சமூக வலைத்தளங்கள் குறித்து மிகுந்த கவலையோடு மத்தியமந்திரி கபில்சிபல் பேசியிருக்கிறார். அவைகளில் கட்டுப்பாடும், விதிகளும் நிர்ணயிக்க வேண்டுமென்று மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை விளக்கியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, மக்கள் ஒற்றுமை குறித்தெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார். அசந்தவர்கள் அப்படியே மெய்சிலிர்த்துப் போகக்கூடும்! முதலில் அவர் சொல்வதைக் கேட்போம்.
"சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கு கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணையதள நிறுவனங்கள் இது குறித்து சுய ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் இந்த அரசுக்கு உடன்பாடில்லை. இந்த நாட்டின் சமூக உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நேர்மையான மனிதனும் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் சமூக தளங்களில் பிரசுரிக்கப்படுவதை ஏற்கமாட்டான்.
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற செய்திகள் சில தளங்களில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய செய்திகளை கையாள்வது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவை கூறுமாறு கடந்த செப்டம்பர் மாதம் அரசு கேட்டுக் கொண்டது. தொடர்ச்சியான நினைவுறுத்தலுக்குப் பின்பும் இணையதள நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆட்சேபத்துக்குரிய இணையதள செய்திகளை கையாள்வது தொடர்பாக சில நன்னடத்தை விதிகளை கடந்த நவம்பர் மாதம் அரசு வகுத்தது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட், யாகூ, கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்தது. பேச்சின்போது சில விதிகளை ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், எழுத்துப் பூர்வமான பதிலில் அதற்கு மாறான நிலை எடுத்தன. தங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் சமூக அளவீடுகளை இங்கும் கடைபிடிக்கலாம் என்று அந்நிறுவனங்கள் ஆலோசனை வழங்கின. அமெரிக்காவிலேயே சமூக அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அந்நாட்டு விதிகளையே இங்கும் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், இந்தியாவின் சமூக அளவீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசு கவனமான ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கும். கலகமூட்டும் செய்திகள் தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்க வில்லையெனில் அதில் தலையிட வேண்டியது அரசின் கடமையாகும். ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டது செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆனது. சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை எழுதும் நபர்கள் பற்றிய விவரங்களை பெற்று அவர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்படும்.
சந்தேகத்திற்கு உரிய வகையில் வலைதளங்களை பயன்படுத்தும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய விவரங்களையும் சில நிறுவனங்கள் தர மறுக்கின்றன. தாங்கள் செயல்படும் நாட்டின் சமூக உணர்வுகளை இந்நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."
சரிதான் அமைச்சர் கபில்சிபில் அவர்களே. கூடவே ஒரு சந்தேகமும் வருகிறதே. ஊடகங்களிலும், கல்வித்துறையிலும் அந்நியர்கள் நுழைவதற்கு உங்கள் காங்கிரஸ் அரசு சம்மதித்தபோது நாங்கள் இதே விஷயத்தைத்தான் சொன்னோம். இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மக்கள் உணர்வுகளை அந்நிய நிறுவனங்கள் மதிக்காது என எதிர்த்தோம். அப்போது உறைக்காத விஷயம் இப்போது ஏன் உங்களுக்கு உறைக்கிறது என்று யோசிப்பதில் நியாயம் உண்டுதானே. தொடர்ந்து சரமாரியாய் கேள்விகள் எழுவதும் சரிதானே?
1. இந்தியாவில் இனையதளம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை எவ்வுளவு? தொலைகாட்சிகள் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை எத்துனை?
2. தொலைக் காட்சிகளைவிடவா இணையங்கள் ஆபாசங்களையும் வக்கிரங்களையும் விதைக்கிறது?
3. இணையமாவது நாம் சென்று பார்க்க வேண்டும் அல்லது அதற்கென்று நேரம் ஒதுக்க ஆனால் தொலைக்காட்சி?
4. அடுப்பு இல்லாத வீடுகள் கூட உண்டு ஆனால் தொலைகாட்சி இல்லாத வீடுகள்?
5. தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களை தணிக்கை செய்ய உங்களுக்கு அதிகாரம் (வக்கு) உள்ளதா? அவைகளில் இந்தியாவையே அடகு வைக்கிறார்களே?
7. செய்தித்தாள்கள் மதச்சார்புடன் நடந்துக்கொள்கின்றனவே அவைகளை என்ன செய்தீர்கள்?
8. ஊடகங்கள் உண்மைகளைத் திரித்து, ஊதி ஊதி மக்களிடையே பிரிவினைகளை விதைக்கின்றனவே, அதற்கு என்ன விதிகளை நிர்ணயித்து கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள்?
ஆக, கபில்சிபலுக்கு இந்திய ஒருமைப்பாடு, சமூக அக்கறை, பாதுகாப்பு குறித்தெல்லாம் கவலையில்லை என்பது தெளிவாகிறது. இந்த ஊடகங்கள் யாவும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன. அவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம், சொல்லலாம், காட்டலாம். அவர்களே மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கலாம். முழு சதந்திரம் அவர்களுக்கு மட்டுமே.
ஆனால் குறிப்பிட்ட இந்த சமூக வலைத்தளங்களில் நிலைமை அப்படியில்லை. ஒருவர், தான் என்ன கருத்தைச் சொல்ல நினைக்கிறாரோ அதை அப்படியேச் சொல்ல முடியும். அவரே கருத்துக்குச் சொந்தக்காரர். இங்கு நிலவும் உரையாடல்களில் இருந்து அதப் படிக்கிறவர்களுக்கு கேள்விகளும், சந்தேகங்களும், கருத்துக்களும் உருவாகின்றன. உண்மைகளை ஆராய வைக்கிறது. அது அரசுக்கு எதிராகவும்,அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் , தொடர்ந்து பேசுவதாக இருக்கிறது. கபில்சிபல் போன்றவர்களுக்கு அடிவயிறு கலங்குகிறது. குலை பதறுவது இதனால்தான்.
அதாவது பெரும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கருத்துச் சுதந்திரம், சாதாரண மனிதர்களுக்குத் தரக் கூடாது என்பதே இதில் ஒளிந்திருக்கும் சதி. அதற்குத்தான் கபில்சிபல் இப்படி சுற்றி சுற்றி வந்து கும்மியடிக்கிறார். துனீசியா, எகிப்து நாடுகளில் நடந்த மக்கள் எழுச்சிக்கும், இப்போது வால் ஸ்டிரிட்டை கைப்பற்றுவோம் போராட்டம் பரவுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணிகளாய் இருந்திருக்கின்றன. அங்கிருந்து வருகிற பயமே ஆட்சியாளர்களை இப்படி ஆட்டுவிக்கிறது.
அவர் சொல்வது போல, மதச்சார்பின்மைக்கும், நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படத்தக்க அம்சங்களும் இந்த சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றன. அதைவிட அதிகமாக ஆரோக்கியமான, உண்மைகளுக்கு ஆதரவான அம்சங்களும் நிறையவே இருக்கின்றனவே.
கபில்சிபல், இதை எழுதுவதற்கும் எங்களுக்கு இந்த சமூக வலைத்தளங்களே பயன்படுகின்றன. பார்த்தீர்களா?

0 comments:
Post a Comment