Tuesday, February 22, 2011

திருப்பூர் சாயத்தொழில் நெருக்கடி: நீதிமன்ற உத்தரவும், அதற்குப் பிறகும் !

      நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."

திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் உடனடியாக மூடிவிட வேண்டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திருப்பூர் சாயத்தொழில் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, 2010ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் ஒரு சொட்டுகழிவுநீரைக்கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தீர்ப்புக் கூறியிருந்தது.
திருப்பூர் சாயத்தொழில் துறையினர் இதைப் பின்பற்றாததால் நொய்யல் நதி தொடர்ந்து மாசுபட்டு வருகிறது என்று சொல்லி, இதைத் தடுக்கத் தவறிய மாசு கட்டுப்பாட்டுவாரியம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் தொடுத்தது. இதன் அடிப்படையில் தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்தநடவடிக்கையை மேற்கொண்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கடந்த 20 நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து சாய, சலவைஆலை, சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. சட்டவிரோதமாகஇயங்கிய ஒருசில சாயஆலைகளைக் கண்டறிந்து அவற்றின் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே மறுசுழற்சித் தொழில்நுட்பத்தைமுழுமையாக நடைமுறைப்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்து தனியார் சாய சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மீண்டும் இயங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளது.

இதேபோல் வேறு சில நிறுவனங்களும் நீதிமன்றத்தை அணுகத் தொடங்கின. நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள்,மாசுகட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுரை கூறினர். மாசு கட்டுப்பாட்டு வாரியமும், கண்காணிப்புக் குழுவும் ஆய்வு செய்து இசைவளித்தால் நிறுவனங்களைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

>இதற்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்குத் தீர்வு காண தொழில் அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி இடதுசாரிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்எனினும் தமிழக அரசு அவசர உணர்வோடு, ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
என்னவாகும் எதிர்காலம்?
பின்னலாடைத் தொழிலின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழும் சாயத்தொழில் நெருக்கடிக்குத் தீர்வு காணாவிட்டால் திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு பலவித அனுமானங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனகணிசமான சிறு உற்பத்தியாளர்கள் துணிகளுக்குச் சாயமேற்ற முடியாமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளனர்அதேசமயம் பல பின்னலாடை உற்பத்தியாளர்கள் துணிகளைச் சாயமேற்றுவதற்கு ஈரோடுபவானிபெருந்துறை,சேலம் போன்ற அண்டை நகரங்களுக்கு வாகனங்களில் கொண்டு சென்று வருகின்றனர்ஆமதாபாத்,லூதியானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கூட துணிகளை அனுப்பி சாயமேற்றி வாங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறதுமேலும் பல வண்ணங்களில்தேவையான அடர்த்தியில் சாயமேற்றப்பட்டு தயார்நிலையிலான விதவிதமான துணிகளும் சந்தையில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கின்றனஇவ்வாறு நெருக்கடியைச் சமாளித்தாலும் கூட இது தொடர்ந்து நீடிக்குமாஎன்ற கேள்விக்குசாத்தியமில்லை என்றே தொழில் துறையினர் பதிலளிக்கின்றனர்இதனால் உற்பத்திச் செலவும்நேர விரயமும் அதிகரித்து, நீடித்தத் தொழில் வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடும் என்று சொல்கின்றனர்இதன் விளைவாக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து திருப்பூரில் வந்து பிழைத்து வரும் பல லட்சம் மக்கள் வாழ்வும் கேள்விக் குறியாகும்.
தொடரும் கேள்விகள்
அத்தோடு, திருப்பூர் சாயக்கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடக் கூடாது என்றால், சாயமேற்றப்படும் பிற ஊர்களின் நீர்நிலைகள்விவசாயம் ஆகியவையும் பாதிக்கப்படாமல் இருக்குமாஎன்ற கேள்வி எழாமல் இல்லைகூடவே சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு மறுசுழற்சித் தொழில்நுட்பம் சாத்தியமாஇல்லையா?,டிடிஎஸ் அளவு 2100 பிபிஎம் இருக்கலாமாசுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கடலில் கொண்டு சென்று கலக்கலாமாகூடாதா என்பன போன்ற வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதேஇன்னமும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் வந்து கொண்டு தான் இருக்கிறது என்ற செய்தியும் நாளிதழ்களில் வருகின்றனஅத்தோடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இசைவு தெரிவித்து தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கினாலும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியுமாநொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க முடியுமாஎன்று மற்றொரு கோணத்திலும் விவாதம் நடந்து வருகிறதுதனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதி பெற்று இயங்கத் தொடங்கிபொது சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமானால் ஒரு கட்டத்தில் சிறு,குறு சாயசலவை ஆலைகளின் தொழில் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற நியாயமான அச்சமும் ஏற்பட்டுள்ளதுஇத்தகைய சூழலில் பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டு பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப் பெறும் சிறுகுறு சாயஆலைகள் முடக்கப்படும் அச்சுறுத்தலும் இதில் அடங்கியிருக்கிறதுஅப்போதும் கூட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் சாயக்கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரித்து வெளியேற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகஎந்த நோக்கத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோஅது நிறைவேறுகிறதா என்றால்அதற்கு எதிர்மறையான போக்குத்தான் தென்படுகிறதுஉண்மையில் நொய்யல் நதியையும்,விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மாறாக அந்த பாதிப்பு தீர்க்கப்படாமல் தொடர்வதோடு, தொழிலும் பாதிக்கப்பட்டு, பல லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பும் பறிபோய்இந்தப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார வாழ்வு விரிவான சிக்கலுக்குள் தள்ளப்படும் நிலைதான் தோற்றுவிக்கப்படுகிறது.
பொறுப்பேற்பது யார்?
ஆகவே இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பது எப்படி என்ற கேள்வி எழுகிறதுசமூகச் சிக்கலாக உருவெடுத்துவரும் நிலையில் நீதிமன்றத் தீர்ப்புவழிகாட்டுதல் மூலமாக மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும் என்பது இயலாததாகும்சட்ட விதிமுறைகளின்படி வாதிபிரதிவாதி என்ற வட்டத்துக்குள் மட்டும் நின்று தீர்வு காண்பதாக இந்த விசயம் அடங்கியிருக்கவில்லைஅதாவது தொழில் துறையினரும்விவசாயிகளும் மட்டுமே தனியாகத் தீர்த்துக் கொள்ளும் தாவாவாக இது இல்லைஒன்றோடு ஒன்று சார்பு கொண்ட சங்கிலித் தொடராக இந்த விசயம் உள்ளதுஎனவே இதில் வெறும் பார்வையாளரைப் போல் அரசு ஒதுங்கியிருப்பதும், அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எந்த விதத்திலும் நியாயமில்லைசிக்கல் தீரவும்தீராது.
பல லட்சம் தொழிலாளர் வாழ்வுபல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வுசிறுதொழில் முனைவோர், விவசாயம்தொழில் வளர்ச்சிகுடிநீராதாரம்சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு இந்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசின் கைகளிலேயே உள்ளதுமத்தியமாநில அரசுகள் அக்கறையோடு கவனித்தால் மட்டும்தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதும் உறுதி.
என்ன செய்ய வேண்டும்?
எனவே இந்த சிக்கலுக்குத் தீர்வு காண தமிழக அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்சாயக்கழிவு சுத்திகரிப்புப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும்தற்போதைய நெருக்கடியில் இருந்து சாயத்தொழில் துறையினர் உடனடியாக வெளிவருவதற்கும் இது முதல் தேவையாகும்நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் இதைச் செயல்படுத்த வேண்டும்சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்சனையில் மறுசுழற்சித் தொழில்நுட்பம் சாத்தியமாஇல்லை வேறு வழிமுறை இருக்கிறதாகடலில் கொண்டு கலக்கும் திட்டம் உகந்ததாஇல்லையா? உலக அளவில் என்ன மாதிரியான நிலை உள்ளது என பல கோணங்களில் ஆராய்ந்து இங்குள்ள நிலைமைக்குப் பொருத்தமான தீர்வை முன்வைப்பதற்கு நீர்மேலாண்மைசுற்றுப்புறச் சூழல் பேரறிஞர்கள்தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இக்குழுவின் பரிந்துரையைப் பெற்றுவிவசாய, தொழில் துறைப் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்தாய்வு செய்துஅவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நிரந்தரத் தீர்வுக்கான திட்டத்தை அரசு முன்வைக்க வேண்டும்அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்தியமாநில அரசுகள் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து குறிப்பிட்டக் காலத்துக்குள் அதற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள்
அந்தத் திட்டம் முழுமையடைந்து செயலுக்கு வரும்வரை சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகளின் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.விவசாயப் பாசனம்குடிநீராதாரத்துக்கு மாற்றுத் திட்டங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்அத்துடன் திருப்பூர் சாயஆலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள சுத்திகரிப்பு ஏற்பாட்டை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவதைக் கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமின்றி விவசாயிகள்,தொழில்துறையினர்சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து தொடர் கண்காணிப்புச் செய்ய வேண்டும்தவறிழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்இத்தகைய பன்முக நடவடிக்கைகள் மூலமே சமூகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மாற்ற வேண்டிய அணுகுமுறை
மத்தியமாநில அரசுகள் தாராளமயப் பாதையில் செல்வதால் பல்வேறு சமூகப் பொறுப்புகளைக் கை கழுவி வருகின்றன. எனவே விவசாயம்தொழில்மக்கள் வாழ்வாதாரம்சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரச்சனையில் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுஅதுவரை இன்றைய சிக்கல் என்பது நீறுபூத்த நெருப்பாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்எனவே தொழிலாளர்விவசாயிகள்சிறுதொழில் துறையினர் உள்ளிட்டோர் ஒன்றுபட்டுப் போராடி ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் செலுத்துவதன் மூலமே அரசின் அணுகுமுறையை மாற்ற முடியும்
வே.தூயவன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)