இந்த பூமியின் அழகுகள் அனைத்திலும் மிக உயர்ந்த அழகு எது? வாழ்க்கை. மண்ணில் பிறப்பதன் நோக்கம் வாழ்வது என்றால், வாழ்வதன் முழுமை பிறருக்காக வாழ்வது.
வாழ்க்கையைப் பற்றி அலுத்துக்கொள்கிறவர்களைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது, இன்னொரு பக்கம் பரிவு ஏற்படுகிறது. ஒரு வெறுமை, ஏமாற்றம், தன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என்ற கழிவிரக்கம், தனக்குத் தானே பயனற்றுப் போனது போன்ற சுய ஆத்திரம்... இப்படியான உணர்வுகள் இவர்களைத் தாக்குகின்றன. இதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் தன்னை மட்டுமே மையமாக வைத்துக்கொள்வதுதான்.
நம் வாழ்க்கை மற்றவர்களுக்காகவே என்ற தெளிவு இருந்தால் ஒருபோதும் இந்த ஏக்க உணர்வு நம்மைத் தீண்டாது. அந்த லட்சியத்தை மனதில் ஏற்றிக்கொண்டால், அதை நிறைவேற்று வதற்காக நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தோன்றும்; நாம் துன்பப்பட்டேனும் மற்றவர்களுக்கு இன்பத்தை ஏற்படுத்தும் எண்ணம் ஊன்றும். அந்த முயற்சிகளில் ஏற்படும் தோல்விகள் கூட பின்னுக்கு இழுக்காமல், தொடர்ந்து முயல்வதற்காக முன்னே தள்ளும்.
பிறருக்காக வாழ்வது என்பதில் கூட தன் குடும்பத்துக்காக, தன் சுற்றத்துக்காக, தன் ஊருக்காக, தன் சமூகத்துக்காக என்று பல நிலைகள் இருகின்றன. சமுதாயத்திற்காக வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்வது ஒரு உன்னத நிலை. சக மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் சக உயிர்கள் அனைத்திற்காகவும் (மரஞ்செடி கொடிகள் உட்பட) வாழ்கிற வாழ்க்கை மகத்தானது. இவ்வாறு பிறர் வாழ்வதற்காகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே தொண்டு.
சொல்லப்போனால், தொண்டின் அடிப்படையில்தான் உலக சமுதாயம் இயங்குகிறது. இந்த உலகம் உருண்டையாக இருக்கிறது, அது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னது முதல், மானுட சமுதாய வரலாறு என் பது வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்பதை எடுத்துரைத்த வரையில், சாலையைக் கடக்க ஒரு மூதாட்டிக்குக் கைகொடுப்பது முதல், சமுதாயத்தை மாற்றுவதற்கான இயக்கத்தில் தோள் சேர்வது வரையில் எல்லாம் தன்னார்வத் தொண்டுதான்.
வளரும் வயதில் இயல்பாக எல்லோர் மனதிலும் இருக்கிற தொண்டுணர்வு பின்னர் அவரவர் வட்டம், சமூகம் என்று தேங்கிப் போய் விடுகிறது. ஒரு இறைவனுக்குப் பூசை செய்ய பூப்பறித்துக் கொடுப்பதே உயர்ந்த தொண்டு என சுருக்கப்பட்டு, வேறு இறைவனின் பக்தர்களைப் பகையாய்ப் பார்க்கிற புத்தி பெரிதாக்கப்படுகிறது. இன்னும் பல வகைகளில் இப்படியான தேக்கங்களும் சுருக்கங்களும் உண்மைத் தொண்டை உருமாற்றியிருக்கின்றன.
தொண்டாகத் தொடங்கி பின்னர் நிறுவனமயமாக்கப்படுவதை எங்கும் காண முடிகிறது. தொண்டு நிறுவனங்கள் எங்கும் வேர் விட்டிருக்கின்றன. ஐ.நா. சபை, அதனோடு இணைந்த பல பன்னாட்டு அமைப்புகள், அவற்றின் பின்புலத் தோடு எண்ணற்ற அறக்கட்டளைகள் என தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வந்து பாய்கிறது.
தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது திடீரென நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் புதுப்புதுப் பெயர்களில் முளைத்தன. அவற்றில் பெரும்பாலானவை, எதிர்பார்த்த பணம் கிடைத்ததாலோ அல் து எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குக் கிடைக்கவில்லை என்பதாலோ காணாமல் போய்விட்டன.
எங்கோ வதங்கிக் கிடக்கும் மனிதர்களின் கண்ணீர் துடைக்கத் துடித்தாலும், நேரடியாகச் செல்ல இயலாத நிலையில் தனது கைகளாக ஒரு தொண்டு நிறுவனத்தை நம்பித் தங்களது வருவாயில் ஒரு பகுதியை வழங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இப்படி வெளிநாட்டுப் பணம் பெற்று, உண்மையாகவே அதற்கு விசுவாசமாகப் பணியாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். (எங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவது உண்மைதான். எங்களைப் பொறுத்தவரையில் அந்தப் பணத்தை எந்த நோக்கத்திற்காகப் பெறுகிறோமோ, அதற்காக உண்மையாகப் பயன்படுத்துகிறோம். -ஒரு தொண்டு நிறுவன நண்பர் என்னிடம் கூறியது.)
குழந்தைத் தொழிலாளர் நிலை, தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், சுற்றுச் சூழல் சதிகள், இயற்கைச் சமநிலை அழிப்புகள் என்று இவர்கள் கள ஆய்வு செய்து வெளிப்படுத்துகிற உண்மைகள், அரசியல் இயக்கங்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன. உரிய சட்டங்களைக் கொண்டுவரத் துணை செய்கின்றன.
ஆராய்ச்சிகளின்போது தமது உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்ட மருத்துவ அறிவியலாளர்கள் போல, சமூக உண்மைகளைக் கண்டறியத் தங்களது சொந்த சுகங்களை அர்ப்பணிக்கிற தொண்டுள்ளம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது உழைப்பும், தகவல்களைத் திரட்டுகிற முனைப்பும், உரிய மாற்றங்களை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளும் பொதுவாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வருகிற ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பாங்குகள். அதே வேளையில், அரசாங்கத்திடமிருந்தோ, உலக அமைப்புகளிடமிருந்தோ நிதி பெறுகிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாமே இப்படிப்பட்டவைதான் என்று சொல்வதற்கில்லை. நிதி வெள்ளம் பாய்கிற மதகுகளையும், அவற்றைத் திறந்துவிடும் வழிகளையும் தெரிந்துகொண்டு, தங்களைத் தொண்டு நிறுவனமாக அறிவித்து வசதிகளை அனுபவிக்கிற தொண்டுத் தொழிலதிபர்கள் நிறையப் பேர் உண்டு.
குறிப்பிட்ட பிரச்சனையில் உண்மையான மாற்றங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய மக்கள் போராட்டங்களாக மாறுவதைத் தடுத்து, நீதிமன்றப் படிகளோடும் அரசாங்கக் கதவுகளோடும் நிறுத்துவதற்குத் தொண்டு செய்கிறவர்களும் உண்டு.
அதே போல், நிதி உதவி செய்கிறவர்களிலும் எல்லோருமே தூய தொண்டு நோக்கத்தோடுதான் செய்கிறார்கள் என்று நற்சான்று கொடுத்துவிட முடியாது. மக்கள் இயக்கங்களைத் திசை திருப்புவதற் கென்றே நிதி ஒதுக்குகிற பன்னாட்டுப் பெருந் தொழில் நிறுவனங்கள், அதற்கென்றே அறக்கட்டளைகளை அமைத்திருக்கின்றன. கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் கோவில் உண்டியலில் போட்டு பாவக்கணக்கை சரிப்படுத்திக்கொள்வது போல், உலகமெல்லாம் ஆக்கிரமித்து உறிஞ்சி எடுக்கிற லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதி அந்த அறக்கட்டளைகள் மூலம், பல்வேறு நாடுகளில் ஏழைகளுக்கான மருத்துவ உதவி, குடிசை வாழ் மக்களுக்கான பள்ளிச் சேவை, சமூக நிலைமைகள் பற்றிய ஆய்வு என்றெல்லாம் தூவப்படுகிறது.
அரசியல் களத்தில் முதலாளித்துவக் கட்சிகளின் கொள்கைச் சரணாகதிகளையும், தலைவர்களது கடைந்தெடுத்த சுயநல வேட்டைகளையும் கண்டு ஏற்படுகிற வெறுப்பு காரணமாக, பொதுமக்கள் இப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்களை நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அரசாங்கமும் தனது சமூகப் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, பொது-தனியார் கூட்டு என்ற பெயர்களில் இப்படிப்பட்ட அமைப்புகளிடம் மக்களைத் தள்ளி விடுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்காக நிலம் ஒதுக்குவது போன்ற தொண்டுகளைச் செய்கிறபோது, அந்த நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு என்பதாக ஒரு கண்துடைப்பு ஒப்பந்த விதி சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
மக்கள் போராட்டங்களன்றி வேறு மார்க்க மில்லை என்று இயங்குகிற மார்க்சிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், இதர ஜனநாயக அமைப்புகள் பக்கம் அந்த மக்கள் திரும்பி விடாமல் திரையிடுகிற கைங்கரியங்கள் நுட்பமான முறையில் நடக்கின்றன. அரசியல் இயக்கங்களாக மாறிவிடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருக்கிற சில விழிப்புணர்வு இயக்கங்களின் மேல் பெரும் வர்த்த ஊடகங்கள் எப்படியெல்லாம் விளம்பர வெளிச்சம் பாய்ச்சுகின்றன. ஆனால் இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள், அல்லது போகிற போக்கில் பத்தோடு பதினொன்றாக செய்தி சொல்லி விட்டுவிடுவார்கள். உயர் மட்ட ஊழல்களை விசாரிப்பதற்காக என லோக்பால் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று இடதுசாரிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் வலியுறுத்தி வந்திருப்பதை மூடி மறைத்த தொண்டு இதற்கொரு எடுத்துக்காட்டு.
பிள்ளையின் அழுகை பசியாலா, எறும்பு கடித்ததாலா, எதையோ கண்டு பயந்ததாலா என்று தானாக உணர்ந்து அணைக்கும் தாயின் மனம் ஒவ்வொரு தொண்டருக்கும் தேவை. அந்தத் தாயுள்ளம் பலப்பல வடிவங்களில் வெளிப்படுகிறது. அதன் உச்சமான வடிவம்தான் மார்க்சிய இயக்கம். அது சமுதாயப் புண்களுக்கு மேற்பூச்சு மருந்திடுவதோடு நிற்பதில்லை. புண் புரையோடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதோடும் நிற்பதில்லை. அந்தக் காரணங்களை அகற்றுகிற, அடிப்படைகளை மாற்றுகிற உண்மையான தொண்டுக்கு இன்னொரு பெயர்தான் மார்க்சிய இயக்கம். திரை மறைப்பு அற்பத்தனங்களைக் கிழித்துக்கொண்டு மார்க்சிய இயக்கம் மக்கள் இயக்கமாக மலரும். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போன்ற போராட்டங்கள் உலகெங்கும் படர்வது அந்த உண்மையை உணர்த்துகிற தொண்டைத்தான் செய்கிறது.
- அ.குமரேசன்

//அரசியல் களத்தில் முதலாளித்துவக் கட்சிகளின் கொள்கைச் சரணாகதிகளையும், தலைவர்களது கடைந்தெடுத்த சுயநல வேட்டைகளையும் கண்டு ஏற்படுகிற வெறுப்பு காரணமாக, பொதுமக்கள் இப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்களை நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.//
ReplyDeleteசமூகத்திற்கு ஏதாவது செய்யவெண்டும் என்று நினைப்பவர்கள் ,அரசியலை வெறுப்பவர்களாக இருந்தால் அவர்கள் தொண்டு நிறுவந்த்திடம் சேருகிறார்கள்.எவ்வளவோ நல்ல விஷ்யங்களை அது செய்தாலும் மக்களை போராட்டங்களின் பால் செல்லாமல் செய்கிற வேலையை செய்வதால் `பண்டு` வருகிறது.