Saturday, January 7, 2012

மரபணு பயங்கரவாதமும் இந்திய உயிரி தொழில்நுட்ப மசோதாவும்





எதையாது செய்து நான் என்றும்  ஏகாதிபத்திய அடிமை என்று நிருப்பிக்க தொடர்ந்து பல்வேறு மாசோதாக்களை கொண்டுவந்து குறிப்பாக அமெரிக்காவிடம் நல்லபெயர் எடுக்க முயற்சி செய்து வருகிறார் பிரதமர். ஏற்கனவே அன்னிய முதலீட்டு மசோதா காத்துகிடக்கிறது. இன்நிலையில் மன்மோகன்சிங் அரசு புதிய மரபனு மசோதாவை கொண்டுவர துடிக்கிறது. அதுகுறித்து இந்து நாளேட்டில் வந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள “இந்திய உயிரி தொழில் நுட்பம் ஒழுங்காற்று ஆணைய மசோதா நிறைவேற்றப்படுமேயானால், அது நம் நாட்டின் விவசாயம், மக்கள் உடல் நலம், மற்ற பிராணிகளின் உடல் நலம், சுற்றுப் புறச்சூழல் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும். இந்தியாவில் மரபணு தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகள் ஏற்கனவே குறைபாடுகளுடன் உள்ளன. இதனால்தான் அன்றைய சுற்றுப்புறச் சூழல் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு காலவரையற்ற தடையை விதித்தார். ஆச் சரியம் என்னவென்றால், இந்திய மரபணு பொறியியல் ஒப்புதல் குழு பி.டி. கத்திரிக் காயை இந்தியாவிற்குள் நுழைவதற்கு ஒப் புதல் அளித்திருந்தது. அதையும் மீறியே அன்றைய அமைச்சர் தடையை விதித்தார். மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களுக்கு எளிதான முறையில் ஒப்புதல் வழங்க வழி செய்வதே இம்மசோதாவின் நோக்கமாகும். இம்மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய மசோதா.

மசோதாவின் சில முக்கியமான அம்சங்கள்

திட்டமிடப்பட்டுள்ள ஆணையத்தில் மூன்று நிரந்தர உறுப்பினர்களும் இரண்டு உறுப்பினர்கள் சுழல் முறையிலும் நிய மிக்கப்படுவர். மூன்று பிரிவுகளைக் கொண்ட இவ்வாணையத்தின் ஒவ் வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை அதி காரி கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பார். இவர்களுக்கு உதவி செய்திட அமலாக்கப் பிரிவு, விளைவுகளை மதிப்பிடும் பிரிவு, அறிவியல் ஆலோசனைக்குழு, சுற் றுச்சூழல் பாதிப்பு கணக்கிடும் குழு, மத் திய உயிரித் தொழில் நுட்ப ஆலோசனைக் குழு, மாநிலங்கள் அளவிலான உயிரி தொழில் நுட்ப ஆலோசனைக் குழு என்று ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட உள் ளன.

இக்குழுக்களில் எல்லாம் இன்றைய உயிரி தொழில் நுட்பத்தின் நுட்பங்கள் பற்றி எதுவுமே தெரியாத அதிகாரிகளே பொறுப்பேற்பார்கள். மசோதாவின் எந்த இடத்திலும் குடிமைச் சமூகங்களின் பங்கேற்பு பற்றி பேசப்படவில்லை. இம் மசோதாவின் பல்வேறு அம்சங்கள் சாதாரண குடிமக்களை பாதிக்கும் விதமாக உள்ளன. இருப்பினும் அவர்கள் சார்பாக இவ்வாணையத்திடம் முறையிட குடிமைச்சமூகங்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. இவ்வாணையம் மத்திய அரசின் எத்துறையின் கீழ் செயல்படும் என்பதும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவின் உயிரிதொழில் நுட்பத் துறைதான் மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. இத் துறையே இவ்வாணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கப் போகிறது என்பது எந்த வகையில் நியாயமானதாகும்? இவ்வாணையத்தின் உறுப்பினர்கள் நேர் மையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்பட் டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி விவசாயம், மாநிலங்களின் உரிமைகளுக்குள் அடங்கும். எனவே மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களை அனுமதிப்பது குறித்த முடிவை மாநிலங்களே எடுக்க முடியும். அடிப்படையிலேயே இம்மசோதாவின் அம்சங்கள் மாநிலங்களின் உரி மைகளில் குறுக்கீடு செய்யும் விதம் அமைந்துள்ளன.

2009ல் பி.டி கத்திரிக்காய் பிரச்சனை எழுந்த போதே பத்துக்கும் மேற்பட்ட பல் வேறு அரசியல் கட்சிகளின் தலைமை யிலிருந்த மாநில அரசுகள், தங்கள் மாநி லங்களில் பி.டி. கத்திரிக்காயை அனு மதிக்க மாட்டோம் என்று உரக்க உரைத்தன.

இம்மசோதாவின் 28வது பிரிவு இவ் வாணையத்தின் அறிவிப்புகள் எல் லாம் வாணிப ரகசியங்கள் என்பதால், அவை கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறுகிறது. எனவே குடி மைச் சமூகங்கள் இவ்வாணையத்தின் எந்த ஒரு பிரிவையும் கேள்விக்குள்ளாக்க முடியாது.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவ ரையும் பாதிக்கப் போகும் இப்பொருள் குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட் டறிவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. இம்மசோதாவின் 81, 86, 87.2 ஆகிய பிரிவுகள் இவ்வாணையத்தின் முடிவுகளை ஏற்கனவே நிலவி வரும் எந்த வொரு சட்டங்களும் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறது. மசோதாவின் 86வது பிரிவிலேயே பிறிதொரு பகுதியில் இவ் வாணையத்தின் முடிவுகள் எதுவும் ஏற் கனவே இருக்கும் சட்டங்களுக்கு எதி ராகச் செயல்படாது என்று சொல்லி முரண்படுகிறது.

மோசமான விளைவுகள்

நவீன உயிரி தொழில் நுட்பத்தை வரை யறை செய்யும் மசோதாவின் 3.ச பிரிவு இன்றைய உயிரி தொழில்நுட்பத்தின் உள்ளார்ந்த பல்வேறு அம்சங்களையும் புறக்கணித்து, குழப்பத்தை விளைவிக் கிறது. இச்சட்டத்தினால் இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும், உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களிலும் அன் றாடம் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடையூறு ஏற்படும்.

ஏனென்றால் இவ்வாணையத்தின் ஒப்புதல் பெற்றே உயிரி தொழில்நுட்பம் குறித்த எந்தவொரு ஆராய்ச்சியிலும் ஈடு பட முடியும். இவ்வாணையத்தின் ஒப்பு தல் பெற்றே பல்கலைக்கழகங்கள் மாண வர்களுக்கு இப்பாடத்தைப் போதிக்கவும் முடியும். மசோதாவின் அட்டவணை 1ல் எந்தெந்த உயிரினங்களெல்லாம் ஆணை யத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

இவ்வட்டவணையில் மனிதர்களுக் கும் மற்ற பிராணிகளுக்கும் பயனளிக்கக் கூடிய செயற்கை உயிரியல் மூலம் உரு வாக்கப்படும் பொருட்களின் பட்டி யலும் கொடுக்கப்பட்டுள்ளது. மசோ தாவை வடி வமைத்தவர்களுக்கு உயிரி தொழில் நுட் பம் பற்றி போதிய ஞானம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அட்டவணை 1ன் கீழ் வரும் மற்றொரு பிரிவின்படி (2.ன), இவ் வாணையத்தின் அனுமதியின்றி இந்தி யாவில் எந்தவொரு மருத்துவமனை யிலும் அங்க மாற்றுச் சிகிச்சையும் செய் திட முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தை எந்த வழி முறையைப் பின்பற்றி தேர்ந் தெடுக்கப்பட்டது என்பது குறித்த உண் மையையும் வெளியிட வேண்டிய தில்லை. முதலில் மரபணு மாற்றப்பட்ட பயிரினத்திற்கு உண்மையிலேயே தேவை இருக்கிறதா என்ற சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் என்ற முடிவுக்கு வந் தால், மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தை ஏற்றுக்கொள்ளும் சூழல் இந்திய விவ சாயத் துறையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். மரபணு மாற்றப் பட்ட பயிரினத்தைக் இந்தியாவிற்குள் கொண்டுவருவது இன்றியமையாதது என்ற முடிவுக்கு வரும் பட்சத்தில், அதற் கான சோதனைகளை மேற்கொள்ள சுதந் திரமாகச் செயல்படும் தரமான ஆய்வுக் கூடங்கள் பற்றி மசோதா எதுவும் பேச வில்லை.

ஆணையத்தின் வானளாவிய அதிகாரம்

ஒரு நிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர் விளைவிக்கப்படுகிறது என்பதைக் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என் பதையும் சட்டம் சொல்லவில்லை. இதன் அருகாமையில் விளைவிக்கப்படும் சாதாரண பயிரினத்தை இது நிச்சயம் பாதிக்கும் என்கிற போது இவ்வறிவிப்பு மிக முக்கியமானது. மசோதாவிலேயே மிக மோசமான பிரிவு 62 ஆகும். இது விதி மீறலையும் அதற்கான தண்டனையையும் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆணையத்தின் ஒப்புதலுடன் வரும் மரபணு மாற்றப்பட்ட பயிரினத்தைப் பற்றி யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அது குற்றமாகக் கருதப் படும். அதற்கான தண்டனையாக மூன்று மாத சிறை வாசமும், ஐந்து லட்சம் ரூபாய் தண்டல் தொகையும் விதிக்கப்படும். ஆணையத்தின் முடிவே இறுதியாகும். இதை எந்த மன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. உயிரி தொழில் நுட்ப ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் இருக்கும் ஐந்து அதிகாரிகளே வானளா விய அதிகார த்தைப் பெற்றவர்கள் ஆவர். இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரி தொழில் நுட்ப வல்லுநர்களின் கூற் றுக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாது.

மசோதா கொண்டுவருவதற்கான காரணம் என்ன?

இன்றைய உலகின் மிகப் பெரிய வியாபாரம் உணவுப் பொருள் வியாபாரமாகும். இதை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே உலகைக் கட்டுப்படுத்து பவர்கள் ஆவார்கள்.

உணவு உற்பத்தியில் மேலாதிக்கம் செலுத்திட, விவசாயம் சார்ந்த உரம், விதை, பூச்சிக் கொல்லி மருந்து போன்ற இடு பொருட்களின்பால் மேலாதிக்கம் இருந்திட வேண்டும். விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சில பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் உரிமத்தை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு, உலகையே ஆட்டிப்படைக்கத் திட்டமிடுகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் இக்கம்பெனிகள் அந்நாட்டு அரசுடன் மிகவும் நெருக்கமாகவும் உள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் நிலவும் இன்றைய நெருக்கடிக்கு கார ணமே, ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிரினங்களை அனுமதிக் காதது ஆகும். ஒரு உற்பத்திப் பொருளில் 9சதவீதம் மரபணு மாற்றப்பட்டிருந்தாலே அது விற்பனைக்கு வரும்போது தெளி வாகக் குறிப்படப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் காட்டயப்படுத்து கின்றன. அமெரிக்காவில் இத்தகு அறி விப்பு தேவையில்லாததால் அமெரிக்க மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு எந்தளவிற்கு மரபணு மாற்றப்பட்டிருக் கிறது என்பதையே அறியமாட்டார்கள்.

இந்திய மக்களின் விழிப்புணர்வு

இந்தியாவில் மிகச் சமீப காலமாகவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மீதான எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதியளிக் கும் குழு, இவற்றை முனைப்புடன் விற் பதற்கு உதவி செய்து, பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் சேவகர்களாகச் செயல் படுகிறது. ஆனால் இன்று இந்திய மக்கள் மிகவும் தெளிவுடனும் விழிப்புணர் வுடனும் இருக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தம், பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளின் வலி யுறுத்தல், இந்திய அரசின் ஆதரவு இவை அனைத்தையும் மீறி பி.டி கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்ய முடிகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மீதான எதிர்ப்பு நம் நாட்டில் இன்று வலுவடைந் துள்ளது. இன்றிருக்கும் குறைந்தபட்ச விதிகளின் துணை கொண்டே இவை களைத் தடுக்கவும் முடிகிறது.

பீஹார், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இத்தகு பயிர்களை சோதிப்பதற்கும் விளைவிப்பதற்கும் தடை செய்துள்ளன. தங்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தடை யாக இருக்கும் இந்தியச் சூழலை மாற்ற நினைக்கின்றன பன்னாட்டு பகாசுர விதைக் கம்பெனிகள். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே இம் மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்திய ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த எண்ணங்களைப் புரிந்து கொண்டு இம்மசோதாவை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கைவிடும் என்று எதிர்பார்ப்போம்.

புஷ்பா பார்கவா

தமிழில்: பேரா. பெ.விஜயகுமார்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)