Tuesday, February 22, 2011

இந்தியாவின் பட்டினி: அபாயத்தை உணர்கிறதா அரசு? - 5


முந்தைய பகுதிகள்: 13, 4

     உலக உணவு நெருக்கடி மற்றும் விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவுப் பாதுகாப்பு சட்டம் (Food security Act) அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும்.

  இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுடில் 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

  கிராமப்புற, நகர்ப்புற மக்களின் சராசரி உணவின் அளவு இக்காலத்தில் குறைந்து கொண்டு வருகிறது. கிராமப்புறத்தில் 1993-94ல் 2153 கலோரியும் 60.2கிராம் புரதசத்தும் கிடைத்தது. இது 2004-05ல் 2047 கலோரியும், 57 கிராம் புரதசத்துமாக குறைந்துவிட்டது. இதே நிலைதான் சிறிது மாறுபாட்டுடன் நகர்புறத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் 30 சதவீத குடும்பங்கள் 1700 கலோரிக்கு குறைவாகவே உண்ணுகின்றனர். இது சர்வதேச குறைந்தபட்ச அளவான 2100 கலோரி என்பதைவிட குறைவானது.  வளர்ச்சியடைந்த மாநிலமாக கூறப்படும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் 1842 கலோரி கர்நாடகத்தில் 1845 கலோரியும், குஜராத்தில் 1923 கலோரியும் கிடைக்கிறது.

    உலகின் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66வது இடத்தில்  உள்ளது. பஞ்சாபில் பட்டினிப் புள்ளி 13.6 என்றால் இது மத்தியபிரதேரசத்தில்  30.9 புள்ளிகளாக உள்ளது.    மத்தியபிரதேசம், பீஹார், ஜார்கண்ட்  ஆகியமாநிலங்கள் பட்டினியில்  ஜிம்பாப்வே, ஹெய்டி ஆகியநாடுகளுக்கு கீழே உள்ளது.

    இந்தியாவில் 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளில் 47 சதம் பேர்  எடை குறைவாக உள்ளனர். 46 சதம் வளர்ச்சி குன்றிய (Stunted) குழந்தைகள். 80 சதவீத குழந்தைகளும், பெண்களும் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிகள் அனைத்தும் இந்தியா கட்டமைப்பு சீரமைப்பு கொள்கையை கடைபிடித்ததன் பாதிப்புகள்தான் என்பதை இன்னும் உணரவில்லை. உணவு தானிய இருப்பைகூட உபரி இருப்பாக மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2002-03ல் கடுமையான  வறட்சி, வேலையின்மை பெருகியது. வாங்கும் சக்தி குறைந்ததால் 6.4 கோடி டன் தானியங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்தது. இக்காலத்தில்தான் பா.ஜ.க. அரசு 2 கோடி 20 லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்தது. தற்போது உள்ள சேமிப்பும் உபரி அல்ல. வாங்க வழியற்ற மக்கள் பட்டினியால் இருப்பதாலும், பொதுவிநியோக முறையைவெட்டி சுருக்கியதாலும் கிடங்குகளில் உள்ளது.

   இதையெல்லாம் கணக்கில் எடுத்து உணவு பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உணவு உற்பத்தியை பெருக்குவது எளிதான விஷயம்தான்.  இந்தியா மற்ற அனைத்து நாடுகளையும்விட பட்டினிச்சாவு , வறுமை, சத்துக்குறைவு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.
பட்டினியிலோ அல்லது பஞ்சம் என்ற  அச்சுறுத்தலில் மக்கள் வாழவேண்டிய அவசியம்  இருக்காது. என்பதுதான் உணவு பாதுகாப்பின் சுருக்கமான வரையறை, ஐக்கிய நாடுகள் சபை  இதை அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு, விரும்பும் வகையில், பாதுகாப்பான  முறையில் சத்துநிறைந்த, சுறுசுறுப்பும், நலமும் நிறைந்த வாழ்வு நடத்த தேவையான உணவை அளிப்பதுதான் உணவு பாதுகாப்பாகும்'' என்று விளக்கம் அளித்துள்ளது.

     இந்திய அரசு தானாக முன்வந்து உணவு பாதுகாப்பிற்கு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 1948ம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிறகு 1976 முதல் குடிமை , அரசியல் உரிமைகள் பற்றியும், சர்வதேச பொருளாதார , சமூக, கலாச்சார உரிமைகள், மற்றும் பெண்கள், குழந்தைகள், அகதிகள் உடல் ஊனமுற்றவர்கள் என்று பல பகுதி மக்களின் உரிமைகள் பற்றிய மாநாடுகளும் , தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 1996ம் ஆண்டு ரோம் நகரில் ஐ.நா.வின் சார்பில் உலக உணவு  உச்சி மாநாடு  நடைபெற்று உணவு பாதுகாப்பு அளிப்பதின் அவசியம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

        இதே காலத்தில் தென் ஆப்பிரிக்கா, நிகரகுவா, பெரு, உகாண்டா, மெக்சிகோ நாடுகளில் உணவு பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெலாரஸ் , மால்டோவா ஆகிய நாடுகளில் உணவு பாதுகாப்பு அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஊட்டச்சத்தை வாழ்க்கை தரத்தை சட்டமாக்கின. இத்தனை நடவடிக்கைகளுக்கு பிறகும் இந்திய அரசு துளியும் அசையவில்லை, 
    அப்பாவி மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஜனநாயகசக்திகளும், இடதுசாரிகளும் தெருவில் இறங்கி உணவு பாதுகாப்பிற்காக போராடினர். சில தன்னார்வ குழுக்கள் சர்வதேச தீர்மானங்களை சுட்டிக்காட்டி உணவுப் பாதுகாப்பிற்காக பல வழக்குகளை தொடுத்தன. 2001ம் ஆண்டு ராஜஸ்தானில்  உள்ள ஒரு தன்னார்வ குழு கடும் வறட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேமிப்பு கிடங்கில்(6.4கோடி டன்) உள்ள உணவை விநியோகிக்கக்கோரி வழக்கு தொடுத்தது. இதையேற்று உச்சநீதிமன்றம் பட்டினிச்சாவை தடுக்க கிடங்கில் உள்ள உணவை விநியோகிக்க உத்தரவிட்டது. இந்த காலத்தில்தான் அதுவரை இல்லாத அளவு 2.2 கோடி டன் உணவை பிஜேபி அரசு ஏற்றமதி செய்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

       மற்றொரு அமைப்பான பியுசிஎல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி அரசியல் சட்டப் பிரிவு 21-ல் உள்ள வாழ்வதற்கான உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க வீடு இவைகளுடன் வாழ்வதும் என்பதுதான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். மத்திய அரசின் தற்போதைய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இந்த அளவுகோல் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

  ஒன்று மத்திய அரசு தற்போதைய சட்டத்தில்  5 கோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மானியத்தில்  உணவு வழங்கப்படும்; இதில் பரம ஏழைகளான அந்தோதயா அன்ன போஜனாவில் AAY) உள்ள 2.05கோடி குடும்பங்களும் அடங்கும் என்று அறிவித்துள்ளது, ஏற்கனவே இந்த அந்தோதயா அன்னதான திட்டத்தில் உள்ளவர்கள் மாதம் 35 கிலோ உணவு தானியங்களை ரூ.2/- விலைக்கு பெறுகின்றனர். தற்போது இச்சட்டத்தில் இவர்கள் அனைவருக்கும் மாதம் 25 கிலோ உணவுதானியங்களை ரூ.3/- விலைக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை வெட்டிச்சுருக்குவது மட்டுமல்ல, அளவையும் குறைத்து விலையையும் ஏற்றுவதுதான் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதுபோல் உள்ளது.

   மத்திய அரசு ஏற்கனவே, 6 கோடியே 52 லட்சம் குடும்பங்களக்கு உணவுதானிய ஒதுக்கீடு செய்துவருகிறது. மாநில அரசுகள் 10 கோடி 68 லட்சம் குடும்ப அட்டைகளை வழங்கி உள்ளன. இதையும் இச்சட்ட வரைவு கவனத்தில் எடுக்கவில்லை. வறுமைகோடு என்பதை கிராமப்புறத்தில் ஒரு நபருக்கு ஒருநாள் வருமானம் ரூ. 11.80 என்றும் நகர்புறத்தில் ரூ.17.80 என்றும் அளவிட்டுள்ளனர். இதுவும் 1983ம்ஆண்டு விலைவாசி அடிப்படையில் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த கணக்கின்படியே கூட இத்தகைய உண்மையான விபரங்களை சேகரிக்கவில்லை. மத்திய அரசு வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 28 சதவீதம் என்று கூறியுள்ளது. 

    ஆனால் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 40 சதவீதம் என்றும் ஊரக வளர்ச்சித்துறை 50 சதவீதம் என்றும் பேரா. அர்ஜீன்சென் குப்தா குழு 77 சதவீதம் என்றும் கூறியுள்ளன. இவை நான்குமே மத்திய அரசின் நிறுவனங்கள்தான். இந்த 11.80 மற்றும் 17.80 என்ற வருவாய் உணவுக்காக மட்டும் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்திய குடிமக்களுக்கு உடை, இருப்பிடம் தேவையில்லையா? கேட்டால் இவை அனைத்தும் அரசியல் சட்டத்தில் உரிமைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.அதாவது ஏட்டுச் சுரைக்காயை சமைத்து சாப்பிட வேண்டும் என்று மன்மோகன் சிங் வகையறாக்கள் வாதிடுகின்றனர். எனவே இந்த உணவு பாதுகாப்பு வரைவுச் சட்டத்தில் வறுமைக்கோடு தொடர்பாக சமீபத்திய நிலைமைகளுடன் விஞ்ஞான பூர்வமான வகையில் முடிவெடுத்து இணைக்கப்படவேண்டும்.

   இரண்டாவதாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும். எனவே உணவு பாதுகாப்பு வரையறைக்குள் இவர்களையும் கொண்டுவந்திட வேண்டும். கேரளாவில் அனைத்து பழங்குடி, தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர் சமுதாயம் முழுவதும் அமைப்புசாரா தொழில் செய்வோரும்  மேலும் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என கணக்கிட்டு உணவுதானியங்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று சத்தீஷ்கரில் அனைத்து பூர்வகுடி மக்களும் (70 சதம்) வறுமைக்கோட்டிற்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுபோன்று விரிவான வரையறை அவசியமானது.

   மூன்றாவதாக, வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்கள் எப்போதும் அதே நிலையிலேயே இருப்பது இல்லை. வறட்சி, வெள்ளம், விலையேற்றத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பாதுகாப்பாக விரிவான முறையில் பொதுவிநியோக முறையை கொண்டு வரவேண்டும். பொதுவிநியோக முறையின் நோக்கமே வெளிச்சந்தை விலையை கட்டுக்குள் வைப்பதுதான். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில்  உள்ள விலைகளுக்கும் வெளிச்சந்தை விலைகளுக்குமிடையேயான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமிடையேயான வேறுபாடாக நீடிக்கிறது. இதில் அடிப்படையான மாற்றங்கள் காணவேண்டும்.

   நான்காவதாக, பொது விநியோக முறையை அனைவருக்கமான பொதுவிநியோக முறையாக மாற்றினால் கூடுதல் செலவு பிடிக்கும் என்று காரணம் காட்டி கைவிடப்படுவதை தடுத்திடவேண்டும். தற்போது மத்திய அரசு 2009-2010ல் நிதிநிலை (அறிக்கையில் பொதுவிநியோக முறைக்கு 52,484 கோடி ஒதுக்கிஉள்ளது. மேலும் ரூ.70,000-ம் கோடி ஒதுக்கினால் அனைவருக்கமான (Universal) பொது விநியோக முறையை அமுலாக்கலாம். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே. இதே காலத்தில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 4 லட்சம் கோடி வரை மத்திய அரசு சலுகை வழங்குவதும், அம்பானிக்கு கடந்த 6 மாதத்தில் 45000 கோடி சலுகை வழங்குவதும் சாத்தியமாகிறபோது, பட்டினியை தடுக்க ரூ.70000ம் கோடி சாத்தியமே, ஆனால் இதைதடுப்பது எது? மத்திய அரசின் வர்க்க கொள்கைதான் இந்த பொதுவிநியோக முறையை பலப்படுத்தினால், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் இந்திய நிலபிரபுக்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் லாபவேட்டை சுருங்கும். அதனாலேயே தேவையான நிதி இருந்தும்கூட ஒதுக்க மறுக்கிறது.

    ஐந்தாவதாக, இந்தியாவில் உணவிற்காக பல திட்டங்கள் உள்ளன. மதிய 
உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுதிட்டம் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட திட்டங்களை மேலும் பலப்படுத்தி உணவு பாதுகாப்பை விரைவாக அமல்படுத்திட வேண்டும்.

  ஆறாவதாக உணவு பாதுகாப்பை பெற்றிட மூன்று முக்கிய அம்சங்கள் தேவை, 1) உற்பத்தி பெருகி உணவு  தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும் ((Availability) 2. உணவு தானியங்களை வாங்கும் சக்தி மக்களிடம்இருக்கவேண்டும் (Accessibility) 3. உண்டு பயனைடையும் ஆரோக்கியமான உடல்நலம் (Absorbability) இருக்கவேண்டும். உணவு உற்பத்தியை பெருக்கிட மத்திய அரசு விவசாயம் மற்றும் ஆராய்ச்சிக்கான பொதுமுதலீட்டை அதிகப்படுத்திட வேண்டும். பொது முதலீட்டை குறைக்கிறபோது மிகமோசமான உற்பத்திமுறை அதிகரிக்கிறது.  பீஹாரில் தற்போது ஒரு ஹெக்டேருக்கு 1287 கிலோவும், மேற்கு வங்கத்தில் 2509 கிலோவும் , பஞ்சாபில் 4.6 டன்னும் விளைகிறது. சீனாவில் இதுவே 6முதல்7 டன் உற்பத்தி ஆகிறது. மோசமான உற்பத்தி பெருகுவதற்கு இது போன்ற பல உண்மைகளை காணலாம்.

   எனவே மத்திய அரசு பொது முதலீட்டை அதிகப்படுத்துவது, விளைபொருட்களை கொள்முதல் செய்வது, இடுபொருட்களை மானிய விலையில் வழங்குவது, விளைநிலங்களை பாதுகாப்பது, கூட்டுறவு கடன்வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். அதே நேரத்தில் அனைத்து அத்தியாவசியப்  பொருட்களின் மீது உள்ள முன்பேர ஊக வாணிபத்தை தடைசெய்வது  உணவு பாதுகாப்பின் அடிப்டைத்தேவையாகும்.

      எனவே உணவுக்கான உரிமை உணவுப் பாதுகாப்பு என்பது இன்றைய அரசு உறுதியாக அமுலாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போது உருவாக்கியுள்ள வரைவுச் சட்டமும் வறியவர்களை காத்திட உதவாது, மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கி ஒரு விரிவான உணவு பாதுகாப்புத்திட்டத்தை உருவாக்கிடவேண்டும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றிடவும், உறுதியாக அமுலாக்கிடவும் இந்தியாவின் பெருந்திரள் மக்கள் எழுச்சி பெற்று நிர்பந்தம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவே, நாங்கள் சாகவோ என்ற நிலைமாறிட வழிகாணவேண்டும்.   
                                                                       
                                                                    முற்றும்.

உதவிய கட்டுரைகள்

The world food crisis Historical Perspective- Philip Memichael
Orgins of the food crisis in India and Developing 
countries–Utsav Patnaik   Food Wars – Waldan Bello and Mara Baviera
Reducing Energy Inputs in the Agricultural Production  System-David Pinental
Last Opportunity in Bihar – EPW – Nov.21
Agriculture and Food in crisis-Fred Magdoff and Brian Tobar
Free Trade in Agriculture – Sophia Murphy

1 comment:

  1. மிகசிறப்பான கட்டுரை உங்களோடு இயக்கமும் கரம் கோர்க்க விரும்புகிறது
    read more
    http://ieyakkam.blogspot.com/

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)