Tuesday, January 18, 2011

இந்தியாவில் கம்யூனிசம் வளராதது ஏன்? (கம்யூனிசம் என்றால் என்ன - 3)

பொதுவாகவே அரசியல் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாறுபடுகிறவர்களும் ஒரு சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் என்ற முறையில் மார்க்சியம் இங்கே பெரிய சக்தியாக வளராதது பற்றி கவலைகொள்கிறார்கள்.

மார்க்சியத்தின் எளிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாதவர்கள், முதலாளித்துவ அமைப்பே இறுதியானது, இதிலேலேயே படிப்படியாக ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சம நீதி நிலைநாட்டப்பட்டுவிடும் என்றெல்லாம் நம்புகிறார்கள். தனி மனிதத் தவறுகளால்தான் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல், கொள்ளை லாபம், வறுமை, பொறாமை, அடக்குமுறை போன்ற தீமைகள் நடக்கின்றன என்று கருதுகிறார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டாலே போதும் என்று நினைப்போரும் உண்டு.

ஆகவே இங்கே கம்யூனிசம் வராது வளராது என்று வாதிடுகிறார்கள். முதலாளித்துவம் என்பதன் அடிப்படையே லாப வேட்டை, அதற்கான உழைப்புச் சுரண்டல், இயற்கை வளக் கொள்ளை ஆகியவைதான். அவரை விதைத்தால் அவரைதான் முளைக்கும். சுரண்டல் அமைப்பு நீடிக்கிற வரையில் ஏழை-பணக்காரர் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கூடவே இருக்கும்.

ஒரு வாதத்துக்காக, முதலாளித்துவ அமைப்பில் லாப வேட்டைச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அது முதலாளித்துவ சமுதாயம் அல்ல, அதற்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்றுதான் பொருள். அதுதான் அடுத்த கட்டத்திற்கான சமூக உடைமை அமைப்பாகிய சோசலிசம். அதை உருவாக்குவதற்கும் அதை உருவாக விடாமல் தடுப்பதற்கும்தான் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்த மோதலின் விளைவாகத்தான், முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சோசலிச அமைப்பின் சில நடைமுறைகளை மேலோட்டமாகத் தானும் செயல்படுத்த முன்வருகிறது. எட்டு மணி நேர உழைப்பு, மனித உரிமைச் சட்டங்கள், மக்களுக்கு சில சலுகைகள் என்று செயல்படுத்துகிறது. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படி பல்வேறு நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இதுவே கம்யூனிச இயக்கம் அந்த நாட்டில் வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதற்கு ஒரு அறிகுறிதான்.
இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளராதது ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை. பெரிய அளவுக்கு வளராதது ஏன், ஒரு தீர்மான சக்தியாக வளராதது ஏன், நாடு முழுவதும் சீராக வளராதது ஏன் என்று நம் கேள்விகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

கம்யூனிஸ்ட்டுகளின் கதைகளைக் கேட்கிற ஒவ்வொருவருக்கும், இவ்வளவு தியாகமும் வீரமும் மிகுந்த போராட்ட வரலாறு இருந்தும் ஏன் இங்கே இந்த இயக்கம் பெரியதொரு ஆற்றலாக அடியூன்றவில்லை என்ற வினா எழுகிறது. அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவர்கள் ஊழல் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும், தொண்டர்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்தத் தகுதிகள் இருந்தும் கம்யூனிச இயக்கம் இங்கே பெரும் மாற்று சக்தியாகத் தழைத்தோங்கவில்லையே ஏன் என்ற புதிர் மனதைக் குடைகிறது.

இயக்கத்தின் வரலாறு, இந்தியாவின் சமுதாய அமைப்பு, அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் என்று பன்முகக் காரணங்கள் உள்ளன. எந்த ஒரு விளைவுக்கும் புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இரண்டும் இருக்கும்.

அந்தக் காரணங்களைத் தேடுவது, கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது என்று மன நிறைவு அடைவதற்காக அல்ல. நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வதற்காகத்தான்.

வர்க்கம்  என்பது என்ன? அரசு என்பது எவ்வாறு உருவானது? - அடுத்த பகுதியில் காண்போம்....
-அ.குமரேசன்

3 comments:

  1. ஒரு நாட்டின் முதலாளித்துவ சமுதாய அமைப்பைச் சார்ந்த அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவருகிறது என்றால் அது கருணையால் அல்ல, தொழிலாளர்கள் கொந்தளித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

    ReplyDelete
  2. The writer and Journalist Mr.A.KUMARESAN is a great honest ,selfishness person..His personal mails to me made me to write so...I have no hesitation to say openly..This article is one of the example..being a journalist he should come out openly and write more on this topic to strengthen the left movements development and growth..The capitalism has started a war on people and profits..But unfortunately the left movements are intensifying their inner struggles and paved the way for easy walking for the capitalists..so the slow movements and organizational weakness growing day by day..no concrete developments. writing so will not against the organizational discipline..

    ReplyDelete
  3. முக்கிமானதாக நான் கருதுவதும் இந்தியா இன்னும் ஒரு நில பிரபுத்துவ சமுதாயம்தான், அல்லது இந்தியா இன்னும் ஒரு முழுமையான முதளித்துவ நாடாய் மாறவில்லை என்றும் சொல்லலாம், CPI(M) party plan இல் இதை பற்றி இருக்கிறது. எனது தனிப்பட்ட கருத்து எனவேன்றல் நில பிரபுத்துவ சமுதாய கூறுகளை கம்முனிச்ட்கள் கழைந்து எறிவதில் அதி தீவிரம் காட்டவில்லை என்பதுதான்.

    மேலும் நீண்ட நாளாய் என்னக்குள் உள்ள கேள்விகள்
    ரஷ்யாவுக்கு ஒரு லெனின், சீனாவுக்கு ஒரு மாவோ , இந்தியாவுக்கு ??????????????????.
    தலைவர்கள் கறைபடாதவர்களை, தன்னலம் இன்றி மட்டும் இருந்தால் போதாது, இந்திய என்கிற ஒரு நாட்டை எப்படி புரிந்துகொண்டார்கள் என்கிற கேள்வி என்னுள் இருக்கிறது.
    கம்முனிசம் என்ற கோட்பாடை, அரசியல் அமைப்பை கொண்டு எப்படி இந்த பல மொழி, மதம். கலாசாரம் , மேலும் பல பல வேறுபாடுகள் உள்ள ஒரு நாட்டின் பிரச்சனைகளை அணுகினார்கள்?

    I will be pleased to see answer, I am eager to know.
    Thank You
    Mrinzo Nirmal

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)