Saturday, November 26, 2011

பழங்குடிப் பெண்கள் மீது காவல்துறையினரின் பாலியல் வன்முறை


தமிழகக் காவல்துறையின்  இன்னொரு கொடூரமான நடவடிக்கை  குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாதம் நவம்பர் 22ம் தேதி, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் போலீஸாரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நீதி கிடைத்திருக்கிறது. அந்த செய்தி தந்த நம்பிக்கைகளை உடைத்துப் போடுவது போல, காவல்துறையின்  செயல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காவல்துறையைத்தான்  நவீனப்படுத்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா 47 கோடி வழங்குகிறாராம். இதுதான் இவரது ஆட்சியின் லட்சணம்!

வாச்சாத்தி மக்களுக்காக போராடிய, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் இன்று (26.11.2011) பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது:




விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி. மண்டபம் கிராமம், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காசி என்பவரை திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்தவர்கள் கடந்த நவம்பர் 22ந் தேதி பிடித்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காசியை விடுவிக்குமாறு அவருடைய தாயார் வள்ளி காவல் நிலையம் சென்று கெஞ்சியுள்ளார். அவரிடம், உங்களுடைய நெருங்கிய உறவினர்களை அழைத்து வந்தால் விசாரணை செய்து விட்டு அவரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு வள்ளி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் போலீஸ் வேனை நிறுத்தி வள்ளியை வண்டியில் ஏற்றியுள்ளனர். போலீஸ் வேனில் காசியின் மனைவி லட்சுமி (20 வயது), காசியின் தம்பி மனைவி கார்த்திகா (வயது 18), காசியின் தங்கை ராதிகா (17 வயது) மற்றொரு உறவுப் பெண் மாதேஸ்வரி (20 வயது) ஆகியோர் வண்டியினுள் இருந்துள்ளனர். 22-ந் தேதி இரவு முழுவதும் தைலமரக்காட்டில் வைத்து வள்ளியின் கண்முன்னாலே அவருடைய மகள், மருமகள்களை 4 காவலர்கள் வண்புணர்ச்சிக்குள்ளாக்கி கொடுமை செய்துள்ளனர்.

விடியற்காலையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விரட்டியுள்ளனர். மீண்டும் 23ந் தேதி போலீஸ் வேன் தெருவுக்குள் வருவதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஓடியுள்ளனர். இதைத் தொடர்ந்து மற்றவர்களின் உதவியுடன் இன்று (26.11.2011) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் கொடூரமான இச்செயலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வண்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, இவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; காசி உட்பட காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தி கோருகிறோம்.

காவல்துறையினரின் இந்த அராஜகத்திற்கு எதிராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் வலுவான கண்டன போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

/ஒப்பம்
(பெ. சண்முகம்)
மாநிலத் தலைவர்

காவல்துறையினரின்  இந்த கொடூர செயலைக் கண்டித்தும், நீதி கிடைத்திட ஆதரவு அளித்தும்  குரல் எழுப்புமாறு மனித உரிமை ஆர்வலர்களையும் முற்போக்கு இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

3 comments:

  1. இருளர் பழங்குடியினர் மீதான அடக்குமுறை, பாலியல் வன்முறை ஒரு தொடர் செயலாகவே விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. பேரா. கல்யாணி போன்றோர் இருளர் பாதுகாப்பு அமைப்பில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மீண்டும் ஒரு அதிகார வன்முறை.காவல் துறையினருக்கு எல்லையில்லா அதிகாரம் என முதலமைச்சர் முழங்குவது இப்படி எல்லை மீறுவதற்கு தானா?

    ReplyDelete
  2. எங்கேயடா தமிழ் உணர்வு எம் பெண்கள் தமிழர்களால் சூறையாடப் படும்போது எங்கேயடா தமிழ் தேசியம்? இனியாவது திருந்துங்கள் தமிழ் தேசியம் பேசும் தலித்களே! ஜாதி ஒழிப்பும் தீண்டாமை ஒழிப்பும் தான் நமது அடுத்த நூற்றாண்டுக்கும் போராட்டக்கருவேயொழிய தமிழ் தேசியம் அல்ல. தமிழ் தேசியம் பேசி ஏற்கனவே ஒரு இருளர் சமூக பெண்ணை கொலை வாங்கிய தமிழ் தேசியம் இன்று தமிழர் போலிசால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை தடுக்க முடிந்ததா? இன்று பழங்குடிகள் தொடர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்; இதை தடுக்க முடிந்ததா செங்கொடியின் தியாகம்? இது தான் நடைமுறை. சூத்திர ஜாதிகளை எதிர்ப்பதற்கு தமிழ் தேசியம் ஆயுதம் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கரியமே சூத்திரர் ஜாதி வெறியை ஒழிக்கக் கூடிய ஆயுதம். சிந்தியுங்கள் சகோதரர்களே! எந்த "மாவீரன்" போற்றுதலும் சூத்திரர்க்கு வலு சேர்க்குமேயொழிய, தலித் குடிகளை வலுவடையச் செய்யாது. மாறாக, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தை மேலும் ஒடுக்கக்கூடியதாகவே தமிழ் தேசிய அரசியல் அமைய முடியும். செங்கொடியை இழந்த சோகத்தோடு தமிழ் போலிசால் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்கள் சோகமும் உங்கள் "மாவீரன்" விழாவுக்கு அணி சேர்க்கட்டும் நாம் இன்னும் அடிமை விலங்கை உடைக்காமல் எந்த மசுரு தேசியமும் நம் பெண்களை காப்பாற்றாது எனும் உண்மையையும் உள்வாங்கியபடி!

    ReplyDelete
  3. thalithdukal enne KILLUKEERAIYA ? Aadu maadukal meindhida ............ paramakudiel sutdu thallavum ,, vaasathi , vilupurathil ena paaliyal vanpunarchiel thodaravum JEYA vin police enna kaarthi masathdu NAAIKALA , VELIYE PAEIRAI MEIKIRADU . thaddi koduthdu parisu vazhanki uchi mukarndu azhaku paarpaar JEYA . entha veri naikaluku npathavi uyarvu koduparoe J .

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)