Saturday, November 26, 2011

நம்பிக்கைத் துரோகம் செய்த ஜெயலலிதா அரசை வீழ்த்த ஒரே வழி!


அ.இ.அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது மீண்டும் தி.மு.க. ஆட்சி வருமா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலமருமா என்ற கேள்வி ஊடகங்களில் வலுவாக எழுந்தன. தி.மு.க. தலைமையோ, மீண்டும் தாங்கள் தான் ஆட்சியில் அமர்வோம் என்று நம்பிக்கையோடுதான் இருந்தனர். தங்களது இலவசங்களும், ஒரு சில நலத் திட்டங்களும், திருமங்கலம் பார்முலாவும் தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்த்து எறிந்த தமிழக மக்கள், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டினர். அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட் சிக்கு வந்தது. எப்படி இது நிகழ்ந்தது? காரணம் என்ன?

ஜெயலலிதா நினைப்பதுபோல், அவரைத் திருப்திப்படுத்த அ.தி.மு.க பிரமுகர்கள் கூறுவது போல் ஜெயலலிதாவுக்கு விழுந்த வாக்குகளா? இல்லை. இந்த வெற்றியின் பின்னால் மக்களின் தெளிவான பார்வை இருந்தது. தி.மு.க. ஆட்சி மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி. ஒரு குடும்பம் கோலோச்சிய ஆட்சி. மக்கள் பணத்தை ஒரு சிலர் சேர்ந்து சூறையாடிய ஆட்சி. சட்டம்-ஒழுங்கு சீரழிந்த ஆட்சி. கட்டப்பஞ்சாயத்தும், நிலமோசடியும் மலிந்த ஆட்சி. மத்திய அரசில் அங்கம் வகித்து தி.மு.க.வும், காங்கிரசும் நடத்திய ஊழல்கள் மற்றும் மக்கள் விரோத செயல்கள். மின் வெட்டால் தமிழக மக்கள் இருளில் மூழ்கியது மட்டுமல்ல, தொழில்கள் முடங்கி, உற்பத்தி சரிந்து வேலையின்மையும், பொருளாதார சீரழிவும் மிகுந்த ஆட்சி. எனவே அதற்கு விடை கொடுக்க மக்கள் தயாரான போது, ஒரு வலுவான அணியோடு அ.இ.அ.தி.மு.க. களம் இறங்கியது. தே.மு.தி.க., சிபிஐ(எம்), சி.பி.ஐ, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் அணிவகுப்பாக இந்த அணி மாறியபோது, ஆட்சி மாற்றம் உறுதிபடுத்தப்பட்டது. மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர்.அதிக பெரும்பான்மையோடு அ.இ. அ.தி.மு.க. அரசு பதவியேற்றது. ஜெயலலிதா முதலமைச்சரானார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மாதம் 20 கிலோ அரிசி இலவசமாகக் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்குவது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்குவது, இலவச மின்விசிறி வழங்குவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்து பல்வேறு நோய்களுக்கும், அதிக மருத்துவச் செலவுகள் கிடைக்கும் வகையில் உரிய மாற்றம் செய்வது போன்ற அறிவிப்பு கள் மக்கள் மத்தியில்  வரவேற்பைப் பெற்றன. ஊடகங்கள் சில இலவசங்களைக் கொச்சைப் படுத்தினாலும், பெரும் முதலாளிகளுக் கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமளவு நிதிச்சலுகை வழங்கும் மத்திய அரசின் செயலை கண்டுகொள்ளாத ஊடகங்கள், ஏழை மக்களுக்கு வழங்கும் சில சலுகைகளை மட்டும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடி பேர்வழிகள், கொலைகாரர்கள் அனைவரும் ரயிலேறி ஆந்திராவிற்குச் சென்று விட்டனர் என்று அகம்பாவத்துடன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி வந்த பின்னரும் ரவுடிகளின் அட்டூழியம் ஓய்ந்தபாடில்லை. தினசரி கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெறும் செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன. சட்டம் -ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறையினர், ஆளும் கட்சியைத் திருப்திபடுத்தும் பணிகளில்தான் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் பந்தாடப்படுகின்றனர். பரமக்குடியில் தேவையற்ற துப்பாக்கிச்சூடு நடத்தி, அப்பாவி தலித் மக்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறையினரின் செயலை நியாயப்படுத்தும் பணியையே ஜெயலலிதா செய்தார்.மேலும் 3 மாத காலத்திற்குள் மின்வெட்டை சரி செய்து விடுவதாக நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் நிலைமை மிகவும் பரிதாபம். தினசரி 4 மணிநேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது. நிலைமை தினசரி மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்கள் மிகவும் அவதிப்படுகின் றனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. இதற்கெல்லாம் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நலம் செய்ய வேண்டிய முதல்வரின் கவனமும், முனைப்பும் எங்கு இருக்கிறது?

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் அண்ணா சாலையில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. அப்போதே அதை எதிர்த்தவர் ஜெயலலிதா. இருந்தாலும், ஒரு அரசு தேவையின் அடிப்படையில் மக்கள் பணத்தைச் செலவு செய்து எழுப்பிய அந்த கட்டடத்தைப் பயன்படுத்தமாட்டேன் என்ற அறிவிப்பு வந்தபோது அனைவரும் ஆட்சேபித்தனர். தனிமனித விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனாலும் பிடிவாதத்தில் யாருமே மிஞ்ச முடியாத ஜெயலலிதா, பழைய சட்டமன்ற கட்டடத்தில், புனித ஜார்ஜ் கோட்டையில் இரவோடு இரவாக சட்டமன்ற கூடத்தையும், தலைமைச் செயலகத்தையும் அமைத்து, அங்கேயே சட்டமன்றத்தைக் கூட்டினார். சந்து பொந்துகளுடன் கூடிய வசதியற்ற, பழமையான அந்த கட்டடத்தில் தான் சட்டமன்றம் கூடும் என்பதிலே எதாவது நியாயமான காரணம் உண்டா? தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதை தவிர்ப்பது என்பதைத் தவிர. 1989ல் இந்த கட்டுரையாளர் அவை உறுப்பினராக இருந்தபோது, பெருச் சாளிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையில் ஓடி விளையாடியதும், அதை கட்டுரையாளர் சட்டமன்றத்திலேயே எடுத்து கூறியதும் நினைவுக்கு வருகிறது. (ஊழல் பெருச்சாளிகளே இந்த அவையில் இருக்கும் போது, ஒரிஜினல் பெருச்சாளி இருக்கக் கூடாதா என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.) அத்தகைய வசதியற்ற இடத்தை விட்டு விட்டு வசதியான புதிய இடத்தை மறுப்பது நியாயமா? அந்த வழியாகச் செல்லும் போது புல்லும், புதரும் வளர்ந்து பாழடைந்து வரும் இந்த பெரும் மாளிகையைப் பார்க்கும் நமக்கு பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. உயர்நீதிமன்ற வழக்கு வந்தவுடன் அங்கு எய்ம்ஸ் போன்ற ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதாகக் கூறுவதை யார்தான் நம்புவது? அதுபோல்தான் அற்புதமான அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். லட்சக்கணக்கில் புத்தகங்கள், நூலகத்துக்கான அனைத்து வசதிகளுடன்  அதை மாற்றுவது ; அங்கு குழந்தைகள் மருத்துவமனை என்கிறபோது இந்த நோயைக் குணப்படுத்த மருத்துவமனை எதுவும் இல்லையா என்றுதான் எண்ணத்தோன்றும்.

திடீரென முதல்வர் ஜெயலலிதா ஜெயா தொலைக் காட்சியில் தோன்றுகிறார். அமைச்சரவைக் கூட் டத்தையொட்டி 17.11.2011 பிற்பகலில் அவர் தோன்றியபோது மக்கள் தலையில் இடியாக அறிவிப்புகள் வந்துவிழும் என்று யாராவது எண்ணினோமா? ஆனால் பேருந்து கட்டணம் 60 சதம் முதல் 80 சதம் வரை உயர்த்தப்படுகிறது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுகிறது . மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற அறிவிப்புகள் மக்களுக்கு, எவ்வளவு பெரிய அதிர்ச்சி. தினசரி பேருந்தில் வேலை பார்க்கும் இடங்களுக்குச் செல்லும் சாதாரண உழைப்பாளிகள் தலையில் எவ்வளவு பெரிய சுமை. வாக்களித்த மக்களுக்கு தரும் பிரதிபலனா இது? மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைஉயர்வில் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு முதல்வர் தரும் நிவாரணம் இதுதானா? திடீரென 13000 மக்கள் நலப்பணியாளர்கள் கூண்டோடு வேலை நீக்கம். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், சாதாரண ஊழியர்கள் பந்தாடப்படுவது ஏன்? சமச்சீர் கல்வியை கைவிட எடுத்த முதல்வரின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான குட்டுக்குப் பின்னரும், இத்தகைய விளையாட்டுகள் தொடர்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போதெல்லாம் 1991, 2001, 2011 என ஒவ்வொரு தடவையும் இதுதானே அனுபவம். ஒவ்வொரு 5 ஆண்டு களுக்குப் பின்னரும் மக்கள் அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்ததிலிருந்து உரிய பாடத்தை அவர் கற்கவில்லையே!

தமிழகம் வகுப்புவாதிகள் நுழைய முடியாத இடமாகவே இருந்து வந்தது. பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவு கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்ட வலுவான சமய சார்பற்ற அரசியல் வளர்ந்த பூமி. ஆனால் அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சந்தர்ப்பவாத நிலைபாடுகளால் அந்த வகுப்புவாத விஷச் செடியை இங்கு ஊன்றி வளர்த்தனர். எனவேதான் தமிழகத்திலும் சில இடங்களில் வகுப்புவாத பதட்டங்கள் வரத் துவங்கின. பா.ஜ.க.வுடன் தங்களது அரசியல் உறவால் தங்களுக்கு தமிழகத்தில் அரசியல் லாபமில்லை, நஷ்டமே என்பதால், தற்போது பா.ஜ.க.வுடன் தமிழகத்தில் தேர்தல் உறவு வைக்கத் தயாராவதில்லை. கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவு கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, தனது பதவியேற்பு விழாவிற்கு மதவெறியின் மொத்த உருவமான மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொள்கிறார். மோடியின் பதவியேற்புக்கு தனி விமானத்தில் சென்று அமர்ந்த அவர், அதற்கு கைமாறாக அவரை அழைத்துள்ளாரா? மேலும் பா.ஜ.க. தலைவர் அத்வானி ஊழலுக்கு எதிராக நடத்திய ரத த்திரை நாடகத்தின் கடைசி காட்சியில், நிறைவு விழாவில், அ.இ.அ.தி.மு.க. எம்.பிக்களை அனுப்புகிறார். இது அ.இ.அ.தி.மு.க. தற்போதும் அகில இந்திய அரசியலில் பா.ஜ.க.வுடன் எந்நேரமும் கைகோர்க்க வாய்ப்புள்ளது என்ற சமிக்ஞையைக் கொடுக்காதா?

தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. வாக்களித்தபின் மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களும் வேறு வழி தெரியாமல் மாறி மாறி வாக்களித்தும், கிடைப்பதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி தான். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாற்று உருவாக்கப்பட முயற்சி நடந்தபோது மக்கள் பல காரணங்களால் மாற்றை உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. விளைவு, கடும் தாக்குதல் மக்கள் மீது உடனடியாகவே. மக்கள் தி.மு.க, அதிமுகவிற்கு உரிய மாற்றை பற்றி யோசிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும், பிற மதச்சார்பற்ற கட்சிகளும் வலுப்படாமல் அது சாத்தியமல்ல. தற்போது தங்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிட, இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து நின்று தெருவில் இறங்கி போராடுவதே தற்போதுள்ள ஒரே வழி.

-எஸ்.நூர்முகம்மது

1 comment:

  1. J character therinche CM akitdinka . eppo makkal nala paniyalarkalodu mudinchiduma jeya vin kola veri . aatdai kadichi manuchanai kadicha kathaiyaka thodarum j aatchi viratda padanum nu othdu kitda sari .

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)