைந்தது 400 ஆசிரியர்களையாவது வீட்டுக்கனுப்ப வேண்டியிருக்குமென்று வட இங்கிலாந்திலிருக்கும் லீட்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது. 

சிறந்த பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் வசூலித்துக்கொள்ள அரசு அனுமதி வேண்டி, அரசுடன் இடைத்தரகு செய்துகொண்டிருக்கிறது ருசல் குழும பல்கலைக்கழகங்கள்.
2010 - 2011 கல்வியாண்டில்மட்டும் 3000 கோடி ருபாய் அளவிற்கு கல்விக்கான நிதியினை குறைத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. பிர்மிங்கம், பிரிஸ்டல், லண்டன் இம்பீரியல் கல்லூரி, கிங்க்ஸ் கல்லூரி, லண்டன் பொருளாதாரப்பள்ளி, மான்செஸ்டர், செப்பீல்ட் மற்றும் சௌதாம்ப்டன் உள்பட பாதிக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் நிதியினை அரசு குறைத்திருக்கிறது. லண்டன் பொருளாதாரப் பள்ளியில்தான் அதிகபட்சமாக 12 சதவீத (50 கோடி ரூபாய்) அளவிற்கு நிதிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை. இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் குறைந்தபட்சம் 17 லட்சம் ரூபாய் கடனுடன் தான் பட்டப்படிப்பையே முடிப்பார்களென்றும், வெகுவிரைவில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தங்கள் கல்லூரிப்படிப்பையே பாதியில் நிறுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. 

இங்கிலாந்து மாணவர்களைவிட பத்து மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி படிக்கத்தயாராக இருக்கிற சர்வதேச மாணவர்களையே சேர்க்க அனுமதிப்பதற்கான வாய்ப்புகளையும் அலசாமல் இல்லை. சர்வதேச மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய குறைந்தபட்ச கல்விக்கட்டணத்தை உயர்த்தவும் அரசை நிர்பந்திக்கிறார்கள் சில பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டால், பல கல்விநிறுவனங்கள் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான துணைவேந்தர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சர்வதேச மாணவர்களை சேர்ப்பதன்மூலம் நிலைமையினை சரிசெய்ய முயலலாம் என்று மூன்றில் இரண்டு துணைவேந்தர்கள் கருதுவதாக அவ்வாய்வறிக்கை சொல்கிறது. ஏனெனில் உள்நாட்டு மாணவர்களைவிடவும் சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூக்கலாம். எனவே இங்கிலாந்தைவிட்டு, வெளியேயும் கிளைக்கல்வி நிறுவனங்கள் துவங்கினால், அதன்மூலம் இங்கிலாந்திற்குள் படிப்பதற்கு பல சர்வதேச மாணவர்களை இழுத்துவரமுடியும்.

பல்கலைக்கழகங்களுக்கான நிதியினை குறைத்துக்கொண்டே போனால், உயர்கல்வியே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நிபுணர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உயர்கல்விக்கான நிதியினை 25 சதவீதம் குறைத்தால், 22,584 பல்கலைக்கழக ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.


நிதிகுறைப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள்:

நூற்றுக்கணக்கான மாணவர்களும் பல்கலைக்கழக-கல்லூரி சங்க உறுப்பினர்களும் (யு.சி.யு) மே 5 ஆம்தேதி 2010 இல் லண்டன் கிங்க்ஸ் கல்லூரி முன்பு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினார்கள்.  அடுத்தநாளும் தொடர்ந்த அப்போராட்டத்தில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பல லண்டன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றார்கள்.

ரிச்மன்ட் தேம்ஸ் கல்லூரி, க்ரோய்டான் கல்லூரி, சசெக்ஸ் பல்கலைக்கழகம், பிராட்போர்ட் கல்லூரி, டான்காச்டார், லொப்போரோ கல்லூரி, பிர்மிங்கம் பெருநகர கல்லூரி, போர்ன்விள்ளே கல்லூரி, பிர்மிங்கம் நகர கல்லூரி மற்றும் தெற்கு பிர்மிங்கம் கல்லூரி ஆகிய கல்விநிறுவனங்களில் உள்ளிருப்புப்போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்தினர்.

பல்கலைக்கழகங்கள் 8000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்கவேண்டுமேன்றும், இனிவரும் கல்வியாண்டில் 3000 கோடி ரூபாய் அளவிற்கு அரசு மானியம் குறைக்கப்படுமென்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதனைக்கண்டித்து 2010 ஜூன் 21 ஆம்தேதி நூறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாபெரும் போராட்டத்தை கல்விநிறுவன ஊழியர்களும் மாணவர்களும் நடத்தினார்கள். 

மாணவர்களும், ஆசிரியர்களும், இன்ன பிற ஊழியர்களும் ஒரு புறம் போராட்டத்தினை வலுவாக நடத்திக்கொண்டிருக்க, மறுபுறம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி லார்ட் பிரவுன் 'பல்கலைக்கழகங்களுக்கான மானியம்' குறித்த தன்னுடைய அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்தார். அரசு மானியத்தை வெகுவாக குறைத்து, அதனை மாணவர்களின் மீது சுமையாக வைக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது அவ்வறிக்கையில். ஒவ்வொரு மாணவர்க்கும் அரசு செலவளிக்கும் தொகையினை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களே மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கவேண்டுமென்றும், மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் மானியம் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனின் வட்டியையும் உயர்த்தவேண்டும். இந்நடவடிக்கைகளின் மூலமாக, கல்விக்கான அரசு நிதியில் 80 % வரை குறைக்கமுடியும். இதனை நடைமுறைப்படுத்தினால், 8000 கோடி ரூபாய் அளவிற்கு ஆய்வுப்படிப்புகளிலும், 24000 கோடி ரூபாய் அளவிற்கு மற்ற படிப்புகளுக்கும், கல்விநிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக நிதிதிரட்டவேண்டிவரும். பெருமளவில் ஆசிரியர் எண்ணிக்கை குறைப்பும், வகுப்புகளின் எண்ணிக்கை குறைப்பும், சில துறைகளை ஒட்டுமொத்தமாக இழுத்துமூடுவதும் ஏற்கனவே துவங்கிவிட்டது.

ஏற்கனவே கல்வியின் தனியார்மயத்தால், இங்கிலாந்தில் வருடத்திற்கு 2 லட்சம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நடவடிக்கைகளினால், இவ்வெண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிடும் என்று கல்வி ஆர்வலர்கள் கணிக்கிறார்கள்.


காங்கிரஸ் அரசின் கல்விச்சீர்திருத்தத் திட்டங்களின் பின்னணியும், அமெரிக்க-இங்கிலாந்துடனான பேரங்களும்

அரசு நிதியினை எதிர்பார்க்காமல் தாங்களாகவே நிதிதிரட்டி இயங்கவேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் வலியுறுத்தத்துவங்கிவிட்டன. ஆனால் அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர், மற்றும் மாணவர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பின் காரணமாக, அந்நாடுகளின் அரசுகள், இதற்கு மாற்று வழிகளை ஆராயத்துவங்கின. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களை துவங்கி மிகப்பெரிய அளவில் இலாபம் பார்க்கும் நோக்கில், பல ஆண்டுகளாகவே பேச்சுவாத்தை நடத்திவந்தன அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள். அதனை நிறைவேற்றுவதற்கு , கல்வியில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்தியாவில் தற்போது இருக்கும் தடைகளை நீக்கவேண்டுமென்று கூடுதல் அழுத்தம் கொடுத்தன அந்நாடுகளின் அரசுகள்.

இதன்பின்னனியில்தான், இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு "உயர்கல்வி கல்விச் சீர்திருத்தங்கள்" என்று பல சட்டங்களை வரையறுத்தது. 
அம்பானி-பிர்லா அறிக்கையின் மூலமாகவும் மாதிரிச்சட்டங்களின் மூலமாகவும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உயர்கல்வியில் இதேபோன்ற மாற்றங்களை கொண்டுவர முயன்றும் இயலாமற்போனது. அதன்பின்னர், முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசும் முயன்றுபார்த்தும், இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் எவ்வித மாற்றத்தினையும் அவ்வரசினால் கொண்டுவர முடியாமற்போனது. இறுதியில், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசு, முறையான சட்டங்கள் வழியாக உள்நாட்டு தனியார் மற்றும் வெளிநாட்டு வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படுவதற்கென வடிவமைப்புச்சட்டங்கள் உருவாக்க முடிவுசெய்தது.

அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்களின் கல்விக்கடைகளை இந்தியாவில் திறந்து இலாபம் சம்பாதித்துக்கொள்ள வழிவகைசெய்வதே இச்சட்டங்களின் நோக்கம். இந்தியப்பிரதமரும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகளிடம் இதுதொடர்பான பேச்சுவார்த்தையினை துவக்கினார்கள்.


பேரங்கள்

அமெரிக்க அரசியல் விவகாரத்துரைச் செயலர் வில்லியம் பர்ன்சுடன் இந்தியா மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்தேதி புதுடெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-அமெரிக்க கல்வி கவுசில் ஒன்றினைத் துவங்க முடிவுசெய்யப்பட்டது. இக்கவுன்சிலில் தொழிற்துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக்கொண்டு இயங்குமென்றும், கல்வித்துறையில் இருநாடுகளின் உறவுகள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவுன்சில் முடிவுசெய்யுமென்றும் அறிவிக்கப்பட்டது.

2009 நவம்பர் மாதத்தில், "ஒபாமா-சிங் : இந்திய-அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான 21 ஆம் நூற்றாண்டின் கல்வி முன்முயற்சி" துவங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2010 ஜூன் மாதத்தில், கபில்சிபல் அமெரிக்கா சென்று ஹிலாரி கிளிண்டனை சந்தித்து கல்வித்துறையில் இருதரப்பும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக 14 புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குமென்றும், அதில் முதல் பல்கலைக்கழகத்தை ஒபமா வெகுவிரைவில் இந்தியாவில் திறந்துவைப்பார் என்றும் தெரிவித்தார் கபில்சிபல். இந்தியாவில் கடையைத்திறக்கத் தயாராக இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் குறித்தும் அவர்களின் பேச்சுவார்த்தை இருந்தது.

"வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கிற முடிவினை எடுத்து, இந்தியா ஒரு மிக முக்கியமான கல்விச்சீர்திருத்தத்தை மேற்கொள்ளத்தயாராகியிருக்கிறது." என்று ஹிலாரி கிளிண்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

2010 செப்டம்பரில் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க விவாகரத்துறை அமைச்சகம் ஒரு வட்டமேசை மாநாடு நடத்தியது. ஆசியாவில் இந்தியா போன்ற நாடுகளுடன் பள்ளிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், தொழிற்கல்லூரிகள், ஆய்வுக்கல்வி நிறுவனங்கள் என அனைத்துவிதமான கல்விநிறுவனங்களிலும் ஒன்றிணைந்து கூட்டுமுயற்சியினை துவங்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. 

2010 ஜூலை மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், "தேசிய வளர்ச்சிக்கு உதவுவதுமட்டுமல்ல கல்வி, இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய வளரும் வியாபாரமே கல்விதான். இருதரப்பு நன்மைக்காக நம்மிரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" என்கிற தத்துவத்தை உதிர்த்துவிட்டுச்சென்றார். "இந்தியா-இங்கிலாந்து கல்வி மற்றும் ஆய்வு முன்முயற்சி" என்னும் கூட்டுநடவடிக்கைகளின் மூலம் இருநாடுகளும் ஒன்றிணைந்து புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் புதுமையான பல்கலைக்கழகங்களை உருவாக்கும் தன்னுடைய எண்ணத்தினையும் வெளியிட்டது இங்கிலாந்து அரசு.

கேமரூனுடன் வந்த இங்கிலாந்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் டேவிட் வில்லெட்ஸ், "ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ், எஸ்ஸக்ஸ், பிர்மிங்கம், நியூகேசில், எக்சடர் ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புதிய பல்கலைக்கழகங்கள் துவங்குவதிலும், வடிவமைப்பிலும் உதவத்தயாராக இருக்கின்றன" என்றார். 

மையக்கட்டுரையாளர் -   விஜயேந்தர் ஷர்மா
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் - இ.பா.சிந்தன்

(தொடரும்...)
(அடுத்து : அமெரிக்க-இங்கிலாந்து நாடுகள் இந்தியாவில் கல்வி வியாபாரத்தினை துவங்குவதற்கு என்னென்ன சட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது...)

1 comment:

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)