இந்தப் பின்னணியில் தான் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமி ழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ரத கஜ துரக பதாதி படை யோடு களமிறங்கின. எதற்கு, காலங்கால மாக வஞ்சிக்கப்பட்ட தலித் மக்களை கைபிடித்து ஆலய வாசலுக்கு அழைத்துச் செல்லவா? இல்லை. அவர்களது மூச்சுக் காற்று கூட ஆலய மதிலில் பட்டுவிடக் கூடாது என்ற பதைபதைப்பில், அவசர நிலைக் காலத்தை நினைவுபடுத்தும் வகை யில் உத்தப்புரத்தில் 144 தடை உத்தரவு. ஆலய நுழைவுக்கு பூஜை பொருட்களுடன் புறப்பட்ட இடத்திலேயே கைது. மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள்.
தலித் மக்களின் ஆலய நுழைவை தடுப் பதற்காகவே தடபுடல்கள், தர்பார்கள். நிற்க.
இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தின் நிறுவனத் தலைவரான அண்ணா அவர்களின் நினைவு நாள். அவரது தம்பி கலைஞர் அண்ணாவின் இதயத்தை இரவ லாக பெற்று ஐந்தாவது முறையாக முதல் வர் பொறுப்பேற்று, அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு பற்றி அன்றைக்கே அண்ணா என்ன சொன்னார் என்று நினைவுபடுத்திப் பார்ப் பது இன்றைய சூழலில் பொருத்தமாக இருக்கும்.
இதோ அண்ணா பேசுகிறார். “ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளின் அழகும் மகிமையும் பேசப்படுகின்றன. அங்கு சென்று சேவிப்பது இகவர சுகம்தரும் என்று பேசப்படுகிறது. கோவில் இல்லா ஊரிலே குடியிருக்கவே வேண்டாம் என்று பழமொழி. திருக்கோவிலை வலம் வராத கால் என்ன காலோ, ஐயனைச் சென்று காணாத கண் என்ன கண்ணோ என்று பஜனைகள் நடக்கின்றன... ஆலயங்களுக்கு மகிமையும் பலனளிக்கும் சக்தியும் இருப்ப தைக் கூறிவிட்டு அங்கு வரக்கூடாது, நுழையக்கூடாது என்று சிலரை அல்ல, ஏறக் குறைய 8 கோடி மக்களை தடுத்து வருகிறோம். பயனும் பெருமையும் இருப்பதாக ஒரு இடத்தை குறிப்பிட்டு, அதே இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரை நுழையக் கூடாது என்று சொன்னால் எவ்வளவு வேதனை இருக்கும். கூறும் நமக்கு எவ்வளவு கடினமான மனது இருக்கவேண்டும் என் பதை எண்ணிப்பாருங்கள்.
திகைப்பு, திகில், தடுத்தே தீரவேண்டும் என்ற போக்கு; இதனால் சர்வ நாசம் சம் பவிக்குமோ என்ற சஞ்சலம்- இன்று குறைவு; குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் அடியோடு மன மாறுதல் ஏற் பட்டபிறகுதான் ஆலயப் பிரவேசம் சாத்திய மாகும் என்று கூறுவது ஆண்மை, அன்பு, அறிவுடைமை ஆகாது. எனவே சட்டம் தேவை. அதை விளக்க ஒரு பிரச்சாரத் திட்டம் தேவை-அவசரத் தேவை.
நம்முடைய நாட்டிலே ஹரிஜன் நிதிக்கு பணம் கூடத்தருகிறோம். ஆனால் தீண் டாமையை அறவே ஒழிக்க வேண்டும் வாரீர் என்று அழைத்தால் தர்மம், தயை, அன்பு, நட்பு முதலிய குணங்கள் எல்லாம் ஓட்டுக்குள் மறைந்துகொள்ளும் ஆமை களாகி விடுகின்றன. எங்கிருந்தோ கிளம்பி, வைதீகம் எனும் நாகம் சீறுகிறது. அதை அடக்க அறிவாயுதம் வேண்டும்.
கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்பு கிறான்-குடிகெடுப்பவன்-கும்பாபிஷேகம் செய்கிறான், கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளை ஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்க குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டோ. இல்லை. ஆனால் ஆதிதிரா விடர்கள் மட்டும் ஆலயத்துக்கு வரக் கூடாது என்று தடுக்கிறோம்-நியாயமா.
அல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால்... என்று தானே பதில் கூறுகிறீர்கள்?
ஆனால், என்று அநேக காலமாக கூறி வந்தாகிவிட்டது.? நண்பர்களே, ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது-ஆலயப் பிரவேசம் அவசியம்தான் என்று அச்சத்தை விட்டுத் தீர்ப்பளியுங்கள்.
ஆனால்... என்று நெகிழ்ந்த நிலையிலே தான் மக்கள் பேசுகிறார்கள். அதற்கு அர்த் தம் கோவிலுக்குள் தீண்டாதாரை விடக் கூடாது என்பதல்ல. ஆனால் சட்டம் செய்து விடட்டுமே என்றுதான் மக்கள் கூறு கிறார்கள் என்று சர்க்கார் எண்ண வேண் டும். மக்கள் மனம் இன்னும் அத்தகைய சட் டமே தேவைப்படாத அளவு பண்பட வில்லை. ஆனால் அத்தகைய சட்டம் வரு வதை தடுத்தே ஆகவேண்டும் என்ற மன நிலை இல்லை. இந்த சமயம்தான் கோவில் நுழைவுக்கான சட்டம் செய்யும் சரியான சமயம் என்று சர்க்காருக்கு கூறுகிறேன்- பிரஜை என்ற முறையில்”.
ஒரு பிரஜை என்ற முறையில் அண்ணா வைத்த உருக்கமான வேண்டுகோள் இது. ஆலய நுழைவுக்கு சட்டம் வேண்டும் என்று அவருக்கே உரிய பாணியில் அண்ணா அடுக்குமொழியில் வாதித்தார் அன்று. ஆனால் இன்று தீண்டாமை ஒரு பெருங் குற்றம், தீண்டாமையை கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அண்ணல் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சாசனம் கையில் இருக்கிறது. அண்ணாவி னால் உருவாக்கப்பட்டு அவரது தம்பியி னால் வழிநடத்தப்படும் சர்க்காரும் இருக் கிறது. சட்டம் இருந்தும், சர்க்கார் இருந்தும் உத்தப்புரம் கோவிலுக்குள் தலித்மக்கள் நுழையமுடியவில்லையே, அரசே திட்டம் போட்டு தடுக்கிறதே என்ற வினா எழுகிறது.
தீண்டாமையை ஒழிக்க அழைத்தால், ஓட்டுக்குள் மறைந்து கொள்ளும் ஆமை களாகி விடுகிறார்களே என்று வேதனைப் பட்டார் அண்ணா அன்று. இன்று அவரால் உருவாக்கப்பட்ட திமுக அரசு “ஓட்டுக் காகத்தான்” இவ்வாறு மறைந்து கொள்கி றதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
அண்ணாவின் சமாதியில் மலர்வளை யம் வைத்து மவுன அஞ்சலி செலுத்துவது மட்டுமே அவரை நினைவு கூர்தல் ஆகாது. அவருடைய மன வளையத்தில் முகிழ்த்த சிந்தனைகளை செயல்படுத்துவதே பொருத் தமான அஞ்சலியாக இருக்கும்.
0 comments:
Post a Comment