2012ம் ஆண்டு, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க காத்திருக்கிறது. பாரக் ஒபாமா மீண்டும் களம் காணத் தயாராகிறார். அவருக்கு எதிராக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய மஸ்ஸாசூஸெட்ஸ் மாகாணத்தின் கவர்னர் மித்ரோம்னி களமிறங்க காத்திருக்கிறார்.
உள்நாட்டில் வரலாறுகாணாத வேலையின்மையும் பொருளாதார நெருக்கடியும் வறுமையும் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நிலையில், “ஆம், நம்மால் முடியும்” என்று கூறி அதிகாரத்திற்கு வந்த தனது நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் கவனத்தை திசை திருப்ப போர்ப்பறையை ஓங்கி ஓங்கி அடிக்கத் துவங்கியிருக்கிறார் பாரக் ஒபாமா.
மித்ரோம்னியும் சளைத்தவராக இல்லை; அவரும் போர்ப்பரணி பாடி மக்களிடையே வலம்வரத் தயாராகிறார். இரண்டு பேருமே ஈரானை அடித்து துவம்சம் செய்ய தயாராக இருப்பதாக வெறியுரை நிகழ்த்தி வருகிறார்கள்.
தனது நான்காண்டு கால ஆட்சியில், எண்ணெய் வளம் கொழிக்கும் லிபியா எனும் மாபெரும் தேசத்திற்கு சுதந்திரத்திலிருந்து விடுதலை வாங்கிக்கொடுத்த மகத்தான காரியத்தை செய்த ஒபாமா, அந்நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்வதாகக் கூறி உலகின் மனசாட்சியை உலுக்கும் கொலைபாதகத்தை அரங்கேற்றினார். அதைத்தொடர்ந்து, சிரியாவிலும் ஜனநாயகத்தை மீட்கப் போவதாகக் கூறி போர் முஸ்தீபு நடத்தி வருகிறார்.
ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா என அடுத்தடுத்து போர் முழக்கம் செய்துகொண்டே இருக்க வேண்டியது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாழ்வு நீடிக்க அத்தியாவசியமானதாக இருக்கிறது. இதற்கு காரணங்கள் தேவையில்லை. உலக மக்களிடம் அதை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பாதுகாப்பு கவுன்சிலும், ஐ.நா. வின் அணுசக்தி அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிய தயாராக இருக்கும் போது, அதை எதிர்த்து நிற்கும் நாடு எதுவாக இருந்தாலும் அது அமெரிக்காவின் எதிரியே!
அந்த வகையில், ஈரான் ஒரு முக்கிய எதிரி!
ஆப்கானிஸ்தானைத் தாக்கும் போது ஒசாமா பின்லேடன் ஒரு காரணமாக கிடைத்தார். இராக்கை தாக்கும் போது, அங்கு பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு காரணம் கிடைத்தது. லிபியாவை சிதைக்கும்போது, அந்நாட்டின் ஜனாதிபதி மும்மர் கடாபி மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவுவதாக காரணம் கிடைத்தது. ஈரானுக்கும் ஒரு காரணத்தை கண்டு பிடித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவின் அடிவருடியாக வீழ்ந்துகிடக்கிற சவூதி அரேபியாவின் தூதரை வாஷிங்டனில் வைத்து கொலை செய்ய கடந்தமாதத் துவக்கத்தில் ஒரு முயற்சி நடந்தது. வாஷிங்டனில் உள்ள சவூதி அரேபியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தத் தூதர் உயிர் தப்பிவிட்டார். இது குறித்த விசாரணைகள் எதுவும் துவங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவுக்கான சவுதி அரேபியத் தூதரை கொல்ல முயன்றது ஈரான் அரசாங்கமே என்றும், எனவே அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கே ஈரான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அந்நாட்டின் மீது உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டுமென்றும், அந்த தாக்குதல் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரு கடுமையான ராணுவத்தாக்குதலாக இருக்கவேண்டுமென்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு பெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனல் கக்குகிறார்கள்.
மறுபுறத்தில் ஐ.நா. பொதுச் சபையில், சவூதி அரேபிய தூதரைக் கொல்ல நடந்த முயற்சியைக் கண்டித்து, ஈரானை மறைமுகமாகக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேறுகிறது.
மற்றொருபுறத்தில் சர்வதேச அணுசக்தி முகமை, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பழைய பல்லவியை மீண்டும் பாடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
உண்மையில் சவூதி அரேபியத் தூதரை கொல்ல முயன்றது யார்?
அப்படியே கொல்ல முயற்சித்தாலும், அதற்கு பதிலடியாக சவூதி அரேபியா அல்லாத ஒருநாடு, மற்றொரு நாட்டின் மீது குற்றம் சாட்டி ஒரு பெரும் போர்த்தொடுக்கும் அளவிற்கு அவர் அவ்வளவு முக் கியமானவரா? அல்லது சவூதி அரேபிய மன்னர் குடும்பத்துடன் நேரடித் தொடர்புடைய வாரிசுகளில் ஒருவரா?. இந்தக் கேள்விகள் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளன.
மேற்படி தூதரைக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக ஈரானிய வம்சாவளியைச்சேர்ந்த, அமெரிக்காவில் வாழ்கிற மன்சூர் அர்பாப்சியர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே, ஈரான் அரசுக்கு இதில் தொடர்புள்ளது என்று கூறுவது ஒரு முழுமையான முட்டாள்தனம் என்று அம ரிக்காவின் உளவு ஸ்தாபனங்களான சிஐஏ மற்றும் எப்பிஐ ஆகிய வற்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பலரும் கூறுகிறார்கள்.
கைது செய்யப்பட்ட அர்பாப்சியரின் ஒன்றுவிட்ட சகோதரர் கோலம் சகவ்ரி என ஒருவர் இருக்கிறார். ஈரான் அரசால் தடை செய்யப்பட்ட முஜாகிதீன்-இ-கல்க் எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இவர். ஈரானியர்களுக்கு எதிராக விஷம் கக்கும் அமெரிக்காவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வரும் சவூதி அரேபியா மீது தங்களது ஆத்திரத்தைக் காட்ட, அந்நாட்டின் தூதரை வாஷிங் டனில் தீர்த்துக்கட்ட முடிவு செய்து காரியங்கள் மேற்கொண்டவர் இவர். இவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது இஸ்ரேலின் உளவு ஸ்தாபனமான ‘மொசாத்’ என்பது அடுத்த கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த உண்மைகளை மறைத்து, ஈரான் மீது இன்னும் வேகமாக வெறுப்பைக் கக்குகிறது அமெரிக்கா. ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி முகமை ஆகியவற்றின் கண்டனத் தீர்மானங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உரிமங்களாக பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறது.
எனவே, அடுத்த ஆண்டு வெல்வது ஒபாமாவோ, ரோம்னியோ; தோற்பது அவர்களது போர் வெறியாக இருக்கட்டும்!
-எஸ்.பி.ராஜேந்திரன்

0 comments:
Post a Comment