Wednesday, September 28, 2011

பகத்சிங்: சுதந்திரத்தின் அடையாளம்

ஸ்ரீராமகிருஷ்ணன்

தமிழில்: இரா.சிந்தன்


வ்வொரு இந்தியப் புரட்சியாளனும் பகத்சிங்கை மனதில் ஏந்துகையில், அவர் காலத்தில் நாமும் பிறக்கவில்லையே என்று ஏங்குவான். ஆம், எக்காலத்திலும் ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும், அநீதியையும் எதிர்த்துப் போராடுவது, ஒவ்வொரு புரட்சியாளனுக்கும், கம்யூனிஸ்டுக்குமான கடைமைதான். இருந்தாலும், அந்தப் புரட்சியாளர்கள் இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்வையே தத்தம் செய்திட்ட காலத்தில் நாமும் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது. இன்றைக்கு நமது போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது, இந்திய இளைஞர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்தே செயல்படுகிறோம். இப்போதும், 75 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதிய அந்தத் தியாகமே, நம்மைப் போர்க்களங்களில் உந்தித் தள்ளுவதாக அமைந்துள்ளது.

பகத்சிங் குறித்த நினைவுகள் நமக்கு இன்னொரு இழப்பையும் நினைவூட்டுகின்றன - அது இந்திய புரட்சிகர இயக்கத்தின் தொட்டிலாக இருந்த - லாகூரின் இழப்பு. புதிய எல்லைகளை ஏற்பதற்காக ஒரு நாட்டின் எல்லைகளில் மாற்றம் உருவாகும்போது, அந்தப் பகுதியின் அரசியலிலும் மாற்றம் வந்துவிடுகிறது. லாகூர் எப்போது பாகிஸ்தானின் பகுதியாக மாறியதோ, அப்போதே அது புரட்சிகர நடவடிக்கைகளின் மையம் என்ற தகுதியையும் இழந்துவிட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மகத்தான பங்கைச் செலுத்திய லாகூர், பகத்சிங்கையும் வார்த்தெடுத்தது. அங்கே மாணவர்களிடையே நடந்துவந்த அரசியல் விவாதங்கள், எழுச்சியை உண்டாக்கிடும் புரட்சிகர நடவடிக்கைகளாக மாறியது பகத்சிங்கின் மனதிலும் உத்வேகத்தை உண்டாக்கியது. தனக்கு இள் வயதிலேயே திருமணம் செய்திடும் தன் தந்தையின் முடிவை எதிர்த்து வீட்டிலிருந்து வெளியேறிய பகத்சிங், கான்பூரில் சுகதேவையும், ராஜகுருவையும், சந்திரசேகர ஆசாதையும் சந்தித்து அவர்களின் புரட்சிகர சிந்தனைகளினால் கவரப்பட்டார்.

பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்திய மாற்றம் பலமுறை ஆராயப்பட்டும், விவாதிக்கப்பட்டும் உள்ளது. ஆனால், 23 வயதில், அவரது அரசியல் சிந்தனையில் காணப்பட்ட பல்நோக்குதான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் தூக்கு மேடையை நோக்கிச் செல்லும்போது நீங்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என முழக்கமிட வேண்டுமென தன்னை சிறைச்சாலையில் சந்திக்க வந்த தாயாரிடம் அவர் அறிவுரை கூறினார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் லாகூர் சிறைச்சாலையில் கேட்ட அந்த முழக்கம், இன்றைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த முழக்கத்தின் பொருள் “புரட்சி ஓங்குக” என்பதாகும், அதுவே இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கு முடிவற்ற உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

அவரது 23 வருட வாழ்க்கையில், விவாதித்திடாத விசயங்கள் இல்லை. தர்க்கவியல் பொருள்முதல்வாதத்திலிருந்து, ஏகாதிபத்திய அழித்தொளிப்பு வரை நாத்திகம் முதல் காதல் வரை அவர்கள் விவாதித்தனர். மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல், சமூக, உளவியல் கூறுகளையும் கற்றுத் தேர்ந்தனர். இந்தியாவில் மார்க்சையும், எங்கல்சையும், லெனினையும் ஆழ்ந்து படித்த முதல் கம்யூனிஸ்ட் அவரே என்று நாம் கூற முடியும். அக்டோபர் புரட்சியும், இத்தாலிய புரட்சியாளர்களும் அவருக்கு உற்சாகமூட்டினர். ஆனால், இவையெல்லாம், அந்த பிரிட்டிஸ் போலீஸ் அதிகாரி சாண்டர்சனை சுட்டு வீழ்த்தும் முடிவிற்கு அவர்களை இட்டுச் செல்லவில்லை.

அவர் மார்க்சிய இலக்கியங்களை சிறைச்சாலையிலேயே படித்தார், தன்னைத் தூக்கிலிடும் கடைசி நொடியிலும் கூட அவர் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருந்தார்.

சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டோரும் சங்கமித்தனர். பகத்சிங்கும் அவரது நண்பர்களும், நாங்கள் காந்தியின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தியர்களின் ஒற்றுமையும், வலிமையும் பிரிட்டிசாரை இந்தியாவை விட்டு ஓடச்செய்ய வேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருந்தனர். பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், இந்திய மக்களால் அறியப்பட்ட, மதிக்கப்படுகிற தலைவராக இருந்தார். பகத்சிங்கையும் அவரது நண்பர்களையும் லஜபதிராயுடன் இணைத்தது அவரும் சுதந்திரத்திற்கான போராளி என்பதன்றி வேறில்லை. பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், இந்தியாவை இந்து இந்தியாவாகவும், முஸ்லீம் பாகிஸ்தானாகவும் பிரிக்க வேண்டும் என்ற இரண்டு தேசங்கள் கொள்கையையே லஜபதிராய் ஆதரித்தார். பகத்சிங்கும் நண்பர்களும் இந்தக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இதனால், லஜபதிராய் இந்த இளம் கன்றுகளை பொருப்பற்றவர்கள் என்றும், ’ரஷ்ய உளவாளிகள்’ என்றும் தவறாக மதிப்பிட்டார். ஆனால், இந்த இளம் கன்றுகள் லாலா லஜபதிராய்-க்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடைபெற்றபோது பகத்சிங்குக்கு 12 வயதுதான் இருக்கும். சுமார் 400 இந்தியர்களின் சூடான இரத்தத்தால் நனைக்கப்பட்ட பிடி மண்ணை அள்ளியெடுத்தபோது அவரின் இதயம் முழுவதும் பிரிட்டிசாருக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத்த பத்தாண்டுகளில் அவர் ஒரு புரட்சியாளராக மாற்றம்பெற்றார். லாலா லஜபதிராய் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அவரை பிரிட்டிசாரோடு நேருக்கு நேர் மோதிடத் தூண்டுகோலாய் அமைந்தது.

1928 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிரிட்டிஷ் போலீசாரால் லஜபதிராய் தாக்குண்டார். லாகூர் ரயில்நிலையத்தின் அருகில், சைமன் கமிசனுக்கு எதிரான போராட்டத்தில் திரண்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவர் தலைமையேற்றிருந்தார். சர் ஜான் அல்ஸ்புரூக் சைமன் தலைமையிலான 7 நபர் கமிசன் லாகூரை வந்தடைந்தபோது அவர்கள் மக்கள் திரளால் தடுக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஏ.ஜே.ஸ்காட் தலைமையிலான காவலர்கள் தடியடி நடத்தினார்கள். முதலில் அந்தக் கூட்டம் சிதறி ஓடினாலும், லஜபதிராயின் குரலைக் கேட்டு திரும்பியது. இதைப் பார்த்தை அதிகாரி தனது லத்தியால் கொடூரமான முறையில் அவரைத் தாக்கினான். தனது நினைவு மங்கும் தருணத்திலும் லஜபதிராய், தன்னைத் தாக்கிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து “என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், பிரிட்டிஸ் சம்ராஜ்ஜியத்திற்கு சவப்பெட்டியாக மாறும்” என்று முழங்கினார்.

தங்களின் மதிப்புக்குறிய தலைவர், பொது இடத்தில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதை அறிந்து தேசமே அதிர்ச்சியடைந்தது. இது இந்தியாவுக்கு நேர்ந்ததொரு பேரவமானமாகக் கருதப்பட்டது. காயங்களின் காரணமாக லஜபதிராய் நவ.17 அன்று மரணமடைந்தார். காங்கிரஸ் எப்போதும்போல தன் போராட்டத்தை நடத்தியது. ஆனால் பகத்சிங்கும் அவரது நண்பர்களும், இந்த மரணத்திற்கு பலிதீர்க்க முடிவு செய்தனர். தவறுதலாக அவர்கள் சாண்டர்சனைக் சுட்டபோதும், பெரும்பாலானவர்கள் இது லஜபதிராயின் மரணத்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடியே என்பதைப் புரிந்துகொண்டனர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து பேசும்போதெல்லாம், காங்கிரஸ் கட்சி, தானே அதில் பெரும் பங்காற்றியதாக தம்பட்டமடிக்கத் துவங்கும். காந்திஜி எப்போதும் ஒரு தேசியத் தலைவர்தான். ஆனால், காந்தியின் அகிம்சை வழிமுறையை எதிர்த்துக் கொண்டே, சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தலைவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தனர். எழுதப்பட்ட இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், அவர்களின் இரத்தத்தையும், கண்ணீரையும் யாராலும் மறுதலிக்க முடியாது.

காந்தியின் சிந்தனைகளை பகத்சிங் வலுவுடன் நிராகரித்தார். இந்திய மக்களின் போராட்ட வலுவையும், சுய திடத்தையும் கண்டு, வேறு வழியே இல்லாத நிலையில் பிரிட்டிசார் இந்தியாவை விட்டு ஓட வேண்டும் என அவர் விரும்பினார்.

நாங்கள் மனித உயிருக்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் பெருமை மிகு தேசத்தின் அடிமைத்தனைத்தை விரட்டியடிக்க சில மரணங்கள் தவிர்க்க இயலாதவை என்ற செய்தியுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் மூலம் பகத்சிங்கும் அவரது நண்பர்களும் (சாண்டர்சனின் கொலைக்கு) தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

சில காலத்திற்குப் பின்னர், மத்திய சட்டப் பேரவையில் (Central Legislative Assembly) (நாடாளுமன்றம்) இரண்டு மக்கள் விரோத சட்டங்கள் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது பகத்சிங், தனது நண்பர் பட்டுகேஷ்வர் தத்துடன் இணைந்து 2 நாட்டு வெடிகொண்டுகளை வெடிக்கச் செய்தார். அவை, பிரிட்டிசாரின் கேளாக் காதுகளைக் கேட்கச் செய்திடும் பொருளிலேயே வெடிக்கப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வலுவுடன் நடந்தது. ஆபால் செளரி செளரா சம்பவத்திற்குப் பின்னர் தனது போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக காந்தி அறிவித்தார், அது அவரது எதேச்சதிகார நடைமுறைக்கு உதாராணமாகவே கொள்ளப்பட்டது. போலீசாரை திருப்பித் தாக்கியதும், காவல் நிலையத்திற்கு தீ மூட்டியதும் தற்காப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நடந்தவை. காந்தி தான் விரும்பும் முறையிலான போராட்டத்தை வலியுறுத்துவதற்காக, மக்களின் இயல்பான எதிர்ப்புகளையும், சண்டையிடும் திராணியையும் காண மறுதலித்துவிட்டார் என்று விமர்சகர்கள் கூறினர். அகிம்சையை வலியுறுத்திய காந்தி, எப்போதும் தனது சிந்தனைகளை மக்கள் மீது வலியத் திணித்தே வந்தார். எப்போதெல்லாம் மக்களிடையே போராட்ட வேட்கை கொழுந்துவிடுகிறதோ, அப்போதெல்லாம் காந்தி அதன் மீது நீரை ஊற்றிவந்தார். எந்த ஒரு போராட்டமும் அவரது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை அவர் அனுமதிக்கவில்லை.

ஹதிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், காந்தி முன்நிறுத்திய பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து சுபாஸ் சந்திர போஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்த போஸை, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளித்தள்ளுவதில் காந்தி முக்கியப் பங்காற்றினார். சுபாஸ் சந்திரபோசுடன், அவரது சிந்தனைகளும் வெளித்தள்ளப்படும் என்று காந்தி நம்பினார்.

காந்தி அகிம்சையை ஒரு கொள்கையாக ஒப்புக் கொண்டபோதிலும், சூழலின் தேவைக்கு ஏற்ப அதிலிருந்து விலகியும் சென்றார். இரண்டாம் உலகப் போரின்போது, போரில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவிட வேண்டுமென அவர் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார். பிரிட்டிஷ் ராணுவத்துடன் சேர்ந்து ஏராளமான இந்தியர்களும் யுத்தம் செய்தார்கள். அது பாசிசத்திற்கு எதிரான போர் என்கிற அளவில் இது அவசியமானதே. கம்யூனிஸ்டுகளின் நிலையும் அதுதான். பாசிசத்தை வீழ்த்துவதர்காக, சோவியத் யூனியனுடனும், அமெரிக்காவுடனும் இணைந்து நின்று போராடிய பிரிட்டிஷ் அரசாங்கத்தை அவர்கள் ஆதரித்தனர். தொடர்ந்து அவர்கள் ஜெர்மனியும், சோவியத் யூனியனும் தொடர்ந்து சண்டையிட்டபோது கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனினையை ஆதரித்தனர். மீண்டும் பாசிசத்திற்கு எதிராக. ஆனால், இதனைக் கணக்கிலெடுக்காமல், ’கம்யூனிஸ்டுகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை புறந்தள்ளிவிட்டனர்” என காங்கிரஸ்காரர்கள் சொல்கின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக சண்டையிடவும், சுபாஷ் சந்திரபோசை வெளித்தள்ளுவதிலும் காந்தி எடுத்த தந்திர நிலைப்பாடுகளை காங்கிரசின் வரலாற்றின் குறிக்காமல் இருக்க முடியது. அவர்கள் இதனை மறைத்துவிட விரும்புகின்றனர். இந்த நடவடிக்கையே, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் அவிழ்த்துவிடும் தவறான பிரச்சாரத்தை அம்பலப்படுத்திடும்.

பகத்சிங்கும் அவரது நண்பர்களும் இத்தகைய இரட்டை நிலையை என்றுமே எடுத்ததில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின் இந்தியா சுதந்திரமடைய பல ஆண்டுகள் பிடித்தன. இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின் வெற்றியை சோவியத் யூனியனாலேயே பெறமுடிந்தது. ஏகாதிபத்தியத்தை முன்னிருத்திய பிரிட்டன் முழங்காலிட்டதும், காலனி ஆட்சிமுறை உலகம் முழுவதும் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் எழுச்சிகளுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினர். புன்னப்புரா-வயலார், தெலுங்கானா மற்றும் பம்பாய் கப்பற்ப்படை கலகம் ஆகியவை அவற்றில் சில. 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் எதையும் செய்திடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா வாய்ப்புகளையும் இழந்தபின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிட முடிவு செய்தது. சுதந்திரத்தின்போது காந்தியின் நிலையை நாம் வரலாற்றில் அறிந்துகொள்கிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தீரமிகு இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். காந்தியின் உயர்வையும் தியாகத்தையும் சிறுமைப்படுத்தாத அதே நேரத்தில், அந்த தீரர்களின் தியாகம் இல்லாமல் இந்திய சுதந்திரத்தைச் சாதித்திருக்க முடியாது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

பகத்சிங்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும், மரண தண்டனையை திரும்பப் பெற்றிட வலியுறுத்தி மக்கள் வீதியிலிறங்கினர். ஆனால், காந்தி இந்தப் போராட்டங்களிலிருந்து விலகி நின்றார். அவர் சொன்னதெல்லாம் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாக, அவர்களைத் தூக்கிலிட்டிட வேண்டும் என்பதைத்தான் !

புரட்சியாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திடாத காந்தி, சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சியால் ஒதுக்கப்பட்டார். சுதந்திரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரங்களின் முன்னாள் காந்தி கையாளாகாதவராக நின்றார். கடைசி நாட்களில் மிகுந்த வருத்தத்துடன், காங்கிரஸ் கட்சியை கலைத்திடவும் அவர் விரும்பினார்.

பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தூக்கு மேடையின் மீதேறி, தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர், இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டபடியே மரணத்தை நோக்கி நடைபோட்டனர். காந்தி ஒரு மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத்சிங்கும் அவரது நண்பர்களுக்கும் சமமான முக்கியத்துவமும், அவசியமும் உள்ளது. சிறிது காலதாமதானாலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலை அமைந்துள்ள இடத்திலேயே பகத்சிங்கின் சிலையும் நிறுவப்பட்டது. மேலும் ருசிகரமான தகவல் என்னவென்றால், இந்த வளாகத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்துதான் பகத்சிங்கும் அவரது நண்பர் பட்டுகேஷ்வர் தத்தும், பிரிட்டிஷ் அரசை விழிக்கச் செய்யும் முகமாக இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)