மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) திருவாரூர் மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர்.ஜெ.நாவலன் புதனன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சமூக விரோத கள்ளச் சாராய வெறிக்கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 54. இந்த படுகொலைச் சம்பவத்தையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐஎம்) திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெ.நாவலன். இவர் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளராகவும் செந்தொண்டர் அணியின் அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். பேரளம், நன்னிலம் பகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜெகந்நாதனின் மகனான தோழர்.நாவலன், சிறுவயது முதலே செங்கொடி இயக்கத்தில் செயலாற்றி வரும் முன்னணி ஊழியர் ஆவார். திருமெச்சூர் கிராமத்தைச் சேர்ந்த நாவலன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்தார்.
தியாகி கொரடாச்சேரி கண்மணியுடன் இணைந்து வாலிபர் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய இவர், விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் இயக்கத்தில் ஏராளமான போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.
கூலிப்படை வெறியாட்டம்
இந்நிலையில் புதன்கிழமை (ஜனவரி 19) நாகை மாவட்டம் திருமெய்ஞானம் தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாவலன் திருமெய்ஞானத்திற்கு சென்றிருந்தார். அவருடன் பேரளம் பேரூராட்சி உறுப்பினர் ராஜாவும் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து இருவரும் அங்கிருந்து பேரளம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
பேரளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கொட்டூர்மாங்குடி என்ற கிராமத்திற்கு அருகில் வந்தபோது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், நாவலனையும் ராஜாவையும் இடைமறித்து அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கியது.
கொலை வெறிக் கும்பலிடமிருந்து தப்பிக்க இருவரும் வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர். ராஜா வெட்டுக்காயங்களுடன் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்திற்குள் ஓடினார். தோழர்.நாவலன், கொட்டூர்மாங்குடி கிராமத்திற்குள் சென்று, குடிசை வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்தார். கொலை வெறியோடு அவரைத் துரத்திய அக்கும்பல், கதவை உடைத்து, குடிசைக்குள் புகுந்து நடுக்கூடத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் சரமாரியாக அவரை வெட்டிப்படுகொலை செய்தனர்.
இந்தப் கொடூரப்படுகொலை நடந்த கொட்டூர்மாங்குடி கிராமம் நன்னிலம் வட்டம் பேரளத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 2வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
தோழர்.நாவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் நன்னிலம், பேரளம் உள்பட திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பின்னணி
கொல்லப்பட்ட தோழர் நாவலனின் சொந்த ஊரான திருமெச்சூர் பகுதியில் உள்ள தண்டத்தோப்பு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயக் கும்பலின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்தக் கும்பலின் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட இவர்களுக்கு எதிரான போராட்டத்தை ஒட்டி, தோழர்.நாவலன் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு புனைந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து கட்சியின் தலைமையில் நாவலன் உறுதிமிக்க போராட்டங்களை நடத்தி வந்தார். இந்தப் பின்னணியில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கட்சியின் பேரளம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேசிக்கொண்டிருந்தபோது சாராய வியாபாரி பன்னீர்செல்வத்தின் தூண்டுதலின் பேரில் சமூகவிரோத வெறிக்கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தியது என்பதும் நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து காவல்துறையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தோழர் நாவலனுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்தும், அப்பகுதியில் கூலிப்படையினர் முகாமிட்டிருப்பது குறித்தும் கட்சியின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தச் சூழலில் அவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள மாற்று!
ReplyDeleteஅநேகமாக சமரசமற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்க்ளின் பட்டியலில் அதிகமாக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தாம். தமிழகத்தில் 1968 வெண்மணி, தஞ்சாவூர் வெங்கடாசலம், செகுடந்தாளி முருகேசன், தாமிரபரணி தியாகிகள் இன்னும் இடுவாய் ரத்தினசாமி என பட்டியல் நீளும்...
அந்த வரிசையில் தோழர் நாவலன் இன்றைக்கு... காலம் வெல்லும்
மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி இன்னும் எத்தனை தோழர்களை பலி கொடுப்பது கடலூர் தோழர்கள் இதே சாராய வியாபாரிகளால் கொல்லப்பட்டனர், தோழர் வேலுச்சாமி கந்து வட்டி கும்பலால் கொல்லப்பட்டார் இவை எல்லாம் ஆளும் திமுக அரசின் ஆசீர்வாதத்தோடு நடைபெறுகிறது. கணக்கு தீர்க்கும் நாள் நிச்சயம் வரும்
ReplyDeleteநான் ஒரு புதுமுகம், மார்க்சிசம் பற்றி இபோதுதான் கற்றுவருகிறேன், எனவே எனது பின்னுடத்தில் எதாவது தவறு இருந்தால் மன்னித்து, சரியான வழி காட்டலாம்.
ReplyDeleteஒரு 54 வயது மூத்த தலைவர்களில் ஒருவரும், மாவட்ட செயற்குழு உறுபினர் ஒரு கள்ள சாராய கும்பலிடம் வெட்டு பட்டு சாகனுமா?
இதற்கு சில பின்னூடங்கள். காலம் பதில் சொல்லுமாம்? கணக்கு தீர்க்கும் நாள் வருமாம்? sorry வாசிபதற்கு ரொம்ப சங்கடமாய் இருக்கு.
இதுதான் உங்கள் மாவட்ட செயற்குழு உறுபினர் மரணத்தின் மீது காட்டும் சிந்தனை என்றால். Shame on you Comrates.
கேட்க வேண்டிய கேள்விகள்.
எதுக்கு ஒரு Communist கள்ள சாராயத்தை எதிர்க்க வேண்டும்?
அதனால சமுகத்துக்கு / அரசாங்கத்துக்கு என்ன பலன்?
சாராயத்தில் என்ன, நல்லது / கெட்டது?
குடிக்கிற எல்லோருக்கும் தெரியும் அதை குடித்தால் உடலுக்கு கேடு என்று. குடிக்கிற எல்லோருக்கும் தெரியும் கள்ள சாராயத்தால் உயிர் கூட போகலாம் என்று. அப்புறம் என்ன, உங்கள் போரட்டத்தால் என்ன outcome ?
What is the motive behind this so called "சமரசமற்ற போராட்டங்கள" ?
சாராயம் குடிக்ககூடாது என்ற ஒழுக்கவியல் அடிப்படையில் நீங்கள் போராடுகிர்களா?
சாராயம் குடித்தால் உழைக்கும் தோழர்கள் வாழ்வும் பணமும் சுரண்டபடுகிறதா? அப்படி என்றால் எத்தனை சதவிதம் கள்ள சாராயத்தால் மட்டும் சுரண்ட படுகிறார்கள்?
கொடுமையான நிகழ்வு. நிச்சயமாய் தண்டிக்கப்படவேண்டிய செயல். அநியாயத்தை தட்டி கேட்டு உயர்த்தப்படும் கைகள் வெட்டி வீசப்படுவதும், குரல்வலை நசுக்கபடுவதும்.என்று மாறுமோ?.. தோழர்
ReplyDeleteநாவலனின் மரணம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு விதைக்கப்பட்ட வித்தாய் மாறட்டும்.
தோழர்களுக்கு
ReplyDeleteநான் எழுதியை வெளிட்டதற்கு நன்றி. நான் சில கேள்விகளை முன்வைத்திருந்தேன், எந்த பதிலும் இல்லை. ஒரு வேளை நான் சொலுவது Non sense என்று முடிவு செய்துவிடிர்களோ? நான் சொலவந்ததை சொல்லிவிட்டு செல்கிறேன். Lumpen-proletariat என்ற சொல்லை இதற்கு முன்பாக எங்காவது கேள்வி பட்டது உண்டா? கம்யூனிஸ்ட் Manifesto வில் இருக்கிறது இந்த சொல். இந்த பிக் பாக்கெட், விபச்சாரிகள், மாமாக்கள், கள்ள சாராயம் காய்கிறவர்கள், போதை பொட்டலம் விற்பவர்கள், ரோட்ல மருந்து வியாபாரம் செய்றவங்க, சாமியார்கள், பிச்சைகாரர்கள், அரவாணிகள், டப்பா கஞ்சி விற்பவர்கள் போன்ற சமுகத்தால் ஒதிக்கி வைக்கப்பட்டவர்களுக்கு மார்க்ஸ் தந்த பெயர்தான் Lumpen-proletariat . இவர்களை பற்றி மார்க்ஸ் என்ன சொலுகிறார்.பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்”. இதை scum of Socialism என்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் ஜனநாயக புரட்சியில் எந்த ஒரு அக்கறைக்கும் இல்லாதவர்கள். இவர்களுக்கு என்று எந்த அரசியல் அமைப்பும் திட்டம் போடுவதில்லை, இவர்களை பற்றி எந்த ஒரு அக்கறையும் காட்டுவதில்லை. இந்த சமுதாய கழிவுகளை உருவாகியது யார்? சமுதாயம்தானே. சமுதாயத்தின் மீது அதித பற்று கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள் இவர்களை கையாள்வது எப்படி என்று ஏன் சிந்திக்கவில்லை. அது சிந்திக்காது ஏனென்றால் அந்த கழிவுகள் நமது கழிவுகள். இவர்களது நிலைக்கு Bourgeois மட்டும் காரணம் இல்லை, நீங்களும் நானும் தான்.
இவர்கள் நமிடம் எதிர்பார்ப்பது அன்போ, பாசமோ, அனுதாபமோ அல்ல அக்கறை, அந்த வாழ்வில் இருந்து மீள நீங்கள் காட்டும் உண்மையான சமுக அக்கறை. அப்படி அக்கறை காட்டமுடியாவிட்டால் அவர்கள் கழிவுகளாக இருக்கட்டும் உங்கள் தோழர்களை குடிக்காமல், வேசியிடம் போகாமல் அறிவுரை / அறவுரை வழங்குகள்.
நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக முயற்சி செய்துகொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். வருக நண்பரே ... ஆனால் ஒரு விசயம், மார்க்சியம் என்பது போராட்டங்களில் இருந்தும், மக்கள் அன்றாட வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வைத் தேடுவதிலிருந்தும் கற்க வேண்டியது. எனவே, சில விளக்கங்களின் மூலம் ஒரு கம்யூனிஸ்டாக மாறிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால். மன்னிக்கவும், அது சாத்தியமற்றது.
ReplyDeleteஎதுக்கு ஒரு Communist கள்ள சாராயத்தை எதிர்க்க வேண்டும்?
ஏனென்றால், அந்த கள்ளச்சாராயக் கும்பல், விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைப் பாட்டை மேலும் சிக்கலாக்கி வந்தார்கள். அத்துடன், மேற்கண்ட கும்பலினால் சாதாரணா மக்கள் துன்பத்திற்காளானபோது, அவர்களை தடுக்க வேண்டிய சட்டமும் கைவிரித்தபோது தோழர்கள் களத்தில் இறங்கினார்கள்.
அதனால சமுகத்துக்கு / அரசாங்கத்துக்கு என்ன பலன்?
கள்ளாச்சாராயத்தை எதிர்ப்பதே கட்சியின் கொள்கையாக வைத்து செயல்பட்டால் நீங்கள் இப்படிக் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் இந்த அரசமைப்பின் மக்கள் விரோதச் செயல்கள் ஒவ்வொன்றையுமே எதிர்த்து வருகிறோம். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உழைக்கும் வர்க்கத்தில் உடனடிப் பிரச்சனையாக முன்னுக்கு வரும் பிரச்சனைகளின் உடனடி தலையீட்டைச் செய்கிறோம். இதனால் குறிப்பிட்ட பகுதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும்.
சாராயத்தில் என்ன, நல்லது / கெட்டது?
சாராயத்தில் நல்லது என்று சொல்ல முடியாது. சாராயம் ஒரு பண்டமாக இருப்பது சமூகத்தின் பிரச்சனை. ஆனால், கள்ளச்சாராயக் கும்பல், அதன் செயல்பாடுகள் என்பது உடனடி தீய விளைவுகளை உண்டாக்குகிறது.
குடிக்கிற எல்லோருக்கும் தெரியும் அதை குடித்தால் உடலுக்கு கேடு என்று. குடிக்கிற எல்லோருக்கும் தெரியும் கள்ள சாராயத்தால் உயிர் கூட போகலாம் என்று. அப்புறம் என்ன, உங்கள் போரட்டத்தால் என்ன outcome ?
மேற்சொன்ன கேள்விக்கு பதில் தேவையற்றதே. நாங்கள் குடிப்பழக்கத்திற்கு எதிரான போராளிகள் அல்ல. அப்படியாக இந்தப் பிரச்சனையைப் பார்க்கவும் இல்லை.
உங்கள் அடுத்த பதிவு ஏதோ முன் முடிவிலிருந்து வந்திருக்கிறது. உங்கள் கருத்துக்களை கணக்கில் கொள்கிறோம். ஆனால், தோழர் நாவலனை கொலை செய்திருப்பவர்கள் நீங்கள் குறிப்பிட்ட - பிக் பாக்கெட், விபச்சாரிகள், மாமாக்கள், கள்ள சாராயம் காய்கிறவர்கள், போதை பொட்டலம் விற்பவர்கள், ரோட்ல மருந்து வியாபாரம் செய்றவங்க, சாமியார்கள், பிச்சைகாரர்கள், அரவாணிகள், டப்பா கஞ்சி விற்பவர்கள் - அல்ல ...
ReplyDeleteநான் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களை எதிர்ப்பதே புரட்சி என்ற தொனியிலும் கூறவில்லை.
தலைப்பைப் படித்து ஒரு முன் முடிவிற்கு வந்துவிட்டீர்கள் போல் தெரிகிறது.
-
இன்னொரு விசயம் - ஏன் நண்பா - அரவாணிகள் சமூக விரோதிகளா?
Dear Sindhan
ReplyDelete"சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களை எதிர்ப்பதே புரட்சி என்ற தொனியிலும் கூறவில்லை". This is the point I want to make. Thank you for understanding. Good moderation. In India Aravanikal is considered as one of the Rejected community, thats what I mean.
Thank you again.
நன்றி நிர்மல் ... தொடர்ந்து விவாதிப்போம் ...
ReplyDeleteதமிழகம் இன்று கொலைகாரக் குடும்பங்களின் கூலிப் படைகளால் குத்திக் குதறப்பட்டு வருகிறது; அரசுக் கருவூலத்தை அபகரித்தும், கட்டப் பஞ்சாயத்து நடத்தியும் ஆயிரக் கணக்கான கோடிகளைச் சுருட்டிய கூட்டம் நிலத் திருட்டில் பகிரங்கமாக இறங்கியுள்ளது; 'பகுத்தறிவுப் பகலவர்'களும்,' இனமானத் தலைவர்களும்' பதவிக்கு வருகிறபோதெல்லாம் பகற் கொள்ளையர்களுக்குக் கொண்டாட்டமே! அவர்களுக்கு வெண்சாமரை வீச மறுக்கிற எவருக்கும் இதுதான் கதி! அதுவும் அரட்டல் மிரட்டலுக்கு அஞ்சாத கம்யூனிஸ்டுகள் என்றால் அவர்களுக்கு அடக்கவொண்ணா ஆத்திரம்!
ReplyDeleteஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் மீது கை வைக்க அஞ்சிய கயவர்கள் இன்று சர்வ சாதாரணமாக அவர்களைக் கொல்கிறார்களே அதற்கான காரணம் என்ன?